மாங்காய், இந்திய துணைக் கண்டத்தின் இமயமலை சமவெளிகளில் வளர்கின்ற, அதிக ஊட்டச்சத்து செறிவுடைய பழங்களில் ஒன்று ஆகும். அது பல தலைமுறைகளாக, ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியராலும் மிகவும் விரும்பப்படுகின்ற ஒரு தனித்துவமான வாசம், மணம் மற்றும் சுவையைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கோடை காலத்தின் போது ஒரு மாம்பழம் சாப்பிடுவதை, அல்லது மாம்பழ சாறு அருந்துவதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? சொல்லப் போனால், மாம்பழம் அதன் இன்பமயமான சுவைக்காக, 'உணவுகளின் கடவுள்" எனவும் அழைக்கப்படுகிறது. அவை நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே பயிரிடப்படுகின்றன. பிரபல கவிஞரான காளிதாசர் மாம்பழங்களைப் பற்றிப் பாடியிருப்பதாகப் புராணங்களும் கூறுகின்றன. மேலும், புகழ் பெற்ற மொகலாய சக்கரவர்த்தியான அக்பர், தற்போதைய பீஹாரான தர்பங்கா என்று அழைக்கப்பட்ட இடத்தில், 1,00,000 மாமரங்களுக்கு மேல் நட்டு வளர்த்ததாக நம்பப்படுகிறது.

ஆனால், மாம்பழம் அதன் சாற்றின் அருமையான சுவையையும் தவிர, மேலும் அதிகமான பலன்களை அளிக்கக் கூடியது ஆகும். மாம்பழம், வைட்டமின்கள், பாலி-பெனோலிக் புளோவோனாய்டு உயிர்வளியேற்ற எதிர்ப்பிகள், ப்ரோபையோடிக் உணவுசார் நார்ச்சத்துக்கள், மற்றும் தாதுக்கள் ஆகியவற்றை செறிவாகக் கொண்டிருக்கிறது. அது, நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் நன்மை புரிகின்ற வைட்டமின் A, வைட்டமின் C, மற்றும் வைட்டமின் D போன்ற வைட்டமின்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது. அவற்றின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நன்மைகளைப் பெற, அவற்றை ஒரு பழமாக, அல்லது சாறுகளாக, அல்லது கலக்கிகளாகப் பயன்படுத்த இயலும். அநேகமாக இந்த இரட்டை நன்மைகளே மாம்பழம் "பழங்களின் அரசன்" எனக் கூறப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.

மாங்காய் பெரும்பாலும் வெப்ப மண்டல பிரதேசங்களில் வளர்க்கப்படுகிறது, ஆனால் உலகிலேயே மாங்காயை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. அப்புறம் ஏன் கிடையாது? மாம்பழம் தான் இந்தியாவின் தேசிய கனியாக இருக்கிறது. அது, மலைப்பகுதிகளைத் தவிர்த்து ஏறத்தாழ இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் நூறுக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் இருக்கின்றன என்பதை அறிந்தால், நீங்கள் கண்டிப்பாக சுவாரசியம் அடைவீர்கள். அவை பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் நிறங்களில் வருகின்றன. இந்தியாவின் பிரபலமான மாம்பழ வகைகளில், லங்க்ரா, பங்கனப்பள்ளி, சவுசா, டோட்டா, சபீதா, அல்போன்ஸா மாம்பழங்கள், மற்றும் இன்ன பிற வகைகளும் அடங்கும்.

வழக்கமாக மாங்காய் ஒரு சதைப்பிடிப்பான உட்புற பகுதியோடு முட்டை வடிவத்தில் இருக்கிறது. தாவரவியலாளர்கள், அது ஒரு விதையை மூடியிருக்கின்ற கூட்டை (குழி அல்லது கல் போன்று) சுற்றி, ஒரு வழக்கமான வெளிப்புற சதைப்பகுதியைக் கொண்ட ஒரு சதைக் கனி அல்லது கல் கனி என வரையறுக்கிறார்கள். மக்கள் அடிக்கடி இதன் சுவையை பீச் பழம், மற்றும் அன்னாசி பழத்திற்கு இடையேயான கலவை எனக் கூறுகிறார்கள்.

மாமரம், அநேகமாக வெப்ப மண்டல பகுதிகள் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மட்டுமே வளர்கின்ற, ஒரு என்றும் பசுமையான (ஒவ்வெரு வருடமும் மறுநடவு செய்யத் தேவையில்லை) பெரிய மரமாகும். மாம்பழத் தோலின் நிறம் வேறுபடக் கூடும் — பச்சையில் இருந்து சிவப்பு அல்லது மஞ்சளில் இருந்து ஆரஞ்சு - ஆனால் வழக்கமாக மாம்பழத்தின் சாறு நிறைந்த சதைப்பகுதியானது பொன்னிற மஞ்சள் வண்ணத்தில் இருக்கிறது. பழுக்காத மாங்காயின் வெளிப்புறத் தோல் மிருதுவாக மற்றும் பச்சை வண்ணத்தில் இருக்கிறது, ஆனால் பழுக்கும் பொழுது, பயிரிடும் வகையைப் பொறுத்து, அது பொன்னிற மஞ்சள், மஞ்சள், அடர் சிவப்பு, அல்லது ஆரஞ்சு-சிவப்பு ஆகிய வண்ணங்களில் ஒரு வண்ணத்துக்கு மாற்றம் அடைகிறது. பொதுவாக அவை பிப்ரவரி மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பயிரிடப்படுகின்றன. பழுத்த மாம்பழங்கள் வழக்கமாக இனிப்பானவை, ஆனால் அவற்றுள் ஒரு சில மாம்பழங்கள் பழுத்து இருந்தும், புளிப்பு சுவை குறையாமல் இருக்கக் கூடும்.

மாங்காய், அப்படியே புதிதாக, அல்லது சட்னி, உலர் பொருட்கள், கூழ், ஊறுகாய், கூட்டுகள், பழச்சாறு எனத் தயாரிக்கப்பட்டு, மற்றும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள முறையான கேன்களில் அடைத்து, அல்லது உலர்ந்த துண்டுகளாக உட்கொள்ளப்படுகிறது. நம்மால் மாங்காயில் இருந்து ஆம் பன்னா, மற்றும் மாம்பழத்தில் இருந்து மாம்பழ சாறு அல்லது ஆம்ராஸ் ஆகியவை தயாரிக்க முடியும். மாம்பழத்தின் சதைப்பகுதியைக் கொண்டு மாம்பழ குல்ஃபி, சர்பத் மற்றும் ஐஸ் க்ரீம்கள் ஆகியவையும் கூடத் தயாரிக்க முடியும். சுவை மிகுந்த ஜாம்களை நாம் எப்படி மறக்க முடியும்! அவற்றைக் குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள்.

மாம்பழம், அல்லது மாங்காய் இரண்டையும் உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சாப்பிட முடியும்.

உங்களுக்குத் தெரியுமா?

ஒரு முழுதாகப் பழுத்த மாம்பழம் செல்வச்செழிப்பினைக் குறிக்கிறது.உண்மையாகவே மாம்பழங்கள் உலகத்துக்கு இந்தியாவின் பரிசு ஆகும்!

மாங்காயைப் பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

 • தாவரவியல் பெயர்: மாஞ்சிஃபெரா இண்டிகா
 • குடும்பம்: அனகர்டியசியயி.
 • பொதுவான பெயர்கள்: மாங்காய், ஆம்
 • சமஸ்கிருதப் பெயர்:  அமரம்
 • பயன்படும் பாகங்கள்: மாவிலைகள் நீரிழிவுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயன்மிக்கவை ஆகும். மேலும் அவை, திருவிழா மற்றும் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும் நாட்களில் ஒவ்வொரு வீட்டின் கதவுகளின் முன்புறம் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. மாங்கொட்டைகள் எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. மாம்பழம் ஒவ்வொருவராலும் மற்றும் அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது.
 • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: மாங்காய் தெற்கு ஆசியாவை சொந்த பிராந்தியமாகக் கொண்டதாகும். அது, பண்டைய காலத்தில் இருந்து, அதன் தாய் நிலத்தில் பயிரிடப்பட்டும் புகழப்பட்டும் வருகிறது. அது 10 ஆம் நூற்றாண்டின் கி.பி 1833 ஆம் ஆண்டில் பெர்சியர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், மாமரக் கன்றுகள் டாக்டர். ஹென்றி பெர்ரின் அவர்களால் யுகாட்டனில் இருந்து கேப் ஷேபிலுக்கு கப்பலில் எடுத்து செல்லப்பட்டதாகவும், அவர் இந்தியர்களால் கொல்லப்பட்ட பிறகு, அவை அழிந்து போனதாகவும் சொல்லப்படுகிறது. 1862 அல்லது 1863 ஆம் ஆண்டில், ஒரு மருத்துவரான ஃபிளெட்சர் மூலமாக மாமர விதைகள், மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து மியாமிக்கு இறக்குமதி செய்யப்பட்டன.  கி.பி 4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டுகளில், புத்த பிட்சுகள் தங்கள் கடற்பயணங்களின் போது, மாங்காயை மலேயாவில் இருந்து கிழக்கத்திய ஆசிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது. அது, 1782 வாக்கில் ஜமைக்காவை அடைந்தது, மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், அது பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து மெக்ஸிக்கோவை அடைந்தது.
 • வேடிக்கையான உண்மைகள்: 1. ஒரு கூடை நிறைய மாம்பழங்களை ஒருவருக்குத் தருவது, அவரது நட்பைக் கொடுப்பவர் விரும்புகிறார் என்பதைக் குறிக்கும் ஒரு செயலாகும்.
   2. புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு அதிக குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, மாவிலைகள் திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
 1. மாங்காய் ஊட்டச்சத்து விவரங்கள் - Mango nutrition facts in Tamil
 2. மாங்காயின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Mango health benefits in Tamil
 3. மாம்பழத்தின் பக்க விளைவுகள் - Mango side effects in Tamil
 4. முக்கிய குறிப்புகள் - Takeaway in Tamil
மாங்காய் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் டாக்டர்கள்

ஒரு கோப்பை அளவு மாம்பழம், 100 கலோரிகளை மட்டுமே அளிக்கிறது, எனவே இது ஒரு இனிப்பான விருந்து ஆகும். மாம்பழத்தை ஒருவர் எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி உண்ணலாம். ஒவ்வொரு மாங்காயை உட்கொள்வதும், கொழுப்பு இல்லாத, மற்றும் சோடியம் இல்லாத ஒன்றாக இருப்பது மட்டும் அல்லாமல், கூடவே அது கொழுப்புச்சத்து இல்லாததும் ஆகும்.

மாங்காய் ஒரு மிகச்சிறந்த உணவுப் பொருளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அது 20 -க்கும் மேற்பட்ட பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டிருக்கிறது.

USDA ஊட்டச்சத்து தரவுதளத்தின் படி, 100 கி மாங்காய் பின்வரும் அளவுகளைக் கொண்டிருக்கிறது

ஊட்டச்சத்துக்கள் 100 கிராமில் உள்ள அளவு
தண்ணீர் 83.46 கி
ஆற்றல் 60 கி.கலோரி
புரதச்சத்து 0.82 கி
கொழுப்புகள் 0.38 கி
கார்போஹைட்ரேட்கள் 14.98 கி
நார்ச்சத்து 1.6 கி
சர்க்கரை 13.66 கி
தாதுக்கள்  
கால்சியம் 11 மி.கி
இரும்புச்சத்து 0.16 மி.கி
மெக்னீஷியம் 10 மி.கி
பாஸ்பரஸ் 14 மி.கி
பொட்டாசியம் 168 மி.கி
சோடியம் 1 மி.கி
துத்தநாகம் 0.09 மி.கி
வைட்டமின்கள்  
வைட்டமின் C 36.4 மி.கி
வைட்டமின் B1 0.028 மி.கி
வைட்டமின் B2 0.038 மி.கி
வைட்டமின் B3 0.669 மி.கி
வைட்டமின் B6 0.119 மி.கி
வைட்டமின் B9 43 µகி
வைட்டமின் A 54 µகி
வைட்டமின் E 0.9 மி.கி
வைட்டமின் K 4.20 µகி
கொழுப்பு/கொழுப்பு அமிலங்கள்  
செறிவுற்றவை 0.092 கி
ஒற்றை செறிவற்றவை 0.14 கி
பன்மை செறிவற்றவை 0.071 கி

­­மாம்பழம் மகிழ்ச்சியளிக்கும் ஒரு கோடை காலப் பழம் மட்டும் அல்லாமல், அது, உயிரியல்ரீதியில் திறன்மிக்க மூலக்கூறுகள், பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளில் குணமளிக்கும் விளைவுகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கும், ஊட்டச்சத்தளிக்கும், மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவு ஆகும். இப்பொழுது நாம், மாங்காயின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளைப் பற்றி, அறிவியல் ஆதாரங்களின் துணை கொண்டு ஒரு பார்வை பார்க்கலாம்.

 • வெப்ப அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கிறது: எதுவும் கலக்காத மாம்பழ சாறு, அல்லது ஆம் பன்னா உடலின் மீது ஒரு குளுமைப்படுத்தும் விளைவைக் கொண்டிருக்கும் காரணத்தால், வெப்ப அதிர்ச்சிக்கு அது ஒரு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது. வெப்பம் மிகுந்த கோடை காலங்களில், உங்கள் உடலில் நீர்ச்சத்தைப் போதிய அளவில் பராமரிப்பதற்காக, நீங்கள் மாம்பழத்தினை கலக்கிகள் வடிவத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.
 • மலச்சிக்கலைப் போக்குகிறது: நார்ச்சத்தின் நல்ல ஒரு ஆதாரமாக இருப்பதால், மாம்பழம் மலத்தினை இலகுவாக்க, மற்றும் அவை உணவுக் கால்வாயில் எளிதாகப் பயணிக்க உதவுவதன் மூலமாக மலச்சிக்கலைப் போக்குகிறது.
 • இரத்த சர்க்கரை அளவுகளை முறைப்படுத்துகிறது: மாம்பழங்கள், இயல்பாகவே மிகவும் குறைவான ஒரு இரத்த உயர்த்திக் குறியீட்டு எண்ணைக் கொண்டிருக்கின்றன. அதாவது, அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் எந்த ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பினையும் கொண்டிருக்காது. மேலும், இந்தப் பழத்தில் உள்ள நார்ச்சத்தானது, குடல்களில் இருந்து சர்க்கரையைக் கிரகிக்கும் செயல்முறையைத் தாமதப்படுத்துவதன் மூலமாக, உங்கள் சர்க்கரை அளவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
 • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: மாம்பழங்கள் இயற்கையான கொழுப்பு குறைப்பிகள் (கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது) ஆகும். மேலும் அவை, அடுத்தபடியாக இரத்த அழுத்த அளவுகளைப் பராமரிக்க உதவுகின்ற பொட்டாசியத்தின் மிகச் சிறந்த ஒரு ஆதாரம் ஆகும். இந்த இரண்டு பண்புகளும் இணைந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதயநாள பிரச்சினைகள் ஏற்படுகின்ற அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன.
 • சருமத்துக்கான நன்மைகள்: மாம்பழங்கள், சரும செல்களின் மறு உற்பத்தியில், மற்றும் சரும செல்களின் ஒருங்கிணைப்பைப் பராமரிப்பதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்ற வைட்டமின் A மற்றும் வைட்டமின் C ஆகிய வைட்டமின்களை போதுமான அளவு கொண்டிருக்கின்றன.
 • கண்களுக்கு நல்லது: மாம்பழம், கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன எனக் கண்டறியப்பட்டு இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களால் நிரம்பி உள்ளது. இந்தப் பழத்தில் இருக்கின்ற வைட்டமின் A மற்றும் கெரோட்டின், பார்வை இழப்பு, மற்றும் கருவிழி சிதைவு மற்றும் கண்புரை போன்ற முதுமை தொடர்பான கண் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன.

மாம்பழம் கொழுப்பு அளவுகளைக் குறைக்கிறது - Mango reduce cholesterol in Tamil

மாம்பழங்கள், உடலில் உள்ள கொழுப்பு அளவுகளின் மீது ஒரு நன்மை தரும் பாதிப்பைக் கொண்டிருக்கின்ற ஊட்டச்சத்துக்களை ஏராளமான அளவில் கொண்டிருக்கின்றன. மாம்பழத்தில் உள்ள உணவுசார் நார்ச்சத்து, சில கொழுப்புகளைப் பிடித்து வைத்து, பின்னர் மலத்துடன் சேர்த்து அவற்றை வெளியேற்றுகிறது. கூடுதலாக, நீரில் கரைகின்ற நார்ச்சத்துக்களானவை, கொழுப்பு அளவுகளைக் குறைக்க வழிவகுக்கும் வகையில் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கின்றன.

மருத்துவ ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வுகளின் படி, வைட்டமின் C, உடலில் உள்ள குறை அடர்த்திக் (கெட்ட) கொழுப்பு மற்றும் ட்ரைக்ளிசரைட் அளவுகளைக் குறைக்க உதவுகிறது. வைட்டமின் C ஒரு மிகச் சிறந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் ஆகும். அதாவது, அது இரத்தக் குழாய்களில் கொழுப்புக்களின் உயிர்வளியேற்றத்தைத் தடுத்து, அதன் மூலம் கொழுப்பு படிமங்கள் ஏற்படுவதைக் குறைத்து, தமனித்தடிப்பு மற்றும் இதய இரத்தக்குழாய் நோய் ஆகியவை ஏற்படுவதைத் தடுக்கிறது.  

மாம்பழத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - Mango anticancer porperties in Tamil

பல்வேறு ஆய்வுகள், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ப்ரோஸ்டேட் புற்றுநோய், மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட, பல்வேறு வகை புற்றுநோய் செல்களுக்கு எதிரான மாம்பழம் மற்றும் மாம்பழத் தோலின் புற்றுநோய் எதிர்ப்புத் திறனைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. மாம்பழத்தின் சதைப்பகுதியில் உள்ள கேரோடினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம் பற்றும் பாலிபெனோல்கள் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சி, மற்றும் பரவுதலைத் தடுப்பதில் மிகவும் பயன் மிக்கதாக இருக்கின்றன.

தாவரம்சார் மருந்தியல் இதழில் குறிப்பிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, மாம்பழத்தின் தோல் சில திறன்மிக்க புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, மாம்பழத்தின் சதைப் பகுதியானது பீட்டா-கேரட்டினின் ஒரு நல்ல ஆதாரம் ஆகும். பீட்டா-கேரட்டின் நிரம்பிய உணவுகள், மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு பழங்களில் காணப்படுகின்ற இந்த பீட்டா-கேரட்டின், கட்டிகள் மற்றும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவைக் கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இருப்பினும், புற்றுநோய் சிகிச்சைகளில் ஒரு ஊட்டச்சத்து பிற்சேர்க்கையாக மாம்பழத்தின் நன்மைகளை உறுதி செய்வதற்கு, தற்போதும் கூட மேலும் பல ஆய்வுகள் தேவையாகவே இருக்கின்றன..

இரத்த சோகைக்காக மாம்பழம் - Mango for anemia in Tamil

மாம்பழம் ஏராளமான அளவு இரும்புச்சத்தைக் கொண்டிருக்கிறது. அது இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் இரத்த சோகையைக் கொண்டிருந்தால், மாம்பழங்களை சாப்பிடுவது மிகவும் திடமாக அறிவுறுத்தப்படுகிறது. மாம்பழங்கள், இந்த இரும்புச்சத்தை உடலுக்குள் கிரகிக்க உதவுகின்ற வைட்டமின் C -யைக் கொண்டிருக்கிறது.

வெப்ப அதிர்ச்சிக்காக மாம்பழம் - Mango for heat stroke in Tamil

கோடைகாலம் என்பது நாம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய, மற்றும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கின்ற நேரம் ஆகும். நமது உடலை நீர்ச்சத்தோடு வைத்திருக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. மாம்பழ சாறு, அதிக புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பானம் ஆகும். கூடவே, ஆம் பன்னா என அறியப்படும் எதுவும் கலக்காத மாம்பழ சாறு உடலைக் குளுமையாக வைத்திருக்கிறது. அது வெப்ப அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்க, மற்றும் அதற்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அது, வெப்ப அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் மிகவும் இயற்கையான நிவாரணிகளில் ஒன்றாகும்.

கல்லீரலுக்காக மாம்பழம் - Mango for liver in Tamil

விவோ (விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட) ஆய்வுகள், மாம்பழம் சில ஈரல் பாதுகாப்பு (கல்லீரலைப் பாதுகாக்கிறது) பண்புகளைக் கொண்டிருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றன. மாம்பழம் மேன்ஜிஃபெரின் என அறியப்படும் ஒரு முக்கியமான வேதியியல் மூலக்கூறினைக் கொண்டிருக்கிறது. இந்த மேன்ஜிஃபெரின், குடல் ரெப்பெர்ப்யூசன் (இரத்த அளித்தலில் ஏற்படும் ஒரு திடீர் திரும்புதல் காரணமாக திசுக்களில் ஏற்படுகின்ற காயம்) காரணமாக ஏற்படுகின்ற கல்லீரல் சேதத்தைக் குறைக்கக் கூடியது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது, மேன்ஜிஃபெரின் குறிப்பிட்ட சில சமிக்கை பாதைகளுடன் குறுக்கிடுவதன் மூலம், இந்த செயலை செய்கிறது என சுட்டிக் காட்டுகிறது. மாம்பழத்தின் அழற்சி எதிர்ப்பு மற்றும் உயிர்வளியேற்ற எதிர்ப்புப் பண்புகள், மாம்பழத்தின் ஈரல் பாதுகாப்பு செயல்பாட்டுக்குக் காரணமாக இருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு முந்தைய ஆய்வு, மாம்பழம் எடுத்துக் கொள்வது, இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவுகளைக் குறைப்பதன் மூலம், மது அருந்துவதால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க உதவக் கூடும் என்று தெரிவிக்கிறது.

வலிமையான எலும்புகளுக்காக மாம்பழம் - Mango for strong bones in Tamil

மாம்பழங்களில் உள்ள அதிகமான வைட்டமின் மற்றும் தாது உட்பொருட்கள், அதனை எலும்பு ஆரோக்கியத்துக்கான பொருத்தமான ஒன்றாக மாற்றுகின்றன. அவை, எலும்புகள் விரிசல் அடைவதைத் தடுக்கின்றன. அது, எலும்புகளின் உறுதியை மேம்படுத்துகிறது மற்றும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது.

ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் உயிர்வளியேற்ற எதிர்ப்புப் பொருளான மாம்பழம், உள் மூலக்கூறு சேதாரக் கூறுகளின் காரணமாக ஏற்படும் எலும்பு சேதாரத்தைக் குறைப்பதுடன், கூடவே மூட்டழற்சி நோயின் அறிகுறிகளில் இருந்து விடுபடவும் கூட உதவுகிறது.

சருமத்துக்கான மாம்பழத்தின் நன்மைகள் - Mango benefits for skin in Tamil

மாம்பழங்களில் உள்ள வைட்டமின்கள், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றன. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் A மற்றும் வைட்டமின் C, சருமத்தை சரி செய்ய உதவுகின்றன. அவை, சருமத்தில் உள்ள சிறு குழிகளை நிரப்புகின்றன மற்றும் பருக்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. எனவே, ஒரு தெளிவான சருமத்தைப் பெறும் நோக்கத்தோடு மக்கள் மாம்பழங்களை உட்கொள்கின்றனர். நீங்கள் மாம்பழங்களை தேன் மற்றும் கடலை மாவுடன் (பேசன்) கலந்து, வீட்டிலேயே ஒரு முக அழகுக் கவசம் தயாரிக்கவும் முடியும். மாம்பழத்தின் உயிர்வளியேற்ற எதிர்ப்பு பண்புகள், சருமத்தை ஒவ்வாமைகள், மற்றும் சுருக்கங்கள் ஏற்படாமல் வைத்திருக்க உதவக் கூடியவை ஆகும்.

கண்களுக்கான மாம்பழத்தின் நன்மைகள் - Mango benefits for eyes in Tamil

மாம்பழங்கள் ஊட்டச்சத்து நன்மைகளால் நிரம்பி வழிகின்றன. அவை வைட்டமின்கள், கால்சியம், மெக்னீஷியம், மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றால் நிரம்பி இருக்கின்றன. மாம்பழங்களில் உள்ள பீட்டா-கேரட்டின் மற்றும் வைட்டமின் A ஆகியவை, மிகவும் குறிப்பாகக் கண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான நன்மையை அளிப்பவை ஆகும். "முதுமை அடையும் கண்களுக்கான ஊட்டச்சத்து" என்ற ஒரு கட்டுரையின் படி, வைட்டமின் E, வைட்டமின் C, மற்றும் பீட்டா-கேரட்டின் போன்ற உணவு மூலக்கூறுகள், கண்புரை, மற்றும் கருவிழி சிதைவு போன்ற முதுமை தொடர்பான கண் நோய்கள் ஏற்படாமல் தடுக்க மிகவும் உதவிகரமாக இருக்கின்றன. எனவே. மாம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வருவது, உங்கள் கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, மற்றும் நீண்ட காலத்துக்கு அவற்றை இளைமையாக வைத்திருக்க உதவக் கூடியது ஆகும்.

இதயத்துக்கான மாம்பழத்தின் நன்மைகள் - Mango benefits for heart in Tamil

மாம்பழம், இதய ஆரோக்கியத்துக்கு மற்றும் இதயத்தின் நல்வாழ்வுக்கு பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அது, பொட்டாசியத்தின் ஒரு நல்ல ஆதாரமாகவும், மற்றும் ஒரு திறன் மிக்க கொழுப்புக் குறைப்பு (கொழுப்பை குறைக்கிறது) காரணியாகவும் இருக்கிறது. இந்தப் பண்புகள் இரண்டும் இணைந்து, கொழுப்பு படிமானம், மற்றும் இரத்தக் குழாய்கள் சுருங்குதல் காரணமாக இதயத்துக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க உதவுவது மட்டும் அல்லாமல், கூடவே அவை, வழக்கமாக இதய தசைகளுக்கு அதிகமான அழுத்தத்தை அளிப்பதோடு தொடர்புடைய, உடலில் உள்ள உப்பின் அளவை சமன்படுத்துவதிலும் கூட உதவுகின்றன. அதனால், மாம்பழங்களை சாப்பிடுவது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கக் கூடும்.

(மேலும் படிக்க: இதய நோய்களின் அறிகுறிகள்)

நீரிழிவுக்காக மாம்பழம் - Mango for diabetes in Tamil

மாம்பழங்கள் இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன. அவை, மிகவும் குறைந்த சர்க்கரை உயர்த்திக் குறியீட்டு எண்ணைக் (இரத்த சர்க்கரை அளவுகளை அதிக அளவில் அதிகரிப்பது இல்லை) கொண்டிருக்கின்றன. அதனால், மாம்பழங்களை சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவுகள் பொங்கி எழுந்து அதிகரிப்பது கிடையாது.

அதற்கும் மேல், மாம்பழங்கள் இரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தும் பொறுப்பையும் கொண்டிருக்கும் உணவுசார் நார்ச்த்துக்களின் ஒரு நல்ல ஆதாரமாக இருக்கின்றன. மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்தானது, இரத்தத்துக்குள் சர்க்கரை மெதுவாக விடுபடுமாறு செய்வதற்கு வழிவகுக்குமாறு, உணவுகள் குடலுக்குள் பயணிக்கும் நேரத்தை (உணவு குடலில் தங்கி இருக்கின்ற நேரம்) அதிகரிக்கும். அதனால், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாம்பழம் ஒரு பாதுகாப்பான பழமாக இருக்கக் கூடும். ஆனால், நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளி என்றால், மாம்பழத்தை எடுத்துக் கொள்ளும் முன்னர் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்குமாறு நீங்கள் திடமாக அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

(மேலும் படிக்க: நீரிழிவு சிகிச்சை)

இரத்த அழுத்தத்துக்காக மாம்பழம் - Mango for blood pressure in Tamil

உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்த அழுத்த மிகை என்பது, உலகம் முழுவதும் மிகவும் பொதுவான ஒரு பிரச்சினையாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் வயதான முதியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்தப் பிரச்சினை இப்பொழுது இளைய தலைமுறையினரிடமும் அடிக்கடி காணப்படுகிறது. பெரும்பாலான மருத்துவர்கள் இந்தப் பிரச்சினையை வாழ்க்கைமுறை மன அழுத்தம், மற்றும் உணவுமுறை பழக்கங்களுடன் தொடர்புபடுத்துகின்றனர். தற்போதைய சிகிச்சை முறையானது, மருந்துகளுடன் கூடவே பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்ற உணவுசார் தேர்வுகளையும் எடுத்துக் கொள்வதை மிகவும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. ஒரு பழமாக மாம்பழம், இரத்த அழுத்த அளவுகளைப் பராமரிக்க ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கிறது. அவை, உடலில் உள்ள உப்புச்சத்தின் அளவை சமநிலையில் வைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்ற பொட்டாசியத்தை, அதிக அளவில் கொண்டிருக்கின்றன. மேலும், மாம்பழம் குறைந்த அளவு கொழுப்புகளை மட்டுமே கொண்டிருக்கிறது. எனவே, மாம்பழத்தை உட்கொள்வதால், இரத்தக் குழாய்களை சுருங்க வைத்து, இதயத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதோடு வழக்கமாகத் தொடர்புடைய கொழுப்பு அளவுகளை அதிகரிக்க செய்யாது.

மாங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - Mango boosts immunity in Tamil

மாங்காயில் உள்ள வைட்டமின் C, நோய் எதிர்ப்பு சக்திக்கான ஒரு மிகச் சிறந்து ஊக்குவிப்பான் ஆகும். அது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குவது மட்டும் அல்லாமல், பொதுவான நோய்த் தொற்றுக்களுக்கு எதிரான அதிகபடியான எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருக்கிறது. கூடுதலாக, மாங்காய் வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் E ஆகியவற்றின் ஒரு செறிவான ஆதாரம் ஆகும். இந்த இரண்டு வைட்டமின்களும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். அதனால், மாங்காய்களில் உள்ள இந்த வைட்டமின்கள், நோய்கள், கிருமிகள், மற்றும் நோய்த்தொற்றுக்களுக்கு எதிராகப் போரிடும் திறனை உடலுக்கு வழங்குகின்றன.

மலச்சிக்கலுக்காக மாம்பழங்கள் - Mangoes for constipation in Tamil

மாம்பழங்கள் மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியவை ஆகும். அவை உணவுசார் நார்ச்சத்தினை செறிவாகக் கொண்டிருக்கின்றன மற்றும் அதிகமான தண்ணீர் உட்பொருளைக் கொண்டிருக்கின்றன. எனவே, மாம்பழங்களை சாப்பிடுவது, குடல்களின் செயல்பாட்டை அதிகரித்து, அதன் மூலமாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவக் கூடும். மாம்பழத்தில் இருக்கின்ற நார்ச்சத்து உட்பொருள், இலகுவான மலம் கழித்தல் செயல்பாட்டினை மேம்படுத்த உதவுகின்ற வகையில் மலத்தினை இளக்குகிறது. எனவே, மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு, உங்கள் உணவுமுறையில் மாம்பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது.

மாம்பழம் உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது - Mango helps maintain weight in Tamil

மாம்பழங்கள், கட்டுப்பாடான அளவுகளில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, உடல் எடையைக் குறைக்க உதவ முனைகின்றன. ஒரு கோப்பை அளவுக்கு மாம்பழம் 100 கலோரிகளை மட்டுமே வழங்குகிறது. எனவே, மாம்பழங்களை சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தி விடலாம். கூடவே, அவை உயிர்வளியேற்ற எதிர்பொருட்களின் வளமான ஒரு ஆதாரமாக இருக்கின்றன, மற்றும் ஏறத்தாழ கொழுப்புகளே அவற்றில் கிடையாது. எனவே, அவை ஒட்டுமொத்த உடல் எடையைப் பராமரிக்க உதவக் கூடியவையாக இருக்கின்றன.

(மேலும் படிக்க: உடல் பருமன் காரணங்கள்)

 • ஒரு சில நபர்களுக்கு மாம்பழம் சாப்ப்பிடுவதன் காரணமாக ஒவ்வாமைகள் ஏற்படுகின்ற ஆபத்து இருக்கிறது.
 • அதிகமான மாம்பழங்களை சாப்பிடுவது, வயிற்றின் மீது ஒரு பாதகமான விளைவை ஏற்படுத்தி, வயிற்றுப்போக்கு ஏற்படக் காரணமாக் கூடும்.
 • மாம்பழ மரப்பால் ஒவ்வாமையும் கூட ஒரு சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. வாந்தி மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஆகியவை, மாம்பழ மரப்பால் ஒவ்வாமையின் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்ட பக்க விளைவுகளில் சிலவாகும்.
 • அதிகமான எண்ணிக்கையில் மாம்பழங்களை உட்கொள்வது, எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக் கூடும்.
 • அளவுக்கு அதிகமாக மாம்பழங்களை எடுத்துக் கொள்வது காரணமாக, ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கக் கூடும்.
 • இன்றைய காலகட்டத்தில், மாம்பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுகின்றன. அது போன்ற மாம்பழங்களை உட்கொள்வது, புற்றுநோய், நரம்பு மண்டலக் கோளாறுகள், வயிற்றுத் தொந்தரவு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கக் கூடும்.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

மாம்பழங்கள் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் அற்புதமானவை. உங்களை உறுதியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க, அவற்றை உங்கள் உணவுமுறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எல்லோரும் மாம்பழங்களை சாப்பிடுவதை மிகவும் விரும்புகின்றனர், ஏன் இருக்காது? அதில் இருக்கின்ற ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், மனித உடலுக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். மாம்பழத்தின் உயிர்வளியேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளின் காரணமாக, இதன் பன்முகத்தன்மையுடைய உயிர்வேதியியல் செயல்பாடுகள், மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பண்புகளுக்காக, இந்த பழம் அனைவரது உணவு முறையிலும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

Dr. Dhanamjaya D

Dr. Dhanamjaya D

Nutritionist
16 Years of Experience

Dt. Surbhi Upadhyay

Dt. Surbhi Upadhyay

Nutritionist
3 Years of Experience

Dt. Manjari Purwar

Dt. Manjari Purwar

Nutritionist
11 Years of Experience

Dt. Akanksha Mishra

Dt. Akanksha Mishra

Nutritionist
8 Years of Experience


Medicines / Products that contain Mango

மேற்கோள்கள்

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 09176, Mangos, raw . National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. El-Sayyad SM, Soubh AA, Awad AS, El-Abhar HS. Mangiferin protects against ‭intestinal ischemia/reperfusion-induced ‭liver injury: ‬‬Involvement of PPAR-‭γ, GSK-3β and Wnt/β-catenin pathway‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬. Eur J Pharmacol. 2017 Aug 15;809:80-86. PMID: 28506911
 3. Marianna Lauricella et al. Multifaceted Health Benefits of Mangifera indica L. (Mango): The Inestimable Value of Orchards Recently Planted in Sicilian Rural Areas. Nutrients. 2017 May; 9(5): 525. PMID: 28531110
 4. Helen M Rasmussen, Elizabeth J Johnson. Nutrients for the aging eye . Clin Interv Aging. 2013; 8: 741–748. PMID: 23818772
 5. So-Hyun Kim et al. Ameliorating effects of Mango (Mangifera indica L.) fruit on plasma ethanol level in a mouse model assessed with 1H-NMR based metabolic profiling. J Clin Biochem Nutr. 2011 May; 48(3): 214–221. PMID: 21562641
 6. Marc P. McRae. Vitamin C supplementation lowers serum low-density lipoprotein cholesterol and triglycerides: a meta-analysis of 13 randomized controlled trials J Chiropr Med. 2008 Jun; 7(2): 48–58. PMID: 19674720
Read on app