ஆல மரம்:

ஆல மரம் அல்லது பர்கட் கா பேட் என்றும் ஹிந்தியில் கூறப்படும் ஆல மரமானது இந்து புராணங்களில் ஒரு புனித மரமாகவே போற்றப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் ஆல மரத்திற்கு கீழே பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. பழங்காலம் முதல் ஆல மரத்தின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள் அக்கால கட்டத்தில் ஏற்பட்ட பல நோய்களுக்கும், பல தொற்றுகளுக்கும் சிகிச்சை அளிக்க ஆல மரத்தின் பகுதிகளை உபயோகித்து வந்ததாக ஆயுர்வேதம் கூறுகிறது. 'வாத தோஷா' என்று ஆயுர்வேதத்தில் கூறக் கூடிய உடலில் வாயு மற்றும் உடல் இயக்கத்தின் சமநிலையற்ற தன்மையை குணப்படுத்துவதில் ஆல மரம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக ஆயுர்வேத நூல்கள் கூறுகிறது.

ஆல மரம் ஒரு ஒட்டுயிரி இனம் ஆகும் (ஒரு செடி வேறு ஒரு செடியின் மீது வளரும் தன்மை - அதாவது புரவலன் மரத்தின் இடுக்குகளில் விழும் விதைகள் அங்கேயே செடியாக மரமாக வளரும் தன்மை). ஆல மரம் 'ஃபைக்கஸ் எனும் பேரினத்தை சேர்ந்தது. இந்தியாவில் காணப்படும் 'ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ்' எனும் ஆல மரமானது நம் நாட்டின் தேசிய மரமாக விளங்குகிறது. உலகின் வெப்ப மண்டல மற்றும் சூடான பகுதிகளை தன் தாயகமாக கொண்டுள்ளது ஆல மரம்.

ஆல மரத்தின் இலை பெரிதாகவும், நீள் வடிவத்திலும், தோலை போன்ற அமைப்பை கொண்டும், பளபளப்பான பச்சை நிறத்திலும் காட்சி அளிக்கும். ஆல மரத்தின் தனித்துவமான பண்பு என்னவென்றால் நிலத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் ஆலம் விழுதுகள் ஆகும்.

மிகவும் பெரிதாக வளரும் விழுதுகள் நிலத்தை தொட்டு தானும் ஒரு தனி மரமாக காட்சி அளிக்கும். கொல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் காணப்படும் இருநூற்று ஐம்பது வயதான 'பெரிய ஆல மரம்'  மிகவும் பழமை வாய்ந்ததாகவும், அதிகமான வேர்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. இம்மரத்தில் உள்ள ஆலம் விழுதுகள் நூற்றுக் கணக்கில் உள்ளதாலும் அவை அனைத்தும் நிலத்தைத் தொட்டு தானும் தனித் தனி மரங்களாகக் காட்சி அளிக்கின்றன. இன்று வரையில் இந்தியாவில் இந்த மரமே மிகவும் பெரிய மரமாகவும் பழமையான மரமாகவும் உள்ளது.

ஆல மரம் பற்றிய சில முக்கிய தகவல்கள்:

 • தாவரவியல் பெயர்: ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ்
 • குடும்பம்: மோரேசியே
 • பொதுவான பெயர்கள்: ஆல மரம், பரகத், பாரா கச்சா, பாடா, கவிரூல்
 • சமஸ்க்ருத பெயர்: ந்யாயகுரோத், வாத விருக்ஷம்
 • பயன்படுத்தப்படும் பகுதிகள்: இலைகள், கிளைகள், பழங்கள்
 • பரவலாக காணப்படும் இடங்கள்: வெப்பமண்டல மற்றும் சூடான பகுதிகள்
 1. ஆல மரத்தின் பயன்கள் - Banyan tree uses in Tamil
 2. ஆல மரத்தின் (‘பர்கட் கா பேட்’) மற்ற பயன்கள் - Other benefits of the banyan tree in Tamil
 3. ஆல மரத்தின் பக்க விளைவுகள் - Side effects of the banyan tree in Tamil

இந்தியாவில் மிகவும் பரவலாகக் காணப்படும் மரங்களில் ஒன்று ஆல மரம் ஆகும். மருத்துவ குணங்கள் பல இம்மரத்தில் உள்ளதால், பல நோய்களையும், தொற்றுகளையும் குணப்படுத்த ஆல மரம் பெரிதும் உதவுகிறது. நோய்களை தடுக்கும் பணியில் ஆல மரம் முக்கிய பங்கு வகிப்பதால், இந்திய மருத்துவ துறை ஆல மரத்தைப் பேணிக் காக்கிறது. ஆல மரத்தின் பயன்களையும், நன்மைகளையும் விரிவாக கீழே காணலாம்:

 • செரிமான அமைப்பிற்காக: ஆல மரம் பல நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் இரைப்பையின் செயல்பாட்டிற்கு மிகவும் உகந்தது. நுண்ணுயிர் கொல்லியாக செயல்படுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவலிக்கு சிறந்த மருந்தாகும். மேலும் அதிக நார் சத்து கொண்ட ஆல மரத்தின் இலைகள், மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க வல்லது.
 • கீல்வாதம் வருவதற்கான அறிகுறிகளை போக்க: வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்ட ஆல மரத்தின் இலைகள் கீல்வாதம் வருவதற்கான அறிகுறிகளைப் போக்க உதவும்.
 • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க: பாரம்பரியமாக, ஆல மர பட்டையில் இருந்து எடுக்கும் சாறை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பயன்படுத்தி வந்தனர். இதற்கு காரணம் சாறில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் என்று ஆய்வுகள் கூறுகின்றன. விஷத்தன்மையினால் ஏற்படக்கூடிய சேதத்தை சரி செய்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
 • யோனியில் ஏற்படும் தொற்றை நீக்க: நுண்ணுயிர் கொல்லியாக செயல்படுவதால், ஆல மர இலையின் பொடியை தண்ணீரோடு கலந்து யோனியை கழுவும் பொருட்டு தொற்றுகள் அழியும்.
 • சரும பராமரிப்பிற்கு: ஆல மர இலையில் இருந்து எடுக்கும் சாறை சரும பராமரிப்பிற்கு உபயோகிக்கலாம். இச்சாற்றினை கற்றாழையோடு கலந்து உபயோகித்தால் தோல் ஒவ்வாமைகள் குணமடையும். மேலும் பாலோடு கலந்து உபயோகித்தால் முகப்பரு மற்றும் கசிவுகளில் இருந்து விடுபடலாம்.
 • மூளையின் நன்மைக்கு: ஆல மரத்தின் பழங்கள் கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை தர வல்லது. ஆல மரத்தின் சாற்றில் இருக்கும் உயிர்வாயுக் கூறுகள் நினைவாற்றலை அதிகரிப்பதோடு, பயத்தினால் ஏற்படும் வலிப்பை தடுக்கக் கூடியது ஆகும்.

ஆல மரத்தின் நன்மைகள் - செரிமான அமைப்பிற்காக - Banyan tree for the digestive system in Tamil

ஆல மரத்தின் சாற்றை இரைப்பையின் செயல்பாட்டை அதிகரிக்க தொன்றுதொட்டு உபயோகித்து வருகின்றனர். நுண்ணுயிர் கொல்லியாக செயல்படுவதால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுவலிக்கு சிறந்த மருந்தாகும். ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ் பல ஆரோக்யம் சார்ந்த நன்மைகளை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சிகள் கண்டு கொண்டுள்ளன. நார் சாது அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் பொழுது, அவை குடலின் செயற்பாட்டை சீர் செய்து, குடலில் தேங்கும் கழுவுகளை உடனுக்குடனே வெளியேற்ற மிகவும் உதவியாக இருக்கும் என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் அதிக நார் சத்தை கொண்ட ஆல மரத்தின் சாறு (மரப்பால்) மலச்சிக்கலை குணப்படுத்த உதவும்.

ஆல மரத்தின் நன்மைகள் - வாய்வழி ஆரோக்கியத்திற்காக - Banyan tree for oral health in Tamil

வாயில் உள்ள பாக்டீரியாக்களை (நுண்ணுயிர்களை) அழிக்கும் தன்மை கொண்ட ஆல மரத்தின் சாறு, வாயில் ஏற்படும் பல் சிதைவு மற்றும் பசைக் கோளாறுகளை சரி செய்ய உதவும். லாக்டோபாகிலஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகோகஸ் ம்யூட்டன்ஸ் எனப்படும் பாக்டீரியாக்களே பல் சிதைவுக்கு காரணம் ஆகும். பற்பசையோடு ஆலம் வேர்களின் சாறை கலந்து உபயோகித்து வந்தால், கிருமிகளை அழித்து கிருமி நாசினியாக செயல்படும் என்று விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆல மரத்தின் நன்மைகள் - வீக்கத்தையும் வலியையும் போக்க - Banyan tree for inflammation and pain in Tamil

பாரம்பரிய மருத்துவத்தில், ஆல மரத்தின் சாறை வலி நிவாரணி ஆகவும், வீக்கத்தை குறைக்கவும் ஒரு மருந்தாக உபயோகித்தனர். உடலில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் சிவப்புத் தன்மையை போக்கும். கீல்வாதத்தினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவும். வலி நிவாரணியாக மார்ஃபின் மருந்து செய்யும் வேலையை ஆல மரத்தின் சாறு செய்கிறது. இருப்பினும், ஆல மரத்தின் முழு தன்மையையும் புரிந்துகொள்ள உயிரினங்கள் மீது மேலும் பல ஆய்வுகள் நடத்த வேண்டி உள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க - Banyan tree for the immune system in Tamil

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஆல மர பட்டையில் இருந்து எடுக்கும் சாறு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். ஒரு மனிதனுக்கு உடலில் ரேடிக்கல்ஸ்கள் தேவையான அளவில் இருத்தல் அவசியம். அதுவே உடலின் செயல்பாட்டை பராமரிக்க உதவும். ஆனால் தேவைக்கு மேல் அதிகமான அளவில் காணப்படும் ரேடிக்கல்ஸ்களால் தீங்கு நேரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவற்றை சரி செய்ய உடலில் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் தேவைப்படுகிறது. ஆல மரத்தின் சாற்றில் உள்ள உயிர்வாயு கூறுகள் ஆன்டிஆக்சிடன்ட் தன்மை கொண்டவை ஆகும். இதுவே உடலில் உள்ள ரேடிக்கல்ஸ்களை (உள்ளுறுப்புகளை பாதிக்கக்கூடியவை) அழிக்க உதவுகின்றன. எனவே நோயால் தடுக்கப்படுவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.

(மேலும் விவரங்களுக்கு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்)

யோனியில் ஏற்படும் தொற்றை நீக்க ஆல மரம் - Banyan tree for vaginal infection treatment in Tamil

ஆல மர இலையில் இருந்து எடுக்கும் சாறானது பெண்ணின் ஆரோக்கியத்திற்கு மிகுந்த உதவி புரிகின்றன. ஆல மரத்தின் சாறானது பெண் உறுப்பில் வெள்ளை படுதல், யோனியில் ஏற்படும் தொற்று போன்றவற்றைப் போக்க வல்லது. பெண் உறுப்புகளில் நுண்ணுயிர் தாவரங்களினால் ஏற்படுவதுதான் தொற்றிற்கு காரணம் ஆகும். பட்டைகள் அல்லது இலைகளை நொறுக்கி பொடி செய்து, தண்ணீரோடு கலந்து பெண் உறுப்பை கழுவும்பொழுது தொற்றுக்கள் நீங்கும்.

சரும பராமரிப்பிற்கு ஆல மரம் - Banyan tree for skin care in Tamil

ஆல மர இலை மற்றும் பட்டையில் சருமத்தை பாதுகாக்கும் பண்புகள் நிறைய உள்ளன. சருமத்தை பாதிக்கும் தொற்றுகளின் விஷத்தன்மையை நீக்கி, சருமத்திற்கு இனிமையான உணர்வை தர கூடியது ஆகும்.

ஆல மரத்தின் இலையை கொண்டு தயாரிக்கும் சாறோடு சூடான பாலை கலந்து பருகி வர முகப்பரு மற்றும் கசிவுகள் குணமடையும் என்பது ஆய்வின் முடிவாகும். மேலும் ஆல மரத்தின் பயன்களை அறிய நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் முடிவில் சரும தொற்றை தடுக்க ஆல மரத்தின் சாறோடு கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ் மரத்தின் சாறானது காயங்களை குணப்படுத்தி சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

நீரிழிவு நோய்க்கு ஆல மரம் - Banyan tree for diabetes in Tamil

நவீன உலகத்தின் மிக முக்கிய கவலையாக உள்ளது நீரிழிவு நோயாகும். பழங்காலங்களில் இருந்தே ஆல மரத்தின் சாறை நீரிழிவு நோயை குணப்படுத்தும் ஒரு மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். சாறில் உள்ள உயிரியக்க சேர்மங்கள் நீரிழிவு நோயை குணப்படுத்தவது மட்டும் அல்லாது மேலும் பல நாள்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தவும் உதவும்.

ஆல மரத்தின் சாறில் உள்ள உயிரியக்க சேர்மங்கள், மிகுந்த மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும், நீரிழிவு நோயை குணப்படுத்தும் மருந்தின் ஒரு முக்கிய மூலப்பொருளாகவும் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. ஆற்றல் வாய்ந்த மருந்தாக இதனை பயன்படுத்தவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்த இருக்கின்றன.

மூளையின் நன்மைக்காக ஆல மரம் - Banyan tree for the brain in Tamil

ஆல மரத்தின் பல பகுதிகள் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய உதவுகின்றன. ஆல மரத்தின் பழங்களில் உள்ள செரோடோனின் எனப்படும் கலவை, மன அழுத்தத்தையும், மன சோர்வையும் குணப்படுத்த வல்லது. மேலும் தசைகளின் தளர்ச்சியை தூண்டுவதாகவும் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. மூளையின் ஆற்றலை அதிகரிக்கவும், பயத்தால் உண்டாகும் வலிப்பை தடுக்கவும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கொழுப்பை குறைக்க உதவும் ஆல மரம் - Banyan tree for cholesterol in Tamil

குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் அல்லது எல்.டி.எல் (கெட்ட கொழுப்பு) ஐ குறைத்து அதிக அடர்த்தி கொழுப்புப் புரதம் அல்லது எச்.டி.எல் (நல்ல கொழுப்பு) ஐ அதிகரிக்கும் தன்மை கொண்டது ஆல மர இலையின் சாறு. ஃபைக்கஸ் பெங்ஹாலென்சிஸ் இலைகளின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தானது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் நிரூபித்தன.

(மேலும் விவரங்களுக்கு: உயர் கொழுப்பின் மேலாண்மை)

சுகாதார துறையில் மட்டுமல்லாது வேறு பல விதங்களிலும் ஆல மரம் உபயோகப்படுகிறது. அவற்றை கீழே காணலாம்

நோய் பரப்பும் கொசுக்களுக்கு எதிராக ஆல மரம் - Banyan tree against mosquito-borne diseases in Tamil

நாகரிக உலகின் மேலும் ஒரு முக்கியமான பிரச்சனையாக கருதப்படுவது கொசுவினால் பரப்பப்படும் நோய்கள் தான். இதனால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர நம் பாரம்பரிய மருந்தான ஆல மரத்தின் பகுதிகளை உபயோகிக்கலாம். ஆல மரத்தின் சில பகுதிகள் கொசுக்களைக் கொல்லும் ஒரு உயிர் கொல்லியாக விளங்குகிறது. ஆல மர இலைகளின் சாறு புழுவுண்ணி (புழுக்களைக் கொல்லும் தன்மை) பண்பைக் கொண்டது. முக்கியமாக என்சிபாலிட்டிஸ் மற்றும் மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் களீக்ஸ் ட்ரிட்டினியோரின்குஸ் மற்றும் அனோபிளஸ் சப்பிடிஸ் என்னும் இனத்தை சேர்ந்த கொசுக்களைக் கொல்லும். ஆல மர இலையின் சாறு கொசுக்கள் வருவதைத் தடுப்பதால் கொசுக்களால் உண்டாகக் கூடிய நோய்களும் தடுக்கப்படுகிறது.

நுண்ணுயிர் கொல்லி மற்றும் பூஞ்சைக் கொல்லியாக பயன்படும் ஆல மரம் - Banyan tree as anti-bacterial and anti-fungal in Tamil

ஆல மரத்தின் விழுதுகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறானது நுண்ணுயிர் மற்றும் பூஞ்சையை அழிக்கும் தன்மை கொண்டது. விழுதுகளின் சாறில் உள்ள உயிரியக்க சேர்மங்கள் பல இனங்களைச் சேர்ந்த நுண்ணுயிர் மற்றும் பூஞ்சையை அழிக்கும். உயிர் காக்கும் முகவர்களாக பணிபுரியும் ஆல மரங்கள் பல நோய்கள் வராமல் தடுப்பதோடு உணவுகளைப் பதப்படுத்தவும் உதவுகிறது.

(மேலும் விவரங்களுக்கு: தொற்றிற்கான சிகிச்சை)

மாசு கட்டுபாட்டிற்காக உதவும் ஆல மரம் - Banyan tree for pollution control in Tamil

இக்கால கட்டத்தில், போக்குவரத்து நெரிசல்களாலும், தொழில்துறையினாலும் ஏற்படும் மாசானது மனிதனுக்கு அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.  மாசுபாட்டின் காரணமாக பல நோய்களும் உடல் உபாதைகளும் உருவாகி வருகின்றன. இந்த மாசுவை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம். மாசுவைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு முகவராக உள்ளது ஆல மரம் என ஆய்வுகள் கூறுகின்றன. காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களில், காற்றின் மாசுவைக் கட்டுப்படுத்தி, தரத்தை சமநிலைப்படுத்த ஆல மரம் பெரிதும் உதவுகிறது. சுவாசக் கோளாறுகளை சரி செய்ய ஆல மரம் பயன்படும்.

(மேலும் விவரங்களுக்கு: நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கான சிகிச்சை)

மனிதனுக்கு ஒரு நண்பனாக, மனித உடலை பாதுகாக்கும் பாதுகாவலனாக பல பண்புகளையும், பல நன்மைகளையும் தன்னுள் வைத்திருக்கும் ஆல மரமானது நமக்கு எந்த தீங்கையும் விளைவிக்கக் கூடியதாக இல்லை. ஆல மர இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறில் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இச்சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளில் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை எனவே கூறலாம்.

ஒரு குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் தாய் தன் பிள்ளைக்கு கொடுக்கும் தாய்ப்பாலில் இருந்து தான் கிடைக்கும். எனவே தாய் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் அனைத்து சத்துக்களும் குழந்தையை சென்றடையும். இருப்பினும் மகப்பேறு காலங்களில் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆல மரத்தின் சாறைப் பயன்படுத்தலாமா என்பதற்கு போதிய சான்றுகள் இல்லாத காரணத்தினால், அக்காலங்களில், இச்சாற்றினைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆல மரத்தின் நன்மைகள் ஆராயப்பட வெனவும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


Medicines / Products that contain Banyan tree

மேற்கோள்கள்

 1. Manikandan V et al. Green synthesis of silver oxide nanoparticles and its antibacterial activity against dental pathogens. 3 Biotech. 2017 May;7(1):72. PMID: 28452017
 2. Shi Y et al. The genus Ficus (Moraceae) used in diet: Its plant diversity, distribution, traditional uses and ethnopharmacological importance. J Ethnopharmacol. 2018 Nov 15;226:185-196. PMID: 30055253
 3. Rajdev K et al. Antinociceptive Effect of Ficus bengalensis Bark Extract in Experimental Models of Pain. Cureus. 2018 Mar 2;10(3):e2259. PMID: 29725562
 4. Bhanwase AS, Alagawadi KR. Antioxidant and Immunomodulatory Activity of Hydroalcoholic Extract and its Fractions of Leaves of Ficus benghalensis Linn. Pharmacognosy Res. 2016 Jan-Mar;8(1):50-5. PMID: 26941536
 5. Govindarajan M, Sivakumar R, Amsath A, Niraimathi S. Mosquito larvicidal properties of Ficus benghalensis L. (Family: Moraceae) against Culex tritaeniorhynchus Giles and Anopheles subpictus Grassi (Diptera: Culicidae). Asian Pac J Trop Med. 2011 Jul;4(7):505-9. PMID: 21803298
 6. Pathak KV, Keharia H. Characterization of fungal antagonistic bacilli isolated from aerial roots of banyan (Ficus benghalensis) using intact-cell MALDI-TOF mass spectrometry (ICMS). J Appl Microbiol. 2013 May;114(5):1300-10. PMID: 23387377
 7. Waheed M et al. Dermatoprotective effects of some plant extracts (genus Ficus) against experimentally induced toxicological insults in rabbits. Toxicol Ind Health. 2015 Nov;31(11):982-9. PMID: 23589405
 8. Deepa P, Sowndhararajan K, Kim S, Park SJ. A role of Ficus species in the management of diabetes mellitus: A review. J Ethnopharmacol. 2018 Apr 6;215:210-232. PMID: 29305899
 9. Panday DR, Rauniar GP. link] BMC Complement Altern Med. 2016 Nov 3;16(1):429. PMID: 27809820
 10. De B, Bhandari K, Katakam P, Mitra A. In Vivo Hypoglycemic Studies of Polyherbal Phytoceuticals, Their Pharmacokinetic Studies and Dose Extrapolation by Allometric Scaling. Curr Drug Discov Technol. 2017;14(4):277-292. PMID: 28359233
 11. Mukherjee A, Agrawal M. Pollution Response Score of Tree Species in Relation to Ambient Air Quality in an Urban Area. Bull Environ Contam Toxicol. 2016 Feb;96(2):197-202. PMID: 26508430
 12. Vipin Kumar Garg, Sarvesh Kumar Paliwal. Wound-healing activity of ethanolic and aqueous extracts of Ficus benghalensis. J Adv Pharm Technol Res. 2011 Apr-Jun; 2(2): 110–114. PMID: 22171302
Read on app