மூக்கடைப்பு - Blocked Nose (Nasal Congestion) in Tamil

Dr. Abhishek GuptaMBBS

April 26, 2019

July 31, 2020

மூக்கடைப்பு
மூக்கடைப்பு

மூக்கடைப்பு என்றால் என்ன?

நாசி நெரிசல் அல்லது மூக்கு அடைப்பு என்பது மூக்கின் உட்பூச்சில் ஏற்படும் வீக்கத்தின் காரணமாக மூக்கில் ஏற்படும் அடைப்பு என வரையறுக்கப்படுகிறது. இது சளியுடன் காணப்படும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இந்நிலை பொதுவாக சிறிய வியாதியாக இருப்பதோடு மருந்து ஏதுமின்றி குறுகிய காலத்திலேயே குணமாகக்கூடியது. இது அனைத்து வயதுடைய மக்களையும் பாதிக்கக்கூடியது, குறிப்பாக குழந்தைகளில் மிக பொதுவாக இருக்கக்கூடியது. நாசி அடைப்பு பெரும்பாலும் ஒவ்வாமைகள் அல்லது சளி போன்ற பிற நோய்களை சார்ந்த நிலையாகும்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

நாசி நெரிசலுடன் பின்வரும் அறிகுறிகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம்:

அரிதாக, நீங்கள் எதிர்கொள்ளும் அறிகுறிகள் பின்வருவன போன்று இருக்கலாம்:

  • மூக்கு வலி மற்றும் இரத்தப்போக்கு.
  • சளியிலிருக்கும் இரத்தம்.
  • மூக்கு உள்ளே உருவாகும் ஒரு கடினமான மேலோடு.
  • அதிகமாக உமிழ்நீர்சுரத்தல்.
  • மூச்சு இழுப்பு.
  • தலைவலி.
  • விழுங்குவதில் ஏற்படும் சிரமம்.

இந்த அரிதான அறிகுறிகள் சைனூசிடிஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிற காரணங்களையும் சார்ந்தது.

இதன் முக்கிய கரணங்கள் யாவை?

மூக்கில் உள்ள இரத்தக் குழாய்களின் வீக்கம், திசு வீக்கம் மற்றும் நாசித்துளைகளில் அதிகமாக சுரக்கும் சளி ஆகியவையின் காரணமாக நீங்கள் மூக்கடைப்பினை உணரலாம். உங்கள் மூக்கின் உட்புறப்பூச்சில் எரிச்சல் மட்டும் வீக்கத்தை ஏற்படுத்தும் நிலைகள் பின்வருமாறு:

  • அலர்ஜிக் ரினிடிஸ்.
  • சைனூசிடிஸ்.
  • சளி.
  • நாசால் பாலிப்ஸ்.
  • வெளி தூசிகள்.
  • ஓடிடிஸ் ஊடகம் (காது தொற்று).
  • ஆஸ்துமா.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

உங்கள் மருத்துவர் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் அல்லது ஒவ்வாமை போன்ற ஏதேனும் சமீபத்தில் ஏற்பட்ட நோய்களின் வரலாறு குறித்த சில கேள்விகளை உங்களிடம் கேட்கக்கூடும். பாலிப்ஸ் போன்ற அடைப்புக்குரிய காரணிகள் ஏதேனும் உங்கள் மூக்கில் இருக்கிறதா என்பதை அறிய உங்கள் மருத்துவர் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

இதற்கான சிகிச்சைமுறை மூக்கடைப்பு நீக்கிகளை கொண்டது, இது வாய்வழியாகவோ அல்லது குறிப்பிட்டயிடத்தில் ஸ்பிரே பயன்படுத்துவதனாலோ அல்லது நாசி சொட்டுகள் மூலமாகவோ எடுத்துக்கொள்ளலாம். நாசி அடைப்பின் காரணத்தை பொறுத்து உங்கள் மருத்துவர் மூக்கடைப்பு நீக்கிகளோடு மற்ற மருந்துகளையும் பரிந்துரைக்கலாம்.

பொதுவாக, நாசால் பாலிப்ஸ் வழக்குகளில், அதன் புறவளர்ச்சியின் அளவை குறைக்கவே மருந்துகள் வழங்கப்படுகின்றன. அதன் மூலமும் நிவாரணம் பெறவில்லை எனில், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.



மேற்கோள்கள்

  1. American Thoracic Society [Internet]. New York,United States of America; Subjective Nasal Fullness and Objective Congestion.
  2. Naclerio RM, Bachert C, Baraniuk JN. Pathophysiology of nasal congestion. Int J Gen Med. 2010 Apr 8;3:47-57. PMID: 20463823
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Stuffy or runny nose - adult.
  4. Stewart M, Ferguson B, Fromer L. Epidemiology and burden of nasal congestion. Int J Gen Med. 2010 Apr 8;3:37-45. PMID: 20463822
  5. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. The Effect of Nasal Carbon Dioxide (CO2) on Nasal Congestion in Subjects With Perennial Allergic Rhinitis.

மூக்கடைப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for மூக்கடைப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.