குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்காய்ச்சல் (இன்ஃப்ளூயென்சா) - Influenza in Children in Tamil

Dr. Pradeep JainMD,MBBS,MD - Pediatrics

December 01, 2018

July 31, 2020

குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்காய்ச்சல்
குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்காய்ச்சல்

 குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்காய்ச்சல் (இன்ஃப்ளூயென்சா) என்றால் என்ன?

இன்ஃப்ளூயென்சா அல்லது ஃப்ளூ காய்ச்சல் என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய ஒரு சுவாசத் தோற்று ஆகும். குழந்தைகளிடம் இந்த நிலை அவர்களுக்கு ஏற்படும் மற்ற வியாதிகளான சாதாரண சளி அல்லது வயிற்று குறைபாடுகளுடன் குழப்பப்படுகின்றன. இன்ஃப்ளூயென்சா அறிகுறிகள் மிகக் கடுமையானதாக இருப்பதோடு இந்த தொற்று மிக வேகமாக பரவுமென்பதால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியமாகும்.

இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?

கீழ்காணும் இவற்றை நீங்கள் கவனித்தீர்கள் என்றால் உங்கள் குழந்தைக்கு ஃப்ளூ காய்ச்சல் உள்ளது என்று நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இன்ஃப்ளூயென்சா ஏற்படுவதற்கான காரணம் இன்ஃப்ளூயென்சா நோய்க்கிருமியாகும். மூன்று வகையான இன்ஃப்ளூயென்சா நோய்க்கிருமிகளில் ஏ மற்றும் பி வகைகள் ஆண்டுதோறும் திடீரென்று ஏற்படும் மற்றும் சி வகை அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிப்பட்ட உடல்நலக்குறைவுகளை ஏற்படுத்தும். குழந்தைகள் இன்ஃப்ளூயென்சாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் தொடர்பில் வர நேரிடும்போதோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் சளி அல்லது எச்சில் மூலமாக இந்த நோய்க்கிருமிக்கு அவர்கள் வெளிப்படுத்தப்படும்போதோ இது பரவுகிறது. இன்ஃப்ளூயென்சாவால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போதோ அல்லது மூக்கைச் சிந்தும்போதோ அவர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதினாலும் இந்த நோய்க்கிருமி பரவுகிறது.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

இன்ஃப்ளூயென்சாவை கண்டறிவது மிக சுலபமாகும், குறிப்பாக குழந்தைகளில் கண்டறிவது. பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தையை சாதாரணமாக ஒரு முறை பரிசோதித்த உடனேயே இந்த நிலையை மிகச் சரியாக கண்டறிந்து விடுவார்கள். இந்த ஃப்ளூவை மற்ற நிலைகளுடன் குழப்பிக்கொள்ளும் வாய்ப்பிருப்பதால் மூக்கிலிருந்து சிறிது சளியை எடுத்து ஆய்வுகூடத்திற்கு சோதனைக்கு அனுப்பக்கூடும்.

ஃப்ளூவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் வழக்கமாக கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றை பரிந்துரைப்பார்கள்:

  • காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்துகள்.
  • வயிற்றை சரி செய்வதற்கான மருந்துகள்.
  • இதனுடன் தொடர்புடைய ஆஸ்துமா போன்ற நிலைகளுக்கான மருந்துகள்.
  • அதிகமான ஓய்வு.
  • அதிகமாக திரவங்களை குடித்தல்.
  • மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது தும்மல்/இருமலுக்கான மருந்துகள்.
  • மீண்டும் நிகழாமலிருப்பதற்காக ஃப்ளூ தடுப்பூசி போடுதல்.
  • வீட்டு பராமரிப்பு (மூக்கில் விடும் சொட்டு மருந்துகள், ஈரப்பதமூட்டி).
  • ஒவ்வொரு முறை குழந்தை இருமுவதற்காகவோ அல்லது தும்முவதற்காகவோ தனது மூக்கையும் வாயையும் மூடிய பிறகு கையை கழுவுவது; ஒரு கெட்டியான நாப்கினை கொண்டு வாயையும் மூக்கையும் மூடுவது; கைகளை கழுவாமல் உணவை தொடுவதை தவிர்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகள்.

ஃப்ளூ குணமான பிறகும் மீண்டும் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்றாகும். எனவே மருத்துவர்கள் காய்ச்சல் விட்டபிறகு குழந்தையை பள்ளிக்கோ அல்லது விளையாடுவதற்கோ அனுப்புவதற்கு முன் குறைந்தது 24 மணிநேரத்துக்காவது குழந்தையை கண்காணிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கிறார்கள்.



மேற்கோள்கள்

  1. Paediatr Child Health. Influenza in children. 2005 Oct; 10(8): 485–487. PMID: 19668662
  2. Nicola Principi. Protection of children against influenza: Emerging problems. Hum Vaccin Immunother. 2018; 14(3): 750–757. PMID: 28129049
  3. Kumar V. Influenza in Children.. Indian J Pediatr. 2017 Feb;84(2):139-143. PMID: 27641976
  4. The Nemours Foundation. The Flu (Influenza). [Internet]
  5. New York State. The Flu: A Guide for Parents. [Internet]

குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்காய்ச்சல் (இன்ஃப்ளூயென்சா) டாக்டர்கள்

Dr. Pritesh Mogal Dr. Pritesh Mogal Pediatrics
8 Years of Experience
Dr Shivraj Singh Dr Shivraj Singh Pediatrics
13 Years of Experience
Dr. Varshil Shah Dr. Varshil Shah Pediatrics
7 Years of Experience
Dr. Amol chavan Dr. Amol chavan Pediatrics
10 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்காய்ச்சல் (இன்ஃப்ளூயென்சா) க்கான மருந்துகள்

Medicines listed below are available for குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்காய்ச்சல் (இன்ஃப்ளூயென்சா). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.