பெருஞ்சீரக விதை, ஒரு காரமான சுவையுடைய மசாலாப் பொருள் ஆகும். அது பார்ப்பதற்கு ஜீரக விதைகளைப் போல் தோன்றுகிற, ஆனால் அவற்றை விட சற்றே அதிக இனிப்புச் சுவை கொண்டதாகும். அவை, கேரட்டுகள் சார்ந்திருக்கும் அதே குடும்பத்தை சார்ந்த, பெருஞ்சீரக செடியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் இதமான மற்றும் இனிய மணத்தை அறியாத, ஒரு இந்திய வீடு இருக்க முடியாது. அவை, ஒரு இதமான மற்றும் இனிமையான நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன மற்றும் நிறத்தில், வழக்கமாகப் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கின்றன.  சொல்லப் போனால், பெருஞ்சீரக விதைகளை இந்தியர்கள், பல்வேறு உணவு சமைக்கும் முறைகளில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். மேலும் வறுத்த பெருஞ்சீரக விதைகள், மிகவும் பிரபலமான ஒரு, உணவுக்குப் பிந்தைய வாய் சுத்தப்படுத்தியான முக்வாஸ்- ல் ஒரு முக்கியமான உட்பொருளாக இருக்கின்றன. தென்னிந்தியாவில், மக்கள் இந்த விதைகளில் இருந்து, செரிமானத்துக்கு நல்லது என்று கருதப்படும் பெருஞ்சீரகத் தண்ணீர் தயாரிக்கின்றனர். கிழக்குப் பகுதி இந்தியாவில் இது, பான்ச் ஃபோரோன் என்று அழைக்கப்படும் ஒரு வகை மசாலா கலவையின், முக்கியமான உட்பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது, வடஇந்தியாவிலும், குறிப்பாக காஷ்மீர் மற்றும் குஜராத் மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பெருஞ்சீரகம் மத்திய தரைக்கடல் பகுதியை சார்ந்தது ஆகும். ஆரம்பத்தில் அது, கிரேக்கர்களால் பயிரிடப்பட்டு, பின்னர் அது ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது. பிறகு, அதன் மருத்துவப் பண்புகளை அளிப்பதற்காக அது, உலகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது இந்தியா, பெருஞ்சீரகத்தை அதிக அளவில் பயிரிடும் முதல் நாடாக இருக்கிறது. பெருஞ்சீரகத்தை விளைவிக்கும் மற்ற நாடுகளில், ரஷ்யா, ரோமானியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடங்கும்.

சமையற் கலை மீது ஆர்வம் கொண்ட பெரும்பாலானவர்கள் பெருஞ்சீரக விதைகளின் பயனைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆனால், மொத்த பெருஞ்சீரக செடியையும், பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா. பூக்கள் மற்றும் இலைகள் உணவுக்கு அழகூட்ட, இலைகளும் தண்டுகளும் பழக்கூட்டுகளில் மற்றும் பீஸாக்களில், பூப்போன்று அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உலர் பெருஞ்சீரகப் பழம், வழக்கமாக உமிழ்நீரின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வாயில் மெல்லப்படும். மேலும் அது, மதுபானங்கள், சோப்புகள், சுவையூட்டிகள், இறைச்சி வகைகள், மற்றும் கேக்குகளில், ஒரு சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயன்கள் அவ்வளவு தான் என நீங்கள் எண்ண வேண்டாம், இந்த விதைகள், மருத்துவரீதியான பயன்களையும் கூட கொண்டிருக்கின்றன. பெருஞ்சீரக விதைகள், முக்கியமாக ஒரு அமில எதிர்ப்பு பொருளாக, மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு வாய் சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேக வைக்கப்பட்ட பெருஞ்சீரக விதைகள் மற்றும் அவை வேக வைக்கப்பட்ட தண்ணீர், இரண்டும் வயிற்றுப் பொருமலைப் போக்க உதவுகின்றன மற்றும் உடல் எடைக் குறைப்புக்கும் உதவுகின்றன. பெருஞ்சீரக விதைகள், ஒரு வலி நிவாரணியாகவும், மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் கூட உதவுகின்றன. மேலும் பெருஞ்சீரகம், கண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்று கருதப்படுகிறது.

இந்த சிறிய விதைகள் கொண்டிருக்கும் ஊட்டச்சத்து சார்ந்த மற்றும் குணமளிக்கும் அற்புதங்களைப் பற்றி நாம் இப்பொழுது காணலாம்.

பெருஞ்சீரக விதைகளைப் பற்றிய அடிப்படை விவரங்கள்:

 • தாவரவியல் பெயர்: ஃபெயோனிக்குலம் வல்கேர்

 • குடும்பம்: அப்பியசியயி

 • பொதுவான பெயர்: சோம்பு

 • சமஸ்கிருதப் பெயர்: மதுரிகா

 • பயன்படும் பாகங்கள்: விதைகள், தண்டுகள், இலைகள், மலர்கள், கிழங்குகள்

 • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: பெருஞ்சீரகம் உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. பெருஞ்சீரக த்தின் உலகளாவிய உற்பத்தியில், இந்தியா சுமார் 60% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவில் பெருஞ்சீரகம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகியவை ஆகும்

 • சுவாரஸ்யமான தகவல்கள்: பெருஞ்சீரக விதைகள், 'கூட்டம் விதைகள்' எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால், முற்காலத்தில், சர்ச்சுகளில் நடக்கும் நீண்ட கூட்டங்களின் போது, மெல்வதற்காக அவற்றை எடுத்துச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 1. பெருஞ்சீரக விதைகளின் ஊட்டச்சத்து விவரங்கள் - Fennel seeds nutrition facts in Tamil
 2. பெருஞ்சீரகத்தின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Fennel health benefits in Tamil
 3. பெருஞ்சீரக விதைகளின் பக்க விளைவுகள் - Fennel seeds side effects in Tamil
 4. முக்கிய குறிப்புகள் - Takeaway in Tamil
 • செரிமானப் பிரச்சினைகளுக்காக: பெருஞ்சீரக விதைகளின் விளைவுகளாக அதிகமாகக் கூறப்படுபவை, செரிமான அமைப்பின் மீதானவை ஆகும். இந்த விதைகளை எடுத்துக் கொள்வது, செரிமானமின்மை, வயிற்று தசைப் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும் நிகழ்வுகளைக் குறைக்க, மற்றும் வாயுவை நீக்குவதிலும் கூட உதவிகரமாக இருக்கிறது. தசை வலி குறைப்பு மற்றும் செரிமானப் பண்புகளின் காரணமாக, வழக்கமாகப் பெருஞ்சீரக விதைகள் உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மேலும் அவை, மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் புண்கள் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிப்பதிலும் கூட உதவுகின்றன.
 • உயர் இரத்த அழுத்தத்துக்காக: பெருஞ்சீரக விதைகள், பொட்டாசியத்தை அதிகமாகவும் மற்றும் சோடியத்தைக் குறைந்த அளவிலும் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் அவை, இரத்த அழுத்தத்தை, குறிப்பாக சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் உதவுகின்றன.
 • நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்: இந்தப் பண்புகளின் காரணமாக, பெருஞ்சீரக விதைகள், வயிற்று நோய்த்தொற்றுக்கள் மற்றும் உணவு நஞ்சாதல் ஆகியவற்றைத் தடுக்க உதவுகின்றன.
 • பெண்களுக்காக: பெருஞ்சீரக விதைகளை உட்கொள்வது, இனப்பெருக்க காலத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் மாதவிடாய் நிற்றல் ஏற்பட்ட பெண்கள் இருவருக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. அவை, மாதவிடாய் வலி அல்லது வலி மிகுந்த மாதவிடாயின் அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுகின்றன. மேலும் மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதே நேரத்தில் அவை, மாதவிடாய் நிற்றல் ஏற்பட்ட பெண்களுக்கு எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவி செய்து, எலும்புப்புரையின் காரணமாக ஏற்படும் எலும்பு இழப்பு அபாயத்தைக் குறைக்கின்றன.
 • சுவாச மண்டல கோளாறுகளுக்காக: பெருஞ்சீரக விதைகளைப் பயன்படுத்துவது, நீடித்த இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சி.ஓ.பி.டி போன்ற பல்வேறு சுவாச மண்டலக் கோளாறுகளுக்கு நல்லது ஆகும். கூடவே அவை, அதிகப்படியாக சளி சேருவதைக் குறைக்கவும் உதவுகின்றன.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

பெருஞ்சீரக விதைகள், உணவு சார் நார்ச்சத்தினை செறிவாகக் கொண்டுள்ளன. 1 மேஜைக் கரண்டி பெருஞ்சீரக விதைகள், 2.3 கிராம் நார்ச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. இந்த நார்ச்சத்து உட்பொருள், மலச்சிக்கலை இலகுவாக்கி, செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. பெருஞ்சீரக விதைகள், பல்வேறு ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. அவை, சுண்ணாம்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீஷியம், தாமிரம், இரும்பு மற்றும் மங்கனீஷ் போன்ற தாதுக்களின் மிகச் சிறந்த ஒரு ஆதாரம் ஆகும். மேலும் அவை, வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி போன்ற வைட்டமின்களையும் அதிக அளவில் கொண்டிருக்கின்றன.

யு.எஸ்.டி.ஏ. ஊட்டச்சத்து தகவல்தளத்தின் படி, 1 மேஜைக் கரண்டி பெருஞ்சீரக விதைகள், பின்வரும் அளவுகளில் ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன:

ஊட்டச்சத்து அளவு, ஒரு மேஜைக்கரண்டி
தண்ணீர் 0.51 கி
ஆற்றல் 20 கி.கலோரி
புரதம் 0.92 கி
கொழுப்பு 0.86 கி
சாம்பல் 0.48 கி
கார்போஹைட்ரேட் 3.03 கி
நார்ச்சத்து 2.3 கி

 

தாதுக்கள் அளவு, ஒரு மேஜைக்கரண்டி
சுண்ணாம்புச்சத்து 69 மி.கி
இரும்புச்சத்து 1.08 மி.கி
மெக்னீஷியம் 22 மி.கி
பாஸ்பரஸ் 28 மி.கி
பொட்டாசியம் 98 மி.கி
சோடியம் 5 மி.கி
துத்தநாகம் 0.21 மி.கி
தாமிரம் 0.062 மி.கி
மாங்கனீஷ் 0.379 மி.கி

 

வைட்டமின்கள் அளவு, ஒரு மேஜைக்கரண்டி
வைட்டமின் பி1 0.024 மி.கி
வைட்டமின் B2 0.02 மி.கி
வைட்டமின் B3 0.351 மி.கி
வைட்டமின் B6 0.027 மி.கி
வைட்டமின் சி 1.2 மி.கி

 

Fats அளவு, ஒரு மேஜைக்கரண்டி
Saturated 0.028 கி
Monounsaturated 0.575 கி
Polyunsaturated 0.098 கி

செரிமானப் பிரச்சினைகளுக்காக பெருஞ்சீரக விதைகள் - Fennel seeds for digestive problems in Tamil

கார்மினேட்டிவ்கள் எனப்படுபவை, வாயு உண்டாவதைத் தடுக்க உதவுகிற, அல்லது இரைப்பை பாதையில் இருந்து வாயுவை நீக்க உதவுகிற காரணிகள் ஆகும். ஆய்வுகள், பெருஞ்சீரக விதைகள் அந்த கார்மினேட்டிவ் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கின்றன. ஒரு ஆய்வின் படி, பெருஞ்சீரக கஷாயம், செரிமானமின்மை பிரச்சினை ஏற்படாமல் தடுக்கக் கூடியதாகும். பெருஞ்சீரகம், ஜீரகம் மற்றும் கொத்தமல்லி ஆகியவை சேர்த்து தயாரிக்கப்பட்ட கஷாயம், வயிற்றில் இருந்து வாயுவை வெளியேற்றுவதில் உதவக் கூடியதாகும். பெருஞ்சீரக விதைகள், வயிற்று தசைப் பிடிப்புகளில் இருந்து விடுபடவும் உதவுகின்றன.

மற்றொரு ஆய்வு, பெருஞ்சீரக அத்தியாவசிய எண்ணெய், பெருங்குடலின் உட்புற சுவர்கள் அழற்சிக்கு உள்ளாகிற ஒரு பிரச்சினையான, பெருங்குடல் அழற்சி ஏற்படாமல் தடுக்க உதவக் கூடியது ஆகும். ஒரு முன் மருத்துவ ஆய்வு, பெருஞ்சீரகத்தின் நீர்ம வடிமத்தை, இரைப்பை புண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகப் பயன்படுத்த இயலும் எனக் கூறுகிறது. இந்த நன்மைகள், அவற்றில் உள்ள தாவரவேதிபொருட்கள், ஃபுளோவோனாய்டுகள், ஃபெனோலிக் மூலக்கூறுகள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றின் காரணமாகக் கிடைப்பவை ஆகும்.

பொதுவாகப் பெருஞ்சீரகம், ஒரு உணவுக்குப் பிந்தைய பண்டமாக உண்ணப்படுகிறது. ஏனென்றால், அது செரிமானத்துக்கு உதவி புரிகிறது. இந்தக் கூற்றை நிரூபிக்க, சில அறிவியற்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன என எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல், லிமோனின், பினேன், ஃபென்ஸோன் மற்றும் சினோல் போன்ற ஃபைட்டோகான்ஸ்டிட்டியூன்கள் கொண்டிருக்கும், செரிமானம் சார்ந்த, கார்மினேட்டிவ், பிடிப்பு எதிர்ப்பு (தசைப் பிடிப்புகளை நீக்குகிறது) பண்புகளைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பெருஞ்சீரகம், செரிமான திரவங்கள் உற்பத்தியிலும், மற்றும் உணவிலிருந்து ஊட்டச்சத்துக்களைக் கிரகித்தலிலும் கூட உதவுகிறது. பெருஞ்சீரக விதைகளில் இருக்கின்ற எண்ணெய்கள், ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு, அதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றன.

பெண்களுக்கு ஆரோக்கியமான எலும்புகளுக்காக பெருஞ்சீரக விதைகள் - Fennel seeds for healthy bones in women in Tamil

எலும்புப்புரை என்பது, எலும்புகளின் அடர்த்திக் குறைவு மற்றும் புதிய எலும்புகள் வளர்ச்சியில் குறைபாடு ஆகியவற்றைக் கொண்டு, குறிப்ப்பிடப்படும் ஒரு பிரச்சினை ஆகும். இது குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் குறைபாடு காரணமாக, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வழக்கமாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சினை ஆகும். ஈஸ்ட்ரோன், எலும்பு தேய்மானத்தைத் தவிர்க்க மற்றும் புதிய எலும்புகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிற ஹார்மோன் என அறியப்படுகிறது. பெருஞ்சீரக சாறு, வேதிப்பொருட்களால் ஆன ஈஸ்ட்ரோஜென் பிற்சேர்க்கைப் பொருட்களுக்கு, ஒரு இயற்கையான மாற்றாக செயல்பட்டு, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தடுக்கின்ற ஒரு வகை பைட்டோவேதியியல் பொருளான, தாவர ஈஸ்ட்ரோஜன்களை அதிக அளவில் கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகளின் அடிப்படையில், 6 வார கால அளவுக்கு வாய் வழியாக பெருஞ்சீரக சாறு எடுத்துக் கொள்வது, கருப்பை நீக்கம் காரணமாக ஏற்படுகிற எலும்பு தேய்மானத்தைக் குறைக்கக் உதவுகிறது. இந்த ஆய்வுகள், எலும்புப்புரையின் காரணமாக ஏற்படுகிற எலும்பு இழப்புகளைத் தடுப்பதில், பெருஞ்சீரக விதைகளின் திறனை வெளிப்படுத்துகின்றன.

சுவாசம் சார்ந்த நோய்களுக்காக பெருஞ்சீரக விதைகள் - Fennel seeds for respiratory diseases in Tamil

சுவாசம் சார்ந்த நோய்கள் என்ற பதம், முக்கியமாக நுரையீரல்கள் மற்றும் சுவாசப் பாதைகளைப் பாதிக்கின்ற பிரச்சினைகளைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. பெருஞ்சீரக விதைகளால், நீடித்த இருமல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நீடித்த நுரையீரல் அடைப்புக் கோளாறு (சி.ஓ.பி.டி) போன்ற சுவாச மண்டலக் கோளாறுகளைத் தடுக்க உதவ இயலும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு ஆய்வு பெருஞ்சீரகம், மூக்கு மற்றும் தொண்டையில் சளி அதீதமாக சேருவதைத் (மூக்கடைப்பு) தடுக்க உதவுகிறது என்பதை வெளிப்படுத்தியது.

முன் மருத்துவ ஆய்வுகள், பெருஞ்சீரக விதைகள், அதிகரித்த மூச்சு விடும் விகிதத்தின் மீது ஒரு நேர்மறையான விளைவைக் காட்டியதையும் வெளிப்படுத்தி இருக்கிறது. மேலும் அது, ஒரு வகை டபிள்யு. பி.சி.-யான மார்கோபேஜ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், சி.ஓ.பி.டி அழற்சியில் இருந்து விடுபடவும் உதவுகிறது. உணவு மற்றும் வேதியியல் நச்சுத்தன்மை அறிவியல் நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒழுங்குமுறை மதிப்பீட்டில், பெருஞ்சீரக விதைகளில் உள்ள ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், நீடித்த இருமல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சை அளிப்பதில், மிகவும் திறன் வாய்ந்தவை என்று கூறப்பட்டு உள்ளது.

மாதவிடாய் கால தசைப் பிடிப்புகளுக்காக பெருஞ்சீரக விதைகள் - Fennel seeds for menstrual cramps in Tamil

மாதவிடாய் வலி என்ற பதம், வலிமிகுந்த மாதவிடாய்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரச்சினையின் முக்கியமான அறிகுறியாக வயிற்று வலி இருக்கின்ற வேளையில், இது, வயிறு வீக்கம், மார்பக வேதனை, குமட்டல் மற்றும் தலைவலி ஆகியவற்றோடும் கூட இணைந்ததாக இருக்கிறது. ஒரு மருத்துவ ஆய்வில், இந்தப் பிரச்சினையுடைய அறுபது மாணவிகளுக்கு, அவர்களின் மாதவிடாய் காலத்தின் போது பெருஞ்சீரக துளிகள் வழங்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவு, பெருஞ்சீரகம் மாதவிடாய் வலியின் அறிகுறிகளைக் குறைப்பதில் திறன்மிக்கதாக இருப்பதை வெளிப்படுத்தியது.

அதற்கும் மேலாக, பெருஞ்சீரக விதைகள், மாதவிடாய் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்ற, ஒரு ஈஸ்ட்ரோஜென் காரணி என அறியப்படுகின்றன. ஒரு முன் மருத்துவ ஆய்வு, பெருஞ்சீரகத்தில் காணப்படும் டையனிதோல் மற்றும் ஃபோட்டோனிதோல் போன்ற மூலக்கூறுகள், மாதவிடாய் ஏற்பட உதவுகிறது என்பதை வெளிப்படுத்தியது

உயர் இரத்த அழுத்தத்துக்காக பெருஞ்சீரக விதைகள் - Fennel seeds for high blood pressure in Tamil

இரத்த அழுத்தம் என்பது, இதயம் உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை செலுத்தும் வேகம் ஆகும். உயர் இரத்த அழுத்தம், எந்த ஒரு உடனடி அறிகுறிகளையும் கொண்டிருக்காது என்றாலும், நாளடைவில் அது, இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகிய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. பெருஞ்சீரக விதைகள், இரத்த அழுத்தத்தை முறைப்படுத்த தேவைப்படும் முக்கியமான ஒரு தாதுவாக அறியப்படும் மெக்னீஷியத்தை, அதிக அளவில் கொண்டிருக்கின்றன.

மேலும் அவை, பொட்டாசியம் மற்றும் சோடியத்தை சரியான விகிதத்தில் கொண்டிருக்கின்றன. ஆய்வுகள், பொட்டாசியம் நிறைந்த மற்றும் சோடியம் குறைவான ஒரு உணவு, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவக் கூடியது எனத் தெரிவிக்கின்றன. பாரம்பரியமாக,  மிகை இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைப்பதற்காக, பெருஞ்சீரக இலைகள் பற்களால் மெல்லப்படுகின்றன. ஒரு முன் மருத்துவ ஆய்வில் பெருஞ்சீரக விதைகள், ஒரு சிறுநீர் பெருக்கியாக (உடலில் இருந்து சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரித்தல்) செயல்படுவதன் மூலம், சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது எனக் கண்டறியப்பட்டு உள்ளது.

(மேலும் படிக்க: உயர் இரத்த அழுத்த சிகிச்சை)

பெருஞ்சீரக விதைகள் அழற்சி-எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன - Fennel seeds have anti-inflammatory properties in Tamil

அழற்சி என்பது, ஒரு நோய்த்தொற்று அல்லது ஒரு காயத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதி வீக்கமாக, வலிமிகுந்ததாக மற்றும் சிவந்து போய் காணப்படும், ஒரு உடலியல் பிரச்சினை ஆகும். ஆய்வின் அடிப்படையில், பெருஞ்சீரக விதைகளின் அத்தியாவசிய எண்ணெய், அழற்சி-எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பல்வேறு ஃபுளோவோனாய்டுகளைக் கொண்டிருக்கின்றன. அந்த எண்ணெய், அழற்சியைக் குறைப்பதில் உதவிகரமாக இருக்கின்ற, எரியோடிக்டால்-7-ருட்டினோசைட், குவார்செட்டின்-3-ருட்டினோசைட் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் போன்ற ஃபுளோவோனாய்டுகளையும் கொண்டிருக்கிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், பெருஞ்சீரக விதைகளின் ஒரு வகை மெத்தனால் சாறு, 200 மி.கி/கி.கி என்ற அளவில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது, அழற்சியைத் தடுப்பதாக இருக்கக் கூடும் என்று சுட்டிக் காட்டுகின்றன.

(மேலும் படிக்க: அழற்சி நோய்களின் வகைகள்)

பெருஞ்சீரக விதைகளின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் - Fennel seeds antibacterial properties in Tamil

பெருஞ்சீரக செடி முழுவதுமே, திறன்மிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டினைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. பெருஞ்சீரக பழங்களில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய், ஈ-கோலி மற்றும் எஸ்.அவுரஸ் போன்ற நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கக் கூடியது என ஆய்வுகள் கூறுகின்றன. பெருஞ்சீரக செடி மற்றும் விதைகளில் இருந்து எடுக்கப்படும் வடிமமும், உணவு நஞ்சாதல் மற்றும் வயிற்று நோய்த்தொற்று ஆகியவற்றுக்கு காரணமாகக் கூடிய நுண்ணுயிருக்கு, எதிராகத் திறன்மிக்க நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. பெருஞ்சீரகத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுக்குக் காரணமாக, அதன் உட்பொருட்களான டில்லாபியோனல் மற்றம் ஸ்கோப்போலேட்டின் போன்றவை இருக்கின்றன.

பற்களுக்கான பெருஞ்சீரகத்தின் நன்மைகள் - Fennel seeds benefits for teeth in Tamil

பற் சிதைவுகள் அல்லது பற் சொத்தைகள், பற்களில் உள்ள நுண்ணயிர்களினால் உற்பத்தி செய்யப்படும் அமிலங்களின் காரணமாக ஏற்படுகின்றன. சிகிச்சை அளிக்காமல் விடப்படும் பல் சொத்தைகள், கடுமையான பல்வலி, பற்கள் மற்றும் ஈறுகளில் நோய்த்தொற்று ஆகியவற்றுக்குக் காரணமாகக் கூடும். மேலும் படிப்படியாகப் பற்களின் இழப்புக்கு வழிவகுக்கக் கூடும். பெருஞ்சீரகத்தில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய், எஸ்.மியூட்டன்ஸ் மற்றும் எல்.கேசை போன்ற வாய் நுண்ணுயிரிகளினால் ஏற்படும் சொத்தைகளைத் தடுக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் அது, இந்த நுண்ணுயிரிகளின் காரணமாக பற்காறை ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. அந்த ஆய்வின் மூலம், பெருஞ்சீரகம், வாய் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் பரவுதலைத் தடுக்கக் கூடிய, மிகச்சிறந்த ஒரு பற்சிதைவு எதிர்ப்பு மூலிகை என்ற முடிவு எட்டப்பட்டது.

பெருஞ்சீரக விதைகள் எண்ணற்ற ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அந்த விதைகள் சில நபர்களுக்கு, ஒரு சில பக்க விளைவுகளையும் கொண்டிருக்கின்றன. அதனால், கீழே குறிப்பிடப்பட்டு இருக்கும் பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் நபர்கள், உங்கள் உணவுப் பழக்கத்தில் பெருஞ்சீரக விதைகளை சேர்த்துக் கொள்ளும் முன்னர், ஒரு மருத்துவரை ஆலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

1.   தாயாகப் போகும் பெண்கள் பெருஞ்சீரகத்தைத் தவிர்க்க வேண்டும்  

பெருஞ்சீரகத்தில் இருக்கின்ற ஒரு சில மூலக்கூறுகள், பெண்மை ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் அமைப்பை ஒத்ததாக இருக்கின்றன. கூடவே அவை இரத்தம் உறைதலைத் தடை செய்யக் கூடியவையாக இருப்பதால், அதிகப்படியான இரத்தப் போக்குக்கு காரணமாகக் கூடும். ருதுவர்த்தினி உணவுகள், இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டத்தைத் தூண்டி, அதன் மூலம் மாதவிலக்குக்கு வழிவகுக்கிறது. பெருஞ்சீரக விதைகள் இந்தப் பண்புகளைக் கொண்டிருக்கும் காரணத்தால், அது, கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக்கலைவு ஏற்படக் காரணமாகக் கூடும். அதன் தசை வலி குறைப்பு பண்புகள், முன்கூட்டியே சுருங்குதல் நிகழ்வுக்கு காரணமாகக் கூடும். அதனால், கர்ப்ப காலத்தின் பொழுது, பெருஞ்சீரக விதைகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது அல்லது மகப்பேறு மருத்துவர்களின் அறிவுரையின் படி எடுத்துக் கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.

2.   பெருஞ்சீரகம்,சில நபர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும்

ஆராய்ச்சிகள், பீச் பழங்களுக்கு ஒவ்வாமையைக் கொண்டிருக்கும் நபர்கள், அவ்வப்போது பெருஞ்சீரகத்துக்கும் ஒவ்வாமையைக் கொண்டிருக்கின்றனர் என சுட்டிக் காட்டுகின்றன. பெருஞ்சீரகத்தில் காணப்படும் கொழுப்பு மாற்ற புரதம் (எல்.டி.பி), அழற்சி விளைவுகளுக்கு எதிர்விளைவை அளிக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

3.   மருந்துகள் இடையேயான பெருஞ்சீரகத்தின் குறுக்கீடு

நீங்கள், குறிப்பிட்ட வகை மருந்துகளை எடுத்துக் கொண்டு இருந்தால், பெருஞ்சீரக விதைகள் அந்த மருந்துகளுடன் குறுக்கீடு செய்து, உடலில் எதிர்மறை விளைவுகள் ஏற்படக் காரணமாகின்ற சாத்தியக் கூறுகள் உள்ளன. பெருஞ்சீரக விதைகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், கருத்தடை மருந்துகள், ஈஸ்ட்ரோஜன்கள், குறிப்பிட்ட இதய மருந்துகள், பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் ஆகியவற்றின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்கின்றன. இந்த மருந்துகள் மற்றும் பெருஞ்சீரக விதைகள் இவற்றுக்கு இடையேயான, இவற்றை எடுத்துக் கொள்ளும் நேர இடைவெளி, குறைந்தபட்சம் 2 மணி நேரம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும் காலத்தில், பெருஞ்சீரக விதைகளை உட்கொள்வதற்கு முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் திடமாக அறிவுறுத்தப்படுகிறது.

4.   பெருஞ்சீரக எண்ணெய், மாயத்தோற்றம் மற்றும் வலிப்புக்கு காரணமாகிறது

பெருஞ்சீரக எண்ணெய் உள்ள கேக்குகளை சாப்பிட்ட பின்னர், வலிப்பு நோய் ஏற்பட்ட ஒரு 38 வயது வலிப்பு நோயாளி பற்றிய பிரச்சினை ஒன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

பெருஞ்சீரக விதைகள், நீண்ட காலமாக மருத்துவ மற்றும் சமையல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய இந்திய ஆயுர்வேதம் அல்லது பண்டைய ரோமானியர் மற்றும் கிரேக்க மருத்துவம் ஆகியவற்றில் பெருஞ்சீரக விதைகள் மற்றும் பெருஞ்சீரக செடியின் பிற பகுதிகள், அதன் அமில எதிர்ப்பு மற்றும் சிறுநீர் பெருக்கு பண்புகளுக்காக, மற்றும் வலி, அழற்சி, சுவாச மண்டல மற்றும் மாதவிடாய் காலக் கோளாறுகளில் இருந்து நிவாரணமளிக்கும் திறன் ஆகியவற்றுக்காக, மிகவும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விதைகள், மிகவும் குறைவான பக்க விளைவுகளோடு, ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் கொண்டிருக்கின்றன. இருப்பினும், பெருஞ்சீரக விதைகள் சில நபர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலே குறிப்பிடப்பட்ட பக்க விளைவுகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கொண்டிருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரின் உதவியை நாடவும்.


Medicines / Products that contain Fennel

மேற்கோள்கள்

 1. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 02018, Spices, fennel seed. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 2. Shamkant B. Badgujar, Vainav V. Patel, and Atmaram H. Bandivdekar. Foeniculum vulgare Mill: A Review of Its Botany, Phytochemistry, Pharmacology, Contemporary Application, and Toxicology. Biomed Res Int. 2014; 2014: 842674. PMID: 25162032
 3. Zahra Mahmoudi et al. Effects of Foeniculum vulgare ethanol extract on osteogenesis in human mecenchymal stem cells. Avicenna J Phytomed. 2013 Spring; 3(2): 135–142. PMID: 25050267
 4. Kim TH, Kim HJ, Lee SH, Kim SY. Potent inhibitory effect of Foeniculum vulgare Miller extract on osteoclast differentiation and ovariectomy-induced bone loss. Int J Mol Med. 2012 Jun;29(6):1053-9. PMID: 22447109
 5. Mona T. M. Ghanem et al. Phenolic compounds from Foeniculum vulgare (Subsp. Piperitum) (Apiaceae) herb and evaluation of hepatoprotective antioxidant activity. Pharmacognosy Res. 2012 Apr-Jun; 4(2): 104–108. PMID: 22518082
 6. Pearson W, Charch A, Brewer D, Clarke AF. [llink] Can J Vet Res. 2007 Apr;71(2):145-51. PMID: 17479778
 7. Barros L, Heleno SA, Carvalho AM, Ferreira IC. Systematic evaluation of the antioxidant potential of different parts of Foeniculumvulgare Mill. from Portugal. Food Chem Toxicol. 2009 Oct;47(10):2458-64. PMID: 19596397
 8. Mahshid Bokaie, Tahmineh Farajkhoda, Behnaz Enjezab, Azam Khoshbin, Karimi Zarchi Mojgan. Oral fennel (Foeniculum vulgare) drop effect on primary dysmenorrhea: Effectiveness of herbal drug. Iran J Nurs Midwifery Res. 2013 Mar-Apr; 18(2): 128–132. PMID: 23983742
 9. Health Harvard Publishing, Updated: May 3, 2019. Harvard Medical School [Internet]. Key minerals to help control blood pressure. Harvard University, Cambridge, Massachusetts.
 10. El Bardai S, Lyoussi B, Wibo M, Morel N. Pharmacological evidence of hypotensive activity of Marrubium vulgare and Foeniculum vulgare in spontaneously hypertensive rat.. Clin Exp Hypertens. 2001 May;23(4):329-43. PMID: 11349824
 11. Kornsit Wiwattanarattanabut, Suwan Choonharuangdej, Theerathavaj Srithavaj. In Vitro Anti-Cariogenic Plaque Effects of Essential Oils Extracted from Culinary Herbs.J Clin Diagn Res. 2017 Sep; 11(9): DC30–DC35. PMID: 29207708
Read on app