வேம்பு 4000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மருத்துவ மூலிகை. வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் வெவ்வேறு வழிகளில் பயனுள்ளது. உண்மையில், வேம்பு  அரிஷ்டா என்னும் சமஸ்கிருத பெயரைப் பயன்படுத்தி பிரபலமாக அழைக்கப்படுகிறது. அதாவது அதற்கு "நோய்களுக்கு நிவாரணம் அளிப்பவர்" என்று பொருள்.

வேப்ப மரம் வழக்கமாக கொத்து கொத்தாக இலைகளை கொண்டிருக்கும்  மற்றும் 75 அடி வரை உயரமாக வளரக் கூடியது. இது பொதுவாக வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளரும். இருப்பினும், இது தெற்கு ஈரான் தீவுகளில் கூட வளர்ந்து வருகிறது. இது பசுமை நிறைந்த பச்சை நிறமானது, இந்த மரங்கள் எளிதாக இந்தியாவில் சாலையோரங்களில் வளர்ந்து இருப்பதை காணலாம்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வளரும் நாடுகளில் சுமார் 80% மக்கள் பொதுவாக பாரம்பரிய மருந்துகள் மற்றும் தாவரங்கள் மற்றும் தாவர பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். வேம்பு அது போன்ற ஒரு மரமாகும். தோல் நோய்த்தொற்றுகள், செப்டிக் புண்கள், தொற்று ஏற்பட்ட தீக்காயங்கள் மற்றும் மனித உடலை பாதிக்கும் சில பூஞ்சை தொற்று போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த மரம் பயன்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது.  சோப்புகள், லோஷன் மற்றும் ஷாம்பு ஆகிய பல பொருட்கள் வேப்ப எண்ணெயை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. வேப்ப இலைகள் கொசுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் வேப்ப இலைகளை சேர்த்து பிறகு குளியல் எடுத்துக் கொள்வது அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேதங்களில் வேம்பு "சர்வ ரோக நிவாரணி" என்று குறிப்பிடப்படுகிறது, அதாவது "அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்" என்று பொருள்.

வேம்பு ஒரு இந்திய அற்புதம் மட்டும் அல்ல என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆப்பிரிக்காவிலும் இது நன்கு அறியப்பட்டிருக்கிறது, அங்கு இது "மஹோர்பனி" என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆபிரிக்க நம்பிக்கைகளின்படி, வேம்பு நாற்பது பெரிய மற்றும் சிறிய நோய்களைப் பற்றி குணப்படுத்த முடியும்.

ஒரு மருத்துவ அற்புதம் என்பதை தவிர, வேம்பு சமயலில் கூட உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வேகவைத்து அல்லது வறுத்து கறிகளில் மற்றும் உணவு பதார்தங்களில் சமயல் பொருளாக பயன்படுத்தப்படலாம். மியான்மரில், வேப்ப இலைகள் சாலட்டில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இலைகளை உறைய வைத்திருக்கும் அவை இரண்டு மாதங்களுக்கு புதியது போலவே இருக்கும் என்பது இதன் சிறப்பு அம்சம். இந்த மூலிகையின் கசப்பான சுவையை மறைத்து ஒரு சுவையான பதார்த்தம் செய்ய சிறந்த வழி என்ன?

வேம்வு பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

 • தாவரவியல் பெயர்: ஆசாதிராச்டா இன்டிகா
 • குடும்பம்: மேலியாசீஸ்
 • சமஸ்கிருத பெயர்: நிம்பா அல்லது அரிஷ்டா
 • பயன்படுத்தப்படும் பகுதிகள்: விதைகள், இலைகள், பழங்கள், பூக்கள், எண்ணெய், வேர்கள் மற்றும் பட்டை போன்ற வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளையும் பயன்படுத்தலாம்.
 • உள்ளூர் பகுதி மற்றும் புவியியல் பரப்பு: வேம்பு மரம் முக்கியமாக இந்திய துணைக் கண்டத்தில் பயிரிடப்படுகிறது - இந்தியா, நேபாளம், மாலைதீவுகள், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்.
 • பயன்கள்: வேப்ப மரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தொழுநோய், கண் கோளாறுகள், குடல் புழுக்கள், வயிற்றுப்போக்கு, தோல் புண்கள் மற்றும் இரத்த நாளங்கள், காய்ச்சல், நீரிழிவு மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் ஆகியவற்றைக் கையாளுவதற்கு வேப்ப இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. வேப்ப எண்ணெய் ஒரு பயனுள்ள கருத்தடை சாதனம் ஆகும்.
 • சுவாரசியமான உண்மை: யார் ஒருவர் தனது வாழ்நாளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேப்ப மரங்களை பயிரிடுகிறாறோ, அவர் சொர்கத்திற்குச் செல்வார்கள் என நம்பப்படுகிறது.
 1. வேம்பின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Neem nutrition facts in Tamil
 2. வேம்பின் சுகாதார நலன்கள் - Neem health benefits in Tamil
 3. வேம்பின் பக்க விளைவுகள் - Neem side effects in Tamil
 4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

வேம்பு இலைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் ஃபிளாவனாய்டுகளின் நல்ல ஆதாரமாக இருக்கின்றன. இதில் ஒரு இயற்கை பூச்சி விரட்டியான அசாடிராக்டின் உள்ளது. வேப்ப இலைகளில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற மற்ற சேர்மங்கள் மேலும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் போன்ற கனிமங்கள் உள்ளன. கூடுதலாக, அவை குளுட்டமிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ப்ரெய்ன் மற்றும் பல கொழுப்பு அமிலங்கள் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.

வேம்பு பூக்கள் பல்வேறு க்லுடமிக் அமிலம், டைரோசின் மற்றும் மெத்தியோனின் போன்ற அமினோ அமிலங்களை வழங்குகின்றன.

அதிக கொழுப்பு நிறைந்த உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால் வேப்ப விதை ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது. மற்றும் 200 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களுக்கு எதிராக பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தக்கூடிய கசப்பான கலவைகள் அதில் உள்ளன, மேலும் அவை மனிதர்களுக்கு நச்சுத்தன்மையற்றவை.

 • தோல் மற்றும் முடிக்கு: வேம்பு ஒரு ஆக்ஸிஜனேற்ற உணவு, இதனால் உங்கள் முடி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நல்லது. இது உங்களுக்கு தோல் நோய்கள் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்கிறது. மேலும் அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு மற்றும் காயத்தின் அளவைக் குறைப்பதில் உதவி செய்யும். தலைமுடியின் பேண்களை நீக்குவதற்கு பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது மேலும் தலை பொடுகு மற்றும் உச்சந்தலையில் நமைச்சல் போன்ற சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
 • நோய் தடுப்புக்கு: வேம்பு நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் உடலை பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் வெளிநாட்டு உடல்களில் இருந்து பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
 • வாய் மற்றும் வயிற்றுக்கு: வேம்பு பல் சிதைவு, தகடு குவிப்பு மற்றும் ஈறு அழற்சி மற்றும் தொற்று போன்ற பல்வேறு வாய்வழி உடல்நல பிரச்சினைகளில் இருந்து வேம்பு உங்களை பாதுகாக்கிறது. இது வயிற்று புண்களின் மேலாண்மைக்கு உதவுகிறது.
 • இதயத்திற்கு: இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வேம்பு உதவுகிறது, இதையொட்டி கரோனரி இதய நோய் மற்றும் அரித்மியாவின் ஆபத்தை குறைப்பதில் உதவுகிறது.
 • புற்றுநோய்க்கு எதிராக: அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதை புற்றுநோயைத் தடுக்க சிறப்பான வகையில், குறிப்பாக கணையத்தின் தன்மைக்கு உதவுகின்றன.
 • சுவாச பிரச்சனைகளுக்கு: வேம்பு இருமல், ஆஸ்துமா மற்றும் கபம் குவிக்கப்படுதல் போன்ற சுவாச பிரச்சினைகளின் மேலாண்மைக்கு உதவுகிறது.

காயங்களைக் குணப்படுத்துவதற்கான வேம்பு - Neem for healing wounds in Tamil

காயம் குணமாகுதல் என்பது, நீங்கள் காயமடைந்த பிறகு தோல் மற்றும் திசுக்கள் தங்களைத் தாங்களே சரிசெய்து கொள்கின்ற ஒரு இயற்கை வழிமுறையாகும். வேம்பு ஒரு பயனுள்ள, இயற்கை காயம் குணமாக்கி என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேப்ப இலைகளில் அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் நிம்பிடின் மற்றும் சோடியம் நிம்பிடேட் போன்றவை இருக்கின்றன. இது வலி மற்றும் வீக்கத்தை மட்டும் குறைப்பது அல்லாமல், மேலும் அது காயம் பட்ட தளத்தில் மேற்கொண்டு தொற்று வாய்ப்புகள் ஏற்படுவதை குறைக்க உதவும்.

காயத்தை குணமாக்கப் பயன்படும் போவிடோன்-அயோடைன் எனப்படும் ஒரு கிருமி நாசினியுடன் வேம்பின் செயல்படு திறனை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு முன்மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. வேப்ப இலைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட சாற்றினை கொண்டு காயத்தை ஆற்றும் முறையில் காயத்தின் அளவு கணிசமான அளவு குறைந்திருப்பதாக தெரிய வந்தது, இது போவிடோன்-அயோடைன்-ந் செயல்பாடுடன் ஒப்பிடத்தக்கது.

ஒரு மருத்துவப் ஆய்வில்,  திறந்த காயங்கள் கொண்ட 60 க்கும் மேற்பட்ட மக்களுக்கு 8 வார காலத்திற்கும் அதிகமாக வேப்ப எண்ணெய் ஒரு மேற்பூச்சாக தடவப்பட்டு வந்தது. 8 வாரங்களுக்கு பிறகு, காயத்தின் அளவு 50% குறைந்திருந்தது.

முடிக்கு வேம்பின் நன்மைகள் - Neem benefits for hair in Tamil

உங்கள் முடியை மென்மையான மற்றும் பட்டுபோன்ற அமைப்புடன் பராமரிக்க, சரியான முடி பராமரிப்பு என்பது முக்கியம். இது உங்கள் உச்சந்தலையில் எந்த பொடுகு மற்றும் பேண் தொல்லையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.  இந்த சிக்கல்களைத் தடுக்க வேம்பு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. வேம்பு , சிகைக்காய்  ரீதா மற்றும் இன்னும் பிற பொருட்கள் கொண்ட கலவையை பயன்படுத்தி 28 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ஒரு மருத்துவ ஆய்வு செய்யப்பட்டது. முடிவுகள் இந்த கலவை உச்சந்தலையில் அரிப்பு மற்றும் தலை பொடுகு ஆகியவற்றிற்கு எதிராக பயனுள்ளதாக இருந்தது என்று கூறியது. கலவையில் சேர்க்கப்பட்ட வேப்ப எண்ணெய், வேப்பம் இலை மற்றும் இதர கூறுகளின் நுண்ணுயிர் எதிர்ப்பி பண்புகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளது என காட்சிப்படுத்தப்பட்டது.

தலை பேண் என்பது பள்ளி குழந்தைகள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. முதன்மையான பொருளாக வேம்பை கொண்டிருக்கும் ஷாம்பூக்கள் தலையில் உள்ள பேணை ஒழிக்க உதவும் என மேற்கொள்ளப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு தெரிவித்தது. வேம்பு ஷாம்பு இரசாயன அடிப்படையிலான ஷாம்புகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

நோய் எதிர்ப்பு அமைப்புக்கான வேம்பு - Neem for immune system in Tamil

நோயெதிர்ப்பு அமைப்பு என்பதே நமது உடலின் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தொடக்கம் ஆகும். இது பல்வேறு பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பிற வெளிநாட்டு உடல்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அடிக்கடி தொற்றுநோய்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும். வேம்பு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

முன் மருத்துவ ஆராய்ச்சி, வேம்பு சாறு, நோயெதிர்ப்பு அமைப்புகளில் நேர்மரையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது. குறிப்பாக, லிம்போசைட்கள் மற்றும் மோனோசைட்டுகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருந்தது. இவை இரண்டும் வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகை ஆகும், அவை தொற்று நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராடுவதற்கு பொறுப்பாகும்.

(மேலும் வாசிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்)

சருமத்திற்கு வேம்பின் நன்மைகள் - Neem benefits for skin in Tamil

தீங்கு விளைவிக்கும் மாசுபடுதல்கள் மற்றும் தொற்றுநோய்களால் பாதிக்கபடுவதால் நமது தோலிற்கு தொடர்ந்து கவனிப்பு தேவை. ஒழுங்கற்ற தோல் சுகாதாரத்தால் சிரங்குமுகப்பருஒவ்வாமை மற்றும் சொரியாசிஸ் போன்ற பல நிலைமைகள் ஏற்படலாம். பல்வேறு நோய்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கக்கூடிய செயலில் உள்ள பொருட்கள் வேம்பில் உள்ளது என்று ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.

 புரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ்போன்ற முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை தடுக்க வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. டைடெர்பென்ஸ் - ஸ்டிக்மாஸ்டெரோல், டிரிடர்பென்ஸ், நிம்பிடின், மார்கோலின் மற்றும் மார்கோலோன் போன்ற கூறுகளை வேம்பு உள்ளடக்கியது. இந்த செயலில் உள்ள பொருட்கள் வேதியியலின் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்பு பண்புகளுக்கு பொறுப்பாகும்.

ஆஸ்துமாவுக்கு வேம்பு - Neem for asthma in Tamil

ஆஸ்துமா என்பது, சுவாசப்பாதைகளை சுருக்கமடைய செய்து, மூச்சு விடுவதை கடினமாக்கிவிடும் ஒரு நீண்ட கால பிரச்சனை ஆகும். மேலும் மூச்சுத்திணறல் மற்றும் இருமல் ஆகியவற்றுடன் இந்த நிலைமை மேலும் தொடர்புடையது. வேம்பு  ஆஸ்துமா-வை தடுக்க உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. அப்ளைட் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி இன்டர்நேஷனல் காப்பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் இலைகள் ஆஸ்துமாவுக்கு சிகிச்சை அளிக்கவும் இருமல் மற்றும் கபம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

ஆஸ்துமா சிகிச்சையில் வேப்ப விதைகள், பழங்கள், வேர்கள் மற்றும் பட்டை ஆகியவை பயனுள்ளவையாக இருப்பதாகவும், ஆயுர்வேத மற்றும் பிற பாரம்பரிய மருந்துகளிலும் காலங்காலமாக பயன்படுத்தப்படுகின்றன என மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்துமாவுக்கு எதிரான வேம்பின் விளைவுக்கு அதன் அலற்சி எதிப்பு தன்மையே காரணம் என்று மேலும் கூறப்பட்டது.

இதயத்திற்கான வேம்பின் நன்மைகள் - Neem benefits for heart in Tamil

கரோனரி தமனி நோய் மற்றும் அர்ரித்மியா (ஒழுங்கற்ற இதய துடிப்பு) போன்ற இதய நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேம்பு பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கரோனரி தமனி நோய் என்பது மிகவும் பொதுவான ஒரு வகை இதய நோய் ஆகும். இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது என வகைப்படுத்தப்படுகிறது.  நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் இதனால் ஏற்படலாம்.

வேம்பு சாறு இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது என்று ஒரு முன் மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த சாறு இதய துடிப்பின் வேகத்தை (எதிர்மறை சமச்சீரற்ற விளைவு) மற்றும் இதய துடிப்பின் விகிதம் (எதிர்மறை க்ரோனோட்ரோபிக் விளைவு) ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

(மேலும் வாசிக்க: இதய நோய் தடுப்பு)

வேம்பின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - Neem anti-cancer properties in Tamil

புற்று நோய் என்பது உடல் செல்களில் அசாதாரண வளர்ச்சியை குறிக்கிறது.  புற்றுநோய் வழக்குகள் தொடர்ந்து அதிகரிக்க, கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலிருந்து கலப்படம் செய்யப்பட்ட உணவு மாசுபாடு வரையிலான பல காரணங்கள் உள்ளன. முன் மருத்துவ ஆய்வுகள் வேம்பில் உள்ள முக்கிய அங்கமாக இருக்கும் நிம்பிடைட் , சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஹீமோ பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடுகின்றன. நிம்போலைட் புற்றுநோய்களின் உயிரணு சுழற்சியை இடைமறிப்பதன் மூலம் செயல்படுகிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி மற்றும் பரவுதல் தடுக்கப்படுகிறது. நிம்போலைட் புற்றுநோய் செல்களில் (திட்டமிடப்பட்ட செல் மரணம்) அபோப்டோசிஸையும் ஏற்படுத்துகிறது.

மற்றொரு ஆராய்ச்சியில் வேம்பில் உள்ள நிம்பிடைட்  கணைய புற்றுநோய் செல்களில் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கிறது என்று தெரியவந்தது.

இந்த முடிவுகள் புற்றுநோய் எதிர்பு மருந்துகளை தயாரிப்பதில் வேம்பிற்கான சாத்தியக்கூறுகளைக் காட்டுகின்றன.

கருதடை சாதனமாக வேம்பு - Neem as contraceptive in Tamil

தேவையற்ற கர்ப்பங்களைத் தடுக்க கருத்தடை சாதனங்கள் ஒரு சிறந்த வழியாகும். ஆனால் பல நாடுகளில் கருத்தடை முறைக்கான செலவுகள் மற்றும் இருப்புகள், மக்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன, இது தேவையற்ற கர்ப்பம் மற்றும் கருச்சிதைவுக்கான பாதுகாப்பற்ற வழிமுறைகளுக்கு வழிவகுக்கிறது. முன் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன, கருப்பையின் உள்ளே வேப்ப எண்ணெயின் பயன்பாடு கருத்தரிப்பு ஏற்படுவதற்கான தழைகீழ் செயல்பாட்டை தூண்டுகிறது. அதாவது இதன் பொருள் விலங்கு மாதிரிகள் எந்த பக்க விளைவுகளையும் காட்டவில்லை மேலும் சில மாதங்களுக்குப் பிறகு அவற்றின் கருத்தரிக்கும் வளத்தை மீட்டெடுக்க முடிந்தது.

மற்றொரு விவோ (விலங்கு அடிப்படையிலான) ஆய்வில், வேம்பு எண்ணையை யோனியின் வழியாக செலுத்தும் போது ஒரு சில விநாடிக்குள் விந்தணுக்களை செயல்படவிடாமல் தடுத்தது.

ஆராய்ச்சியின் இந்த முடிவுகளானது வேப்ப எண்ணெய் ஒரு மலிவு விலை மற்றும் நச்சுத்தன்மை அற்ற கருத்தடை கருவியாக இருப்பதைக் காட்டுகின்றன. இதனால் விலை உயர்ந்த கருத்தடை முறைகளை வாங்க முடியாத மக்களுக்கு எளிதில் கிடைக்கும்படியான ஒரு கருத்தடை கருவியை செய்ய முடியும்.

செரிமான அமைப்புக்கான வேம்பின் நன்மைகள் - Neem benefits for digestive system in Tamil

இரைப்பைக் கோளாறுகள் என்பது ஈஸ்ட்ரோஜஸ், சிறிய மற்றும் பெரிய குடல், மற்றும் வயிறு ஆகியவற்றை பாதிக்கும் ஒரு குழுவான கோளாறுகள் ஆகும். வயிற்று வலிவயிற்றுப்போக்கு, வாய்வு மற்றும் வாந்தி ஆகியவை இந்த கோளாறுகளின் பொதுவான அறிகுறிகளில் அடங்கும். ஆராய்ச்சிகள் குடல் புண்கள் மற்றும் உயர் வயிற்று அமிலத்தன்மை போன்ற இரைப்பை நோய்களைத் தடுப்பதில் வேம்பு எண்ணெய் சிறந்தது என்பதைக் குறிக்கிறது.  விவோ (விலங்கு அடிப்படையிலான) ஆய்வுகளில் வேப்பன் சாறின் பயன்பாட்டினால் வயிற்று புண் -களால் சேதம் அடைந்த திசுக்கள் மீளுருவாக்கம் பெருவது நிரூபிக்கப்பட்டது.

ஃபைட்டோதெரபி ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, வேம்பு ஒரு சிறந்த இரைப்பை பாதுகாப்பான் (வயிற்றைப் பாதுகாக்கிறது) மற்றும் புண் எதிர்ப்பு முகவர் ஆகும்.

ஒரு மருத்துவ ஆய்வுகளில், இரைப்பை குடல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 வார காலத்திற்கு தினசரி இரண்டு முறை வேம்பு சாறு 30 முதல் 50 கிராம் வரை வழங்கப்பட்டது . இரைப்பை புண்கள் மற்றும் இரைப்பைச் சாறுகளின் உயர் சுரப்பு ஆகியவற்றில் குறிப்பிடதக்க அளவு முன்னேற்றம் காணப்பட்டது.

பல் சிதைவு பிரச்சினைகளுக்கு வேம்பு - Neem for tooth decay problems in Tamil

பல் சிதைவு அல்லது பல் செல்கள் என்பது பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் அமிலங்களின் காரணமாக பல்லின் கட்டமைப்பு முறிவை குறிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாத பற்குழிவானது ஈறுகளுக்கு பரவக் கூடிய நோய்த்தொற்று ஆபத்துக்களை அதிகரிக்கிறது. வேம்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்சிதைவை தடுக்க உதவுகின்றன மேலும் ஈறுகள் மற்றும் பற்களை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இலை மற்றும் மரத்தின் குச்சிகளில் இருந்து எடுக்கப்படும்  எத்தனோலிக் சாறு எஸ். மியூட்டன்ஸ் மற்றும் எஸ். ஃபெக்கலிஸ்  போன்ற வாய்வழி நோய்க்கிருமிகளுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பு வினையினை வெளிப்படுத்தும். 

வேம்பு எண்ணெய் பாக்டீரியல் எதிர்ப்பு செயல்பாட்டை கூட கொண்டுள்ளது. மேலும் பல் தகடு உருவாவதை தடுக்க உதவும். பல் தகடு என்பது பற்களின் மீது படியும் ஒரு மெல்லிய பாக்டீரியா படலம் ஆகும்.

வேம்பில் இருந்து செய்யப்பட்ட பற்பசை அல்லது வேம்பில் இருந்து செய்யப்பட்ட வாய் கழுவி பற்குழிகள்  ஏற்படாமல் தடுக்க உதவ முடியும். பற்குழிகள் என்பது ஈறுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோய் ஆகும். வேம்பில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு காரணம் அதில் இருக்கும் நிம்பிடின் மற்றும் அசாடிராச்டின் போன்ற உயிரியக்க சேர்மங்களே ஆகும்.

 • ஆராய்ச்சியின் படி, வேம்பின் மிக அதிக பயன்பாடு கல்லீரல் சேதம் அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.  51 வயதான மனிதர் ஒருவர் அதிகப்படியாக வேம்பினை உட்கொண்டதால் பரந்த சிறுநீரக குழாய் அமிலத்தன்மை (டிஸ்டல் RTA) நோயால் அவதிப்பட்டார் என்ற தகவல் ஒன்று உள்ளது. இந்த நோயில் சிறுநீரகங்கள் சிறுநீரில் அமிலங்களை வெளியிடாமல் போய்விடும். இதனால் ஒரு நபரின் இரத்தம் அமிலத்தன்மையுடனே இருக்கும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், அது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
 • வேம்பு விஷத்தன்மை ஏற்படுவது பெரியவர்களுக்கு மிகவும் பொதுவானது அல்ல, ஆனால் குழந்தைகள் மத்தியில் இந்த வகை நச்சுத்தன்மை ஏற்பட்டதாக பலவிதமான வழக்குகள் உள்ளன. வேம்பில் உள்ள செயல்படும் மூலப்பொருளான அசாடிராச்டின் விஷத்தன்மையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாந்தி, வலிப்பு, நச்சுத்தன்மை கொண்ட என்செபலாபதி (ஒரு நரம்பியல் கோளாறு), வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை (சிறுநீரகங்கள் உடலில் இருந்து அமிலங்களை நீக்காத ஒரு நிலை) மற்றும் மருந்தினால் தூண்டப்பட்ட கல்லீரல் சேதம் (ஹெபாடிக் நச்சுத்தன்மை) போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
 • பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டிருப்பதாக அறியப்படும் வேம்பு எண்ணெய் சில நேரங்களில் ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தும். பல வழக்குகள் இல்லை என்றாலும், சிலருக்கு வேப்ப எண்ணெய் தடவுவதால் ஒவ்வாமை ஏற்படலாம்.

வேப்ப மரத்தின் அனைத்து பகுதிகளிலும் குணப்படுத்துவதற்கான நன்மைகள் இருப்பதை அறியலாம். வயிற்றுக் கோளாறுகளை தடுப்பதில் வேம்பு சிறந்தது, பற்கள் மற்றும் ஈறுகளை நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது, மேலும் புற்றுநோய் வளர்ச்சியை குறைக்க உதவுகிறது. வேப்ப இலைகள் ஆஸ்துமாவில் இருந்து தடுக்கிறது. மேலும் வேப்ப எண்ணெயை மலிவு விலை கருத்தடை கருவியாக பயன்படுத்தலாம். இருப்பினும், வேம்பை அதிகமாக உட்கொள்ளல் சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்தும். சிலர் வேம்பிற்கு ஒவ்வாதவர்களாக இருக்கலாம்.

மிதமான அளவுகளில் வேம்பை பயன்படுத்துவதால் அனைத்து சுகாதார நலன்களையும் பெற முடியும். மேலும் உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.


उत्पाद या दवाइयाँ जिनमें Neem है

மேற்கோள்கள்

 1. Anjali Singh, Anil Kumar Singh, G. Narayan, Teja B. Singh, Vijay Kumar Shukla. Effect of Neem oil and Haridra on non-healing wounds. Ayu. 2014 Oct-Dec; 35(4): 398–403. PMID: 26195902
 2. Heukelbach J, Oliveira FA, Speare R. A new shampoo based on neem (Azadirachta indica) is highly effective against head lice in vitro. Parasitol Res. 2006 Sep;99(4):353-6. Epub 2006 Mar 28. PMID: 16568334
 3. Beuth J, Schneider H, Ko HL. Enhancement of immune responses to neem leaf extract (Azadirachta indica) correlates with antineoplastic activity in BALB/c-mice. In Vivo. 2006 Mar-Apr;20(2):247-51. PMID: 16634526
 4. Dr. Farhat S. Daud et al. A Study of Antibacterial Effect of Some Selected Essential Oils and Medicinal Herbs Against Acne Causing Bacteria. International Journal of Pharmaceutical Science Invention, Volume 2 Issue 1 ‖‖ January 2013 ‖‖ PP.27-34
 5. Khosla P, Gupta A, Singh J. A study of cardiovascular effects of Azadirachta indica (neem) on isolated perfused heart preparations. Indian J Physiol Pharmacol. 2002 Apr;46(2):241-4. PMID: 12500501
 6. Lingzhi Wang et al. Anticancer properties of nimbolide and pharmacokinetic considerations to accelerate its development Oncotarget. 2016 Jul 12; 7(28): 44790–44802. PMID: 27027349
 7. Subramani R et al. Nimbolide inhibits pancreatic cancer growth and metastasis through ROS-mediated apoptosis and inhibition of epithelial-to-mesenchymal transition. Sci Rep. 2016 Jan 25;6:19819. PMID: 26804739
 8. National Research Council (US) Panel on Neem. Neem: A Tree For Solving Global Problems. Washington (DC): National Academies Press (US); 1992. APPENDIX B, BREAKTHROUGHS IN POPULATION CONTROL? .
 9. Maity P, Biswas K, Chattopadhyay I, Banerjee RK, Bandyopadhyay U. The use of neem for controlling gastric hyperacidity and ulcer. Phytother Res. 2009 Jun;23(6):747-55. PMID: 19140119
 10. Bandyopadhyay U. Clinical studies on the effect of Neem (Azadirachta indica) bark extract on gastric secretion and gastroduodenal ulcer. Life Sci. 2004 Oct 29;75(24):2867-78. PMID: 15454339
 11. David A. Ofusori, Benedict A. Falana, Adebimpe E. Ofusori, Ezekiel A. Caxton-Martins. Regenerative Potential of Aqueous Extract of Neem Azadirachta indica on the Stomach and Ileum Following Ethanol-induced Mucosa Lesion in Adult Wistar Rats. Gastroenterology Res. 2010 Apr; 3(2): 86–90. PMID: 27956991
 12. T. Lakshmi, Vidya Krishnan, R Rajendran, N. Madhusudhanan. Azadirachta indica: A herbal panacea in dentistry – An update. Pharmacogn Rev. 2015 Jan-Jun; 9(17): 41–44. PMID: 26009692
 13. Ajay Mishra, Nikhil Dave. Neem oil poisoning: Case report of an adult with toxic encephalopathy. Indian J Crit Care Med. 2013 Sep-Oct; 17(5): 321–322. PMID: 24339648
 14. de Groot A, Jagtman BA, Woutersen M. Contact Allergy to Neem Oil. Dermatitis. 2017 Nov/Dec;28(6):360-362. PMID: 29059091
ऐप पर पढ़ें