ரோஸ்மெல்லோ அல்லது சீனா ரோஸ் என அழைக்கப்படும் செம்பருத்தி மலர்கள், பொதுவாக வண்ணமயமான பூக்கள் பூக்கும் காரணத்தினால் தோட்டங்களில் அலங்கார செடியாக பயிரிடப்படுகின்றன. ஒரு அழகான தாவரமாக மட்டும் இல்லாமல், மருத்துவ துறையில் இந்த தாவரத்தின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. செம்பருத்தி செடி மால்வாசீயெ-வின் வரிசையில் மால்வால்ஸ் குடும்பத்திற்க்கு சொந்தமானது. இது உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களுக்கு உள்நாட்டு ரீதியாக உள்ளது. அதே நேரத்தில் இதன் பேரினம் பெரிய அளவில் பரவியுள்ளது.

ஹைபிஸ்கஸ் என்ற பெயர் கிரேக்க இலக்கியத்தில் இருந்து தோன்றியது. மற்றும் 'ஹைபிஸ்கோஸ் ' என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. பளபளப்பான இலைகளுடன் கூடிய பசுமையான இந்த புதர் பொதுவாக 5 மீட்டர் வரை வளரும். பெரும்பாலும் மருத்துவ பயன்களில் வேலை செய்யும் இந்த தாவரத்தின் பகுதியாக செம்பருத்தி பூ இருக்கிறது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை மற்றும் ஊதா போன்ற பளிச் நிறங்களில் செம்பருத்தி செடியில் மலர்கள் இருக்கும். மேலும் இந்த மலர்கள் பொதுவாக பெரிய அளவில் காணப்படும்.

 ஹைபிஸ்கஸ்  ரோசா- சினென்சி என்பது மிகவும் பொதுவான செடி வகை. அது பிரகாசமான சிவப்பு மலர்களைக் கொண்டிருக்கும். செம்பருத்தி ஹைபிஸ்கஸ் அல்லது சீனா ரோஜா என பொதுவாக அழைக்கப்படுகிறது. இதை உட்கொள்ளும் போது இது பல நன்மைகள் பயக்கும்.  அஜீரணம்பதட்டம்ஸ்கர்வி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் மற்றும் நிலைமைகளுக்கு கூட ஒரு ஆயுர்வேத மருத்துவரின் பரிந்துரைப்படி இந்த பூ-வை சாப்பிடுவது மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

செம்பருத்தி பற்றி சில அடிப்படை தகவல்கள்

 • தாவரவியல் பெயர்ஹைபிஸ்கஸ் ரோசா- சினென்சிஸ்
 • குடும்பம்: மால்வாசீயெ
 • பொது பெயர்: சீனா ரோஸ், ரோஸ்மேலோவ்
 • சமஸ்கிருத பெயர்: ஜவா, ருத்ரபூஷ்பா, ஜப்பா, அருணா, ஓட்ரபுஷ்பா
 • பயன்படுத்தப்படும் பகுதிகள்: மலர்கள் (இதழ்கள்)
 • இதன் பிராந்தியம் மற்றும் புவியியல் பரவல்: உலகின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களுக்கு சொந்தமானது.
 1. செம்பருத்தி வகைப்பாடு மற்றும் வகைகள் - Classification and varities of Hibiscus
 2. செம்பருத்தி மலர் சாறின் நன்மைகளை - Hibiscus flower extract benefits
 3. செம்பருத்தி செடியை எப்படி வளர்ப்பது - How to grow Hibiscus
 4. செம்பருத்தியின் பக்க விளைவுகள் - Hibiscus side effects

செம்பருத்தியின் வகைப்பாடு

இராஜ்ஜியம்: ப்லான்டே 
பிரிவு: ஆஞ்ஜியோஸ்பெர்ம்ஸ்
வர்க்கம்: யுடிகாட்ஸ்
வரிசை: மால்வேல்ஸ்
குடும்பம்: மால்வேசே
பேரினம்: ஹைபிஸ்கஸ்
 

செம்பருத்தியின் வகைகள்

பல வகையான செம்பருத்தி மலர்கள் பல்வேறு சுகாதார நலன்களை வழங்கும். செம்பருத்தியில் 100 க்கும் மேற்பட்ட அறியப்பட்ட வகைகள் உள்ளன, மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைகள் பின்வருமாறு:

 • ஹைபிஸ்கஸ் ரோசா- சினென்சிஸ்இது பொதுவாக சீன செம்பருத்தி  என அறியப்படுகிறது மற்றும் இதுவே மிகவும் அதிகமாக பல்வேறு இடங்களில் காணப்படும் ஒன்று. இந்த செடி வழக்கமாக பிரகாசமான சிவப்பு மலர்களை கொண்டிருக்கும் மற்றும் ஒரு புதர் அல்லது ஒரு சிறிய மரமாக வளரும். இந்த வகையின் இலைகள் தோற்றத்தில் பளபளப்பானவை. பூக்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கின்றன, இதனால், இந்த பூக்கள் சாலடுகளில் அழகுபடுத்த பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூவின் சாறு பல முடி பராமரிப்பு மற்றும் தோல் தயாரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை அதன் பிரகாசமான ஒளி பரப்பும் (மினுமினுக்கும்) தன்மையினால் அறியப்படுகிறது. அதனால் தான் ஷூ பாலிஷ்கள் தயாரிக்கும் போது, இது பயன்படுத்தப்படுவதாக அறியப்படுகிறது. 
   
 • ஹைபிஸ்கஸ் சிரியாகஸ்இந்த வகையான செம்பருத்தி சீனாவை சேர்ந்தது மற்றும் பெரும்பாலும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படுகிறது. இந்த செடி ஒரு அடர்ந்த புதர் போல வளர்கிறது, மற்றும் இதன் பூக்கள் வழக்கமாக வெள்ளை, நீலம் அல்லது லேசான ஊதா நிறத்தில் இருக்கும். உள்நாட்டு மக்களால் இந்த வகை செம்பருத்தி, மூலிகை தேயிலைகளில் ஒரு வடிநீராக பயன்படுத்தப்படுகிறது.  ஹைபிஸ்கஸ் சிரியாகஸ் பசியை அதிகரிப்பதாகவும் மற்றும் இருமலுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
   
 • ஹைபிஸ்கஸ் டிலியாசியஸ்முக்கியமாக ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் வெப்ப மண்டல நாடுகளின் கரையோரப் பகுதிகளில் இந்த வகை செம்பருத்தி காணப்படுகிறது. இந்த வகையின் மலர் பொதுவாக பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் மற்றும் முதிர்ந்த காலத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். இந்த தாவரம் வழக்கமாக ஒரு மரமாக வளர்கிறது, இதனால் இது மதிப்புமிக்க ஒரு மரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த மரங்கள் நீடித்த கயிறுகளை தயாரிக்கவும் படகுகளில் பிளவுகளை சரிசெய்யவும் பயன்படுத்தப்படுகிறது. வேர்கள் மற்றும் மரப்பட்டைகள் பொதுவாக கொதிக்க வைக்கப்பட்டு அந்த வடிநீர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன. 
   
 • ஹைபிஸ்கஸ் சப்டரிஃபாஇந்த வகை பொதுவாக ரோஸெல்லே என்று அழைக்கபடுகிறது மற்றும் இது மேற்கு ஆப்பிரிக்காவில் பெருமளவு காணப்படுகிறது. இந்த வகைகளின் விளைவுகள் மிகவும் பரவலாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையின் மலர்கள் ஹைபிஸ்கஸ் தேநீர் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த தேநீர் பரவலான பயன்பாடுகள் கொண்டவை.  ஹைபிஸ்கஸ் சப்டரிஃபாமலர்கள் மற்றும் புதினா ஒன்றாக கலக்கப்பட்டு புத்துணர்ச்சி பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இதன் இலைகள் பல கலாச்சாரங்களில் காய்கறியாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தாவரத்தின் தண்டுகளில் இருக்கும் நார்ச்சத்துகள் சணல் நார்களுடன் சேர்த்து மேலும் நீடித்திருக்கும் வலுவான பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. 
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

பல வகையான செம்பருத்தி மலர்களில் ஒரு வகையான பைடோகெமிக்கல்கள் (மருத்துவ நோக்கங்களுக்காக பயனுள்ளதாக இருக்கும் உயிரியளவு கலவைகள்) உள்ளன. செம்பருத்தி பூவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட அத்தியாவசிய எண்ணெய்கள் பரவலான பண்புகள் மற்றும் பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அதனுடைய விவரங்கள் கீழே விவாதிக்கப்பட்டுள்ளன.

 • முடிக்கான நன்மை: நீண்ட, மினுமினுக்கும் மற்றும் ஆரோக்கியமான முடியை விரும்பும் மக்களுக்கு சரியான முடி பராமரிக்கு துனையாக செம்பருத்தி இருக்கிறது. இது எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் அல்லது ஒரு முடி முகமூடி போன்ற வடிவத்தில் உங்கள் உச்சந்தலையை ஆற்றவும், உங்கள் தலைமுடியின் வலிமை மற்றும் மென்மையை மீட்டெடுக்கவும் பயன்படுத்தலாம்.
 • இரத்த அழுத்தத்தை குறைக்கிறது: ஹைபிஸ்கஸ் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டிருக்கிறது, இது இரத்த அழுத்தத்தை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது சில பாலிபினால்களைக் கொண்டுள்ளது, அவை மருத்துவ அமைப்புகளில் ஹைபோடென்சிவ் (இரத்த அழுத்தத்தை குறைக்கிறது) நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன என கண்டறியப்பட்டு இருக்கிறது.
 • காயம் குணமாவதை ஊக்குவிக்கிறது: செம்பருத்தி பூ சாறு காயம் குணமாகும் செயல்முறை மற்றும் தோல் உடைதல் வலிமையை மேம்படுத்துகிறது. இது காயம் ஏற்பட்ட இடத்தில்  பாக்டீரியா தொற்றைத் தடுக்கிறது.
 • உடல் பருமனை எதிர்த்து சண்டையிடுகிறது செம்பருத்தி வளர்சிதை மாற்றத்தை தூண்டும் ஒரு விளைவை கொண்டுள்ளது. இதையொட்டி, செம்பருத்தி உடல் பருமன் மற்றும் அதிக எடை பிரச்சினைகளுடன் போராட உதவும். இந்தப் பூவில் காணப்படும் பல்வேறு செயல்படும் கலவைகள் இலவச ராடிகல் சேதத்தைத் தடுக்கின்றன மற்றும் உடல் பருமனுக்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றான ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன.
 • உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகின்றன: செம்பருத்தி ஒரு டையூரிடிக் மற்றும் உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகின்ற விளைவுகளை கொண்டிருக்கின்றது. இது உங்கள் இரத்தத்தில் இருந்து நச்சு கலவைகள் மற்றும் இரசாயனங்களை சிறுநீருடன் சேர்த்து அகற்றுவதன் மூலம் உதவுகிறது.
 • நீரிழிவு எதிர்ப்பான்: செம்பருத்தி  தேநீர் இன்சுலின் உற்பத்தி செல்கள் மீது ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதால் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.

முடிக்கு செம்பருத்தியின் நன்மைகள் - Hibiscus benefits for hair

ஹைபிஸ்கஸ் ரோசா- சினென்சிஸ் மலர் மற்றும் இலை இருந்து பிரித்தெடுக்கும் சாறு எண்ணெய் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் கீழ் முடியின் நீளம் மற்றும் சுழற்சி நிலைகள் போன்ற முடி வளர்ச்சிக் கூறுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதில் மலரிலிருந்து எடுக்கப்பட்ட சாறின் சத்துகளுடன் ஒப்பிடுகையில் ஹைபிஸ்கஸின் இலையிலிருந்து எடுக்கப்பட்ட சாறின் சத்துகள் சிறந்த விளைவைக் காட்டுகின்றன என தெரிய வந்தது.

முடிக்கு செம்பருத்தி செடியின் தயாரிப்புகள்

 • செம்பருத்தி எண்ணெய்: இரண்டாவது மிகவும் அதிகபட்சமாக உற்பத்தி செய்யப்படும் செம்பருத்தி தாவரத்தின் தயாரிப்பு செம்பருத்தி முடி எண்ணெய் ஆகும். செம்பருத்தி முடி எண்ணெய் வடிநீரில் குறிப்பாக வைட்டமின் சி நிறைந்திருக்கும், இது முடிக்கு வலுவூட்டும் மற்றும் கொலாஜன் அதிகரிப்பதற்கு தேவையான அமினோ அமிலத்தின் சுரப்பை ஊக்குவிக்கிறது. இந்த பண்பு முடி வளர்ச்சிக்கு துணைபுரிவதோடு, முடியின் அடர்த்தியை அதிகரிப்பதுடன் மேலும்  முடியின் வேர்களை வலுவூட்டவும் உதவும்.
   
 • செம்பருத்தி ஷாம்பூ: முடியின் தரத்தை முன்னேற்றுவதில் அதன் விளைவைக் கருத்தில் கொண்டு, பூவின் வடிநீரின் வெவ்வேறு விகிதாச்சாரங்கள் செம்பருத்தி ஷாம்பூக்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமான ஷாம்பூ பயன்பாட்டுக்கு பதில் செம்பருத்தி வடிநீர் கொண்ட ஷாம்பூவை மாற்றுவது சிறந்த விளைவுகளைத் தரும்.
   
 • செம்பருத்தி கண்டிஷனர்: பூக்கள் மற்றும் இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெல் போன்ற பொருளில் ஆழமான சீரமைப்பு பண்புகள் உள்ளன. உலர்ந்த, பரட்டை முடியை மிருதுவாகதாக மாற்ற செம்பருத்தி சாறு கொண்ட கண்டிஷனர்கள் பயன்படுத்தப்படலாம்.
   
 • செம்பருத்தி முகமூடிகள்: செம்பருத்தி பூக்கள், இலைகள் மற்றும் தயிர் இணைந்து தயாரிக்கப்பட்ட ஒரு முகமூடி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது முடியின் வேர் கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மேலும் முடியின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும், செம்பருத்தி மலர்கள் மற்றும்  வெந்தயம் விதைகளை ஒன்றாக சேர்த்து தயாரிக்கப்பட்ட முகமூடிகள் ஒரு சிறந்த பொடுகு சிகிச்சைக்காக செயல்படுகிறது மற்றும் ஆரோக்கியமான உச்சந்தலையை மீண்டும் பெற உதவுகிறது. இதேபோல், செம்பருத்தி மலர் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகின்றன செம்பருத்தி முகமூடிகள் வலுவான மயிர்க்கால்கள் மற்றும் மென்மையான முடியை பெற உதவுகிறது.

 பொருத்தமான பகுதியுடன் ஹைபிஸ்கஸை இணைப்பது குறிப்பிடத்தக்கது.தேங்காய் எண்ணை ஆலிவ் எண்ணெய்இஞ்சி, முட்டை, வெங்காயம், அலோ வேரா, மற்றும் வேம்பு ஆகியவை சரியான விகிதத்தில் செம்பருத்தியிடன் கலக்கப்பட்டு தயாரிக்கப்படும் கலவை தனித்தனியாக முடியை விரைவாக மீண்டும் வளரச் செய்ய உதவலாம்.

நீரிழிவு நோய்க்கான செம்பருத்தி சாறு - Hibiscus extract for diabetes

ஹைபிஸ்கஸ்  ரோசா- சினென்சிஸ் -ன் இதழ்களின் எத்தில் அசிட்டேட் என்னும் ஒரு பகுதியின் ஃப்ளவொனாய்ட்-நிறைந்த சாறு, நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் கொண்ட நோயாளிகளின் கணைய பீட்டா செல்களை பாதுகாப்பதில் செம்பருத்தி இதழில் இருந்து எடுக்கப்படும் சாறு உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஹைபிஸ்கஸ் சப்டரிஃப்பா பூ-வின் வடிநீர் கொண்ட  150 மில்லி தேநீர் குடிப்பது இன்சுலின் மீதான எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஆகியவற்றை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயை கையாள்வதில் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

(மேலும் வாசிக்க: நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்)

வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பானாக செம்பருத்தி - Hibiscus flower extract as analgesic and anti-inflammatory

ஹைபிஸ்கஸ் ரோசா- சினென்சிஸ் -ன் வேர் சாறு வலி நிவாரணி (அனல்ஜிசிக்) மற்றும் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு, வாய்வழியாக உட்கொள்ளப்படும் போது, எதிர்வினை நேரத்தை (வலி நிவாரணி) அதிகரிக்கும் மற்றும்  நீர்க்கட்டு க்களை (எதிர்ப்பு அழற்சி) தடுக்கும் பண்புகள் கொண்டுள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கொடுக்கப்பட்ட மருந்தின் அளவைச் சார்ந்து விளைவுகள் ஏற்படுகின்றன.  

இரத்த அழுத்தத்திற்கான செம்பருத்தி - Hibiscus for blood pressure

உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபெர்டென்ஷன் உலகளாவிய மக்களில் பெரும்பான்மையினரை பாதிக்கும் ஒரு பொதுவான சுகாதார நிலையாக உள்ளது. செம்பருத்தி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் விஷத்தன்மை எதிர்ப்பு பண்புகளால் நிகழ்கிறது என்று ஆராய்ச்சி குறிப்புகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, செம்பருத்தி மலரின் சாறு டையூரிடிக் குணங்களையும் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, அதாவது, சிறுநீரை வெளியேற்றும் வீதத்தை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.

உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அந்த நோயாளிகளுக்கு  ஹைபிஸ்கஸ் சப்டரிஃப்பாவின் மலர்களில் இருந்து எடுக்கப்படும் பாலிபீனால்ஸ் சாறு கொடுக்கபட்ட போது, அது அவர்களின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, அவர்களின் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைத்தது. 

காயத்தை குணப்படுத்துவதற்கான செம்பருத்தி - Hibiscus for wound healing

ஹபிஸ்கஸ் பூவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எதனால், காயங்களை குணப்படுத்தும் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டிருப்பதாக சோதனையில் தெரிய வந்தது. செம்பருத்தி எதனாலிக் சாறுடனான சிகிச்சையானது மருந்து கட்டுப்பாட்டுடன் ஒப்பிடுகையில் ஒரு குறிப்பிடத்தக்க (சுமார் 11%) காயம் குணப்படுத்தும் விளைவின் அதிகரிப்பைக் காட்டியது. ஹைட்ராக்ஸிப்ரொலைன் (தோல் புரதங்களை உருவாக்குவதற்குத் தேவையான) உள்ளடக்கம், தோல் உடைவதற்கு எதிரான வலிமை போன்ற பண்புகள் ஹைபிஸ்கஸ் மலர் சாறு கொண்டு சிகிச்சை அளிக்கும் போது கணிசமாக உயர்ந்ததாக கண்டறியப்பட்டது.

மருத்துவ பயன்பாடுகளுக்கு செம்பருத்தி மலர்கள் - Hibiscus flower extract for medicinal uses

ஹைபிஸ்கஸ் சப்டாரிஃபா மலர் சாற்றில்  வைட்டமின் சி (அஸ்கார்பிக் அமிலம்) அதிக அளவு காணப்படுகிறது. வைரோ மற்றும் விவோ ஆய்வுகளில் செபல்ஸ் மலர்களின் ஹைபிஸ்கஸ் சாறு மருந்தியல் பண்புகளை வெளிப்படுத்தியது மேலும் இது வலுவான ஆக்ஸிஜனேற்ற வினைகளைத் தூண்டியது.  ஹைபிஸ்கஸ் சப்டாரிஃபா  -வில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன ஆந்தோசியனின்கள் மற்றும் புரோட்டாகேடெக்யூயிக் அமிலம் (பைட்டோகெமிக்கல்ஸ்) சிகிச்சை ரீதியாக நன்மை பயக்கும் தயாரிப்பு பொருட்ககளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படலாம்.

நச்சு எதிர்ப்பானாக செம்பருத்தி பூ - Hibiscus flower extract as antitoxin

ஹைபிஸ்கஸ் சப்டாரிஃபா -வின் தாவரச் சாறுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் வெளிப்பாடு காரணமாக உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையின் அளவு குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில், மனிதர்களில் கட்டுப்படுத்தப்படும்  செம்பருத்தி மலர் சாறு அளவை எடுத்து கொள்ளப்படும் போது  யூரிக் அமிலம், டார்ட்ரேட், கால்சியம், சோடியம், சிட்ரேட், பொட்டாசியம், கிரியேட்டினின் மற்றும் பாஸ்பேட் போன்ற நச்சு கலவைகளின் செறிவு  சிறுநீர் உற்பத்தியை (டையூரிடிக்) அதிகரிப்பதன் காரணமாக உடலில் இருந்து குறைக்கப்படும் விளைவு கண்டறியப்பட்டது

உடல் பருமனுக்காக செம்பருத்தி பூ சாறு - Hibiscus flower extracts for obesity

ஹைபிஸ்கஸ் சப்டரிஃபா வகையின் மலர் சாற்றில் உடல் பருமன் மற்றும் அது தொடர்புடைய கோளாறுகளை எதிர்த்துப் போராடுவதற்கான மகத்தான ஆற்றல் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இந்த தாவரத்தின் பூக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும்  பாலிபினால்கள் எனப்படும் உயிரியக்க சேர்மங்கள்,  சில செரிமான நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் மீது செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாலிபினால்கள் செயல்படுவதால் வளர்சிதை மாற்றத்தின் செயல்திறனை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்த முடிந்தது.

பாலிபினால்களின் இந்த பண்புகள் உடல் பருமனைக் குறைப்பதற்கும், இதன் விளைவாக ஏற்படுகின்ற சீர்குலைவுகளை சரி செய்வதற்கும் முக்கியமாக பங்களிக்கின்றன. நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உடல் பருமன் மற்றும் அதனை ஒத்த கோளாறுகள் கொண்ட நோயாளிகளுக்கு  ஹைபிஸ்கஸ் சப்டரிஃபா-வில் இருந்து எடுக்கப்பட்ட பாலிபினால்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த நோயாளிகளில், உடல் பருமனுக்கு காரணமாக இருக்கும் காரணிகளில் ஒன்றான விஷத்தன்மை அழுத்தம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்து இருந்தது. 

வயிற்றுப்போக்குக்கு செம்பருத்தி மலர்கள் - Hibiscus flower extract for diarrhoea

பாரம்பரியமாக, ஜப்பான், ஹைட்டி மற்றும் மெக்ஸிகோ, ஆகிய நாடுகளில் ஹைபிஸ்கஸ் ரோசா- சினென்சிஸ் மலர்கள் மற்றும் இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுகடுப்பு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு செம்பருத்திகளில் இருந்து பெறப்பட்ட சாறு ஆண்டிமைக்ரோபயல்யாக செயல்படும். இதனால், வயிற்றுப்போக்குக்கு திறம்பட சிகிச்சையளிக்க இந்த சாறு பயன்படுத்தப்படலாம். இருப்பினும், ஆயுர்வேத பயிற்சியாளருடன் கலந்தாலோசித்த பிறகே இந்த சாறு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 

(மேலும் வாசிக்க - வயிற்றுப்போக்கு சிகிச்சை)

சரியான வளர்ந்து வரும் நிலைமைகளுக்கு ஏற்றவாறு செம்பருத்தி உடனடியாக பயிரிடப்படலாம். வீட்டில் செம்பருத்தி  செடி வகைகளை வளர்ப்பதற்கும் அதன் வளர்ச்சியை பராமரிப்பதற்கும் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 • பொது நிலைமைகள்: செம்பருத்தி உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் வளரக் கூடியது. செம்பருத்தி  செடி வளர்ப்பதற்கு ஒரு சிறந்த நிலைமையாக சூரிய ஒளி மற்றும் ஈரப்பதமான சூழல்களின் சிறந்த கலவை தேவை. வெப்பநிலை, சூரிய ஒளி மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகளின் வெவ்வேறு வகைகள் தேவைப்படுகின்றன, இதன் விளைவாக உகந்த வளர்ச்சி ஏற்படுகிறது.
   
 • மண்ணின் தரம்: செம்பருத்தி வளர வேண்டும் என்றால் மண்ணின் தரம் நன்கு இருக்க வேண்டும். மண் நன்கு உழப்பட்டு மற்றும் ஈரப்பதம் நிறைய கொண்டிருக்க வேண்டும். மண் கரிம சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
   
 • பருவ காலம்: செம்பருத்தி வளர சிறந்த பருவம் கோடை, வசந்தம் அல்லது இலை உதிற்காலம் ஆகியன. வேர் விட்ட பின் வெட்டுவது செடியை கடினமானதாக வைத்திருந்து கிளைகளை தாங்க அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகு கிள்ளி விடுவதன் மூலம் இளம் தாவரங்கள் உரு பெற தொடங்கும். மற்றும் இது மொட்டுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் அடர்த்தியை தீர்மானிக்க முக்கியமானது.
   
 • வளர்ச்சி கட்டுப்பாட்டு அமைப்புகள்: விரும்பிய விரும்புகிற தாவர  உற்பத்தியின் தன்மையை பொறுத்து, அந்த தாவரம் தேவையான உயரத்தை அடைந்தவுடன், தாவர வளர்ச்சி கட்டுப்பாட்டு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

செம்பருத்தி செடி பராமரிப்பு

செம்பருத்தி செடியின் வளர்சிக்கு தொடர்ந்து ஈரப்பதமுள்ள மண் தேவைபடுகிறது. அத்தகைய நிலை இல்லாவிடில் செடிக்குத் தண்ணீர் அடிக்கடி ஊற்ற வேண்டும், இல்லாவிடில் செடி பட்டு போய் விடும். தண்ணீருடன் சேர்த்து கரிம தழைக்கூளம் போட்டு செடியை பாதுகாக்கலாம். இது களைகள் வளராமல் தடுக்கவும் மற்றும் தாவர நூற்புழுக்களை கட்டுப்படுத்தும் உதவும். செடியின் அளவை பராமரிக்க தாவரங்கள் அவ்வப்போது நறுக்கிவிடப்பட வேண்டும். குளிர்காலத்தில், செம்பருத்தி செடிக்கு கடுமையான கத்தரிப்பு தேவைப்படுகிறது. பூச்சிகளால் கடுமையான தொற்று ஏற்பட்டால், பூச்சிக்கொல்லி சோப்புகள் அல்லது தோட்டக்கலை சோப்புகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹599  ₹850  29% OFF
BUY NOW

செம்பருத்தி  மலரின் சாறில் தினசரி வாழ்க்கையில் பல பயன்கள் கொண்டிருக்கும் பல மதிப்புமிக்க பண்புகள் உள்ளன. இருப்பினும், சில மக்களுக்கு, சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. அத்தகைய பக்க விளைவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

 • ஹைபோடென்ஷன் (குறைந்த இரத்த அழுத்தம்) கொண்ட நோயாளிகள் செம்பருத்தியை எடுத்துக்கொள்ளும் போது ஆரோக்கியத்தில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். சிலருக்கு இதயத்தில் படபடப்புடன் சேர்த்து, தலைவலி, குமட்டல் போன்றவை கூட ஏற்படலாம் . நீங்கள் மேலேயுள்ள எந்தவொரு அறிகுறியையாவது அனுபவித்திருந்தால், ஹைபிஸ்கஸைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். 
   
 • ஹைபிகஸ் பூக்களில் அதிகளவு அலுமினிய உள்ளடக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உயர் அலுமினியம் உட்கொள்ளல் குறிப்பாக சிறுநீரக பிரச்சினைகள் நோயாளிகளுக்கு அதன் படிவுக்கு வழிவகுக்கும். அலுமினியம் கர்ப்பகாலத்தின் சிசுவின் வளர்ச்சிக்கும், பல நரம்பு கோளாறுகளுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 
   
 • சில நபர்களில், ஹைபிஸ்கஸ் பயன்பாடு சில ஒவ்வாமை விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படுமானால், செம்பருத்தி  மலர்கள் கொண்ட தேநீரை உட்கொள்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மேலும் ஒவ்வாமை மோசமடைவதை தடுக்க ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். 

 


Medicines / Products that contain Hibiscus

மேற்கோள்கள்

 1. María Herranz-López et al. Multi-Targeted Molecular Effects of Hibiscus sabdariffa Polyphenols: An Opportunity for a Global Approach to Obesity. Nutrients. 2017 Aug; 9(8): 907. PMID: 28825642
 2. McKay DL, Chen CY, Saltzman E, Blumberg JB. Hibiscus sabdariffa L. tea (tisane) lowers blood pressure in prehypertensive and mildly hypertensive adults. J Nutr. 2010 Feb;140(2):298-303. PMID: 20018807
 3. Frankova A et al. In Vitro Digestibility of Aluminum from Hibiscus sabdariffa Hot Watery Infusion and Its Concentration in Urine of Healthy Individuals.. Biol Trace Elem Res. 2016 Dec;174(2):267-273. Epub 2016 Apr 23. PMID: 27107884
 4. Shivananda Nayak B, Sivachandra Raju S, Orette FA, Chalapathi Rao AV. Effects of Hibiscus rosa sinensis L (Malvaceae) on wound healing activity: a preclinical study in a Sprague Dawley rat. Int J Low Extrem Wounds. 2007 Jun;6(2):76-81. PMID: 17558005
 5. Adhirajan N, Ravi Kumar T, Shanmugasundaram N, Babu M. In vivo and in vitro evaluation of hair growth potential of Hibiscus rosa-sinensis Linn. J Ethnopharmacol. 2003 Oct;88(2-3):235-9. PMID: 12963149
Read on app