1. ஓமம், எகிப்தை சேர்ந்த ஒரு மசாலா பொருள், ஆனால் இன்று, இந்திய துணைக்கண்டத்தின் மிகவும் பொதுவான சுவையூட்டும் பொருட்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. ஓமத்தின் கசப்பு சுவை அவ்வப்போது கறிவேப்பிலையின் சுவையோடு ஒப்பிடப்படுகிறது. இது, அந்த இரண்டு மூலிகைகளும், தைமோல் என அறியப்படும் ஒரு வேதியியல் உட்பொருளை பொதுவாகக் கொண்டிருக்கும் தன்மையின் காரணமாக ஏற்படுகிறது. நீங்கள் இந்த இரண்டு மூலிகைகளையும் ஒப்பிட்டால், ஓமத்தின் சுவையானது, கறிவேப்பிலையின் சுவையை விட மிக அதிகமான காரத்தைக் கொண்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இருந்த போதிலும், இந்த இரண்டு மூலிகைகளுமே, சமையலறை அலமாரிகளில் தங்களுக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றன.

நீங்கள், உங்கள் சொந்த வீட்டு நிவாரணிகளைத் தயாரிப்பதை மிகவும் விரும்புபவராக இருந்தால், ஓமம் சுவையூட்டும் ஒரு பொருளாக மட்டும் அல்லாமல், கூடவே அது ஏராளமான மருத்துவ பண்புகளையும் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்து இருப்பீர்கள். பாரம்பரியமாக ஓமம், வாயு, அதிக அமில சுரப்பு, மற்றும் வயிற்று பிடிப்புகள் போன்ற மிகவும் வழக்கமான இரைப்பை பாதை பிரச்சினைகளுக்கான, உடனடித் தீர்வு அளிக்கும் ஒரு மூலிகையாக இருக்கிறது. ஓமத் தண்ணீர், நன்கு அறியப்பட்ட ஒரு பால் சுரப்பு ஊக்குவிப்பானாக (பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது) இருக்கிறது. மற்றும் அது, உடல் எடைக் குறைப்புக்கான மிகவும் பிரபலமான ஒரு நிவாரணியாக இருக்கிறது.

ஓம செடி, ஒரு ஓராண்டு மூலிகைத் தாவரம் ஆகும். அதாவது, அது ஒவ்வொரு வருடமும் மறுநடவு செய்யப்பட வேண்டும். இந்த செடியின் வழக்கமான சராசரி உயரம், சுமார் 60 மீட்டர்கள் முதல் 90 மீட்டர்கள் வரை இருக்கிறது. ஓம செடியின் தண்டுகள் மேற்பரப்பில் (இணை கோடுகள்) வரிப்பள்ளங்களை கொண்டிருக்கின்றன, மேலும் ஓம இலைகள், நாம் மறக்க இயலாத ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டு இருக்கின்றன. சிறிய ஓம மலர்கள், கிளைகளின் முனையில் கொத்து கொத்தாகப் பூக்கின்றன.

ஓம விதைகள், நிறத்தில் பச்சையில் இருந்து பழுப்பு நிறம் வரை இருக்கிறது, மேலும் அவை மேற்பரப்பில் தெளிவான வரிப்பள்ளங்களைக் கொண்டிருக்கின்றன.

உங்களுக்குத் தெரியுமா?

சில பழமையான கலாச்சாரங்கள், ஓமத்தை உங்களுடன் வைத்திருப்பது, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நல் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்புகின்றன.

ஓமத்தைப் பற்றிய சில அடிப்படைவிவரங்கள்:

  • தாவரவியல் பெயர்: ட்ராஸிஸ்பெர்மம் அம்மி
  • குடும்பம்: அபியசியயி
  • பொதுவான பெயர்கள்: ஓமம், ஓம விதைகள்
  • சமஸ்கிருதப் பெயர்கள்: அஜெமோடா, யாமினி
  • பயன்படும் பாகங்கள்: விதைகள்
  • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: ஓமம், எகிப்தை சேர்ந்த ஒன்று, ஆனால் அது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், முக்கியமாக மத்தியப் பிரதேசம், குஜராத், பீஹார், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது
  • ஆற்றலியல்: வெப்பமூட்டுதல்.
  1. ஜலதோஷத்துக்காக ஓமம் - Ajwain for cold in Tamil
  2. ஓமத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் - Ajwain antimicrobial properties in Tamil
  3. மாதவிடாய் கால தசைப்பிடிப்புகளுக்காக ஓமம் - Ajwain for menstrual cramps in Tamil
  4. கொழுப்பு அளவுகளுக்காக ஓமம் - Ajwain for cholesterol in Tamil
  5. வயிற்றுப் புழுக்களுக்காக ஓமம் - Ajwain for stomach worms in Tamil
  6. ஒரு நாளுக்கு எவ்வளவு ஓமம் எடுத்துக் கொள்ளலாம் - How much ajwain can be taken per day in Tamil
  7. ஓமத்தின் பக்க விளைவுகள் - Ajwain side effects in Tamil
  8. மூட்டழற்சிக்காக ஓமம் - Ajwain for arthritis in Tamil
  9. ஓமத்தின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு திறன்கள் - Ajwain antioxidant potential in Tamil
  10. ஒரு இரத்த மெலிதாக்கியாக ஓமம் - Ajwain as a blood thinner in Tamil
  11. குழந்தைகளுக்காக ஓமத் தண்ணீர் - Ajwain water for babies in Tamil
  12. முடிக்காக ஓமம் - Ajwan for hair in Tamil
  13. ஓமத்தை எவ்வாறு பயன்படுத்துவது - How to use ajwain in Tamil
  14. ஆஸ்துமாவுக்காக ஓமம் - Ajwain for asthma in Tamil
  15. இருமலுக்காக ஓமம் - Ajwain for cough in Tamil
  16. பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓமம் - Ajwain for nursing mothers in Tamil
  17. கர்ப்ப காலத்தின் போது ஓமம் - Ajwain during pregnancy in Tamil
  18. உடல் எடைக் குறைப்புக்காக ஓமம் - Ajwain for weight loss in Tamil
  19. மலச்சிக்கலுக்காக ஓமம் - Ajwain for constipation in Tamil
  20. வயிற்றுப்போக்குக்காக ஓமம் - Ajwain for diarrhea in Tamil
  21. வயிற்று வலிக்காக ஓமம் - Ajwain for stomach pain in Tamil
  22. வாயுவுக்காக ஓமம் - Ajwain for gas in Tamil
  23. செரிமானத்துக்காக ஓமம் - Ajwain for digestion in Tamil
  24. ஆரோக்கியத்துக்கான ஓமத்தின் நன்மைகள் - Ajwain benefits for health in Tamil

ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப் படி, ஓமம் உடலில் பித்தத்தை அதிகரிக்கிறது. அதாவது அது உடலை ஆற்றலுடன் வெப்பப்படுத்துகிறது. அதனால் அது, ஜலதோஷத்தின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவக் கூடும். இருப்பினும், ஓமத்தின் நன்மைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஒரு மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

(மேலும் படிக்க: ஜலதோஷத்துக்கான  சிகிச்சை)

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

தற்போதைய காலகட்டத்தில், நுண்ணுயிரிகளுக்கு எதிரான சிகிச்சையில் இருக்கக் கூடிய முக்கியமான பிரச்சினை என்னவென்றால், நுண்ணுயிரெதிர்ப்பு மருந்தை எதிர்க்கும் திறன் கொண்ட நுண்ணுயிரிகளின் அதிக அளவிலான பெருக்கமே ஆகும். ஒருவேளை நீங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ள அவற்றைப் பின்பற்றுபவராக இருந்தால், எம்.ஆர்.எஸ்., வி.ஆர்.எஸ். மற்றும் எம்.டி.ஆர். டியுபர்குளோசிஸ் போன்ற பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பது, மிகவும் வழக்கமானதாக மாறி இருக்கிறது. தற்போதைய தலைமுறை மருந்துகளுக்கு மாற்றாக, சிறந்த மாற்று மருந்துகளின் ஒரு அதிகரிக்கின்ற மற்றும் உடனடியான தேவை நிலவுகிறது. நுண்ணுயிர் மருந்து எதிர்ப்பு உயிரிகளின் அதிகரிப்பை நிறுத்துகின்ற, அல்லது தாமதப்படுத்துகின்ற ஒன்று மிகவும் விரும்பத்தத்தக்கதாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற இயற்கையான பொருட்கள், இந்த நுண்ணுயிரிகளுடன் இணைந்து அவையும் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கின்றன. எனவே அவற்றுக்கு எதிராக இவற்றால் ஒரு வலுவான எதிர்ப்பினை உருவாக்குவது கடினமாக இருக்கிறது. ஓம விதைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வக்ரோல் ஆகியவை ஒரு திடமான நுண்ணுயிர் எதிர்ப்பு திறனைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வக அடிப்படையிலான சோதனைகள் ஓமம், அம்பிஸிலின் மற்றும், இரும்புச்சத்து மற்றும் தாமிரச்சத்துடன் இணைந்த கூட்டு சிகிச்சையில், ஒரு குறிப்பிடத்தக்க நுண்ணயிர் எதிர்ப்பு செயல்பாட்டினை வெளிப்படுத்துகிறது.

மாதவிடாய் தசைப்பிடிப்புகள் என்பவை, சில பெண்களுக்கு ஏற்படும் தொல்லைமிகுந்த மற்றும் மறுபடி மறுபடி ஏற்படுகின்ற ஒரு பிரச்சினை ஆகும். இவை, அவர்களின் மாதவிடாய் சுழற்சியில், சரியாக மாதவிடாய் ஏற்படும் முன்னர் அல்லது மாதவிடாய் காலத்தின் பொழுது, அடிவயிற்றில் ஏற்படும் வலியினைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. நார்க்கழலை கட்டிகள் மற்றும் பி.சி..எஸ் ஆகிய பிரச்சினைகள் இந்த பிரச்சினைக்குக் காரணமாக இருக்கின்ற வேளையில், அடிக்கடி அது, உடற்பயிற்சி இன்மை மற்றும் தனிநபரின் உடலியல் கூறுகளின் காரணங்களால், தசைகளின் பிடிப்புடன் தொடர்புடையதாக இருக்கிறது. முன் மருத்துவ ஆய்வுகள் ஓம விதைகளை, தசைவலி குறைப்பு நன்மைகளுடன் தொடர்புடையவையாகக் கூறுகின்றன. அதாவது, ஓம விதைகளை எடுத்துக் கொள்வது, அடிவயிற்றில் ஏற்படும் தசைப் பிடிப்பிலிருந்து நிவாரணம் அளித்து, மாதவிடாய் வலிகளைப் போக்குகிறது என்பதாகும். இந்த தளத்தில் மருத்துவ ஆய்வுகள் இன்னமும் நடந்து கொண்டு இருக்கின்றன. எனவே, மாதவிடாய் காலத்தின் போது ஓம விதைகளின் நன்மைகள் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு பற்றி அறிந்து கொள்ள, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிகவும் விரும்பத்தக்கது ஆகும்.

ஆய்வு முடிவுகள், ஓமம் ஒரு திடமான ஹைப்போலிபிடெமிக் (உடல் கொழுப்பைப் குறைக்கிறது) எனத் தெரிவிக்கின்றன. விலங்குகள் மீதான ஒரு ஆய்வில், ஓம விதைகள் மற்றும் மெதனோலிக் உட்பொருட்களை எடுத்துக் கொள்வது, உடலில் உள்ள குறை - அடர்த்தி கொழுப்பு அளவுகளையும் மற்றும் பிற ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகின்றன என கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், செயல்பாட்டின் சரியான செயல்படும் முறை மற்றும் எடுத்துக் கொள்ளும் அளவு ஆகியவை பற்றி, மருத்துவ சூழ்நிலைகளில் ஆய்வுகள் செய்யப்படாமல் இருக்கின்றன. எனவே, ஓமத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு மிதமான போக்கைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹799  ₹850  6% OFF
BUY NOW

ஓமம், இரைப்பை பாதையில் இருக்கும் புழுக்களுக்கு எதிரான, முக்கியமான ஆயுர்வேத நிவாரணிகளில் ஒன்றாக நீடிக்கிறது. ஆயுர்வேத மருத்துவர்கள், வயிற்றுப் புழுக்களுக்கு சிகிச்சை அளிக்க ஓம கஷாயத்தைப் (ஓம சாறு) பரிந்துரைக்கின்றனர். மேலும் அவர்கள் ஓம கஷாயம், குறிப்பாக கொக்கிப்புழு நோய்த்தொற்றுக்களுக்கு எதிராகத் திறன்மிக்கதாக இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.

ஆயுர்வேதத்தின் இந்தக் கூற்றினை பரிசோதிக்க ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அவற்றில் ஏறத்தாழ அனைத்து ஆய்வுகளுமே, ஓம விதைகளின் ஒட்டுண்ணிப் புழுவுக்கு எதிரான குணங்களை உறுதி செய்கின்றன. ஆய்வக அடிப்படையிலான சோதனைகள் ஓமம், படர்தாமரைக்கு எதிரான மிகவும் திறன் வாய்ந்த காரணி எனத் தெரிவிக்கின்றன.

ஒரு அடுத்தகட்ட ஆய்வில் ஓம விதைகள், வயிற்றுப்புழுக்களின் உடல்களில் உள்ள செல்களுக்கு இடையேயான சில சமிக்ஞைகளைத் தடை செய்வதன் மூலமாக, அவற்றைக் கொல்ல உதவுவதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், ஓம விதைகள் மிகச் சிறந்த கோலினெர்ஜிக் ஆக இருப்பதாகவும், அவை குடல்களின் பெரிஸ்டால்டிக் இயக்கத்தை அதிகரிப்பதாகவும், அதன் மூலம் இரைப்பை பாதையில் இருந்து புழுக்களை விரைவாக மற்றும் எளிதாக வெளியேற்ற வழிவகுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, ஒரு நாளைக்கு 2 கிராம்கள் அளவுக்கு ஓம விதைகளை, பெரிய பக்க விளைவுகள் ஏதும் இன்றி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஓம விதைகளை, அதன் ஆரோக்கியமளிக்கும் நன்மைகளுக்காக எடுத்துக் கொள்ள விரும்பினால், உங்கள் பிரச்சினைக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவினை அறிந்து கொள்ள, ஒரு மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

  • ஓம விதைகள் நன்கு அறியப்பட்ட ஒரு கருக்கலைப்புக் காரணி ஆகும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் இந்த மூலிகையைத் தவிர்க்க வேண்டும் என திடமாக அறிவுறுத்தப்படுகின்றனர்.
  • ஆயுர்வேதத்தின் கூற்றுப் படி, ஓமம் உடலின் மீது ஒரு வெப்பமூட்டும் விளைவை கொண்டிருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு வெப்ப உடல் அமைப்பைக் கொண்டு இருந்தால், ஓமத்தை எடுத்துக் கொள்ளும் போது மிதமான போக்கைக் கடைப்பிடிப்பது நல்லது.
  • குழந்தைகள் ஓமம் எடுத்துக் கொள்ளும் அளவினைப் பற்றி பெரிய அளவில் ஒன்றும் தெரியவில்லை. எனவே, உங்கள் குழந்தை எடுத்துக் கொள்ள வேண்டிய ஓமத்தின் அளவைத் தீர்மானிக்க, உங்கள் மருத்துவரிடம் கேட்பது மிகவும் நல்லது.
  • ஓமம் ஒரு இரத்த மெலிதாக்கி என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக இருந்தால், அல்லது இரத்த மெலிதாக்கி மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், ஓமத்தை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
  • ஓம விதைகள், ஒரு முக்கிய வேதியியல் உட்பொருளாக தைமோலைக் கொண்டிருக்கின்றன. தைமோல், சில நபர்களுக்கு மெலிதான தோல் எரிச்சலுக்கு காரணமாக இருப்பதாக அறியப்படுகிறது. மேலும் அதே நபர்களுக்கு, அளவுக்கு அதிகமாக தைமோல் எடுத்துக் கொள்வது, கிறுகிறுப்பு, குமட்டல், மற்றும் வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, ஓமத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹719  ₹799  10% OFF
BUY NOW

விட்ரோ ஆய்வுகள், ஓம விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஆல்கஹால் மற்றும் நீர்ம மூலக்கூறுகள், திடமான அழற்சி எதிர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்துகின்றன என தெரிவிக்கின்றன. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையானது, முடக்கு வாத மூட்டழற்சியில் ஏற்படும் கிழிதல் மற்றும் தேய்மானத்துக்குப் பொறுப்பான காரணிகளில் ஒன்று ஆகும். இந்தக் காரணியைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, மூட்டழற்சி கொண்ட மாதிரி விலங்குகள் மீது, ஓமத்தின் ஆக்சிஜனேற்ற பண்புகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் ஓமம் எடுத்துக் கொள்வது, மூட்டழற்சியின் அறிகுறிகளைப் போக்குவதில் சில பயன்மிக்க விளைவுகளைக் கொண்டிருக்கிறது எனக் கண்டறியப்பட்டு இருக்கிறது. இருப்பினும், மனிதர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகளைப் பற்றி அதிகம் கூறப்படவில்லை.

(மேலும் படிக்க: மூட்டழற்சி அறிகுறிகள்)

ஓம விதைகளின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு திறனை பரிசோதிக்க, எண்ணற்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்த அனைத்து ஆய்வக சோதனைகளும், ஓமம் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு திறனைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றன. பசுமை மருத்துவத்துக்கான சர்வதே நாளேட்டில் வெளியிப்பட்டுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, ஓம விதைகளில் இருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெய் ஒரு மிகச்சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும். மருத்துவயியல் மற்றும் தாவர வேதியியல் நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு கட்டுரை, உறைந்த ஓம விதைகள், புதிய ஓம விதைகளுடன் ஒப்பிடும் பொழுது, அதிக திறன் வாய்ந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாட்டினைக் கொண்டிருக்கின்றன எனக் குறிப்பிடுகிறது. மேலும் அந்த ஆய்வு, இந்த மூலிகையின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு திறனானது, அதன் விதைகளில் உள்ள ஃபெனோலிக்ஸ் மூலக்கூறின் நேரடியான காரணமாக இருக்கிறது எனக் கூறுகிறது.

ஆய்வக மற்றும் விலங்குகள் அடிப்படையிலான ஆய்வுகள், ஓமம் இயற்கையான ஒரு இரத்த மெலிதாக்கி எனக் குறிப்பிடுகின்றன. விவோ ஆய்வுகளில் உள்ள கூற்றின் படி, ஓமத்தின் செயல்பாட்டின் செயல்படும் முறை, மிகவும் வழக்கமான இரத்த உறைவு எதிர்ப்பு மருந்தான வார்ஃபரின் செயல்படும் முறையோடு மிகவும் ஒத்ததாக இருக்கிறது. ஆனால், மனிதர்களின் இரத்தம் கட்டி சேரும் காரணிகள் மீதான ஓமத்தின் விளைவுகள் பற்றி, இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே, ஓமத்தின் இந்த குறிப்பிட்ட நனமையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, உங்கள் மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லது ஆகும்.

ஓமத் தண்ணீர், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வாயு மற்றும் ஜலதோஷத்தின் அறிகுறிகளில் இருந்து விடுபட, ஒரு பிரபலமான நிவாரணி ஆகும். அது ஆயுர்வேதத்தில், ஒரு வெப்பமூட்டும் மூலிகையாகக் கருதப்படுகிறது மற்றும் விவோ ஆய்வுகள், வாயு மற்றும் வயிற்றுப் பொருமலில் இருந்து நிவாரணமளிக்கும் ஓமத்தின் திறனைப் பற்றி குறிப்பிட்டு இருக்கின்றன. ஆனால், சிசுக்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முறையான அளவுகள் பற்றிய, மருத்துவரீதியிலான ஆய்வுகள் இதுவரை இல்லை. ஆகவே, உங்கள் குழந்தையின் நலனின் மீதுள்ள அக்கறையினால், உங்கள் குழந்தைக்கு ஓமத் தண்ணீர் அளிக்கும் முறையான அளவைப் பற்றி அறிய, உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் கேட்பது மிகவும் நல்லது ஆகும்.

இன்றைய நாட்களின் பரபரப்பான மற்றும் அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில், முடிக்காக சிறப்பு கவனிப்புக்கான நேரம் எடுத்துக் கொள்வது மிகவும் கடினமானது ஆகும். அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், உங்களக்கு பளபளப்பான தோற்றம் கொண்ட முடிகளை வழங்கலாம், ஆனால், நோய்த்தொற்றுக்கள் மற்றும் உச்சந்தலை பிரச்சினைகள் என்று வரும் பொழுது, பெரும்பாலும் அவை அந்த அளவுக்கு பயன்மிக்கதாக இருப்பது கிடையாது. அதோடு சேர்ந்து, அதிகரிக்கும் மாசுக்களையும் மற்றும் அதன் மூலம் ஏற்படும் வழக்கமான நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுக்களையும் தவிர்ப்பது, கிட்டத்தட்ட முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, முடியில் ஏற்படும் பூஞ்சை தொற்று மற்றும் சரும நோய்த்தொற்றுக்கள் ஆகியவை, குறிப்பாக வெப்பமண்டல பகுதிகளின் சூடு மற்றும் வெப்பத்தில், மிகவும் விரைவாகப் பரவுகின்றன. அத்துடன் சேர்ந்து, மருந்தினை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நுண்ணுயிரிகளின் அதிகரிப்பு, இந்த வழக்கமான நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதை உண்மையிலேயே மிகவும் கடினமானதாக ஆக்குகிறது.

ஆய்வுகள் ஓமம், அஸ்பெர்கில்லஸ்- க்கும் மற்றும், ஒரு வழக்கமான சரும மற்றும் முடி பூஞ்சை தொற்றான ட்ரிகோபைடோன்- க்கும் எதிராக, ஒரு திடமான பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றன. அது போன்ற ஒரு ஆய்வில் ஓமம், ஒரு நன்கு அறியப்பட்ட பூஞ்சை எதிர்ப்பு மருந்துடன் இணைந்து பயன்படுத்தப்பட்டது. அதில், இந்த பூஞ்சையின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் குறைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

மேலும், ஓமம் ஒரு மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும். எனவே அது, உங்கள் முடியை பளபளப்பாக்கவும் மற்றும் புற ஊதாக்கதிர்களினால் ஏற்படும் பாதிப்பினைக் குறைக்கவும் உதவக் கூடும்.

ஓம விதைகள், ஒரு சுவையூட்டும் பொருளாக அல்லது மசாலாப் பொருளாக பல்வேறு சமையல் முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மசாலாவின் காய்ந்த மற்றும் வறுக்கப்பட்ட இரண்டு வடிவங்களுமே அவற்றின் காரமான சுவைக்காக உலகம் முழுவதும் விரும்பப்படுகின்றன. உங்களுக்கு ஓமத்தை நறநறவென்று கடித்து மெல்வது பிடிக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதுமே ஓம பொடியை ஒரு மாற்று பொருளாகப் பயன்படுத்திக் கொள்ள இயலும்.

உங்கள் உணவில் ஓமத்தை சேர்ப்பதற்கான மற்றொரு வழி, ஓம எண்ணெய் மற்றும், பற்பசை மற்றும் நறுமண எண்ணெய்கள் போன்ற மற்ற பொருட்களைப் பயன்படுத்துவது ஆகும். இவற்றைத் தவிர, ஓம விதைகள், அதன் மெல்லிய கசப்பு சுவைக்காக பிஸ்கட்டுகள், நொறுக்குத் தீனிகள், ரொட்டி போன்ற பல்வேறு இனிப்பு வகைகளிலும் மற்றும் சோப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஓம அத்தியாவசிய எண்ணெய், அதன் குணமளிக்கும் நன்மைகளுக்காக நறுமண சிகிச்சையில் மிகவும் உயர்வான இடத்தைப் பிடித்து இருக்கிறது.

இதற்கும் மேலாக, ஓம வில்லைகள் மற்றும் மாத்திரைகளும் கூட, சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

எவ்வாறு ஓமத் தேநீர் தயாரிப்பது

ஓமத் தேநீர் என்பது, உலர்ந்த ஓம விதைகளில் இருந்து தயாரிக்கப்படும், ஆரோக்கியத்தை அதிகரிக்கக் கூடிய மிகவும் வழக்கமான பொருட்களில் ஒன்று ஆகும். ஓமத் தேநீர் வீட்டிலேயே தயாரிப்பதற்கான ஒரு எளிமையான குறிப்பை இப்போது நாம் காணலாம்:

  • ஒரு கோப்பையில் சில ஓம விதைகளை எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து, பிறகு அந்த வெந்நீரை ஓம விதைகள் உள்ள கோப்பையில் ஊற்றவும்.
  • அதை 5 நிமிடங்களுக்கு அப்படியே ஆற விட்டு விடவும். ஒரு பொன்னிறம் கலந்த மெல்லிய பழுப்பு நிறத்துக்கு, தண்ணீரின் நிறம் மாறுவதை நீங்கள் காணலாம்.
  • 5-6 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் தேநீர் எவ்வளவு திடமாக இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, தண்ணீரினை வடிகட்டவும்.
  • நீங்கள் அதனை சூடாக, அல்லது சிறிது நேரம் ஆற விட்டு அருந்தலாம்.

நீங்கள் அதில் சர்க்கரை சேர்க்காமல் இருப்பது விரும்பத்தக்கது. நீங்கள் உங்கள் தேநீர் சிறிதளவு இனிப்பாக இருப்பதை விரும்பினால், எப்போதும் நீங்கள் அதில் தேன் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தேநீரில் தேனைக் கலப்பது, சுவைக்கும் மேலாக, அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் உடல் எடைக் குறைப்பு நன்மைகளைக் கொண்டு, உங்களுக்கு ஒரு ஆரோக்கிய மேம்பாட்டையும் அளிக்கும்.

ஈரானில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு முடிவுகளின் படி, ஓமம் ஒரு திறன்மிக்க மூச்சுக்குழாய் தளர்த்தி ஆகும். இந்த ஆய்வில், ஆஸ்துமா நோயாளிகளைக் கொண்ட ஒரு குழுவுக்கு, மாறுபட்ட அளவுகளில் ஓமம் அல்லது ஒரு வழக்கமான ஆஸ்துமா எதிர்ப்பு மருந்து, ஒரு சீரற்ற அடிப்படையில் வழங்கப்பட்டன. மற்றொரு குழுவுக்கு மருந்தில்லா குளிகை வழங்கப்பட்டது. குறிப்பிட்ட கால அவகாசத்தின் முடிவில், ஓமம், அந்த வணிகரீதியான மருந்துக்கு இணையாக மூச்சுக்குழாயைத் தளர்த்தும் செயல்பாட்டினைக் கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. எனவே, ஆஸ்துமாவின் அறிகுறிகளுக்கு எதிராக, ஓமம் சில நன்மைகளைக் கொண்டிருக்கிறது என நாம் தயக்கமின்றி கூற முடியும். ஓமத்தை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

முன்-மருத்துவ ஆய்வுகள், ஓமம் ஒரு திறன்மிக்க இருமல் அடக்கி (இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது) எனத் தெரிவிக்கின்றன. மேலும் அந்த ஆய்வுகள், ஓமத்தின் இந்த இருமல் அடக்கும் விளைவு, ஓம சாறுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது, மிகவும் வெளிப்படையாகக் கவனிக்கப்பட்டது எனவும் தெரிவித்தன. மேலும், ஓமம் ஒரு திறன்மிக்க தசைவலி குறைப்பான் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அது தொண்டை சதைகளுக்கு இதம் அளிப்பதன் மூலம், இருமலைப் போக்க உதவக் கூடும். ஆனால், மருத்துவ ஆய்வுகள் இல்லாத காரணத்தால், ஓமத்தை இருமலுக்கான ஒரு நிவாரணியாக எடுத்துக் கொள்ளும் முன்னால், உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் நல்லது ஆகும்.

பாரம்பரியமாக ஓமம், மார்பக சுரப்பிகளில் இருந்து பால் சுரப்பதை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தேசிய பால்பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட விலங்குகள் மீதான ஒரு ஆய்வு, ஓமத் தண்ணீர் ஒரு திறன்மிக்க பால்சுரப்பு ஊக்குவிப்பான் எனக் குறிப்பிடுகிறது. மேலும் அந்த ஆய்வு ஓமம், உடலில் ஈட்ரோஜென்னைப் போல் செயல்படும் சில பைடெஸ்ட்ரோஜன்களை ( தாவரம் சார்ந்த ஈஸ்ட்ரோஜென்) கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்கள், ஓமத்தை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் பேசுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

நாட்டு மருத்துவத்தில் ஓமம், கருக்கலைப்பை ஏற்படுத்தக்கூடிய முக்கியமானவற்றில் ஒன்றாகப் பட்டியல் இடப்படுகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட மனிதர்கள் மீதான ஒரு ஆய்வில், கருவைக் கலைப்பதற்காக ஓம விதைகளைப் பயன்படுத்துவதற்கு, சுமார் 155 பெண்கள் ஒப்புக் கொண்டு இருந்தனர். அந்த ஆய்வில் இந்த மூலிகை, கருக்கலைப்பை ஏற்படுத்தக் கூடிய திறனை 100% கொண்டிருக்கவில்லை என்றும், ஆனால் கர்ப்ப காலத்தின் போது ஓமம் எடுத்துக் கொள்வது, பிறவிக் குறைபாடுகளுக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. விலங்குகள் மீதான ஆய்வுகள், கருவுக்கான ஓம விதைகளின் நச்சுத்தன்மை, அதன் கருவை ஊனமாக்கும் செயல்பாட்டின் அடிப்படையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப் படி, ஓமம் உணவை முறையாக செரிமானம் செய்வதில் உதவி செய்து, வாயு, வயிற்றுப் பொருமல் போன்ற செரிமானக் கோளாறுகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அத்துடன், ஓமத்தின் இந்த மூன்று பண்புகளும், உங்களுக்கு உடை எடையைக் குறைப்பதில் உதவக் கூடும். ஆனால், அது பசியையும் அதிகரிக்கிறது. அது, இந்த மசாலாவின் உடல் எடைக் குறைப்பு நன்மைகளோடு நேரடியாக முரண்பட்டதாக இருக்கிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள், ஓமத்தை உட்கொள்வது, உடல் எடைக் குறைப்பில் சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், மனிதர்கள் மீதான ஆய்வுகள் இல்லாத நிலையில், ஓமத்தை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லதாகும்.

ஓமத்தின் மலமிளக்கும் பண்புகள் மீது கவனத்தை செலுத்தி, மேற்கொள்ளப்பட்ட தனித்துவமான ஆய்வுகள் எதுவும் இல்லாத நிலையில் அது, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக மிகவும் விரும்பப்படும் நிவாரணிகளில் ஒன்றாக நீடிக்கிறது. சில ஆய்வக அடிப்படையிலான சோதனைகள், ஓமம், நமது செரிமானப் பாதையில் உணவு பயணிக்கும் நேரத்தைக் குறைப்பதோடு, கூடவே செரிமான செயல்பாட்டினையும் மேம்படுத்துகிறது எனத் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு பண்புகளும் சேர்ந்து ஓமத்தை, மலச்சிக்கலுக்கு மிகவும் விரும்பப்படும் ஒரு நிவாரணியாக ஆக்குவதற்கு காரணமாக இருக்கக் கூடும். ஆனால், ஒரு மலச்சிக்கல் நிவாரணியாக அதன் திறன் நிச்சயமாக உறுதி செய்ய செய்யப்படவில்லை. மலச்சிக்கலுக்காக ஓமத்தைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லது.

விவோ ஆய்வுகள், ஓமத்தின் ஆல்கஹால் மூலக்கூறுகளின் வயிற்றுப்போக்கு எதிர்ப்பு செயல்பாட்டினைக் குறிப்பிடுகின்றன. மேலும் அந்த ஆய்வுகள், இந்த வயிற்றுப்போக்கு எதிர்ப்பு பண்பானது, சபோனின்கள், ஃபுளோவோனாய்டுகள், ஸ்டெரோல்கள், மற்றும் டன்னின்கள் போன்ற உயிரிவேதியியல் மூலக்கூறுகளின் காரணமாக இருக்கலாம் எனக் கூறுகின்றன. இருப்பினும், மனிதர்கள் மீதான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால், ஓமத்தின் வயிற்றுப்போக்குக்கு எதிரான திறனை உறுதி செய்வது கடினமாக உள்ளது.

ஓமம், வயிற்று வலி மற்றும் வயிற்றுத் தசைப்பிடிப்புகளுக்காக மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் நிவாரணிகளில் ஒன்று ஆகும். ஆயுர்வேத மருத்துவர்கள், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற, ஓமம் மற்றும் இஞ்சி கலந்த ஒரு கலவையை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்கின்றனர். சமீபத்திய ஆய்வுகள் ஓமம், வயிற்றுத் தசைப்பிடிப்புகளை உறுதியாக குறைப்பதற்கு வழிவகுக்கும் வகையில், சுண்ணாம்பு சத்துப் பாதைகளைத் தடுக்கும் ஒரு கருவியாக செயல்படுகிறது எனக் குறிப்பிடுகின்றன. மேலும், ஓமத்தின் இந்தப் பண்பு, வயிற்றுப்போக்கின் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதில் உதவிகரமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

(மேலும் படிக்க: வயிற்று வலி)

பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவம் ஓமத்தை, வாயு மற்றும் வயிற்றுப் பொருமலுக்கு எதிரான, ஒரு மிகச் சிறந்த நிவாரணியாக ஏற்றுக் கொள்கின்றன. வாயுவுக்கான ஒரு பாரம்பரிய தயாரிப்பு, 500கி ஓம விதைகளை, 60கி கல் உப்பு, கருப்பு உப்பு மற்றும் பொடி உப்புக்களை 1:1:1 என்ற எடை விகிதத்தில் எடுத்து அவற்றுடன் கலப்பதன் மூலம் செய்யப்படுகிறது. வாயு, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற, இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி அளவு வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப்படி ஓமம், மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுவதன் மூலம், குடலில் ஏற்படும் வாயுவைக் குறைக்கவும் உதவுகிறது.

இரண்டு வேறுபட்ட விவோ ஆய்வுகளின் (அதாவது, விலங்குகள் மீதான ஆய்வுகள்) படி ஓமம், இரைப்பை அமில சுரப்பை அதிகரிக்கிறது மற்றும், வயிறு மற்றும் குடல்களில் உணவு பயணிக்கும் நேர அளவினைக் குறைக்கிறது. கூடுதலாக, ஓமம் எடுத்துக் கொள்வது பித்த நீர் சுரப்பையும் மற்றும் செரிமான நொதிகளின் சுரப்பையும் அதிகரிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனால் ஓமம், செரிமான நடைமுறையினை மேம்படுத்துவதற்கான ஒரு உறுதியான திறனைக் கொண்டிருக்கிறது. மருத்துவ ஆய்வுகள் ஏதும் இல்லாத காரணத்தால், மனிதர்கள் மீதான ஓமத்தின் அதே திறனை உறுதி செய்வது கடினமானதாக இருக்கிறது.

பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவத்தில், ஓமம் பல்வேறு பயன்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களுக்கான குணமளிக்கும் நன்மைகள் என்று வரும் பொழுது, இன்னமும் கூட அறிவியல்ரீதியாக அதிக அளவில் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இருந்தாலும், ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவம் கூறும் கூற்றுக்களை உறுதி செய்யும், ஏராளமான முன்-மருத்துவ ஆய்வுகள் இருந்து இருக்கின்றன. ஓமத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும் என்பதை இப்போது நாம் காணலாம்:

  • வயிற்றுக்காக ஓமம்: ஓம விதைகள் உங்கள் வயிற்றுக்கு ஒரு இதமளிக்கும் விளைவைக் கொண்டிருக்கின்றன, மற்றும் வயிற்று வலி, வாயு, வயிற்றுப் பொருமல்,வயிறு உப்புதல் மற்றும் செரிமானமின்மை உட்பட, பலவித வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஆயுர்வேதத்தின் கூற்றுப் படி, ஓம விதைகள் செரிமான நொதிகளின் சுரப்பினை அதிகரிப்பதால், அவை வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கலைக் கையாள்வதிலும் திறன்மிக்கவையாக இருப்பதாக அறியப்படுகின்றன.
  • உடல் எடைக் குறைப்பு மற்றும் கொழுப்பு அளவுகளைப் பராமரித்தலுக்காக ஓமம்: முக்கியமான செரிமான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதன் மூலம், ஓம விதைகள் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளப்படும் போது, உடல் எடைக் குறைப்பு மற்றும் கொழுப்பு அளவுகளைக் குறைப்பதிலும் கூட உதவுகின்றன.
  • பெண்களுக்காக ஓமம்: ஓமம் பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அதன் தசைபிடிப்புக்கு எதிரான பண்புகள், மாதவிடாய் கால வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன. பாலூட்டும் காலத்தில் ஓமத்தைப் பயன்படுத்துவது, பாலூட்டுவதற்காக பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் இந்த மூலிகை, கருக்கலைப்பு விளைவுகளைக் கொண்டு இருப்பதால், இதனைப் பயன்படுத்தும் முன்னர் கண்டிப்பாகப் போதுமான கவனம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
  • ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி மற்றும் அழற்சி எதிர்ப்பியாக ஓமம்: ஓமம், ஒரு பரவலான அளவில் நுண்ணுயிரிகளுக்கு எதிரான செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்பட்டு இருக்கிறது. எனவே தான் அது, வயிற்றுப் புழுக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் பயன்மிக்கதாக இருக்கிறது. அதன் ஆக்சிஜனேற்ற பண்புகள், அதனை உங்கள் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கான மிகச் சிறந்ததாக ஆக்குகின்ற வேளையில், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டழற்சி வலியைக் குறைக்க உதவுகின்றன.
  • சுவாசம் சார்ந்த ஆரோக்கியத்துக்காக ஓமம்: ஓம விதைகள், ஜலதோஷம், இருமல் மற்றும் ஆஸ்துமாவுக்கு நிவாரணம் அளிப்பதில் மிகவும் பயன்மிக்கதாக இருக்கின்றன.

Medicines / Products that contain Ajwain

மேற்கோள்கள்

  1. Ranjan Bairwa, R. S. Sodha, B. S. Rajawat. Trachyspermum ammi. Pharmacogn Rev. 2012 Jan-Jun; 6(11): 56–60. PMID: 22654405
  2. Boskabady MH, Jandaghi P, Kiani S, Hasanzadeh L. Antitussive effect of Carum copticum in guinea pigs. J Ethnopharmacol. 2005 Feb 10;97(1):79-82. Epub 2004 Dec 9. PMID: 15652279
  3. Boskabady MH, Alizadeh M, Jahanbin B. Bronchodilatory effect of Carum copticum in airways of asthmatic patients. Therapie. 2007 Jan-Feb;62(1):23-9. Epub 2007 Mar 21. PMID: 17374344
  4. Mohd Sajjad Ahmad Khan, Iqbal Ahmad, Swaranjit Singh Cameotra. Carum copticum and Thymus vulgaris oils inhibit virulence in Trichophyton rubrum and Aspergillus spp. Braz J Microbiol. 2014; 45(2): 523–531. PMID: 25242937
  5. Srivastava KC. Extract of a spice--omum (Trachyspermum ammi)-shows antiaggregatory effects and alters arachidonic acid metabolism in human platelets. Prostaglandins Leukot Essent Fatty Acids. 1988 Jul;33(1):1-6. PMID: 3141935
  6. Kostyukovsky M, Rafaeli A, Gileadi C, Demchenko N, Shaaya E. Activation of octopaminergic receptors by essential oil constituents isolated from aromatic plants: possible mode of action against insect pests.. Pest Manag Sci. 2002 Nov;58(11):1101-6. PMID: 12449528
  7. Tamura T, Iwamoto H. Thymol: a classical small-molecule compound that has a dual effect (potentiating and inhibitory) on myosin. Biochem Biophys Res Commun. 2004 Jun 4;318(3):786-91. PMID: 15144906
  8. Xu J, Zhou F, Ji BP, Pei RS, Xu N. The antibacterial mechanism of carvacrol and thymol against Escherichia coli. Lett Appl Microbiol. 2008 Sep;47(3):174-9. PMID: 19552781
  9. Marchese A. Antibacterial and antifungal activities of thymol: A brief review of the literature. Food Chem. 2016 Nov 1;210:402-14. PMID: 27211664
Read on app