யுரேத்ரிடிஸ் - Urethritis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 14, 2019

March 06, 2020

யுரேத்ரிடிஸ்
யுரேத்ரிடிஸ்

யுரேத்ரிடிஸ் என்றால் என்ன?

யுரேத்ராவில் அழற்சி ஏற்பட்டிருக்கும் நிலை யுரேத்ரிடிஸ் என அழைக்கப்படுகிறது.இது பெரும்பாலும் பாக்டீரியல் தொற்றின் காரணமாக ஏற்படக்கூடியது. சிறுநீர்ப்பையிலிருந்து யுரேத்ரா வரை சிறுநீரக குழாயிலிருக்கும் எந்த பகுதியிலும் இது பாதிப்பினை ஏற்படுத்துவதால் இது சிறுநீரக குழாய் தொற்று நோயிலிருந்து (யூ.டி.ஐ) வேறுபடுகின்றது. இந்த இரண்டு நோய்களின் அறிகுறிகளும் ஒரே மாதிரி இருப்பினும் இவை வெவ்வேறு சிகிச்சை முறைகளை கொண்டது. யுரேத்ரிடிஸ் என்பது அனைத்து வயதிற்குட்பட்டோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது, ஆனால் இந்நிலையால் ஆண்களை விட பெண்களே அதிக ஆபத்தில் உள்ளனர்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

சில பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

  • சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல்.
  • சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  • அடிவயிறு மற்றும் இடுப்பில் ஏற்படும் வலி.
  • காய்ச்சல்.
  • வீக்கம்.
  • உடலுறவின் போது உண்டாகும் வலி.
  • பெண்களுக்கு ஏற்படும் வெஜினல் வெளியேற்றம்.
  • ஆண்களுக்கு ஏற்படும் ஆண்குறி வெளியேற்றம்.
  • ஆண்களின் விந்தணுவுடன் வெளியேறும் இரத்தம் அல்லது சிறுநீர்.
  • ஆண்களுக்க ஆண்குறியில் ஏற்படும் அரிப்பு.
  • ஆண்களுக்கு வலியுடன் விந்து வெளிப்படுதல்.

பெண்களுக்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் மிகவும் தெளிவின்றி தோன்றலாம்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

யுரேத்ரிடிஸ் எனும் நிலை பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்றது, அவை பின்வருமாறு:

  • காயம்.
  • ஸ்பெர்மிசைட்ஸ் அல்லது கருத்தடை ஜெல்லிகள் மற்றும் ஃபோம் உபயோகப்படுத்துவதால் ஏற்படலாம்.
  • சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்றுகள்.
  • அடெனோவைரஸ்.
  • டிரிகோமோனாஸ் வாகினாலிஸ்.
  • எஷ்சரிச்சியா கோலி போன்ற யூரோபேதகென்ஸ்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவர் வீக்கம் அல்லது வெளியேற்றம் போன்ற சாத்தியமான குறைபாடுகளை சரிபார்க்க உடல் பரிசோதனை செய்ய நேரிடும். விரிவான வரலாற்றுடன் சேர்த்து, பின்வரும் சில சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன:

  • யூரேத்ராவை பரிசோதனை செய்தல்.
  • ஸ்வாப்ஸ் செருகுதலின் மூலம் சேகரிக்கப்படும் மாதிரியை நுண்ணோக்கி கொண்டு பரிசோதித்தல்.
  • சிஸ்டோஸ்கோபி - சிறுநீர் பையில் இருக்கும் குறைபாடுகளை சோதித்துப் பார்க்க கேமராவுடன் குழாயை செருகுதல்.
  • சிறுநீர் சோதனைகள்.
  • முழு இரத்த எண்ணிக்கை.
  • பாலியல் மூலம் பரிமாற்றமாகும் நோய்களைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனைகள்.
  • பெண்களுக்கு இடுப்பு அல்ட்ராசவுண்ட் சோதனை மேற்கொள்தல்.

நோயை கண்டறிந்த பின், நோயாளிக்கு பல்வேறு முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன:

  • பாக்டீரியா தொற்றுக்கு சரியான ஆண்டிபயாடிக்குகளை பரிந்துரைத்தல்.
  • அல்லாத-ஸ்டெராய்டல் எதிர்ப்பு அழற்சி மருந்துகள் (NSAID கள்) வலியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன.
  • குருதிநெல்லி பழச்சாறு உயர்ந்த வைட்டமின் சி உள்ளடக்கத்தை கொண்டிருப்பதால் இதை வாய்வழியாக உட்கொள்ளவதன் மூலம் அழற்சியை விரைவாக குணப்படுத்தமுடியும்.



மேற்கோள்கள்

  1. Department for Health and Wellbeing. Urethritis (non-specific) and urethral irritation diagnosis and management. Government of South Australia [Internet]
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urethritis
  3. Young A, Wray AA. Urethritis. [Updated 2019 Jan 6]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Diseases Characterized by Urethritis and Cervicitis
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Non-specific urethritis (NSU)

யுரேத்ரிடிஸ் க்கான மருந்துகள்

Medicines listed below are available for யுரேத்ரிடிஸ். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.