குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) - Ulcerative Colitis in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

February 07, 2019

March 06, 2020

குடல் வீக்கம்
குடல் வீக்கம்

சுருக்கம்

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) (யு.சி) என்பது, செரிமான அமைப்பின் பெருங்குடலைப் பாதிக்கிற ஒரு நீண்ட-காலக் குறைபாடாகும். குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)யின் முதன்மையான அறிகுறிகள், வயிற்று வலி மற்றும் குடலில் இரத்தக்கசிவு ஆகியன (அழற்சியின் விளைவாக ஏற்படுவது). குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)யின் மற்ற பொதுவான அறிகுறிகளுள், அடிக்கடி மலம் கழித்தல், இரத்தம் கலந்த மலம் மற்றும் புண்கள் ஆகியவை அடங்கும். குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)யின் குடும்பப் பின்னணியைக் கொண்டிருக்கும் நபர்களுக்கு, அது தோன்றுவதற்கான அதிகபட்ச அபாயம் இருக்கிறது. குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி), உணவுப்பழக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மாறுதல்கள் போன்ற காரணிகளால் மோசமடையக் கூடும். இது, பல வகையான சோதனைக்கூட பரிசோதனைகள் மற்றும் உடலியல் பரிசோதனை மூலமாகக் கண்டறியப்படுகிறது. குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)க்கான சிகிச்சை வாய்ப்புகள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சையை உள்ளடக்கியவை. குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) மூலம் வரும் சிக்கல்கள், வழக்கமாக இல்லாவிட்டாலும், ஒருவேளை அழற்சி பரவினால் அவர்கள் தீவிரமான அறிகுறிகளால் பாதிக்கப் படக் கூடும்.

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) என்ன - What is Ulcerative Colitis in Tamil

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி), உலகம் முழுவதும், 35 வயதுக்கு முன்னால், குடல் அழற்சி நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பெரும்பாலான நபர்களைப் பாதிக்கிறது. குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) முதன்மையாகப் பெருங்குடலைப் பாதிக்கிறது. இது, பெருங்குடலை அமைக்க இணைந்திருக்கும், பெருங்குடல் உட்புற தோல் மற்றும் மலக்குடலின் அழற்சியின் படி வகைப்படுத்தப்படுகிறது, இது மலக்குடல் மற்றும் பெருங்குடலின் கீழ்ப்பகுதியில் ஆரம்பிக்கிறது. இது சிகிச்சையளிக்க மற்றும் சமாளிக்க முடிந்த, ஆனால் குணப்படுத்த முடியாத வாழ்நாள் பிரச்சினையாகும்.

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) என்பது ஒரு குடல் அழற்சி நோயின் (ஐ.பி.டி) ஒரு வடிவமாகும். இதனை குடல் எரிச்சல் நோய்க்குறி (ஐ.பி.எஸ்) அல்லது குரோனுடைய நோய் உடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.

 • குடல் எரிச்சல் நோய்க்குறி என்பது, அசௌகரியம் மற்றும் வயிற்று வலி, வயிறு வீங்குதல், மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளை, மிதமாக, ஆனால் மறுபடி மறுபடி ஏற்படுத்துக்கிற,  ஒரு மிகவும் அதிக வழக்கமான குறைபாடு ஆகும். இருந்தாலும், குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)யில், பெருங்குடலின் அழற்சி காயங்கள் மற்றும் புண்களுக்கு வழிவகுக்கிறது.
 • குரோனுடைய நோய் என்பது, செரிமானப் பாதையின் எந்த ஒரு பகுதியையும் பாதிக்கக் கூடியது. குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி), முக்கியமாகப் பெருங்குடலின் கீழ்ப்பகுதியை (மலக்குடல்) பாதிக்கிறது. இருந்தாலும், சில நபர்களுக்கு முழு பெருங்குடலையும் இது பாதிக்கலாம். 

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) அறிகுறிகள் என்ன - Symptoms of Ulcerative Colitis in Tamil

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)யின் குறிப்பிட்ட அறிகுறிகள், சில சமயங்களில், தவறுதலாக செரிமானமின்மையின் அறிகுறிகளாகத் தோன்றக் கூடும். மிகவும் பொதுவான அறிகுறிகளில் அடங்கியவை:

வழக்கத்தை விடக் குறைவாகக் காணப்படும், ஆனால் குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)யில் தோன்றுவதாகக் கூறப்படுகின்ற ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன. இந்த அறிகுறிகள், வழக்கமாக, மிகவும் பொதுவான அறிகுறிகளோடு இணைந்து இருக்கின்றன. வழக்கத்தை விடக் குறைவாகக் காணப்படும் அறிகுறிகள், பெரும்பாலும், ஒரு சீறி வருதலில் (அறிகுறிகள் தீவிரமாகிற பொழுது) உணரப்படுகின்றன. வழக்கத்தை விடக் குறைவாகக் காணப்படும் அறிகுறிகளில் அடங்கியவை:

Iஒரு நாளுக்கு, ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட முறை மலம் கழித்தல் இருக்கின்ற, தீவிரமான நிலைகளின் கூடுதல் அறிகுறிகள் இவை போன்று காணப்படலாம்:

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) சிகிச்சை - Treatment of Ulcerative Colitis in Tamil

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)க்குத் நிரந்தரத் தீர்வு இல்லாவிட்டாலும், சிகிச்சையின் நோக்கம் அவர்களின் நோய் எதிர்ப்பு அமைப்பை மேலும் நன்றாக்குவதை முறைப்படுத்த உதவுவதாக இருக்கிறது. குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) ஒரு நபரின் வாழ்க்கைத்தரத்தைப் பாதிக்கக் கூடும். சிகிச்சை மாதிரிகளின் ஒரு கூட்டுச் சேர்க்கை, சீறி வருதல்களைக் குறைக்கவும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

மருந்துகள்

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)யின் சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், பெருங்குடல் பகுதியின் அழற்சியைக் குறைத்து, திசுக்களை இயற்கையாகக் குணமடைய வைப்பதன் மூலம் வேலை செய்கின்றன. அடிக்கடி மலம் கழித்தல், வலி மற்றும் இரத்தப்போக்கு போன்ற மற்ற அறிகுறிகளையும், மருந்துகள் மூலம் நிறுத்த முடியும். இந்த மருந்துகளால், பெருங்குடலுக்கு இயற்கையாக குணமடைய, நேரத்தை வழங்கும் விதமாக, சீறி வருதல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் உதவ முடியும். இந்தமருந்துகள், பிரச்சினையைக் குறைத்து, அந்த நிலையைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், அந்த நபர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவுகின்றன.

இந்த மருந்துகளில் அடங்கியவை:

 • அமினோசாலிசிலேட்கள்
  இந்த மருந்துகள், அழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவை, மிதமானதிலிருந்து நடுத்தரமானது வரையுள்ள அறிகுறிகள் உள்ள நபர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. அமினோசாலிசிலேட்கள், வாய்வழி மருந்துகளாகும், மேலும் நன்கு தாங்கக் கூடியவை.
 • கார்டிகோஸ்டெராய்டுகள்
  கார்டிகோ ஸ்டெராய்டுகள், நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடுகளைக் குறைத்து, அழற்சியைக் குறைக்கும் விதத்தில் செயல்புரிகின்றன. இவை வழக்கமாக, கடுமையான அறிகுறிகள் உள்ள நபர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை நீண்ட-கால பயன்பாடுகளுக்கானவை மற்றும் முகப்பரு, எடை அதிகரிப்பு மற்றும் மனம் அலைபாயுதல் போன்ற சில பக்க விளைவுகளைக் கொண்டவை..
 • நோய் எதிர்ப்பு-பண்பேற்றிகள்
  இவை, மற்ற எந்த ஒரு வகை மருந்துகளும் பலனளிக்காத நபர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கப்படுகின்றன. நோய் எதிர்ப்பு-பண்பேற்றிகள், நோய் எதிர்ப்பு அமைப்பை அடக்கி, அழற்சியைக் குறைக்கின்றன. இந்த மருந்துகள் , நோய்த்தொற்று ஏற்படும் ஒரு கூடுதல் ஆபத்தையும், மற்றும் சற்று அதிகரித்த, தோல் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தையும் கொண்டிருக்கின்றன.
 • உயிரியல் மருந்துகள்
  உயிரியல் மருந்துகளும், அழற்சியைக் குறைப்பதற்காக, நோய் எதிர்ப்பு அமைப்பை குறிவைத்து, அதன் செயல்பாடுகளை அடக்கி வைக்கின்றன.

மருந்துகள், பெருங்குடலின் எந்தப் பகுதியில் அறிகுறிகள் தோன்றுகின்றன என்பதைப் பொறுத்து நிர்வகிக்கப்படலாம். நிர்வகிக்கப்படும் அந்த மருந்துகள் இவையாக இருக்கலாம்:

 • எனிமா (மல துவாரத்தின் வழியாக திரவ மருந்தை பீச்சியடிப்பது).
 • மல துவார நுரைத்தல்.
 • குளிகை மருந்து (ஒரு கெட்டியான, கரையக்கூடிய மருந்தை மல துவாரத்தின் வழியாக செலுத்துவது).
 • ஐ.வி அல்லது இரத்தக் குழாய் வழியாக செலுத்துவது (இரத்தக் குழாய்கள் மூலம் நிர்வகிக்கப்படுவது).
 • சில மருந்துகளை, வாய்வழியாகவும் எடுத்துக் கொள்ள இயலும்.

கூட்டு சிகிச்சை

பயனுள்ள விளைவுகளைப் பெறவும், அறிகுறிகளை நன்றாக சமாளிக்கவும், ஒரே நேரத்தில் இரண்டு சிகிச்சைகளைப் பயன்படுத்துவது, கூட்டு சிகிச்சை  என அறியப்படுகிறது. இருப்பினும், ஒரு சில இணைந்த பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதாலும், முந்தைய மருந்துகளின் வீரியத்தைக் குறைக்கக் கூடும் என்பதாலும், கூட்டு சிகிச்சை பரவலாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை.

அறுவை சிகிச்சை

 • மருந்து சிகிச்சையில் இருக்கும் நபர்களுக்கு, எந்த முன்னேற்றமும் காணப்படாமல், மேலும் சிக்கல்கள் ஆரம்பித்தால், அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். அறுவை சிகிச்சை, அறிகுறிகளில் இருந்து மொத்தமாக விடுபட, முழு பெருங்குடலையும் மற்றும் மலக்குடலையும் நீக்குவதோடு தொடர்புடையது. குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)க்கு பல்வேறு வகை அறுவை சிகிச்சைகள் உள்ளன. முதல் ஒன்று, முழு பெருங்குடல் மற்றும் மலக்குடலை நீக்குவதோடு, கழிவுகள் காலியாகி அதன் வழியாக ஒரு பைக்குள் சேர, வயிற்றில் ஒரு திறப்பை ஏற்படுத்துவதை உள்ளடக்கியது. இந்தப் பை, ஒரு ஒட்டும் பொருளால் வயிற்றுத் தோலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
 • இன்னொரு அறுவை சிகிச்சை வாய்ப்பிலும், பெருங்குடல் நீக்கப்படுகிறது, ஆனால், ஒரு உட்புறமாக வைக்கப்படும் பை, ஆசனவாய் குறுக்குத் தசையில் இணைக்கப்படுகிறது. இரண்டு நடைமுறைகளிலும், மீண்டு வர 4-6 வாரங்கள் எடுத்துக் கொள்ளக் கூடும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) கையாள்வதில் ஊட்டச்சத்து முக்கியமானதாகும். உணவுப்பழக்க மாறுதல்கள் அறிகுறிகளை சமாளிப்பதிலும், அதே போல் சீறி வருதல்களைக் குறைப்பதிலும் உதவக் கூடும். பரிந்துரைக்கப்படும் சில உணவுப்பழக்க மறுதல்களில் அடங்கியவை:

 • சோடாக்கள் மற்றும் கார்பனேற்றிய பானங்களைத் தவிர்த்தல்.
 • தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் போன்ற திரவ பானங்களை அதிகம் அருந்துதல்.
 • கொட்டைகள், காய்கறிகளின் தோல்கள் போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவுகளைத் தவிர்த்தல்.
 • காரமான உணவைத் தவிர்த்தல்.
 • தொடர்ச்சியான வலி நிவாரணிகளைத் தவிர்த்தல்.
 • அதிக அளவு சாப்பிடாமல், நாள் முழுவதும் குறைந்த அளவு உணவுகளை உணவுகளை உண்ணுதல்.

குடலின் மூலம் ஊட்டச்சத்துக்களைக் கிரகிப்பது மோசமாக இருக்கும் நிலையில், மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகு, ஒருவர் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு சில பிற்சேர்ப்பு பொருட்கள் இருக்கின்றன. அறிகுறிகளைப் பொறுத்து, பின்வரும் உணவுப்பழக்க பரிந்துரைகள் செய்யப்படலாம்:

 • உப்பு-குறைந்த உணவு.
 • நார்ச்சத்து-குறைந்த உணவு.
 • கொழுப்பு குறைந்த உணவு.
 • லாக்டோஸ்-இல்லாத உணவு.
 • அதிக-கலோரி உணவு.

ஒரு நபரின் அறிகுறிகளுக்கேற்ப திட்டமிடப்பட்டிருக்கும், ஒரு ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது. எனவே, ஒருவர் உண்ணக் கூடிய அல்லது கூடாத உணவுகள் பற்றி மருத்துவரை ஆலோசிப்பது அவசியமானதாகும்.

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) உள்ள ஒரு நபர், ஒவ்வொரு ஒன்று முதல் மூன்று வருடங்களுக்கு (மருத்துவர் பரிந்துரைத்த படி, வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை) ஒரு கலொனோஸ்கோபி கண்டிப்பாக மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.மேற்கோள்கள்

 1. American College of Gastroenterology [Internet] 6400 Goldsboro Rd, Bethesda, MD 20817; Ulcerative Colitis.
 2. Crohn's & Colitis Foundation [Internet] New York, United States; Types of Ulcerative Colitis.
 3. National Health Service [Internet]. UK; Ulcerative Colitis.
 4. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Ulcerative Colitis.
 5. American Society of Colon and Rectal Surgeons [Internet] Columbus, Ohio; Ulcerative Colitis.
 6. Crohn's & Colitis Foundation [Internet] New York, United States; Colitis Treatment Options.

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) டாக்டர்கள்

Dr. Raghu D K Dr. Raghu D K Gastroenterology
14 वर्षों का अनुभव
Dr. Porselvi Rajin Dr. Porselvi Rajin Gastroenterology
16 वर्षों का अनुभव
Dr Devaraja R Dr Devaraja R Gastroenterology
7 वर्षों का अनुभव
Dr. Vishal Garg Dr. Vishal Garg Gastroenterology
14 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) க்கான மருந்துகள்

குடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।