பாம்பு கடி - Snake Bite in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

பாம்பு கடி
பாம்பு கடி

பாம்புக் கடி என்றால் என்ன?

பாம்புக் கடி என்பது வேட்டையாடி உண்ணும் பிறப்பிராணிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள பாம்புகள் பயன்படுத்தும் ஒரு தற்காப்பு உத்தியாகும்.பாம்புக் கடி விஷமுள்ளதாக இருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில், விஷமானது நரம்பு மண்டலம், இதயம் அல்லது இரத்தம் உற்பத்தி செய்யும் உறுப்புகளை பாதிக்கலாம், இந்த அறிகுறிகளால் உரிய நேரத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மரணமடைய வாய்ப்புண்டு. இந்தியாவில் பாம்புக் கடிக்கப்பட்டு 1,00,000 நிகழ்வுகள் மற்றும் 45-50 ஆயிரம் மரணங்கள் பாம்புக்கடியால் ஏற்படுவதாக  கணக்கிடப்பட்டுள்ளன.

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மருத்துவ அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளாக அடங்குவன:

 • காயங்கள் மீது நச்சுப்பல் தடம்.
 • காயத்திலிருந்து இரத்தம் கசிதல்.
 • எடிமா (கடித்த இடத்தில் மற்றும் அந்த பாகத்தில் வீக்கம்).
 • பாதிக்கப்பட்ட பகுதியில் சருமத்தின் நிறம் வேறுபடுதல்.
 • தலைச்சுற்று.
 • அதிகப்படியான வியர்வை.
 • விரைவான இதய துடிப்பு உணர்வு.
 • அதிகரித்த இதய துடிப்பு.

பின்வரும் காரணங்களுள் ஏதேனும் ஒன்றால் பாம்பின் விஷமானது விஷம் இரத்த ஓட்டத்தில் கலக்க வாய்ப்பில்லை:

 • விஷ பற்றாக்குறையான கடி இதனை 'உலர்ந்த கடி' என்றும் கூறுவர்.
 • பாதுகாப்பு ஆடை அல்லது காலணிகள் காரணமாக கடிக்க முடியாமல் போவது.
 • சில நிகழ்வுகளில் விஷம்  குறைவாக இருத்தல்.
 • அதிர்ஷ்டவசமாக தாக்குதலின் போது விஷம் செலுத்தப்படாமல் இருத்தல்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

பாம்புகள் கடித்தல், ராஜ நாக பாம்புகள், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் பாம்புகள் போன்றவை விஷம் அதிகம் உள்ளவை. பாம்புக்கடி பொதுவாக பாம்புகள் கடிப்பதாலேயே ஏற்படுகிறது.

இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

மிக முக்கியமான சிகிச்சை முறையானது, விஷ முறிவு மருந்து பயன்படுத்துவதாகும். முக்கிய பிரச்சினை அல்லது குறைபாடு என்பது பாம்புக்கடியை எப்படி கையாளுவது என்பது தெரியாமல் இருப்பதே ஆகும். பாம்பு விஷத்தன்மை உடையதா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்வது கடினம்  என்பதால் பாம்பு கடித்ததை அவசர சிகிச்சையாக கருதுவது எப்போதும் நல்லது.

முதல் உதவி  சிகிச்சையாக நீங்கள் பின்வருவனவற்றை செய்யலாம்:

 • பாம்புக்கடி பட்ட நபரை அமைதியாகவும் மற்றும் பயப்படாமல் இருக்கச் சொல்லவும், பயம் விஷத்தை இரத்த ஓட்டத்தில் வேகமாக பரவச்செய்யும்.
 • கடி பட்ட இடத்தை உலர்ந்த, தளர்வான பேண்டேஜ்  அல்லது துணியால் மூடவேண்டும்.
 • விஷ முறிவு மருந்து கொடுக்கும் மையத்திற்கு விரைவாக அந்நபரை கூட்டிச்  செல்லவேண்டும்.
 • துணி அல்லது பட்டையால் கடிபட்ட இடத்திற்கு அருகில் கட்டக்கூடாது, அது இரத்த ஓட்டத்தை தடை செய்யும்.
 • காயத்தை கழுவ வேண்டாம்.
 • காயத்தில் ஐஸ் கட்டிகள் பயன்படுத்த வேண்டாம்.
 • காயத்தில் இருந்து விஷத்தை உறிஞ்சுவதற்கு முயற்சி செய்யவேண்டாம்.

நீங்கள் பாம்புக்கடியை இதனால் தவிர்க்கலாம் :

 • அடர்ந்த புல்வெளிகளில் வெளியே செல்லும் போது அல்லது சுற்றும் போது தடித்த பூட்ஸ்கள்  மற்றும் நீண்ட காலுறைகளை அணிந்து கொள்ளுங்கள்.
 • இரவில் டார்ச்லைட்  அல்லது விளக்கு எடுத்துச் செல்லுங்கள்.
 • ஏதாவது பாறைகள் அல்லது கற்களை நகர்த்தும் போது அல்லது சமைப்பதற்கு விறகு சேகரிக்கும் போது, மலை பகுதிகளில் சுற்றும் போது அல்லது சிறிய ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீந்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
 • பாம்புகள் அல்லது கொறிக்கும் பிராணிகளை தடுக்கக்கூடிய சரியான மருந்துகளை சேமிப்பு அறை அல்லது நீங்கள் இருக்கும் அடித்தளத்தில் எப்போதும் வைத்துக்கொள்ள வேண்டும்.
 • ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போதோ அல்லது இறந்தது போன்று தோன்றும் போது பிடிக்க முயற்சி செய்யவேண்டாம்.
 • அவற்றை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பதை தவிருங்கள்.
 • எப்போதும் தூங்குவதற்கு முன் உங்கள் படுக்கையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள், தரையில் தூங்குவதை தவிர்க்கவும்.
 • சரியான நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றினால், பாம்பு கடிப்பதை தடுக்கலாம். இவை இறப்பு மற்றும் அதனால் ஏற்படும் அபாயங்களிலிருந்தும் காத்துக்கொள்ள முடியும்.மேற்கோள்கள்

 1. Boston Children's Hospital. Snake Bites Symptoms & Causes. U. S [Internet]
 2. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Snake Bites
 3. Jaideep C Menon et al. Venomous Snake Bite in India - Why do 50,000 Indians Die Every Year? 8 Journal of The Association of Physicians of India, Vol. 65, August 2017
 4. Syed Moied Ahmed et al. Emergency treatment of a snake bite: Pearls from literature . J Emerg Trauma Shock. 2008 Jul-Dec; 1(2): 97–105. PMID: 19561988
 5. SR Mehta, VSM, VK Sashindran. Clinical Features And Management Of Snake Bite . Med J Armed Forces India. 2002 Jul; 58(3): 247–249. PMID: 27407392
 6. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; How to Prevent or Respond to a Snake Bite
 7. National Health Portal [Internet] India; Directory Services / Anti-venom - snake and dog bite

பாம்பு கடி க்கான மருந்துகள்

Medicines listed below are available for பாம்பு கடி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.