தோல் அலர்ஜி - Skin Allergy in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 14, 2019

March 06, 2020

தோல் அலர்ஜி
தோல் அலர்ஜி

தோல் அலர்ஜி என்றால் என்ன?

உடலின் நோயெதிர்ப்பு முறை வழக்கத்திற்கு மாறாக ஒரு தீங்கற்ற பொருளுடன் வினைபுரியும் போது ஒவ்வாமை ஏற்படுகிறது.பொதுவாக, நோயெதிர்ப்பு முறை ஆபத்தான நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது; இருப்பினும், தோல் ஒவ்வாமை கொண்டவர்கள் அதீத நோயெதிர்ப்பு உணர்திறன் கொண்டுள்ளனர். எக்ஸிமா, படை நோய், தொடர்பு தோல் அழற்சி நோய், மற்றும் ஆன்ஜியோடெமா ஆகியவை பொதுவான ஒவ்வாமை தோல் விளைவுகள்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளின் பட்டியல் பின்வருமாறு:

எக்ஸிமா மற்றும் படை நோய் ஆகியவை பொதுவான தோல் ஒவ்வாமை வகைகள் மற்றும் அவற்றின் அறிகுறிகள் இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கண்டறிய உதவுகின்றன. எக்சிமா பொதுவாக முகத்தில் அரிப்பு, சிவந்த அல்லது உலர்ந்த தோலுடன் ஏற்படுகிறது மற்றும் சொரியும்போது இதிலிருந்து சீழ் வடிந்து, பொருக்கு உருவாகலாம்.படை ஒய் பொதுவாக அரிப்புடனும் சிவந்த அல்லது வெள்ளை நிற உயர்ந்த தடிப்புகளுடனும் காணப்படும், இது உடலின் எந்த இடத்திலும் தோன்றும் மற்றும் சில நிமிடங்களிலிருந்து சில வாரங்களுக்குள் மறைந்துவிடும்.ஆன்ஜியோடெமா (திரவ குவிப்பு காரணமாக வீக்கம்) கண்கள், கன்னங்கள் அல்லது உதடுகளை சுற்றி முகத்தில் ஏற்படும்.மேலும், அரிப்பு மற்றும் சிவப்பு தோல் நேரடி தொடர்பு ஒவ்வாமையால் ஒரு எதிர்வினை விளைவு ஏற்பட்டு அதனால் தொடர்பு தோலழற்சி ஏற்படுகிறது.

நோய்தாக்குதலுக்கான முக்கியக் காரணங்கள் என்ன?

அலர்ஜி பொதுவாக பின்வரும் காரணிகளுக்கு வெளிப்படுவதால் காரணமாக ஏற்படுகிறது:

  • லேடெக்ஸ் (மரப்பால்).
  • விஷ படர்க்கொடி.
  • குளிர் மற்றும் வெப்பநிலை.
  • மகரந்தம்.
  • கொட்டைகள்,  ஒடுடைய மீன் போன்ற உணவு பொருட்கள்.
  • நீர்.
  • பூச்சிகள்.
  • மருந்துகள்.
  • சூரிய ஒளி.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உங்கள் மருத்துவர் உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப வரலாற்றை கேட்கலாம் மற்றும் ஒரு உடல் பரிசோதனை செய்யலாம். உங்கள் ஒவ்வாமைகளைத் தீர்மானிக்க ஒரு தோல் பரிசோதனை, பேட்ச் சோதனைகள் அல்லது இரத்த சோதனைக்கு டாக்டர் ஆலோசனை வழங்கலாம்.நோய் கண்டறிதலை உறுதிப்படுத்த ஸ்கின் ப்ரிக் டெஸ்ட் அல்லது தோலக சோதனை செய்யப்படலாம்.மற்றொரு உறுதியான சோதனையானது மருத்துவரால்  மேற்பார்வையிடப்பட்ட சவால் சோதனையாகும், இதில் நீங்கள் நுகர்ந்தோ அல்லது வாய்வழியாகவோ அலர்ஜேன் சிறிய அளவு எடுக்கவேண்டும்.

ஒவ்வாமை சிகிச்சை முன்கணிப்பு  உங்கள் மருத்துவ வரலாறு, ஒவ்வாமை பரிசோதனை முடிவுகள் மற்றும் அறிகுறிகளின் தீவிரத்தை சார்ந்துள்ளது.நாசி சலைன் கழுவுதல் முறை, காற்று வழிப்பரவும் ஒவ்வாக்காரணி அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. நாசி கார்டிகோஸ்டீராய்டுகள், மாஸ்ட் செல் இன்ஹிபிட்டர்ஸ், டெக்கன்ஜெஸ்டண்ட்ஸ் மற்றும் எபிநெஃப்ரின் போன்ற சில மருந்துகளை ஒவ்வாமை எதிர்வினைகளின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கலாம்.ஸ்டெராய்டுகள், வாய்வழி அண்டிஹிஸ்டமின்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட மேற்பூச்சு கிரீம்கள், அறிகுறி நிவாரணத்திற்காக பயன்படுத்தப்படலாம்.

இருப்பினும், இந்த தடிப்புகள் மற்றும் அரிப்புகளைத் தவிர்க்க வேண்டும், இதனை தடுக்காவிட்டால் அரிப்பு மிகவும் மோசமாகிவிடும்.அதற்கு பதிலாக எரிச்சல் இருக்கும் இடத்தின்மீது ஒரு மென்மையான பருத்தி துணியால் தேய்த்தால் எரிச்சல் உண்டாகாது.ஒரு சூடான குளியல், பாதிக்கப்பட்ட தோலை ஈரப்படுத்துதல், வெளுப்பான் பயன்பாட்டை தவிர்த்தல், கடுமையான சலவைப் பொருட்கள் அல்லது சோப்புகளை தவிர்த்தல் ஆகியவை தோல் ஒவ்வாமை அறிகுறிகளை குறைக்க உதவும்.



மேற்கோள்கள்

  1. Asthma and Allergy Foundation of America. [Internet]. Arlington, VA. Allergy Diagnosis.
  2. American Academy of Allergy, Asthma & Immunology. [Internet]. Milwaukee, WI; Skin Allergy.
  3. American College of Allergy, Asthma & Immunology. [Internet]. Illinois, United States; Eczema (Atopic Dermatitis).
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Allergies - overview.
  5. Healthdirect Australia. Contact dermatitis. Australian government: Department of Health

தோல் அலர்ஜி க்கான மருந்துகள்

Medicines listed below are available for தோல் அலர்ஜி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.