மனச்சிதைவு நோய் - Schizophrenia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 07, 2019

March 06, 2020

மனச்சிதைவு நோய்
மனச்சிதைவு நோய்

சுருக்கம்

மனச்சிதைவு நோய் என்பது, அதைப் பற்றி குறைந்த அளவு தெரிந்த, அதிகமாக அச்சப்படுகின்ற மற்றும் மிக அதிகமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிற ஒரு பிரச்சினையாகும். இது, ஒரு நபரின் அறிவை மற்றும் நிதர்சனத்தின் மீதான அவர்/அவளின் எண்ணத்தை சிதைக்கின்ற ஒரு மனநலப் பிரச்சினையாகும். மனச்சிதைவு நோய், அதன் விளைவுகளைக் கொடுத்து, அதனால் பாதிக்கப்பட்ட நபர்களின் ஆயுட்கால  எதிர்பார்ப்பைக் குறைக்கின்ற, ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாகும். மனச்சிதைவு நோயின் அறிகுறிகளில், மருட்சி, மாயத்தோற்றம், ஒழுங்கற்ற நடத்தை மற்றும் மோசமான சமூகத் தொடர்புகள் ஆகியவை அடங்கும். மனச்சிதைவு நோயின் சரியான காரணத்தைக் கண்டறிய, இப்பொழுதும் ஆய்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட குடும்ப வரலாறு உள்ள ஒரு நபருக்கு, அதிகபட்ச அபாயம் இருக்கிறது. சிகிச்சை, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வலிமையூட்டல் மற்றும் ஆதரவுடன் கூடிய, மருந்துகள் மற்றும் நீண்டகால மருத்துவத்தை உள்ளடக்கியது. இருப்பினும், சில நேரங்களில், கர்ப்ப காலத்தின் பொழுது சிக்கல்கள் எழலாம். மனச்சிதைவு நோயைக் கையாள்வது, ஆக்க சக்தியோடு நிறைவான வாழ்க்கை வாழ, மனச்சிதைவு நோயிலிருந்து மீண்டு வர உதவும், அடிக்கடியான சமூக ஈடுபாடு போன்றவற்றோடு தொடர்புடையது. திரும்ப வருவதற்கான வாய்ப்புகள், ஒப்பீட்டளவில் மிக அதிகமாக இருப்பதால், அதிகமாக நேர்மறையான உரையாடல்கள் மேற்கொள்வது, போதைப்பொருட்கள் மற்றும் புகைப்பிடிப்பதிலிருந்து தள்ளி இருப்பது, தொழில் ஆதரவுக்கான ஏற்பாடுகளை செய்வது, அவர்கள் சுயமாகவும் பொறுப்புடனும் வாழ உதவுகின்றன.

மனச்சிதைவு நோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Schizophrenia in Tamil

மனச்சிதைவு நோயின் அறிகுறிகள் வேறுபடுகின்றன மற்றும் ஒரு உளவியல் நோயாக இருப்பதால், இரண்டு பிரச்சினைகள், ஒரே மாதிரியாக இருப்பதைக் காண்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும், இந்தப் பிரச்சினையின் வழக்கமான அறிகுறிகள் சில இருக்கின்றன. அந்த அறிகுறிகளில் சில:

வளரிளம் பருவத்தினரிடையே

அவர்களின் வயது வந்த சக நபர்கள் போன்று இல்லாமல், மனச்சிதைவு உள்ள வளரிளம் பருவத்தினர், மருட்சி கொள்வது குறைவாகவும், மாயத்தோற்றம் காணும் அதிகப்படியான ஒரு போக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். எரிச்சல், தன்முனைப்புக் குறைவு, தூங்குவதில் பிரச்சினை, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருப்பது, அதே போல், பள்ளியில் செயல்திறனில் ஒரு சரிவு போன்றவை பொதுவாக உணர முடிகிறது.

வயது வந்தவர்களிடைய

  • மருட்சிகள் மிகவும் வழக்கமானவை. இவை, நிதர்சனத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்ற நம்பிக்கைகள் ஆகும். உங்களோடு அன்பாக இருக்கும் ஒருவர், உங்களுக்கு தொல்லை தருவதாக அல்லது எதிராக சாதி செய்வதாகத் தோன்றும் எண்ணங்களைக் கொடுப்பவை, சில பொதுவான மருட்சிகளாகும்.
  • மனச்சிதைவின் பண்பாக மதிப்பிடப்பட்ட மாயத்தோற்றம், இன்னொரு பொதுவான அறிகுறியாகும். உண்மையில் இல்லாத ஏதோ ஒன்று, இருப்பதாக உணரக் கூடிய உணர்வு கொண்டிருப்பதே மாயத்தோற்றம் என்பதாகும். மாயத்தோற்றங்களில் பல வகைகள் இருக்கக் கூடிய போது, குரல்கள் கேட்பது, மிகவும் வழக்கமாக உணரப்படுகிறது.
  • மனச்சிதைவு உள்ள நபர்களிடம், கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களைக் கூறுவது, பேச்சில் உளறலான சத்தங்களை உருவாக்குவது, வாக்கியங்களை சரியான அமைப்பின்றி மற்றும் எந்த அர்த்தமும் இன்றி அமைப்பது போன்றவற்றை உள்ளடக்கிய, பல்வேறு வடிவங்களில் ஒரு குறைபாடான தகவல் தொடர்பு காணப்படக் கூடும்.
  • ஒழுங்கற்ற நடத்தையானது, குழந்தைத்தனத்துக்கு திரும்ப செல்வது, கோபம் மற்றும் கிளர்ச்சியின் திடீர் வெளிப்பாடுகள், அறிவுறுத்தல்களுக்கு சம்மதிக்க அல்லது எடுத்துக் கொள்ள மறுத்தல், அதீதமான மற்றும் காரணமற்ற செயல்பாடுகள் மற்றும் முறையான நிலையில் இல்லாமை போன்றவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.
  • மக்களோடு உரையாடுவது, சுய சுகாதாரத்தைப் பராமரிப்பது, உணர்வுப்பூர்வமாக வெளிப்படையாக மற்றும் மகிழ்ச்சியைத் தேடுவதாக இருப்பது போன்ற வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வக் குறைவு.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Kesh Art Hair Oil by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to more than 1 lakh people for multiple hair problems (hair fall, gray hair, and dandruff) with good results.
Bhringraj Hair Oil
₹546  ₹850  35% OFF
BUY NOW

மனச்சிதைவு நோய் சிகிச்சை - Treatment of Schizophrenia in Tamil

மனச்சிதைவுக்கான சிகிச்சை, கையாளப்பட வேண்டிய பிரச்சினையின் பல அடுக்குகளைக் கருத்தில் கொண்டு, ஒரு பல-முனை அணுகுதலைப் பயன்படுத்துகிறது. சிகிச்சை மாதிரிகளில் அடங்கியவை:

  • மருந்துகள்
    இந்த நோயின் விளைவாகத் தோன்றுகிற அறிகுறிகளைக் குறிப்பிடுவதாலும், கையாள்வதாலும், இவை ஒரு முதல் மற்றும் மிகவும் முக்கியமான அம்சமாக இருக்கின்றன. மிகவும் பொதுவான நிவாரணம், உளவியல் நோய்க்கெதிரான மருந்துகளைப் பரிந்துரைப்பதை உள்ளடக்கியதாகும். பல்வேறு காரணிகளைப் பொறுத்து, ஒரு முதல் அல்லது இரண்டாம்-தலைமுறை உளவியல் நோய்க்கெதிரான மருந்து பரிந்துரைக்கப்படலாம். அந்த நிலைக்குப் பொருத்தமான வடிவம் மற்றும் அளவைப் பரிந்துரைப்பதே எண்ணமாகும். ஒரு மிகவும் பழமையான அணுகுமுறை, நோயாளியின் உணர்திறன் மற்றும் இந்த மருந்துகளின் பக்க விளைவுகளை நினைவில் கொள்வதாகும். இந்த மருந்துகளின் பரிந்துரை, முதல்-முறை நிகழ்வுகளுக்கு, திரும்ப வரும் நிலைகளுக்கு மற்றும் பராமரிப்பு சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வெவ்வேறாக இருக்கிறது. எந்த வகை மருத்துவத்துக்கும் கட்டுப்படாத நிலை உள்ளவர்களுக்கு, சிகிச்சையின் மாற்றி அமைக்கப்பட்ட வடிவங்களும் இருக்கின்றன. அந்த நபர் மருந்தை வாய்வழியாக எடுத்துக் கொள்ள விரும்பாத நிலைகளில் ஊசி மூலம் செலுத்தப்படுபவை பயன்படுத்தப்படலாம். சில நிலைகளில், மருத்துவமனையில்  அனுமதிப்பது அவசியமாக மாறலாம். அதே நேரத்தில், புகைப்பிடித்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் கூட மருத்துவ சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படலாம்.
  • மற்ற சிகிச்சைகள
    மருந்துகளின் விளைவு, குறைவாக அல்லது இல்லாமல் இருக்கும் நிலைகளில், மின்னதிர்வு சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். மாயத்தோற்றத்தை உணரும் நபர்களுக்கு, மூளையின் சில பகுதிகளில் காந்தத் தூண்டுதல் உதவிகரமாக இருக்கக் கூடும்.
  • உளவியல் தலையீடு
    இது வழக்கமாக மருந்துகள் கொடுக்கும் அதே நேரத்தில் செய்யப்படுகிறது மற்றும் மிகவும் மதிப்பு வாய்ந்தது. இதன் மேல் வேலை செய்யும் பல்வேறு காரணிகள் மற்றும் இந்த சிகிச்சையின் பின்னால் இருக்கும் கருத்து, அந்த நபர், சமூகத்திற்கு உட்பட்ட ஒரு வாழ்வை வாழுவதை உறுதி செய்வதாகும்.
  • அறிவாற்றல் நடத்தை சிகிச்சை
    இது, உத்திகளை மற்றும் சமாளிக்கும் நுட்பங்களைப் பயன்படுத்தி, உளவியலைப் புரிந்து கொள்ள உதவவும், அறிகுறிகளின் அனைத்துப் பக்கமும் வேலை செய்யவும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குப் பரிந்துரைக்கப்படுறது.
  • மது மற்றும் போதைப்பொருட்கள் தலையீடு
    குறிப்பிடபட்ட இரண்டு பிரச்சினைகளும் கவனிக்கப்படுவதையும், மேலும் அந்த நபர், திரும்ப நோய் வருவதைத் தூண்டக் கூடிய, இந்த போதைகளுக்கு   மறுபடியும் அடிமையாகாமல் இருப்பதையும், இது உறுதி செய்கிறது. இது கூடவே, மன உளைச்சலை சமாளிப்பது, முனைப்பாற்றலை அதிகரிப்பது, நடத்தையை வலிமைப்படுத்துவது போன்றவற்றிலும் உதவுகிறது.
  • அடையாளப் பொருளாதார தலையீடு
    அந்த நபரின் ஆளுமையில் விரும்பத்தகாத கூறுகளைக் கட்டுப்படுத்தப் பார்க்கும், பல்வேறு வடிவ சிகிச்சைகள் இருக்கின்ற பொழுது, இந்த வடிவம், தெரிகின்ற, ஏற்றுக் கொண்ட நல்ல நடத்தைகள் மற்றும் கற்றுக் கொண்ட சமூகத் திறன்களைப் பாராட்டுவதை வலியுறுத்துகிறது.
  • செயல்திறன் பயிற்சி
    இது, மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, சமுதாயத்தின் ஒரு பகுதியாக இயங்க மற்றும் செயல்பட தேவைப்படுகின்ற, திறன்களை வளர்க்க உதவுகின்ற ஒரு திட்டமாகும். இது, அவர்களுக்கு சுயமாக வாழ்வும் சமுதாயத்தோடு தொடர்பு கொள்ளவும் சக்தியளிக்கிறது. இது தனிநபர் பயிற்சி மற்றும் வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகளின் ஒரு கூட்டு சேர்க்கையாக செய்யப்படுகிறது.
  • வேலைவாய்ப்பில் ஆதரவு
    இது, இந்தப் பிரச்சினை உள்ள நபர்களை சுய-பூர்த்தி அடைந்தவர்களாக்கும் ஒரு முயற்சியாகும். இந்தத் தலையீடு, அவர்களின் முன்னுரிமை மற்றும் தொழில் திறன்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இவற்றின் அடிப்படையில், இவை அவர்களின் வேலைவாய்ப்பில் ஆதரவை வழங்குகின்றன.
  • குடும்ப பணிவிடைகள்
    மனைச்சிதைவு கொண்டவர்களைக் கையாளும் பொழுது, சிகிச்சையில் குடும்பத்தினரையும் ஈடுபடுத்துவது முக்கியமானதாகும். குடும்பத்தையும் உள்ளடக்கிய விரிவான சிகிச்சை மற்றும் குடும்பத்துடன் தொடர்பை அதிகரிப்பது, மனச்சிதைவு உள்ள நபர்களிடம் நோய் திரும்ப வரும் நிகழ்வு குறைவதைக் காட்டியிருக்கிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

சிகிச்சையளிப்பதோடு கூடவே, மனச்சிதைவு நோய்க்கு, அந்த நபர் அனுசரித்துப் போக, சமாளிக்க மற்றும் ஒரு திறன்மிக்க வாழ்வை வாழ்வதை உறுதி செய்ய வாழ்நாள் தலையீடு தேவைப்படுகிறது. மனச்சிதைவு நோயோடு போராடிக்கொண்டிருக்கும் நபருக்கு, அதை சமாளிப்பதிலும், ஆதரவளிப்பதிலும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் பங்கு, மிக உயர்ந்த முக்கியத்துவமானதாகும். மனச்சிதைவுள்ள நபர்களைக் கையாளும் போது, மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் அடங்கியவை:

  • நோய் மறுபடி வருதலைத் தவிர்த்தல்
    மனச்சிதைவு திரும்ப வருவதை தடுப்பது, மிக அதிகமான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்கிறது. இந்த நடவடிக்கையின் மிகவும் முக்கியமான காரணிகளில், முறையான மற்றும் நேரத்திற்கு மருந்துகள் எடுப்பதை உறுதி செய்வது, ஏதேனும் அறிகுறிகள் திரும்பத் தோன்றுகின்றனவா எனக் கண்காணிப்பது மற்றும் ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்கக் கூடியவாறு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் இருப்பது ஆகியவை அடங்கும்.
  • மனநல ஆலோசனை மற்றும் சமூகத் தலையீடு
    இதுவும், மன வலிமையை அதிகரிப்பது மற்றும் சந்திக்கும் பிரச்சினைகளில் அனுசரித்துப் போவதை ஏற்படுத்துவது போன்றவற்றைக் கட்டமைக்க உதவுகிறது. சிகிச்சை முடிந்த பிறகும் கூட,  இந்தத் திட்டங்களில் தொடர்வது விலைமதிப்பற்றது என இது நிரூபிக்கிறது. நோய் மறுபடி வரும் நிகழ்வுகளும், குறிப்பிடத்தக்க வகையில் குறைகிறது.
  • ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அமைத்துக் கொள்வது
    இது, உடல்தகுதி அளவுகளை முன்னேற்றுவது, சிறந்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, உளவியல் நோய்க்கெதிரான மருந்துகளின் பக்க விளைவாக, அவ்வப்போது தோன்றுகின்ற  எடை அதிகரிப்பு போன்ற சில இணைந்த பிரச்சினைகளைக் கையாள்வது போன்றவற்றில் உதவுகிறது.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதில் இருந்து தள்ளி இருத்தல்
    மனச்சிதைவு நோயில், அதீதமாக போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது, புகைப்பிடிப்பது மற்றும் குடிப்பது ஆகியவற்றில், ஒரு மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது, மற்றும் ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பராமரிப்பது, மனச்சிதைவை சுத்தமாக இல்லாமல் ஆக்குவது மற்றும் திரும்ப வராமல் தடுப்பதில் உதவுகிறது.
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. Palmer BA, Pankratz VS, Bostwick JM. The lifetime risk of suicide in schizophrenia: a reexamination. Arch Gen Psychiatry. 2005 Mar;62(3):247-53.PMID: 15753237.
  2. Simon GE, Stewart C, Yarborough BJ, Lynch F, Coleman KJ, Beck A, Operskalski BH, Penfold RB, Hunkeler EM. Mortality Rates After the First Diagnosis of Psychotic Disorder in Adolescents and Young Adults.. JAMA Psychiatry. 2018 Mar 1;75(3):254-260. doi: 10.1001/jamapsychiatry.2017.4437. PMID: 29387876
  3. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Schizophrenia. National Institutes of Health; Bethesda, Maryland, United States
  4. Robert E. Hales, Stuart C. Yudofsky, M.D., Laura Weiss Roberts [Internet]. The American Psychiatric Association; The American Psychiatric Publishing Textbook Of Psychiatry, Sixth Edition.
  5. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Schizophrenia treatment recommendations updated. Published: June, 2010. Harvard University, Cambridge, Massachusetts.
  6. van Os J1, Kapur S. Schizophrenia. Lancet. 2009 Aug 22;374(9690):635-45. doi: 10.1016/S0140-6736(09)60995-8. PMID: 19700006
  7. Sarah D. Holder, Amelia Wayhs. Schizophrenia. Am Fam Physician. 2014 Dec 1;90(11):775-782 [Internet] American Academy of Family Physicians; Schizophrenia.
  8. National Health Service [Internet]. UK; Schizophrenia.

மனச்சிதைவு நோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மனச்சிதைவு நோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.