படுக்கை (அழுத்தம்) புண்கள் - Bed (Pressure) Sores in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 12, 2019

July 31, 2020

படுக்கை புண்கள்
படுக்கை புண்கள்

படுக்கைப்புண்கள் என்றால் என்ன?

நீண்ட காலம் தொடர்ந்து இருக்கும் அழுத்தம் காரணமாக உடலின் எலும்பு பகுதிகளான குதிகால், இடுப்பு, மற்றும் பிட்டம் போன்ற பாகங்களில் உள்ள தோல் மற்றும் திசுக்களில் திடீர் வெடிப்பு ஏற்படுதல் படுக்கைப் புண்கள் அல்லது அழுத்தப் புண்கள் ஆகும்.இந்நோய் ஏற்படுவதற்கான முதன்மையான காரணம் தொடந்து ஒரே நிலையில் உட்கார்ந்திருத்தல் மற்றும் படுக்கையில் படுத்து இருத்தல் காரணமாக உடலில் இரத்த ஓட்டம் குறைவதே ஆகும்.பெரும்பாலும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களில் இந்த படுக்கை நோய் ஏற்படுகிறது எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நோய் பற்றி எடுக்கப்பட்ட ஒரு இந்திய ஆய்வின்படி இந்த படுக்கை புண்களின் தாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 4.94 % ஆக உள்ளது.சருமத்தில் கடுமையான பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, இந்நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பது அவசியம் ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆரம்ப கட்டத்தில், சருமத்தில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படும் பகுதிகளில் சருமம் பளபளப்பான, சிவப்பு தடிப்புகள் இருப்பதை நீங்கள் காணலாம்.உதாரணமாக நீண்ட காலம் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் பிட்டம் மற்றும் தோள்பட்டை எலும்பு பகுதியில் இந்நோய் தாக்கம் ஏற்படும்.இது படிப்படியாக புண்களை உருவாக்கி சருமத்தின் மேல் அடுக்கு பகுதி இழப்பிற்கு வழிவகுக்கும் (மேற்தோல்).

எலும்பு மண்டல பகுதியின் அடியில் உள்ள திசுக்களில் அழுத்தம் ஏற்படும் போது, சருமத்தில் வீக்கம் மற்றும் குறைந்த உணர்திறன் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.இறுதியாக, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் நோய்த்தொற்று மற்றும் திசு இழப்பு ஏற்பட வழிவகுக்கிறது.  

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

தோள்பட்டையின் பின்புறம், வால் எலும்பு, பிட்டம் மற்றும் குதிகால் போன்ற புள்ளிகளில் தீவிர மற்றும் நீண்ட நேரம் (1-2 மணி நேரத்திற்கு) அழுத்தம் ஏற்படும் போது இந்த படுக்கை புண்கள் உருவாகின்றன.

எலும்பு மண்டல பகுதியில் உள்ள திசுக்களில் ஏற்பட்ட அழுத்தம் இரத்த குழாய்களை சுருக்கி சருமத்துக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்ட சத்து வழங்குவதை குறைக்கிறது.நீண்ட காலத்திற்கு ஊட்டச்சத்து மட்டும் ஆக்சிஜன் இல்லாதிருப்பதால் அது சருமத்தில் புண்களை ஏற்படுத்துகிறது.

இந்த படுக்கை புண்களை உருவாக்கும் மற்ற காரணிகள் பின்வருமாறு:

 • வெட்டு விசை, இதில் சருமம் மற்றும் அடியில் உள்ள திசுக்களின் இயக்கம் எதிர் திசையில் இருக்கும்.
 • உராய்வினால் ஏற்படும் காயம்.
 • தண்டுவட பகுதியில் ஏற்படும் காயம்.
 • புண்கள் உருவாக்கம் மற்றும் பாக்டீரியா வளர்ச்சிக்கு காரணமான ஈரப்பதம்.
 • நீர்ச்சத்துக் குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் உடல் பருமன் (குழந்தைகளில்).
 • உடலில் இயக்கம் இல்லாமை (எ.கா. பக்கவாதம், அறுவை சிகிச்சைக்குப் பின்).
 • எலும்பு முறிவின் போது பயன்படுத்தப்படும் வார்ப்பு.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நீங்கள் அல்லது உங்களை பராமரிக்கும் நபர் உங்களுக்கு படுக்கை புண்கள் இருப்பதை அறிந்தால், உங்களது மருத்துவருக்கு உடனடியாக தெரியப்படுத்தவும்.இந்நோய்க்கு அளிக்கப்படும் முதன்மையான சிகிச்சையானது, புண் ஏற்பட்ட பகுதியில் முழுமையான சுத்திகரிப்பு மற்றும் புண்களுக்கு கட்டு போடுதல், படுக்கை புண் ஏற்பட்டுள்ள பகுதியிலிருந்து நோயாளியை நிலைமாறிப் படுக்க போடுவதன் மூலம் ஒரே இடத்தில் தொடர்ந்து ஏற்படும் அழுத்தம் தவிர்க்கப்படுதல் போன்றவை ஆகும்.நோய்த்தொற்று இருந்தால் மேற்பூச்சு நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும்.படுக்கை புண்களின் தீவிர தன்மையைப் பொறுத்து இந்நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை காலமானது 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும்.

நீங்களாகவே உங்களை இந்த அழுத்தத்தினால் ஏற்படும் படுக்கை புண்களிலிருந்து பாதுகாக்க முடியும்.அதற்கான பாதுகாப்பு முறைகள் பின்வருமாறு:

 • சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் போது உங்கள் எடை நிலையை அடிக்கடி மாற்றிக் கொள்ளுங்கள்.
 • படுக்கையில் படுத்திருக்கும் போது அடிக்கடி நிலை மாறிப் படுத்தல்.
 • படுக்கை விரிப்பு சருமத்தில் தொடர்ந்து தேய்ப்பதின் காரணமாக ஏற்படும் உராய்வினால் உண்டாகும் காயத்தினை தடுத்தல்.
 • உங்கள் சருமத்தை தினசரி சோதித்தல்.
 • சுத்திகரிப்பு முகவர்களை கொண்டு சருமத்தை சுத்திகரித்தல்.
 • உலர்ந்த நிலையில் சருமத்தை வைத்திருத்தல்.
 • போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் மற்றும் ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்.மேற்கோள்கள்

 1. Daniel Bluestein et al. Pressure Ulcers: Prevention, Evaluation, and Management . November 15, 2008, Volume 78, Number 10; American Family Physician
 2. Nancy Carney. PRESSURE SORES Batten Disease Support and Research Association ; December 2011
 3. Minnesota Hospital Association; St. Paul, MN [Internet]; Preventing Pressure Ulcers (Bedsores)
 4. Karoon Agrawal, Neha Chauhan. Pressure ulcers: Back to the basics. Indian Journal of Plastic Surgery; Year : 2012, Volume : 45, Issue : 2, Page : 244-254
 5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Pressure Ulcers Among Nursing Home Residents: United States, 2004
 6. National Health Portal [Internet] India; Bedsores

படுக்கை (அழுத்தம்) புண்கள் டாக்டர்கள்

Dr Rahul Gam Dr Rahul Gam Infectious Disease
8 Years of Experience
Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 Years of Experience
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 Years of Experience
Dr. Anupama Kumar Dr. Anupama Kumar Infectious Disease
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

படுக்கை (அழுத்தம்) புண்கள் க்கான மருந்துகள்

Medicines listed below are available for படுக்கை (அழுத்தம்) புண்கள். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.