மோசமான நினைவகம் - Poor memory in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

May 08, 2019

March 06, 2020

மோசமான நினைவகம்
மோசமான நினைவகம்

மோசமான நினைவகம் என்றால் என்ன?

தகவலை சேமிப்பதிலும், மறுபரிசீலனை செய்வதிலும் எதிர் கொள்ளும் பிரச்சனை மோசமான நினைவகம் எனப்படுகிறது. உங்கள் சாவிகளின் இருப்பிடம் அல்லது இரசீதிற்கான பணம் செலுத்தப்பட்டதா அல்லது இல்லையா என்று குழப்பமடைதல், இது போன்ற விஷயங்களை எப்போதாவது ஒருமுறை மறப்பது சாதாரணமானது. ஒருவர் வாழ்நாள் முழுவதும் பரிபூரண நினைவகத்தை கொண்டிருத்தல் என்பது சாத்தியமில்லாதது. வயது-தொடர்பான நினைவக இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. டிரைவிங், உங்கள் வாழ்க்கையை வாழ்ந்த வீட்டிற்கு செல்லும் சாலை போன்ற மேலும் பல விஷயங்களை நீங்கள் மறக்க நேரிட்டால் சுகாதார பராமரிப்பு வழங்குநரை கலந்தாலோசிப்பது அவசியம், இது போன்ற நினைவக இழப்புகள் அடிப்படை நோயினை குறிப்பிடுகின்றது.

இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

வயது முதிர்ச்சியினால் ஏற்படும் மோசமான நினைவகம் என்பது ஒரு சாதாரண நிகழ்வே, ஆனால் பின்வரும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் அடிப்படை அறிவாற்றல் நோய் இருப்பதைக் குறிப்பிடுகின்றன:

  • ஒரே கேள்வியை திரும்ப கேட்பது.
  • அறிவுறுத்தல்களை பின்தொடர்தலில் ஏற்படும் சிரமம்.
  • பிரபலமான மக்கள் மற்றும் இடங்களை பற்றிய குழப்பம்.
  • பிரபலமான இடத்திற்கான திசையை மறந்துவிடுதல்.
  • பொதுவான உரையாடலில் ஏற்படும் சிரமம்.
  • மிக முக்கியமான மீட்டிங் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்தலை மறந்துவிடுதல்.
  • அதே வயதில் உள்ள மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அதிகமான நினைவகப் பிரச்சினைகளை எதிர்கொள்தல்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

மோசமான நினைவகத்திற்கான காரணங்களுள் அடங்குபவை பின்வருமாறு:

  • வயது முதிர்ச்சியடைதல், இது சாதாரணமானது.
  • அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியாவின் மற்ற வகைகள்.
  • பக்கவாதம்.
  • மூளையில் ஏற்படும் கட்டிகள்.
  • மன அழுத்தம்.
  • தலை காயங்கள்.
  • சில மருந்துகள், அதாவது மற்ற மருந்துகளினிடையில் உபயோகப்படுத்தும் ஆன்டிஅன்சைட்டி மருந்துகள், ஆன்டிடிப்ரஸென்ட்கள், ஆன்டி வலிப்பு மருந்துகள், கொலஸ்டிராலை குறைக்கும் மருந்துகள் போன்றவைகளாலும் இந்நிலை ஏற்படலாம்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

நோயறிதல், மோசமான நினைவகம் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிவதில் ஈடுபடுகிறது. கண்டறிதலுக்கென பரிந்துரைக்கப்பட்டிருக்கின்ற நடவடிக்கைகள் பின்வருமாறு:

  • மருத்துவ வரலாறு.
  • உடலியல் பரிசோதனை.
  • ஆய்வக சோதனைகள்.
  • உளவியல் மதிப்பீடு சோதனைகள் மூலம் நினைவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை அடையாளம் காணலாம்.
  • எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் மூளையின் எம்ஆர்ஐ ஆகிய சோதனைகள்.

இந்த சோதனைகள் மோசமான நினைவகம் ஏற்படுவதற்கான காரணம் வயது முதிர்ச்சியா அல்லது சில நோய்களின் விளைவினாலா என்பதை முடிவு செய்ய உதவுகின்றது.

சிகிச்சைமுறை முற்றிலும் மோசமான நினைவகத்தின் காரணத்தை சார்ந்தே அமைந்துள்ளது. பெரும்பாலான டிமென்ஷியாக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை, மேலும் டோனேபீஸில், ரிவாஸ்டிக்மைன், மெமாடைன் மற்றும் கிளாண்டமமைன் போன்ற மருந்துகள் அறிகுறியிலிருந்து தற்காலிகமாக நிவாரணம் பெறவே பரிந்துரைக்கப்படுகின்றன.

சிந்தனை திறனை ஊக்குவிக்கும் மருந்துகள்-இல்லாத சிகிச்சைகளும் பயனுள்ளதாக இருக்கின்றது. இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் குரூப் தெரபி மற்றும் ப்ரைன்-டீஸர் விளையாட்டுகள் போன்றவைகளை கொண்டது. 



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Memory.
  2. National Institute on Aging [Internet]: U.S. Department of Health and Human Services; Do Memory Problems Always Mean Alzheimer's Disease?.
  3. National Institute on Aging [Internet]: U.S. Department of Health and Human Services; Memory and Thinking: What's Normal and What's Not?.
  4. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Improving Memory. Harvard University, Cambridge, Massachusetts.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Memory loss.

மோசமான நினைவகம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மோசமான நினைவகம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.