கடைவாய் பல் வலி (மோலார் பல் வலி) - Molar Tooth Pain in Tamil

Dr Razi Ahsan

April 26, 2019

July 31, 2020

கடைவாய் பல் வலி
கடைவாய் பல் வலி

கடைவாய் பல் வலி (மோலார் பல் வலி) என்றால்  என்ன?

பற்கள், தாடை மற்றும் தாடையை சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் ஏற்படுகின்ற வலி பல் வலியினை குறிக்கின்றது.இது பொதுவாக பல் சிதைவின் விளைவினாலேயே ஏற்படுகின்றது. கடைவாய் பற்கள் என்பது வாயின் பிற்பகுதியில் அமைந்திருக்கக் கூடியவை.இத்தகைய பற்கள் மொத்தம் நான்கு இருக்கின்றன, அவை தாடையின் மேல் பகுதியில் இரண்டு மற்றும் கீழ் பகுதியில் இரண்டு என அமைந்திருக்கின்றன.இத்தகைய கடைவாய் பற்கள் சிலருக்கு வளராமலோ அல்லது நான்கு மோலார் பற்களும் உருவாகாமல் குறைவான பற்கள் உருவாகுதல் போன்றவை ஏற்படலாம்.ஒரு சிலருக்கு, இத்தகைய மோலார் பல் சாய்வாக வளர்வதால், சுற்றியுள்ள பற்களுக்கோ அல்லது ஈறுகளுக்கோ அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.இத்தகைய சாய்வான பல் வளர்ச்சி நேரும் போது அது வலிமிக்கதாக இருப்பதோடு அந்த பல்லை சுற்றியுள்ள பகுதியை சுத்திகரிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

மோலார் பல் வலியை சார்ந்த முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • மோலார் பல் அருகே இருக்கக்கூடிய தாடை விறைப்பாகவோ அல்லது வலிமிகுந்ததாகவோ இருத்தல்.
  • விழுந்குதலில் சிரமம், பல் துலக்குதல் மற்றும் வாயை திறக்கையில் அசௌகரியமாக உணர்தல்.
  • பல் சிதைவு.
  • நெருங்கி வளரக்கூடிய பற்கள்.
  • ஈறுகளில் சீழ் உருவாக்கம்.
  • கடைவாய் பல்லைச் சுற்றியுள்ள ஈறுகளில் ஏற்படும் தொற்று அல்லது அழற்சி.
  • துர்நாற்றம் ஏற்படுதல்.
  • அசௌகரியம்.
  • விஸ்டம் பல் மற்றும் அதற்கு அருகிலுள்ள பற்களின் இடையில் உணவு மற்றும் பாக்டீரியா திரண்டிருத்தல்.
  • நிணநீர் முனைகளில் வீக்கம் ஏற்படுதல்.
  • தவறான கோணத்தில் பல் வளரும் பட்சத்தில் நாக்கு, கன்னம், வாயின் மேல் அல்லது கீழ் பகுதியில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுதல்.
  • ஈறு நோய்.
  • காய்ச்சல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கடைவாய் பல் வலி ஏற்பட முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • பல் அடிக்கூழ்ப் பொருளில் ஏற்படும் அழற்சி (பல்லின் உட்புற அடுக்கு).
  • பல் சீழ்கட்டி (பாக்டீரியாவின் உருவாக்கம் மற்றும் தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருட்கள் பல்லின் மையத்தில் இருப்பது).
  • விலகியிருக்கும் ஈறுகள் மோலார் பல் வேர்களில் உணர்திறனை உண்டாக்கக்கூடியது.
  • சுகாதாரமின்மை.
  • சீழ் உருவாக்கம்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவர் கடையவாய் பல்லில் வலி ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்வதோடு எந்த மோலார் பல்லினால் வலி ஏற்படுகின்றது என்பதை அறிய எக்ஸ்-ரே சோதனையையும் பரிந்துரைக்கக்கூடும்.

கடைவாய் பல் வலி பின்வரும் முறைகளின் உதவியால் சிகிச்சையளிக்கப்படுகிறது:

  • ஓவர்-தி கவுண்டர் வலி நிவாரணிகள்.
  • ஆண்டிபயாடிக்ஸ் மருந்து பரிந்துரைக்கப்படுகின்றன.
  • தொற்றினால் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்தல்.
  • ஒருவேளை பல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய பல்லை அகற்றுதல் அவசியம்.
  • உப்பு கலந்த மிதமான சுடு தண்ணீரில் வாய் கொப்பளித்தல்.
  • ரூட் கேணல் சிகிச்சை.



மேற்கோள்கள்

  1. Nidirect [Internet]. Government of Northern Ireland; Causes of toothache .
  2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Wisdom teeth.
  3. Michigan Medicine: University of Michigan [internet]; Wisdom Tooth Problems.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Tooth abscess.
  5. National Health Service [Internet]. UK; Wisdom tooth removal.

கடைவாய் பல் வலி (மோலார் பல் வலி) டாக்டர்கள்

Dr. Anshumali Srivastava Dr. Anshumali Srivastava Dentistry
14 Years of Experience
Dr.Gurinder kaur Dr.Gurinder kaur Dentistry
18 Years of Experience
Dr. Ajay Arora Dr. Ajay Arora Dentistry
32 Years of Experience
Dr. Purva Agrawal Dr. Purva Agrawal Dentistry
8 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்