பாலுணர்வு உந்துதல் குறைவு - Low Libido in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

April 24, 2019

July 31, 2020

பாலுணர்வு உந்துதல் குறைவு
பாலுணர்வு உந்துதல் குறைவு

பாலுணர்வு உந்துதல் குறைவு என்றால் என்ன?

பாலுணர்வு உந்துதல் (லிபிடோ) என்பது உடலுறவில் நாட்டம் கொள்ளுதல் அல்லது பாலின்ப அவா ஆகும். பாலுணர்வு உந்துதல் குறைவு ஆண் பெண் ஆகிய இருபாலரிடமும் காணப்படுகிறது. இது உடலுறவு கொள்வதில் நாட்டம் குறைதல் அல்லது குறைந்த பாலுணர்ச்சியின் உந்துதலாக விவரிக்கப்படுகிறது. இந்த உணர்ச்சியை அதிகம் அல்லது குறைவு என்றெல்லாம் வரையறுக்கும் வகையிலான ஏற்கத்தக்க வரம்புகள் இல்லாதபோதும், உங்களால் பாலுணர்வு உந்துதல் குறைவை உணர முடியும். ஏனெனில், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவை பாதிக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பல்வேறு அறிகுறிகள் பாலுணர்வு உந்துதல் குறைவை குறிக்கின்றன; இதில் மிகவும் பொதுவானவை பின்வருமாறு:

  • பாலியல் எண்ணங்களோ கற்பனைகளோ அற்று இருத்தல்.
  • சீராட்டுதல், அன்பாகத் தழுவுதல் மற்றும் முன்னின்பம், சுய இன்பம் உட்பட்ட பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபாடு குறைதல்.
  • பாலுணர்வு உந்துதல் இல்லாததை நினைத்து கவலைப்படுதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பாலுணர்வு உந்துதல் குறைவுக்கு பங்களிக்கும் காரணங்கள் பல உள்ளன. இவை பின்வரும் வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன:

  • வயது – வயது முதிர்வதால் ஆண் பெண் ஆகிய இருவரிடத்திலும் பாலின ஹார்மோன்களின் அளவு குறைந்து ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாலின உந்துதல் வயது முதிர்ச்சி காரணமாக குறைவது இயல்பானதே ஆகும். இதேபோல், இரு பாலினர்களையும் பாதிக்கும் பிற சிக்கல்களில் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கம், உடல்நல பிரச்சினைகள் மற்றும் வயது தொடர்பான நிலைமைகள் ஆகியவை அடங்கும்.
  • பாலியல் ரீதியான பிரச்சினைகள் – இது ஆண் பெண் ஆகிய இருவரிடத்திலும் இருக்கக்கூடும். இது பாலுணர்வு உந்துதலை பாதிக்கக்கூடும். இதில் விறைப்பு குறைபாடு, அசாதாரண யோனி நிலைமைகள், புணர்ச்சிப் பரவசநிலை அல்லது பாலின்ப உச்சித தன்மை அடைய இயலாமை போன்றவை இதில் அடங்கும்.
  • உறவு ரீதியிலான பிரச்சினைகள் – வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள் பாலியல் தொடர்பில் ஆர்வத்தை இழக்கச் செய்து, அவர்களுக்கு இடையேயான பாலுணர்வு உந்துதலை குறைக்கக்கூடும். நம்பிக்கை, தகவல் பரிமாற்றம் மற்றும் பரிச்சயம் ஆகிய சில விஷயங்கள் எதிர்பாராத விதமாக பாலியல் வாழ்க்கையை கணிசமாக பாதிக்கக்கூடும்.
  • உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான சிக்கல்கள் – மன அழுத்தம், களைப்பு, மனச் சோர்வு மற்றும் பதட்டம் போன்றவை மனநிலையை பாதிக்கின்றன. இது பாலுணர்வு உந்துதல் மற்றும் பாலியல் ரீதியிலான உடல் நெருக்கம் கொள்ளும் நாட்டத்தை குறைக்கின்றன.
  • உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் – உடல் சார்ந்த பிரச்சனைகள் பாலுணர்வு உந்துதல் மீது  குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இதயப் பிரச்சினைகள், புற்றுநோய், தைராய்டு மற்றும் நீரிழிவு நோய் போன்றவை பாலுணர்வு உந்துதலைக் குறைக்கும். மேலும் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும்.
  • மருந்து மற்றும் சிகிச்சை – மருந்துகள், சிகிச்சை அல்லது போதை மருந்துகள் அல்லது மதுவிற்கு அடிமையாகிவிடுதல் பாலுணர்வு உந்துதலை பாதித்து அதனை குறைத்துவிடுகிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஒருவர் தனது பாலின ஆற்றல் அல்லது நாட்டத்தின் இழப்பு குறித்து கவலைக்கிடமாக உணரும் போது நோய் கணடறிதல் தொடங்குகிறது. இது மிகுந்த கவலையாக மாறும் போது, முதன்மையான நோய் கணடறிதல் பெரும்பாலும் முடிவடைகிறது. மருத்துவர்கள் இதனோடு தொடர்புடைய உடல் நல நிலைகள் மற்றும் மருந்தூட்டுத்தை பற்றி அறிவார். மூல காரணத்தை தீர்மானிக்கும் முன் நோயாளியின் மனநிலை மற்றும் உடல் நிலை ஆகியவற்றை சோதிப்பர். இது ஒரு சிக்கலான நிலை என்பதால், ஒரே ஒரு மூல காரணத்தை உறுதி செய்வது என்பது தந்திரமானதாக இருக்கலாம்.

சிகிச்சை பெரும்பாலும் காரணத்தை பொறுத்தே அமைகிறது. மருத்துவர்கள் வழக்கமாக மாற்றப்பட்ட அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரிந்துரை செய்யக்கூடும். இது மேம்படுத்தப்பட்ட உணவுத் திட்டங்கள், அதிக உடற்பயிற்சி, ஒழுங்கான தூக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்குகிறது. உறவுமுறை ஆலோசனை மற்றும் ஜோடி சிகிச்சை தீர்க்கப்படாத பிரச்சினைகள் மூல காரணத்தை அறிய பரிந்துரைக்கப்படுகிறது. மது அல்லது போதை மருந்து பயன்பாட்டில் இருந்து மீளும் சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம். பாலியல் ஹார்மோன்கள் கணிசமாக குறைந்து காணப்படும் சில சமயங்களில், ஹார்மோன் சிகிச்சை தேவைப்படலாம். பல சந்தர்ப்பங்களில், பக்க விளைவுகளை குறைத்து பாலுணர்வு உந்துதலை மீட்க மருந்தூட்டத்தில் மாற்றங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. Endocrine Society. [Internet]. Washington, DC, United States; Decreased Libido.
  2. American College of Obstetricians and Gynecologists. Women's Health Care Physicians [internet], Washington, DC; Your Sexual Health.
  3. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Loss of libido (reduced sex drive).
  4. Corona G. et al. J Sex Med. 2013 Apr;10(4):1074-89. PMID: 23347078.
  5. Keith A. Montgomery. Sexual Desire Disorders. Psychiatry (Edgmont). 2008 Jun; 5(6): 50–55. PMID: 19727285.

பாலுணர்வு உந்துதல் குறைவு க்கான மருந்துகள்

Medicines listed below are available for பாலுணர்வு உந்துதல் குறைவு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.