ஹைபர்சோம்னியா (மிகு உறக்கம்) - Hypersomnia in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

December 10, 2018

July 31, 2020

ஹைபர்சோம்னியா
ஹைபர்சோம்னியா

ஹைப்பர்சோம்னியா (மிதமிஞ்சிய தூக்கம்) என்றால் என்ன?

ஹைப்பர்சோம்னியா என்பது ஒரு நாள்பட்ட நரம்பு மண்டல கோளாறு ஆகும், இதனால் ஒருவர் நீண்ட நேரம் இரவில் உறங்குதல் அல்லது அதிக பகல்நேர உறக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம். அதிகமான உறக்கம் அல்லது தொந்தரவான உறக்கம் காரணமாக சோர்வாக உணர்கிறவர்களைப் போல் அல்லாமல், இந்நோயால் பாதிக்கப்பட்டவர் ஒரு முழுமையான இரவு தூக்கத்திற்குப் பிறகும் கூட பகலில் கட்டாயமாக அதிக நேரம் தூங்க வேண்டும் போன்ற உணர்வினை பெற்றிருப்பர். ஹைப்பர்சோம்னியா பெரும்பாலும் பிற நோய்களுடன் தொடர்புடையது மற்றும் இது நோயாளிகளின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மிகவும் பொதுவான அறிகுறிகள்:

  • அதிக பகல்நேர தூக்கம் அல்லது நிலையான உறக்க பிரச்சனை.
  • பொருத்தமற்ற நேரங்களில், குறிப்பாக பணி அலுவல்களில், ​​உண்ணும் போது அல்லது உரையாடல்களின் மத்தியில் கூட ஒருவர் அடிக்கடி தூங்க வேண்டும் என்பது போல் உணர்தல்.
  • பகலில் தூங்குவது,மிதமிஞ்சிய தூக்கம் சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறிகளை குறைக்காது, மற்றும் அனைவரிடையேயும் குழப்பம் அல்லது பிடிப்பற்ற நிலை போன்ற பிரச்சனைகளை ஒருவர் நீண்ட நேர தூக்கத்திற்கு பின்பும் கூட உணரலாம்.

மற்ற அறிகுறிகள்:

  • கவலை.
  • அதிகமான எரிச்சல்.
  • ஓய்வின்மை.
  • குறைவான உடல் ஆற்றல்.
  • குறைந்த சிந்தனையாற்றல் மற்றும் நாள் முழுவதும் தொடர்ந்து பேசுதல்.
  • பசியின்மை.
  • குடும்பம் அல்லது சமூக உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையை நடத்துவதில் சிக்கல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெரும்பாலான நரம்பியல் கோளாறுகளைப் போலவே, ஹைப்பர்சோம்னியாவிற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், இது மூளையில் ஒரு ஹார்மோனுடன் தொடர்புகொள்வதோடு, உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு உற்பத்தியே காரணம் என்பதற்கு அதிகமான சான்றுகள் உள்ளன.

பொதுவான காரணங்கள் அடங்கியவை:

பிற காரணங்கள் அடங்கியவை:

  • கட்டிகள்.
  • மூளை காயம்  அல்லது மத்திய நரம்பு மண்டலத்தில் காயம் ஏற்படுதல்.
  • சில குறிப்பிட்ட மருந்துகள் அல்லது சில மருந்துகள் உட்கொள்ளுதலை நிறுத்துதல் போன்றவை, மனஅழுத்தம் தடுப்பிகள், கவலை குறைக்கும் மருந்துகள் மற்றும் ஒவ்வாமை முறிதல் போன்ற மேலும் பல மருந்துகள் மிகுந்த உறக்கத்திற்கு வழிவகுக்கலாம்.
  • பன்மடங்கு திசு தடிமனாதல், மனச்சோர்வு, மூளையழற்சி, வலிப்பு அல்லது உடல் பருமன் போன்ற நோய்கள் ஹைப்பர்சோம்னியா ஏற்படுவதற்கு காரணமாகலாம்.
  • இந்த ஹைப்பர்சோம்னியா பரம்பரை நோயாக இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இளம்பருவத்திற்கு முன்னர் ஹைப்பர்சோம்னியாவை கண்டறிதல் முக்கியமாகும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

ஒரு குடும்ப உறுப்பினரின் முன்னிலையில் அறிகுறிகளை மதிப்பீடு செய்து. ஒரு முழுமையான மருத்துவ அறிக்கையை எடுத்தல் மற்றும் தூக்க பழக்கம் நோயறிதலை கண்டறிய உதவுகிறது.

  • அதிக தூக்கத்திற்கு வழிவகுக்கிற மருந்துகள் உட்கொள்ளுல் நிறுத்தப்பட வேண்டும்.
  • அடிப்படை மருத்துவ நிலையை கண்டறிய உங்களுக்கு நோயறிதல் சோதனைகள் அறிவுறுத்தப்படும்.

ஹைப்பர்சோம்னியா ஆய்வுகள் அடங்கியவை:

  • முழுநேர இரவு தூக்க சோதனை அல்லது பாலிசோம்னோகிராபி (பி.எஸ்.ஜி) சோதனை.
  • பலமுறை தூக்கம் செயலற்ற நிலை சோதனை (எம்.எஸ்.எல்.டி).
  • விழித்திருக்கும் தன்மைக்கான பராமரிப்பு சோதனை.

அறிகுறிக்கு தகுந்த நிவாரணத்தை வழங்குவதன் மூலம், நோய்க்கான அடிப்படைக் காரணத்தைக் கையாளுவதன் அடிப்படையிலும் மிதமிஞ்சிய தூக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது:

  • உளச்சோர்வு போக்கிகள் (ஆண்டி-டிப்ரசண்ட்ஸ்) மற்றும் விழித்திருக்கும் தன்மையை ஊக்குவிக்கும் காரணிகள் ஆகிய மருந்துகள் வழங்கப்படுகிறது.
  • புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை (சி.பி.டி) கூட மிகையுறக்கம் கொண்ட சில நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.

சுய பராமரிப்பு:

  • பின்னிரவில் வேலை செய்தல் அல்லது இரவில் சமூக ஊடகங்களை உபயோகித்தல்  போன்ற தூக்க முறைகளைத் தொந்தரவு செய்யும் காரியங்களை தவிர்க்கவும்.
  • மது மற்றும் காஃபின் ஆகியவற்றை தவிர்த்தல்.



மேற்கோள்கள்

  1. Hypersomnia Foundation. [Internet]. Atlanta, GA. About Idiopathic Hypersomnia.
  2. National Institute of Neurological Disorders and Stroke. [Internet]. U.S. Department of Health and Human Services; Hypersomnia Information Page.
  3. Yves Dauvilliers. et al. Hypersomnia. Dialogues Clin Neurosci. 2005 Dec; 7(4): 347–356. PMID: 16416710
  4. National Center for Advancing and Translational Sciences. [Internet]. U.S. Department of Health and Human Services; Idiopathic hypersomnia.
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Idiopathic hypersomnia.

ஹைபர்சோம்னியா (மிகு உறக்கம்) டாக்டர்கள்

Dr. Vinayak Jatale Dr. Vinayak Jatale Neurology
3 Years of Experience
Dr. Sameer Arora Dr. Sameer Arora Neurology
10 Years of Experience
Dr. Khursheed Kazmi Dr. Khursheed Kazmi Neurology
10 Years of Experience
Dr. Muthukani S Dr. Muthukani S Neurology
4 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

ஹைபர்சோம்னியா (மிகு உறக்கம்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஹைபர்சோம்னியா (மிகு உறக்கம்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹192.0

Showing 1 to 0 of 1 entries