தலை மற்றும் கழுத்து புற்றுநோய் - Head and neck cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 10, 2018

July 31, 2020

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்
தலை மற்றும் கழுத்து புற்றுநோய்

தலை மற்றும் கழுத்து புற்றுநோய்கள் என்றால் என்ன?

தலை மற்றும் கழுத்து பகுதி நிறைய உறுப்புகளை சூழ்ந்துகொண்டிருக்கின்றன, அவற்றில் வாய், மூக்கு, மூளை, உமிழ் நீர் சுரப்பிகள், மடலிடைக் குழிவுகள், தொண்டை மற்றும் நிணநீர் முனைகள் போன்றவைகளும் அடங்கும்.இதனால், இவை மிகவும் பொதுவான மாறுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய 6ஆவது இடத்திலிருக்கும் புற்றுநோய்களாக கருதப்படுவதோடு, உலகளவிலிருக்கும் மொத்த புற்றுநோய் வழக்குகளில் 6% வழக்குகள் இந்த புற்று நோயினாலேயே பாதிக்கப் பட்டிருக்கின்றன.இந்நோயினால் பெரும்பாலும் பாதிக்கபடக்கூடியது வாய் பகுதி மற்றும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு இந்த புற்றுநோய்கள் வளர்வதற்கான அதிக ஆபத்து இருக்கின்றது.

இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கழுத்து மற்றும் தலை பகுதிகளில் நிறைய கட்டமைப்புகள் அமைந்திருப்பதால், இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களும் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளை சார்ந்ததாகவே இருக்கின்றது.இருப்பினும், அவற்றில் அடங்கும் சில பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

 • கழுத்தில் ஏற்படும் வீக்கம்.
 • நீண்ட நாள் இருக்கும் இருமல்.
 • எடை இழப்பு (மொத்த உடல் எடையிலிருந்து >10% குறைவு).
 • டிஸ்ஃபேஜியா (விழுங்குவதில் ஏற்படும் சிரமம்).
 • கழுத்து பகுதியில் இருக்கும் நிணநீர் கணுக்கள் பெரிதடைதல்.
 • தலை வலி.
 • முகத்தில் ஏற்படும் உணர்வின்மை.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

நம் உடலில் இருக்கும் எந்த உயிரணவும் மரபணு பிறழ்ச்சியின் காரணமாக புற்றுநோய் சார்ந்ததாக மாறும்.இந்த மரபணு பிறழ்ச்சி என்பது பல காரணிகளால் ஏற்படுகின்றது மற்றும் அவற்றின் காரணங்களைக் குறிப்பிடுவது என்பது மிக கடினம்.இந்த ஆபத்து காரணிகளுள் அடங்குபவை பின்வருமாறு:

 • புகை இலை பயன்பாடு.
 • மது அருந்தும் பழக்கம்.
 • வலுவான குடும்ப வரலாறு.
 • வயது முதிர்ந்த பருவத்தில்.
 • ஆண் பாலினம்.
 • மோசமான ஊட்டச்சத்து நிலை.
 • தூசி, உலோக துகள்கள் மற்றும் கதிரியக்க பொருட்களின் வெளிப்பாடு.
 • தீங்கு விளைவிக்கக்கூடிய எக்ஸ்-கதிர்களின் வெளிப்பாடு.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகிச்சை முறை யாவை?

மருத்துவ பரிசோதனையுடன் சேர்ந்த மருத்துவ அறிக்கை பொதுவாக இந்நோய் கண்டறிதலுக்கான குறிப்பினை வழங்கக்கூடியது. இருப்பினும், சிகிச்சை முறைகளை தீர்மானிக்கக்கூடிய முக்கிய சோதனையான கட்டி-முனை-மெட்டாஸ்டாடிஸ் நிலைப்பாட்டின் (டிஎன்எம்)மூலம் இந்த புற்று நோயை வகைப்படுத்தவதற்காக சில துளையிடும் மற்றும் துளையிடப்படாத சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

 • இரத்த சோதனைகள்-அடிப்படை நோய் நிலைகளை வெளிப்படுத்த வழக்கமான இரத்த பரிசோதனைகள் மேற்கொள்தல் அவசியம்:
  • முழுமையான இரத்தஎண்ணிக்கை (சிபிசி).
  • கல்லீரல் செயல்பாடு சோதனை.
  • சிறுநீரக செயல்பாடு சோதனை.
 • சிடி ஸ்கேன்- தலை மற்றும் கழுத்து பகுதிக்கான சிடி ஸ்கேன் புற்று நோய் தாக்கத்தின் வீரியத்தை பற்றிய யோசனையை கொடுக்கும்.
 • பிஇடி ஸ்கேன்- பிஇடி ஸ்கேன் என்பது சற்று தூரம் தள்ளியிருக்கும் உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் நோய் தாக்கத்தை விவரிப்பதற்கு மிக முக்கியமாக செய்யப்படும் சோதனை.
 • எம்ஆர்ஐ ஸ்கேன்- புற்று நோயின் வீரியத்தை தீர்மானிப்பதற்கு சிடி ஸ்கேனை விட துல்லியமான அறிக்கையை கொடுக்கக்கூடியது.
 • ஃபைன் நீடில் ஆஸ்பிரேஷன் சைட்டாலஜி(எப் என் ஏ சி)-அல்ட்ராசௌண்ட் வழிகாட்டுதலினாலோ அல்லது சிடி ஸ்கேன் வழிகாட்டுதலினாலோ புற்று நோய்க்கான புராண வகை விவரங்களை தெரிந்து கொள்வதற்காக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உயிரணுவில் திசு பரிசோதனை செய்ய உதவும் முறை.

இந்த புற்று நோய்களுக்கான சிகிச்சையானது மற்ற புற்றுநோய்க்கான சிகிச்சைகளை போன்று அறுவை சிகிச்சை, கீமோதெரபி, இம்முனோதெரபி, அல்லது ரேடியேஷன்தெரபி அல்லது இந்த தெரப்பிகளின் கூட்டு சேர்க்கையான சிகிச்சை முறைகள் ஆகியவைகள் ஈடுபாடுகளையும் கொண்டது.

 • அறுவை சிகிச்சை - இந்த புற்று நோய்களுக்கான முக்கிய சிகிச்சை முறைகளில் ஒன்று, பாதிக்கப்பட்ட முழுமையான கட்டமைப்புகளை நீக்குதல் அல்லது அறுவை சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட உயிர் அணுக்கள் அகற்ற படுதல்.
 • கீமோதெரபி - இம்முன்னோதெரபியுடன் கூடிய கீமோதெரபி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அணுக்களை கொல்வதற்கு உதவுகிறது.சில வழக்குகளில், புற்று நோய் நிலையின் தாக்கத்தை குறைக்க அறுவை சிகுச்சைக்கு முன் கீமோதெரபி அளிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட புற்றுநோய் அணுக்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படுகின்றன.
 • ரேடியேஷன் தெரபி - ரேடியேஷன் தெரபி என்பது பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளில் உள்ள புற்று நோய் அணுக்களை கதிரியக்கவீச்சினால் குறைப்பது.மேற்கோள்கள்

 1. Emory Winship Cancer Institute. [Internet]. Georgia, United States; Head and Neck Cancer.
 2. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Head and neck cancer.
 3. National Comprehensive Cancer Network. [Internet]. Pennsylvania, United States; NCCN Guidelines for Detection, Prevention, & Risk Reduction..
 4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Head and Neck Cancer—Patient Version.
 5. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Head and Neck Cancers

தலை மற்றும் கழுத்து புற்றுநோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for தலை மற்றும் கழுத்து புற்றுநோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.