டிமென்ஷியா - Dementia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 30, 2018

July 31, 2020

டிமென்ஷியா
டிமென்ஷியா

டிமென்ஷியா என்றால் என்ன?

டிமென்ஷியா என்பது அறிவாற்றல் செயல்பாட்டில் ஏற்படும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பண்பிடப்படுக்கூடிய ஒரு மருத்துவ நோய்க்குறி. இது பல நோய்களில் ஏற்படும் அறிகுறிகளின் தொகுப்பை இதற்கான அறிகுறிகளாக வெளிப்படுத்துகிறது . இது அறிவாற்றல் இழப்பு மற்றும் நடத்தைக்கான செயல்பாடுகள் போன்றவைகளை இழக்கச்செய்வதினால் ஒருவரின் தினசரி வாழ்க்கைமுறையில் பாதிப்பு ஏற்படுகிறது . இது உலகளவில் உச்சகட்ட நிலைமையாக கருதப்படுவதோடு சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஏதோ ஒரு வகையில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

டிமென்ஷியாவின் அறிகுறிகள் பொதுவாக ஆரம்பத்தில் மறைவாக இருந்து படிப்படியாக முன்னேற்றம் அடையும்.

  • பொதுவாக இதை சார்ந்த அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
    • குறைந்த கற்றல் திறன்.
    • நினைவாற்றலின் வீழ்ச்சி.
    • தனி மனிதனின் சிறப்பியல்பு மற்றும் மனநிலை மாற்றம்.
    • மனோவியல் செயல்பாடு குறைதல்.
  • ஆரம்ப நிலை அறிகுறிகள்: மன அழுத்தம் மற்றும் அக்கறையின்மை.
  • இடை நிலை அறிகுறிகள்: குழப்பம், எரிச்சல், ஏமாற்றம் மற்றும் தவிப்பு.
  • கடைசி நிலை அறிகுறிகள்: சுயக் கட்டுப்பாடின்மை, நடையில் ஒழுங்கின்மை, விழுங்குவதில் ஏற்படும் சிரமம் மற்றும் தசை பிடிப்பு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

நரம்பு செல்களில் ஏற்படும் விரிவான சேதமே டிமென்ஷியாவின் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.

அல்சைமர்'ஸ் நோயினால் குறுகிய-காலத்திற்கு ஏற்படும் மறதியே இதன் மிகப் பொதுவான காரணம் ஆகும்.

டிமென்ஷியாவின் மற்ற பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • இது மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உண்டாகும் சேதத்தினால் ஏற்படுகிறது.
  • லூயி உடல் டிமென்ஷியா: லூயி உடல்கள் என்பது ஒருவரின் அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய புரதத்தின் அசாதாரண குவிதல் ஆகும்.
  • முன்னோடிமும்பியல் டிமென்ஷியா:  ஆளுமை, மொழி மற்றும் நடத்தையை கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் உள்ள  நரம்பின் செல்களில் ஏற்படும் சிதைவு.
  • கலப்பு டிமென்ஷியா: 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மேலே-குறிப்பிட்டுள்ள டிமென்ஷியா இருக்கிறது என ஆய்வுகள் அறிவுறுத்துகின்றன.
  • மற்ற அசாதாரணமான காரணங்கள்: ஹன்டிங்டன்'ஸ் நோய், பார்க்கின்சன்'ஸ் நோய், அதிர்ச்சியூட்டும் மூளை காயம், வளர்சிதை மாற்றம் மற்றும் எண்டோக்ரின் கோளாறுகள், மருந்துகள், விஷம் மற்றும் மூளையில் ஏற்படும் கட்டிகள் ஆகியவைகளின் எதிர்மறையான விளைவுகள்.

டிமென்ஷியாவை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் உடலியல் பரிசோதனைகள் டிமென்ஷியாவின் கண்டறிதளுக்கு  தேவையானவை.

மருத்துவரை சந்திக்க நேரிடும் போது அறிவாற்றலின் செயல்பாடு பற்றி மதிப்பீடு செய்யப்படுகிறது, ஆனாலும் கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

சிறிய-மனநிலை பரிசோதனை (MMSC) அறிவாற்றல் செயல்பாட்டினை மதிப்பிடுவதற்கு மிக பரவலாக பயன்படுத்தப்படும் பரிசோதனை.

மேலும் சோதனைகள் தேவையெனில், பின்வரும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம்:

  • இரத்த பரிசோதனைகள்.  
  • காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) அல்லது மூளையின் சிடி ஸ்கேன்.
  • மூளையின் மின்னலை வரவு சோதனை/எலெக்ட்ரனோசெபாலோகிராஃபி (EEG).

சிகிச்சையுடன் கூடிய மருந்துகள் மிக குறைந்த பலனையே காண்பிக்கும்.  நரம்புகளுக்கு குறிப்புகளை அனுப்பும் இரசாயனங்களை அதிகரிக்கும் காரணத்திற்காகவே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆரம்ப மற்றும் நடுத்தர கட்ட டிமென்ஷியாவிற்கு மட்டுமே இவைகள் பயனுள்ளதாக இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

மனஅழுத்தத்திற்கான மருந்துகள் தூக்கமின்மைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்டிசைகோடிக்குகளை பயன்படுத்தும்போது இறப்பிற்கான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

டிமென்ஷியா நோயாளிகளை சமாளிக்க ஆதரவான கவனிப்புகளே முக்கிய பங்குவகிக்கிறது. இதன் அறிகுறிகள் அதிகரிக்க உதவி தேவைப்படுதலும் அதிகரிக்கிறது.



மேற்கோள்கள்

  1. EL Cunningham et al. Dementia. Ulster Med J. 2015 May; 84(2): 79–87. PMID: 26170481
  2. National Institute on Aging. What Is Dementia? Symptoms, Types, and Diagnosis. U.S Department of Health and Human Services. [Internet]
  3. Adrianne Dill Linton. Introduction to Medical-Surgical Nursing. Elsevier Health Sciences, 2015. 1408 pages
  4. Health On The Net. What causes dementia?. [Internet]
  5. Alzheimer's Association. Alzheimer's and Dementia in India. Chicago, IL; [Internet]
  6. National institute of neurological disorders and stroke [internet]. US Department of Health and Human Services; Dementia Information

டிமென்ஷியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for டிமென்ஷியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.