ஆஸ்துமா (ஈழை நோய்) - Asthma in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)

December 10, 2018

March 06, 2020

ஆஸ்துமா
ஆஸ்துமா

சுருக்கம்

ஆஸ்துமா என்பது நுரையீரலில் மூச்சுக்குழாய்களில் ஏற்படும் சுருக்கத்தினால் (ப்ராஞ்சி) உண்டாகும் ஒரு சுவாச கோளாறு ஆகும். இது ஒரு நாள்பட்ட உடல்நல பிரச்சனை ஆகும். இது மரபணு வழியாக பரவக்கூடியது. இந்த நோயினால் சுவாச பாதையில், பூனை அல்லது நாயின் ரோமம், தூசி, பூவின் மகரந்தம், கரப்பான் பூச்சி (கற்று மாசு, பல்வேறு இரசாயனங்கள், வாசனை திரவியங்கள் அல்லது வலுவான வாசனையுள்ள வர்ணங்கள், புகையிலை, வானிலை மாற்றம், உடற்பயிற்சி, ஆஸ்பிரின் கொண்டிருக்கும் மருந்துகள், செயற்கைப் உணவு பாதுகாப்புகள்) போன்ற ஏதேனும் படுவதினால் அழற்சி முதல் எரிச்சல் வரை ஏற்படலாம். இது போன்ற ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுக்குழாயின் உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தசைகளில் ஒடுக்கம் உண்டாகி மூச்சுவிட முடியாமை, இருமல், மார்பில் இறுகிய உணர்வு, மூச்சு திணறல் (சுவாசிக்கும் போது மார்பில் ஒலி கேட்டல்) போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.   

 

பொதுவாக வீட்டிற்குள்ளேயே ஒவ்வாமை அறிகுறிகள் (படுக்கை விரிப்புக்களில் உள்ள தூசி, தரைவிரிப்புகள், மகரந்தம், செல்லப்பிராணிகளில் உள்ள தூசி) கொண்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா இருக்கிறது, இது அவர்களை நோயுற்றவர்களாக பள்ளிக்கு விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருக்க வைக்கிறது. ஆஸ்துமாவைக் குணப்படுத்த முடியாது என்பதால், கடுமையான தாக்குதல்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும் கடுமையான தாக்குதல்கள் அடிக்கடி உண்டாவதை குறைப்பதற்கும் ஆஸ்துமா சிகிச்சை உதவும். உறிஞ்சும் ஸ்டெராய்டுகள், ப்ரொன்சோடிலேடேர்ஸ் (தசைகளை நிதானப்படுத்துதல் மற்றும் காற்று குழாய்களை திறக்கும் மருந்துகள்) மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள், பொதுவாக ஆஸ்த்துமாவின் சிகிச்சையில் பரிந்துரைக்கப்படுகின்றன.  கூடுதலாக, சுய-பராமரிப்பு: உங்களுக்கு அழற்சி ஏற்படுத்தும் காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றை தவிர்தல் போன்றவை; மூச்சு திணறல் ஏற்படும்போது உடனடியாக எடுத்துக்கொள்ள மருந்துகளை தயாராக வைத்துக் கொள்ளுதல்; மற்றும் சுவாச பயிற்சிகள் போன்றவை கணிசமாக ஆஸ்துமாவுடன் போராட உதவும்.

ஆஸ்துமா (ஈழை நோய்) அறிகுறிகள் என்ன - Symptoms of Asthma in Tamil

ஆஸ்துமாவின் அறிகுறிகள் நுரையீரலில் உள்ள காற்று தசைகளின் சுருக்கத்தினால் ஏற்படுகின்றன. அவை;

  • மூச்சுத்திணறல் அல்லது சுவாசிக்க முடியாமை
    ஆஸ்துமா கொண்டவர்கள் பொதுவாக மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சு விட முடியாமல் அல்லது மூச்சு காற்றிற்கு துடித்தல் போன்று உணர்கின்றனர், அதுவும் குறிப்பாக ஆஸ்த்துமா அதிகரிக்கும் போது.
  • மூச்சுத்திணறல்(வீசிங்)
    குறுகிய மூச்சுப் பாதை வழியாக மூச்சுகாற்று செல்ல முடியாமல் அடைத்து எதிர்பு ஏற்படுவதன் காரணமாக சத்தமாக ஒலி ஏற்படுவது வீசிங் எனப்படுகிறது. ஆஸ்துமா லேசாக இருக்கும் போது, ஒரு நபருக்கு மூச்சினை வெளிவிடும்போது பொதுவாக வீசிங் ஏற்படுகிறது. ஆஸ்துமா கடுமையாக இருக்கும் போது, ஒரு நபருக்கு மூச்சினை உள்ளிளுக்கும் போது கூட வீசிங் ஏற்படுகிறது. மிகவும் கடுமையாக மற்றும் தீவிரமான நிகழ்வுகளில், மூச்சுத்தடை மற்றும் மூச்சு குழயில் முழுவதும் சுறுக்கம் ஏற்பட்டு வீசிங் முற்றிலுமாக தடை படுகிறது. சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், இதய செயலிழப்பு, மற்றும் குரல் வளைவு செயலிழப்பு போன்ற மற்ற உடல்நலப் பிரச்சினைகளாளும் வீசிங் உண்டாகும். எனவே, பல்வேறு ஆய்வுகள் மூலம் ஆஸ்துமா நோயை கண்டறிவது அவசியம்.
  • இருமல்
    இருமல் ஆஸ்துமா, குறிப்பாக உடற்பயிற்சியினால்-தூண்டப்பட்ட ஆஸ்துமா மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இது உலர்ந்த மற்றும் உற்பத்தி அல்லாதது ஆகும். 
  • மார்பு இறுக்கம்
    மார்பில் உண்டாகும் வலி அல்லது இறுக்கம் சில சமயங்களில் ஆஸ்துமாவின் ஒரே அறிகுறியாகும், குறிப்பாக உடற்பயிற்சியினால்-தூண்டப்பட்ட ஆஸ்துமா மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் ஆஸ்துமாவின் ஒரே அறிகுறியாகும்.
Tulsi Drops
₹288  ₹320  10% OFF
BUY NOW

ஆஸ்துமா (ஈழை நோய்) சிகிச்சை - Treatment of Asthma in Tamil

ஆஸ்துமா சிகிச்சை, தீவிர தாக்குதலுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும், தொடர்ச்சியான கடுமையான தாக்குதல்களைத் தடுக்கவும், நீண்டகாலத்திற்கு நிர்வகிப்பதற்கும் உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

விரைவான நிவாரணம் (நிவாரண மருந்துகள்)

இவை மீட்பு மருந்துகள் என்றும் அறியப்படுகின்றன. இவை ஆஸ்த்துமாவின் கடுமையான அத்தியாயங்களின் துன்பகரமான அறிகுறிகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்படுகின்றன. ஓடுதல் அல்லது குளிர்ந்த வானிலை பயிற்சிகள்(பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி) போன்ற பயிற்சிகள் செய்யும்போது  உடற்பயிற்சியால் தூண்டப்பட்ட ஆஸ்த்துமாவால் பொதுவாக ஏற்படும் அறிகுறிகளின் கடுமையான வெளிப்பாடினை தடுக்க, உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் வழக்கமாக பரிந்துரைக்கிறார்கள். விரைவு நிவாரண மருந்துகள் உடனடியாக சுவாசக்குழாய்களை  சுற்றியுள்ள மற்றும் உட்புற தசைகளை தளர்த்துவதன் மூலம் ஆஸ்துமாவால் ஏற்படும் துயரத்தில் இருந்து மீட்கிறது.

கடுமையான ஆஸ்த்துமா தாக்குதலின் அசௌகரியமான அறிகுறிகளில் இருந்து விரைவான நிவாரணம் கொடுக்க மீட்பு மருந்துகளே-பீடா-அகொனிஸ்ட்ஸ் முதல் தேர்வு ஆகும். இந்த உறிஞ்சக்கூடிய மருந்துகள் மூச்சுகுழாயில் உடனடியாக

நீர்ப்பு தன்மையை ஏற்படுத்துகிறது. அல்பெட்டெரால், லெவல்புட்டெரால், மற்றும் பிர்புட்டெரால் ஆகியவற்றை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் நிவாரண மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கும்போது நீண்ட கால ஆஸ்துமா மேலாண்மை மருந்துகள் நிறுத்தப்படக்கூடாது. ஒரு வாரத்திற்கு இரண்டு தடவைக்கும் மேலாக விரைவான நிவாரண மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

நீண்ட கால கட்டுப்பாடு (கட்டுப்பாட்டாளர் மருந்துகள்)

  • உள்ளிழுக்கப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகள்
    ஆஸ்துமாவின் நீண்ட கால சிகிச்சையின் முதல் விருப்பம் இது. அவை மூச்சுக்குழாய்களில் உண்டான அழற்சி மற்றும் மூச்சுக்குழாய் பாதைகளை குருகளடைய செய்யும் வீக்கங்களை குறைக்கின்றன(எ.கா.புளூட்டிகசோன், புடேசோனைட், மோமடஸோன், பெக்ளோமெதாசோன் மற்றும் ப்ரிட்னிசோலோன்).
  • உள்ளிழுக்கப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் நீண்ட நேரம் செயல்படும் பீட்டா-அகோனிஸ்ட்கள்
    நீண்ட நேரம் செயல்படும் பீட்டா-ஆகோன்ஸ்டுகள் (LABA) மென்மையான தசைகளை தளர்த்தி, மூச்சுக்குழல்களை திறந்தே வைத்திருக்க உதவுகிறது. சில நேரங்களில், இந்த மருந்துகள் உடற்பயிற்சியினால்-தூண்டப்பட்ட ஆஸ்துமா மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், மருத்துவர் எப்போதும் LABA மருந்துகளை ஆஸ்துமாவிற்கான நீண்ட கால சிகிச்சையில் ஒரு உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டு-டன் சேர்த்தே பரிந்துரைப்பார். குறுகிய-நடிப்பு பீட்டா-அகோனிஸ்டுகள் மற்றும் உள்ளிழுக்கப்படும் ஸ்டெராய்டுகள் கடுமையான தாக்குதலின் அறிகுறிகளைத் தடுக்காதபோது இந்த கலவை பயன்படுத்தப்படுகிறது. ஃப்லுடிகஸொன் மற்றும் ஸல்மெடெரோல், ஃப்லுடிகஸோன் மற்றும் விலன்டேரோல், புட்ஸொனிட் மற்றும் ஃபொர்மொடெரோல், ஆகியவை கலவையின் சில உதாரணங்கள்.
  • நீண்ட நேரம் செயல்படும் அன்டிகொலினெர்ஜிக்ஸ்
    இவை உள்ளிழுக்கப்படும் மருந்துகள், மென்மையான தசைகள் தளர்த்துவதற்கு பராமரிப்பு மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் டைட்டோட்ரோபியம் மற்றும் இப்ராட்ரோபியம் ஆகியவை அடங்கும். மருந்துகளின் செயல்திறனை அதிகரிக்க மருத்துவர்கள் சில நேரங்களில் இரண்டு அன்டி-கொலினெர்ஜிக் மருந்துகளின் கலவையை பரிந்துரைக்கின்றனர்.
  • மெத்தில்சாந்தைன்ஸ்-கள்
    தியோபிலின் போன்ற மெத்தில்சாந்தைன்ஸ்-கள், இரவு நேரங்களில் ஏற்படும் ஆஸ்துமாவின் ஆபத்துகளைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
  • லுகோட்டிரைன் ஏற்பு எதிர்ப்பிகள் அல்லது லுகோட்டிரைன் மாற்றிகள்
    இவை வாய்வழி மருந்துகள், அவை ப்ரோன்சோஸ்பாசம், அலற்சி மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட உதவுகின்றன. இவற்றுள் மொன்டெலுகாஸ்ட் மற்றும் ஜஃபிர்லுகாஸ்ட் ஆகியவை அடங்கும்.
  • மாஸ்ட்-செல் நிலைப்படுத்தி
    அவை அலற்சியை குறைப்பதில் உதவுகின்றன, இதனால் குளிர் காற்று மற்றும் உடற்பயிற்சியின் வெளிப்பாடு காரணமாக உண்டாகும் கடுமையான ஆஸ்த்துமா அத்தியாயங்களை கட்டுப்படுத்துகிறது (எ.கா, க்ரோமோலின் சோடியம்).
  • நோய் எதிர்ப்பு தெரப்பி அல்லது நோய் எதிர்ப்பு இயக்கிகள்
    இந்த உட்செலுத்தக்கூகிய மருந்துகள், மகரந்தங்கள், தூசிப் பூச்சிகள் மற்றும் மிருகங்களிடமிருந்து வரும் தூசிகள் போன்ற ஒவ்வாமைகளின் வெளிப்பாடு காரணமாக ஏற்படும் ஆஸ்துமாவைத் தடுக்க உதவுகிறது. ஓமலிஜுமாப்,  அன்டி-IgE மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை கொண்டுள்ளது. அவை உடலில் அலற்சியை ஏற்படுத்தும் காரணிகளால் உடலில் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது. இதற்கு மற்ற எடுத்துக்காட்டுகள்: ரெஸ்லிஜுமாப் மற்றும் பென்ராலிஜுமாப்.
  • மூச்சுக்குழாய் தெர்மொபிலாஸ்டி
    மருத்துவ சிகிச்சையினால் பயனடையாத வயது வந்தோருக்கான ஆஸ்துமாவின் கடுமையான நிலைக்கு சிகிச்சையளிக்க சமீபத்திய FDA-அங்கீகரித்த சிகிச்சை இதுவாகும். இதில் கட்டுப்பாடுத்தப்பட்ட ரேடியோ அலைகள் மூச்சுக் குழாயின் வழியாக செலுத்தப்பட்டு வெப்ப ஆற்றலை உருவாக்குகிறது, எனவே அந்த வெப்ப ஆற்றல் சுவாச மண்டலங்களில் மூச்சு பாதையில் உள்ள மென்மையான தசைகளை அழிக்கின்றன. இவ்வாறு சுவாச மண்டலங்களில் மென்மையான தசைகள் அழிக்கப்படுவதால் ஏற்படுகின்ற நோயெதிர்ப்பு அமைப்பின் மாற்றம் காரணமாக மூச்சுக்காற்று தடைபடுவது குறைக்கிறது.

வாழ்க்கைமுறை மேலாண்மை

குணப்படுத்த முடியாத நோயாக இருப்பதே ஆஸ்துமா-வில் கவலைக்கு முக்கிய காரணமாகும். ஆஸ்துமா கொண்டவர்களுக்கு ஒழுங்கற்ற மூச்சுத் திணறல், அசெளகரியங்களின் அறிகுறிகளான மார்பில் இறுக்கம், மூச்சு விட முடியாமை போன்றவை காணப்படுகின்றன. ஆகையால், ஆஸ்துமா உள்ளவர்களின் சாதாரண வழக்கமான வேலைகளை கூட செய்ய முடியாமல், வேலையில் தகுந்த ஈடுபாடு இல்லாமல் நஷ்டத்தை சந்திக்க நேரலாம். எனவே, வாழ்க்கைமுறை மேலாண்மையின் நோக்கம் கடுமையான ஆஸ்துமாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தி அது ஏற்படும் எண்ணிக்கயையும் குறைப்பதோடு, நுரையீரல் சேதம், தொற்றுநோய்கள் அல்லது இறப்பு போன்ற எதிர்கால எதிர்மறை விளைவுகளை தடுப்பதே ஆகும்.

  • ஆஸ்துமாவை நிர்வகிப்பதில் சுய பாதுகாப்பு என்பது முக்கிய அங்கமாகும். நோய்கள் மற்றும் தூண்டுதல்களைப் பற்றிய தகவல்களைப் பற்றிய புரிதலைப் பெற்றிருப்பது கடுமையான தாக்குதல்களைத் தடுக்க உதவுகிறது. ஒரு கடுமையான தாக்குதலை (மருந்துகளின் ஓட்ட வரைபடங்களைப் பயன்படுத்துவது போன்றவை) எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிவது அவசரகால நிலைகளை சமாளிக்க உதவும். மேலும், உங்கள் குழந்தைக்கு ஏற்படும் கடுமையான தாக்குதலை எவ்வாறு கையாள வேண்டும் என்று உங்கள் மருத்துவரிடம் கலந்துரையாடிய பிறகு, தயாராக இருக்கும் ஒரு திட்டத்தை பராமரிப்பது முக்கியம். 
  • ஆஸ்துமா உள்ளவர்களுக்கிடையே பதட்டம் என்னும் நடத்தை மாற்றம் தொடர்ந்து கவனிக்கப்படுகிறது. ஆஸ்துமாவின் கடுமையான அத்தியாயங்களைத் தூண்டும் முக்கிய காரணி இது. ஆஸ்துமா தொடர்பான பயத்தையும் கவலைகளையும் கடந்து மூச்சு பயிற்சிகள், தியானம், யோகா மற்றும் பிற மன நிம்மதியுடன் கூடிய நுட்பங்கள் நீண்ட காலத்திற்கு ஆஸ்துமாவை நிர்வகிக்க உதவுகின்றன. சுவாசக் கட்டுப்பாட்டு நுட்பங்கள் போன்ற பல்வேறு மூச்சு நுட்பங்களில் பயிற்சி, சுவாச முறைகளை இயல்பாக்க உதவுதல் மற்றும் ஆஸ்துமாவின் கணிக்க முடியாத கடுமையான அத்தியாயங்களின் உளவியல் அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது. 
  • முற்றிலும் புகை பிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கங்கள், நடைபயிற்சி போன்ற இயல்பான வழக்கமான பயிற்சிகளை பின்பற்றுவது ஆகியவை ஆஸ்துமா மேலாண்மை திட்டத்தில் சேர்க்கப்படக்கூடிய சில வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகும்.


மேற்கோள்கள்

  1. American Thoracic Society. What Is Asthma?. Am J Respir Crit Care Med Vol 188, P7-P8, 2013. ATS Patient Education Series [Internet]
  2. Asthma and Allergy Foundation of America. [Internet]. Maryland, United States; Asthma
  3. Lötvall J, Akdis CA, Bacharier LB, et al. Asthma endotypes: a new approach to classification of disease entities within the asthma syndrome. J Allergy Clin Immunol. 2011; 127:355-360. PMID: 21281866
  4. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Asthma
  5. Lange P. Prognosis of adult asthma.. Monaldi Arch Chest Dis. 1999 Aug;54(4):350-2. PMID: 10546480

ஆஸ்துமா (ஈழை நோய்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஆஸ்துமா (ஈழை நோய்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.