இரத்த சோகை - Anemia in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

December 29, 2018

September 11, 2020

இரத்த சோகை
இரத்த சோகை

சுருக்கம்

இரத்த சிவப்பணுக்களின் (RBC) எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபின்னின் செறிவு குறைவதை குறிப்பிடும் ஒரு நிலைதான் இரத்த சோகை(அனீமியா) ஆகும். இரத்த சோகையில் இரும்பு சத்து குறைபாட்டினால் வரும் இரத்த சோகை, மெகாலோபிளாஸ்டிக் இரத்த சோகை, அஃப்ளாஸ்டிக் இரத்த சோகை மற்றும் இன்னும் பல பலவிதமான இரத்த சோகைகளும் உள்ளன. இதற்க்கு ஒட்டுண்ணி நோய்த்தொற்று, கடுமையான மாதவிடாய் ரத்தப்போக்கு, கர்ப்பம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளது. இரத்த சோகைசோர்வு, பலவீனம், வெளிர் தோல் மற்றும் சுவாசத்தில் சிரமம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கலாம். ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் எண்ணிக்கை உட்பட முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை, ஒட்டுண்ணி தொற்று நோயை உறுதிப்படுத்துவதற்கான மல சோதனை மற்றும் அஃப்ளாஸ்டிக் இரத்த சோகையை உறுதிப்படுத்துவதற்கான எலும்பு மஜ்ஜை பரிசோதனை போன்ற நோயறிதல் சோதனைகள் மூலம் இது கண்டறியப்படலாம். இரத்த சோகை சிகிச்சையானது அதன் அடிப்படை காரணத்தை பொறுத்தது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரமாணமாக இரத்த சோகை இருந்தால் சரியான ஊட்டச்சத்து மற்றும் இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். கடுமையான இரத்த சோகை முழு ரத்த இரத்தமாற்றம் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. அஸ்பெஸ்டிக் அனீமியா, அல்லது தொடர்ச்சியான இரத்த சோகைக்கு, ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வழக்கமாக கடைசி கட்ட  தீர்வு ஆகும்.அனீமியாவினால் ஏற்படும் விளைவானது அடிப்படை காரணங்களைப் பொறுத்தது, மேலும் பெரும்பாலான காரணங்களுக்கு சிகிச்சைகள் இருப்பதால் விளைவு நல்லதாகவே இருக்கும். இரத்த சோகைக்கான காரணம் என்னவென்று தெரியாமலே இருந்தால், குறை பிரசவம், பிறந்த குழந்தைக்கு ரத்த சோகை, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பு, வலிப்பு, உறுப்பு சேதம் போன்றவை ஏற்படலாம். 

இரத்த சோகை அறிகுறிகள் என்ன - Symptoms of Anemia in Tamil

மேலே குறிப்பிட்டுள்ளபடி, இரத்த சோகையினால், இரத்தத்தின் ஆக்ஸிஜன் தாங்கும் திறன் குறைகிறது. எனவே, இதன் அறிகுறிகள் இந்த மாற்றத்துடன் தொடர்புடையவை:

  • பலவீனம்
    பலவீனம் என்ற உணர்வு, இரத்த சோகை உடையவர்களுக்கு மிகவும் பொதுவான அறிகுறியாகும். எந்த அளவு கடுமையான வேலையும் செய்யாமலேயே சோர்வாக உணர்வர்.
  • சுவாசத்தில் சிரமம்
    அனீமியாவின் மிக குறிப்பிடத்தக்க அறிகுறிகளில் ஒன்று சுவாசிக்க முடியாமல் அல்லது மூச்சு காற்றை உள்ளிழுக்க முயற்சி மேற்கொள்வதில் சிரமம்.
  • அசௌகரியமாக  உணர்வு
    சில நேரங்களில் நல்வாழ்வின் குறைபாடு அல்லது இரத்த சோகை காரணமாக வெளிப்பட முடியாத ஒரு கூச்ச உணர்வை உணரலாம்.
  • தலைச்சுற்றல்
    தலைச்சுற்றி கீழே விழுவது காயம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் தலைச்சுற்றல் உணர்வு ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது. மூளையில் குறைந்த ஆக்ஸிஜன் சப்ளை காரணமாக இது இருக்கலாம்.
  • செயல்திறன் குறைவு
    இதற்கு முன் எளிதாக செய்து கொண்டிருந்த உடற்பயிற்சி, வேலைகள் அல்லது படிப்பது போன்ற செயல்களை செய்வது முடியாது. இதனால் தொடர்ந்து வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
  • தலைவலி
    இரத்த சோகையில் தலைவலி ஒரு அரிய அறிகுறி. லேசானது முதல் மிதமானது வரை தலைவலி  ஏற்படலாம்.
  • பிகா:
    சாப்பிட துடித்தல் அல்லது சாக்பீஸ், ஐஸ் மற்றும் களிமண் போன்ற உண்ணத்தகாத பொருட்களையும் உண்ணுதல். இந்த உணர்வு அதிகமாக  ரத்த சோகையுடன் தொடர்புடையது அனால் மிகவும் அரிதாகவே இந்த அறிகுறி தெரிய வரும்.

இரத்த சோகை சிகிச்சை - Treatment of Anemia in Tamil

இரத்த சோகை சிகிச்சையானது பொதுவாக இரத்த சோகைக்கான அடிப்படைக் காரணம், இரத்த சோகையின் நிலை மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்தது.

இரத்த சோகைக்கான பொதுவான சிகிச்சைகள்:

  • உங்கள் வைத்தியரின் வழிகாட்டுதலின் கீழ் இரும்புச் சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றை உட்கொண்டு சரியான ஊட்டச்சத்துடன் இருத்தல்.
  • பச்சை இலை காய்கறிகள், புதிய பழங்கள், முட்டை, இறைச்சி மற்றும் மீன் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல்.
  • எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பலம், சிட்ரஸ் கொண்ட பழங்கள் போன்ற வைட்டமின் நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது. மேலும், வைட்டமின் சி ஓவர் தி கவுண்டர் மாத்திரைகளையும் உண்ணலாம். எனினும், உங்கள் வயது மற்றும் உடல் எடையின்படி தங்களுக்குத் தேவையான சரியான டோஸேஜ் அளவை தெரிந்து கொள்ள உங்கள் மருத்துவருடன் கந்தாலோசிக்கவும்.
  • குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்படுவதைத் தடுக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்பெண்டசோல் மாத்திரைகளை சாப்பிடலாம்.
  • இளம் வயது, பெண்களும் ஆண்களும் மற்றும் கர்ப்பிணி பெண்களும் கட்டாயமான இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை ரத்த சோகை இருந்தாலும் இல்லாவிட்டாலும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரத்த சோகைகளின் தரத்தை பொறுத்த சிகிச்சை:

  • லேசான இரத்த சோகைக்கு, உங்கள் மருத்துவர் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவு  உட்கொள்வதை அறிவுறுத்துவார்.
  • மிதமான அளவு இரத்த சோகைக்கு, மருத்துவர் இரும்பு மற்றும் ஃபோலிக் அமில சப்ளைகளை பரிந்துரைக்கலாம். வாய்வழி உட்கொள்ளும் இரும்பு சத்து மாத்திரைகளால் பக்க விளைவுகள் இல்லாமல் எந்தவித வயிற்று கோளாறாலுகளும் உண்டாகி வயிற்றுப்போக்கு ஏற்படாமல் பொறுத்து கொள்ள முடியும் என்றால் வாய்வழி மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறு பக்க விளைவுகள் ஏற்பட்டால் தினமும் மருத்துவமனைக்கு சென்று ஊசி மூலமாக இரும்பு சத்து மருந்துகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பலாம். இதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற அவசியம் இல்லை.
  • கடுமையான இரத்த சோகை ஏற்பட்டால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பொறுத்து, மருத்துவர் ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய இரும்புச்சத்து மருந்துகள் கொடுப்பதற்குத் தேர்வு செய்யலாம் அல்லது நாடி துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம் போன்ற ஜீவாதாரங்களை சரிபார்க்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பரிந்துரை செய்யலாம். சில சமயங்களில் செயற்கை ஆக்ஸிஜன் வைப்பதற்கும் தேவைப்படலாம்.
  • இரத்தம் மாற்றுதல்: கடுமையான இரத்த சோகை மற்றும் சிக்கிள் செல் இரத்த சோகைமற்றும் தலசீமியா போன்ற நிலைமைகளில், இரத்தம் மாற்றுதல் சிகிச்சைக்கான தேர்வுவாகும்.
  • எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை: எலும்பு மஜ்ஜை என்பது நீண்ட எலும்புகளில் காணப்படும் இரத்த உயிரணுக்களை உற்பத்தி செய்யும் திசு ஆகும். அபிலாஸ்டிக் இரத்த சோகை போன்ற நிலைகளில், எலும்பு மஜ்ஜையின் அழிவு அல்லது செயலிழப்பு ஏற்பட்டு, அதனால் இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே, ஆரோக்கியமான ஒருவரிடமிருந்து பெறப்பட்ட எலும்பு மஜ்ஜையை அறுவை சிகிச்சை மூலம் நோயாளிக்கு இடமாற்றம் செய்யப்படலாம்.
  • எரித்ரோபொயட்டின்: இது சிறுநீரகங்களில் உள்ள இரத்த அணுக்கள் உற்பத்திக்கு தேவையான ஒரு ஹார்மோன் ஆகும். சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்ட எரித்ரோபோயிட்னை உற்பத்தி செய்ய இயலாத, சிறுநீரக நோயாளிகளுக்கு இந்த முறை சிகிச்சை பயன்படுத்தப்படலாம்.
  • பிளெஞ்செக்டமி: மண்ணீரல் வயிற்றிற்கு அருகில் உள்ள ஒரு சிறு உறுப்பு. இது பழைய சிவப்பு ரத்த அணுக்கள் அழிக்கப்பட்டவுடன் புதிய சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கு முக்கியம். சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள். இரத்த சோகை உள்ளவர்களுக்கு, சில நேரங்களில் மண்ணீரலில் இரத்த சிவப்பணுக்களின் அதிகப்படியான செயலிழப்பு ஏற்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில், மண்ணீரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல் சிகிச்சைக்கான தேர்வு (பிளெஞ்செக்டமி) ஆகும்.

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை சிகிச்சை:

  • 9-11 g / dL என்ற ஹீமோகுளோபின் அளவைக் கொண்டிருக்கும் மிதமான இரத்த சோகைக்கு, உங்கள் மருத்துவர் தினமும் வாய்வழி இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளை பரிந்துரை செய்யலாம்  மற்றும் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று அறிய ஒரு மாதத்திற்குப் பிறகு ஆய்வக சோதனை மீண்டும் செய்யலாம்.
  • 7-9 g / dL என்ற ஹீமோகுளோபின் அளவைக் கொண்ட மிதமான இரத்த சோகைக்கு முதலில் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து, பின்னர் வாய்வழி இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரையை பரிந்துரைப்படன் மூலம் மருத்துவர் சிகிச்சையைத் தொடங்கலாம். ஹீமோகுளோபின் அளவுகள் 8-9 கிராம் / dL-ஐ எட்டியதா என்பதை சரிபார்க்க மாதம் ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுகிறது. உங்கள் மருத்துவர் உங்கள் ஹீமோகுளோபின் அளவை 9 கிராம் / டி.எல் வரை உயர்த்துவதற்கு ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய இரும்புச் சத்து மருந்துகளை கொடுக்க தொடங்கலாம், பின்னர் மீண்டும் வாய்வழி மாத்திரைகளை ஆரம்பிக்க சொல்லலாம்.
  • 7 g / dL-ஐ விட குறைவான ஹீமோகுளோபின் அளவைக் கொண்ட கடுமையான இரத்த சோகைக்கு, உங்கள் மருத்துவர் ஹீமோகுளோபின் இத்தகைய குறைவான அளவு எவ்வாறு குறைந்தது என்ற காரணத்தை அறிய வேண்டும், உடனடியாக ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய இரும்புச் சத்து மருந்துகளை கொடுக்க தொடங்கலாம்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

சில எளிய வாழ்க்கை மாற்றங்கள் மூலம் அனீமியாவை திறம்பட நிர்வகிக்கலாம். அவை பின்வருமாறு:

  • புகையிலை பயன்பாட்டை தவிர்த்தல்
    புகையிலை உபயோகம் இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதையம் மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கக்கூடும், இதனால் உடலில் உள்ள இரும்பு அளவில் குறைபாட்டை ஏற்படுகிறது. எனவே, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது இரத்த சோகையை தடுக்க உதவும்.
  • உணவு உண்ணும்போது தேயிலை பருகுவதை தவிர்ப்பது
    தேயிலை இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதை பாதிக்கக்கூடும், இதனால் தேயிலை பருகுவதைத் தவிர்ப்பது இரும்புச் சத்து உடலில் உறிஞ்சப்படுவதை மேம்படுத்த உதவும்.
  • இரும்பு நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
    உடலில் உள்ள இரும்புச் சத்தை தக்கவைத்துக் கொண்டு பராமரிப்பதற்கு இரும்புச்சத்து அதிக அளவு உள்ள பச்சை காய்கறி, புதிய பழங்கள், பீன்ஸ், முட்டை, மீன், இறைச்சி ஆகிய உணவுகளை சாப்பிடுங்கள்.


மேற்கோள்கள்

  1. N. J. Kassebaum, R. Jasrasaria, M. Naghavi et al. A systematic analysis of global anemia burden from 1990 to 2010. Blood.2014; 123 (5): 615–624. PMID: 24297872
  2. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Worldwide prevalence of anaemia 1993–2005.
  3. Powers JM, Buchanan GR. Diagnosis and management of iron deficiency anemia. Hematol Oncol Clin North Am. 2014; 28:729–45. PMID: 25064710
  4. M. Goonewardene, M. Shehata, A. Hamad. Anaemia in pregnancy. Best Pract Res Clin Obstet Gynaecol. 2012 Feb;26(1):3-24. PMID: 22138002
  5. Ware, R. E., de Montalembert, M., Tshilolo, L., & Abboud, M. R. (2017). Sickle cell disease. The Lancet, 390(10091), 311–323. PMID: 28159390
  6. Taher, A. T., Weatherall, D. J., & Cappellini, M. D. (2018). Thalassaemia. The Lancet, 391(10116), 155–167. PMID: 28774421
  7. Sugimori C, Chuhjo T, Feng X, et al. Minor population of CD55-CD59-blood cells predicts response to immunosuppressive therapy and prognosis in patients with aplastic anemia. Blood. 2016; 107(4):1308–1315. PMID: 16179371
  8. Al-Atrakji MY. The effects of ferrous sulfate as an iron supplement on ejection fraction in patients with iron deficiency anemia associated with decompensated heart failure. Mustansiriya Med J 2018; 17:22-8. [Internet]
  9. Gupta, U. C. and Gupta, S. C. (2014). Sources and deficiency diseases of mineral nutrients in human health and nutrition: A review. Pedosphere 24(1):13–38. [Internet]
  10. A.Rammohan, N. Awofeso, and M.-C. Robitaille. “Addressing female iron-deficiency anaemia in India: is vegetarianism the major obstacle?” ISRN Public Health, vol. 2012, 8 pages, 2012. [Internet]
  11. Oh R, Brown DL. Vitamin B12 deficiency. Am Fam Physician. 2003; 67(5): 979–986.
  12. G. S. Toteja, P. Singh, B. S. Dhillon et al. “Prevalence of anemia among pregnant women and adolescent girls in 16 districts of India,” . Food and Nutrition Bulletin, vol. 27, no. 4, pp. 311–315, 2006 [Internet]
  13. Ananth JV, Sudharshan S, Selvakumar A, Devaleenal BJ, Kalaivani K, Biswas J. Idiopathic intracranial hypertension associated with anaemia, secondary to antiretroviral drug in a human immunodeficiency virus positive patient. Indian Journal of Ophthalmology. 2018; 66(1):168-169. doi:10.4103/ijo.IJO_592_17.
  14. Besarab A, Hörl WH, Silverberg D. Iron metabolism, iron deficiency, thrombocytosis, and the cardiorenal anemia syndrome. Oncologist 2009; 14 Suppl 1:22 33. PMID: 19762514
  15. B. Lonnerdal. “Soybean ferritin: implications for iron status of vegetarians,”. The American Journal of Clinical Nutrition, vol. 89, no. 5, pp. 1680S–1685S, 2009.
  16. Rammohan A, Awofeso N, Robitaille M.A. Addressing Female Iron-Deficiency Anaemia in India: Is Vegetarianism the Major Obstacle?. ISRN Public Health. 2012; 1-8.
  17. Kocyigit A, Erel O, Gur S. Effects of tobacco smoking on plasma selenium, zinc, copper and iron concentrations and related antioxidative enzyme activities. Clin Biochem. 2001; 34:629–33. PMID: 11849622
  18. Chen, C., Grewal, J., Betran, A. P., Vogel, J. P., Souza, J. P., & Zhang J. Severe anemia, sickle cell disease, and thalassemia as risk factors for hypertensive disorders in pregnancy in developing countries. Pregnancy Hypertension. 2018; 13:141–147. PMID: 30177043
  19. B. J. Brabin, M. Hakimi, and D. Pelletier. “An analysis of anemia and pregnancy-related maternal mortality,” Journal of Nutrition, vol. 131, no. 2, pp. 604S–614S, 2001.

இரத்த சோகை டாக்டர்கள்

நகரின் Hematologist தேடல்

  1. Hematologist in Surat

இரத்த சோகை க்கான மருந்துகள்

Medicines listed below are available for இரத்த சோகை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.