அலர்ஜி - Allergy in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 10, 2018

March 06, 2020

அலர்ஜி
அலர்ஜி

சுருக்கம்

ஒவ்வாமை என்பது ஒரு உடல்நலக் குறைபாடு ஆகும். இது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, ஒரு வெளி பொருள் உடலின் மீது படும்போது அளவுக்கு அதிகமாக வினை புரிதல் ஆகும். ஆனால் ஒவ்வாமை காரணமாக பலருக்கு எந்த எதிர் வினையும் ஏற்படுவது இல்லை. அலர்ஜியின் தீவிரத்தன்மை ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். இதனால் சாதாரண எரிச்சல் முதல் உயிரை அச்சுறுத்தும் மருத்துவ அவசர நிலையான அனபிளாக்ஸிஸ் நோய் வரை ஏற்படலாம். பெரும்பாலான ஒவ்வாமைகள் குணப்படுத்த முடியாதவை, இருப்பினும் ஒவ்வாமையின் அறிகுறிகளை நிவர்த்தி செய்ய உதவும் பல சிகிச்சைகள் உள்ளன.

அலர்ஜி (ஒவ்வாமை) அறிகுறிகள் என்ன - Symptoms of Allergy in Tamil

பல்வேறு வகையான ஒவ்வாமை அறிகுறிகள் பின்வருமாறு:

தூசி ஒவ்வாமை

மூச்சுக்குழாய் அழற்சி

தோல் ஒவ்வாமை

தோல் ஒவ்வாமைக்கான பொதுவான அறிகுறிகள் சிவத்தல் (தோல் சிவந்து காணப்படுதல்), அரிப்பு மற்றும் வீக்கம் ஆகியவை. குறிப்பிட்ட சரும நிலைமைகளை சிறிய வேறுபாடுகள் மூலம் கண்டறியலாம்.

 • எக்ஸிமா மற்றும் தொடர்பினால் உண்டாகும்  தோல் அழற்சி

எக்ஸிமா தோல் அழற்சி கொண்டவர்களின் தோல் உலர்ந்தும் அரிப்புடனும் அக்கு அக்காகவும் காணப்படும். சிலருக்கு அந்த அக்கினை அரிக்கும் போது அதிலிருந்து திரவம் போல 'கசியலாம்'. இது தொற்றுநோயைக் குறிக்கும். குழந்தைகளுக்கு எக்ஸிமா, முகம், மூட்டுகளின் வளைவு மற்றும் காதுகளுக்கு பின்னால் இருக்கும். பெரியவர்களுக்கு இதே இடங்களிலும் மேலும் கை மற்றும் கால்களிலும் காணப்படுகின்றன. தொடர்பினால் உண்டாகும் தோல் அழற்சியில், இதே போன்ற அறிகுறிகள் ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய பொருட்களுடன் தொடர்பு கொள்ளும்போது (தொடும்போதோ அல்லது அருகில் செல்லும்போதோ) ஏற்படுகிறது.

 • உர்டிகேரியா  

உர்டிகேரியா - எனப்படும் நிலையில், சிவந்த தோல், வீக்கமடைந்த சிவப்பு நிறமுள்ள கொப்பளங்கள் ஏற்படும். அவை வெவ்வேறு அளவுகளில் காணப்படலாம். மற்றும் அது உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம். ஆஞ்சியோடெமா என்றழைக்கப்படும் ஒரு நிலையில், சருமத்தின் ஆழமான அடுக்குகள் பாதிக்கப்பட்டு தென்படலாம். இது கண்கள், உதடுகள் அல்லது கன்னங்களைச் சுற்றி காணப்படலாம். சில நேரங்களில், இது பிறப்புறுப்புகளிலோ அல்லது தொண்டை அல்லது குடல்களிலும் இருக்கலாம்.

பூச்சி மற்றும் செல்ல பிராணிகளால் அலர்ஜி

செல்ல பிராணி ஒவ்வாமையின் அறிகுறிகள் தூசி ஒவ்வாமை போன்றவை, மேலும் அது விலங்குகளை தொடுவதாலும் அதன் அருகாமையாலும் ஏற்படுகிறது. பூச்சி ஒவ்வாமையின் அறிகுறிகள் பின்வருமாறு:

உணவு ஒவ்வாமை

உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் உண்ட உடனேயும் அல்லது பல மணிநேரங்களுக்கு பின்னரும் ஏற்படலாம். அவற்றுள் சிவந்த அரிக்கும் தோல், அடைத்த மூக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். சிலருக்கு உணவு ஒவ்வாமை அனபிலாக்ஸிஸ் போன்ற தீவிரமான நிலையையும் ஏற்படுத்தலாம். அதன் அறிகுறிகள்:

 • மார்பில் இறுக்கம்
 • நாக்கு, தொண்டை மற்றும் உதடுகளில் வீக்கம்
 • கைகள் மற்றும் கால்களில் கூச்சம்.

அலர்ஜி (ஒவ்வாமை) சிகிச்சை - Treatment of Allergy in Tamil

ஒவ்வாமைக்கான சிகிச்சைகள் அதன் மருத்துவ வரலாறு, அறிகுறிகளின் தீவிரம் மற்றும் ஒவ்வாமை சோதனைகளின் மூலம் பெறப்பட்ட முடிவுகள் ஆகியவற்றை சார்ந்ததாகும்.  அவைகள் பின்வருமாறு மேற்கொள்ளப்படுகிறது:

 • ஒவ்வாமை தவிர்த்தல்
  தவிர்க்க சிறந்த வழியாக கருத்தப்படுவது ஒவ்வாமையை தூண்டும் காரணிகளுடன் தொடர்பினை தவிர்த்தல் அல்லது குறைத்தல் ஆகும். இது மருந்துகளின் தேவையை குறைக்க உதவுகிறது. ஏர்போர்ன் ஒவ்வாமையை ஒரு "ஜால் நேட்டி" பானை அல்லது கசக்கி பாட்டிலில் பயன்படுத்துவதின் மூலம் வழக்கமான நாசி பாசனத்தை குறைக்க முடியும்.
 • மருந்துகள்
  எதிர்ப்பு மருந்துகள் மூலம் ஒவ்வாமைகளில் காணப்படும் வீக்கங்களை குறைக்க உதவுகின்றது. ஒவ்வாமையால் ஏற்படும் மூக்கு ஒழுக்குதல் மற்றும் மூக்கடைப்பு போன்றவற்றில் இருந்து தற்காத்து கொள்ள ஒவ்வாமை மருந்துகள் பயன்படுக்கின்றன. மூக்கில் வீங்கிய சவ்வுகளை சுருக்கவும், வீக்கங்களை குறைக்கவும் உதவுகிறது. தோல் அழற்சி பரவுதலை தடுக்க கார்டிகோஸ்டீராய்டுகள் பயன்படுத்தபடுக்கிறது.
 • நோயெதிர்ப்பு சிகிச்சைகள்
  நோயெதிர்ப்பு சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது. மகரந்த தூளினால் ஒவ்வாமை, செல்ல பிராணிகளினால் ஒவ்வாமை, பூச்சிக்களினால் ஒவ்வாமைகள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இந்த நோயெதிர்ப்பு சிகிச்சைகள் அவசியமாகும். இந்த சிகிச்சையானது ஒவ்வாமை வெளிப்பாடுகளையும் மற்றும் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.நோய் எதிர்ப்பு சிகிச்சையானது இன்னும் உணவு ஒவ்வாமைக்கு பயனுள்ள தீர்வு இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை, இருப்பினும் அதனுடைய பல செயல் திறன்களில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாழ்க்கை மேலாண்மைகள்

சரியான பராமரிப்பதன் மூலம் ஒவ்வாமையை தவிர்க்க இயலும். ஒவ்வாமையால் ஏற்படும் விளைவுகளில் இருந்து விடுப்பட மருத்துவரின் உதவியை அனுக்கவும். ஒவ்வாமை வெளிப்பாடுகளை தவிர்ப்பதற்கு அதன் நிகழ்வுகளை மட்டுப்படுத்தி மற்றும் அதற்கான மூலக்கூறுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு நபர் கடுமையான ஒவ்வாமை வினைகளின் ஆபத்தில் இருக்க கூடியவராக இருந்தால், எல்லா நேரங்களிலும் எபிநெஃப்ரின் ஊசிகளை வைத்திருங்கள். கடுமையான ஒவ்வாமை வினைக்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை இது ஒன்று மட்டுமே ஆகும். இத்தகைய ஒவ்வாமை கொண்டவர்கள், மருத்துவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்தால் மருத்துவ முன் பாதுகாப்பு காப்புரைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அலர்ஜி (ஒவ்வாமை) என்ன - What is Allergy in Tamil

ஒவ்வாமைக்கு உலக முழுவதிலும் பொதுவான சூழ்நிலைகளிலே காணப்படுக்கின்றன. ஒவ்வாமை அறிகுறிகள் லேசானதாகவோ அல்லது சிலருக்கு அவை உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அறிகுறிகளாகவும் இருக்கலாம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு அரிதான நோய் என்று கருதப்பட்ட இது சமீப காலங்களில் ஒவ்வாமையானது வளர்ந்து வரும் ஒரு ஆரோக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஒவ்வாமைகளால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய மக்களில் கிட்டத்தட்ட 20% பேர் ஆஸ்துமா அல்லது அனீஃபிளாக்டிக் தாக்குதலுக்கு பயந்து அல்லது ஒரு தூண்டுதலளிக்கும் முகவருக்களின் வெளிப்பாட்டிலிருந்து கூட மரணம் எற்படுவதினால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் போராடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மக்கள் தொகையில் 10 முதல் 40% வரை ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுவதாக உலக ஒவ்வாமை அமைப்பு மதிப்பிடுக்கிறது. ஒவ்வாமை காரணமாக ஒரு நபர் தங்கள் வாழ்க்கையில் தினமும் நிறைய இழக்கிறார். இந்தியாவிலும் கூட, ஒவ்வாமையானது சீராக உயர்ந்து வருகிறது. மொத்த இந்திய மக்கள் தொகையில் 20 முதல் 30% பேர் ஆஸ்துமா, நாசி அழற்சி, உணவு ஒவ்வாமை, தோல் அரிப்பு, நுரையீரல், கடும் ஒவ்வாமை மற்றும் ஆன்கியோடெமா ஆகிய ஒவ்வாமையால் பாதிக்கப்படுக்கின்றனர்.

ஒவ்வாமை என்றால் என்ன?

ஒவ்வாமை என்பது, நோயெதிர்ப்பு அமைப்பு உணர்திறன் மிக்கவையாக மாறும்போது நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் ஒரு சீர்கேடாகும். இது பெரும்பாலான மக்களுக்கு தீங்கு விளைவிக்காத நோயெதிர்ப்பு வினையாக உள்ளது. ஆரோக்கியமான மக்களுக்கு, நோயெதிர்ப்பு அமைப்பானது கிருமிக்களுக்கு எதிராகப் போராடுகிறது, இருப்பினும், ஒவ்வாமை கொண்டவர்களின், நோயெதிர்ப்பு அமைப்பானது கிருமி இல்லாத காரணிகளின் மீதும் அதிகமாக வினைபுரிந்து ஒவ்வாமை உண்டாக்கும் காரணியாக மாறுகிறது அதுவே ஒவ்வாமையாகவும் கருத்தப்படுக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் மரபணு, இந்த இரண்டுமே ஒவ்வாமை நோய்க்கு முக்கிய காரணிகளாகும்.மேற்கோள்கள்

 1. Asthma and Allergy Foundation of America. [Internet] Maryland, United States; Asthma and Allergy
 2. European Academy of Allergy and Clinical Immunology [Internet] Zurich, Switzerland; Allergy Prevention Recommendations
 3. Canonica GW, Ansotegui IJ, Pawankar R, Schmid-Grendelmeier P, Van Hage M, Baena-Cagnani CE, Melioli G, Nunes C, Passalacqua G, Rosenwasser L, Sampson H. A WAO - ARIA - GA²LEN consensus document on molecular-based allergy diagnostics. World Allergy Organization Journal. 2013 Dec;6(1):1. PMID: 24090398
 4. European Academy of Allergy and Clinical Immunology [Internet] Zurich, Switzerland; Tackling the Allergy Crisis in Europe - Concerted Policy Action Needed
 5. Prasad R, Kumar R. Allergy situation in India: what is being done?.. Indian J Chest Dis Allied Sci. 2013 Jan-Mar;55(1):7-8. PMID: 23798082
 6. American College of Allergy, Asthma & Immunology, Illinois, United States. Types of Allergies
 7. American College of Allergy, Asthma & Immunology, Illinois, United States. Dust Allergy
 8. Tarun Kumar Dutta, V Mukta. Indian Guidelines and Protocols: Bee Sting. Section 12 Toxicology, Chapter 92; The Association of Physicians of India [Internet]
 9. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Food Allergies in Schools
 10. American College of Allergy, Asthma & Immunology, Illinois, United States. SKIN ALLERGY
 11. American College of Allergy, Asthma & Immunology, Illinois, United States. Pet Allergy
 12. Asthma and Allergy Foundation of America. [Internet]. Maryland, United States; Preventing Allergic Reactions and Controlling Allergies
 13. American College of Allergy, Asthma & Immunology, Illinois, United States. Anaphylaxis

அலர்ஜி க்கான மருந்துகள்

Medicines listed below are available for அலர்ஜி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for அலர்ஜி

Number of tests are available for அலர்ஜி. We have listed commonly prescribed tests below: