இயற்கை அனைத்து வகையான மருத்துவ மற்றும் சமையல் பொருட்களை மனித குலத்துக்கு வழங்கி இருக்கிறது. நமது வீட்டின் கொல்லைப்புறத்தில் காணப்படும் ஏராளமான மூலிகைகள், உண்மையில் மருத்துவ குணமளிக்கும் அற்புதங்கள் என்று நீங்கள் அறிந்தால் ஆர்ச்சரியப்பட்டு விடுவீர்கள். மூக்கிரட்டை, அது போன்ற ஒரு மூலிகையாகும். அது, வருடத்தில் மழை பெய்யும் மாதங்களின் பொழுது, நமது வீட்டின் மிகவும் வெப்பமான கொல்லைப்புறங்களில், ஒரு சிலந்தி வலை போன்று பரவி வளர்கிறது. மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உட்பட இந்தியாவின் சில பகுதிகளில், மூக்கிரட்டை ஒரு சமையல் சார்ந்த மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மூலிகை, ஒரு பிராந்தியத்தின் சமையலறையுடன் மட்டும் கட்டுப்பட்டு இருக்கக் கூடியது அல்ல. ஆயுர்வேத மருத்துவம், மூக்கிரட்டையை ஒரு மிகச் சிறந்த மன அழுத்த நீக்கியாக (மன அழுத்த-எதிர்ப்பு காரணி), ஒரு ரசாயனமாக (புத்துணர்ச்சி அளிப்பான்) மற்றும் ஒரு ஈரல் பாதுகாப்பானாக (கல்லீரலைப் பாதுகாக்கிறது) ஏற்றுக் கொள்கிறது. சொல்லப் போனால், மூக்கிரட்டை என்ற சொல்லுக்கான அர்த்தம் "மறுபடியும் எழுவதற்கு" என்பதாகும். இந்த அர்த்தமானது, மூக்கிரட்டையின் பலவித குணமளிக்கும் நன்மைகளின் காரணமாக வந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. சிறுநீரகக் கற்கள்/, மஞ்சள் காமாலை, நீரிழிவு, மற்றும் புற்றுநோய் போன்ற, மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களைப் போக்குவதில் மூக்கிரட்டையின் குணமளிக்கும் திறனை உறுதி செய்வதற்கு, ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூக்கிரட்டை தண்டுகள் வழக்கமாக கருஞ்சிவப்பு நிறத்தில் வளர்கின்றன. அது கட்டை போன்று அல்லது சதைப்பற்று உள்ளதாக இருக்கக் கூடும். மேலும் அது, அதன் பரப்புகளில் முடி போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. மூக்கிரட்டையின் முடிகளை உடைய இலைகள், ஒரு புறத்தில் பிரகாசமான பச்சை நிறத்தையும், மற்றொரு புறத்தில் வெள்ளை நிறத்தையும் கொண்டிருக்கின்றன. அவை, தண்டில் எதிர் எதிர் புறத்தில் அமைந்து இருக்கின்றன. மூக்கிரட்டை மலர்கள், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு/சிவப்பு நிறத்தில் மற்றும் இந்தத் தாவரத்தை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடிய பெரிய காரணிகளில் ஒன்றாக இருக்கின்றன. மருந்தக, உயிரியல், மற்றும் வேதியியல் அறிவியலுக்கான ஆய்வுக் குறிப்பேட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, சிவப்பு/இளஞ்சிவப்பு மூக்கிரட்டைகள் பித்தத்தை சமன்படுத்துகிற அதே வேளையில், வெள்ளை வகை மூக்கிரட்டைகள் அனைத்து ஆயுர்வேத தோஷங்களுக்கும் நன்மை அளிப்பதாக அறியப்பட்டு இருக்கிறது.

மூக்கிரட்டை பற்றிய சில அடிப்படை விவரங்கள்:

 • தாவரவியல் பெயர்: போயர்ஹாவ்வியா டிஃப்புசா எல்.
 • குடும்பம்: நிக்ட்டாசினசியயி
 • பொதுவான பெயர்கள்: மூக்கிரட்டை, பன்றி பூண்டு, பரவும் ஹாக் பூண்டு, ஹாக் பூண்டு, தார் திராட்சை
 • சமஸ்கிருதப் பெயர்: ரக்தகண்டா, ஷோதாக்னி, வர்ஷபு
 • பயன்படும் பாகங்கள்: இலைகள், வேர்கள், மற்றும் விதைகள்
 • சொந்த பிராந்தியம் மற்றும் புவியியல் பரவுதல்: மூக்கிரட்டை இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காடுகளில் வளர்கிறது.
 • ஆற்றலியல்: குளுமைப்படுத்துதல்
 1. மூக்கிரட்டையின் ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் - Punarnava health benefits in Tamil
 2. மூக்கிரட்டையின் பயன் - Punarnava use in Tamil
 3. மூக்கிரட்டை எடுத்துக் கொள்ளும் அளவு - Punarnava dosage in Tamil
 4. மூக்கிரட்டையின் பக்க விளைவுகள் - Punarnava side effects in Tamil

மூக்கிரட்டை, ஏறத்தாழ உடலின் அனைத்து அத்தியாவசியமான செயல்பாடுகளுக்கும் நன்மை அளிக்கக் கூடிய, இயற்கையின் அற்புதமான மூலிகைகளில் ஒன்று ஆகும். அது, ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலிகை ஆகும். ஆனால் மிகவும் முக்கியமாக, அது ஒரு ரசாயனம் (புத்துணர்வு அளிப்பான்) ஆகும். மூக்கிரட்டை உட்கொள்வது, வழக்கமான சில நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் அபாயத்தைப் போக்கக் கூடியது மட்டும் அல்லாமல், ஒரு புத்துயிர் அளிக்கின்ற காரணியாக அது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்யக் கூடியது ஆகும்.

நாம் இப்போது, மூக்கிரட்டையின் நன்மைகளைப் பற்றி, ஒரு ஆழமான பார்வை பார்க்கலாம்.

 • கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது: மூக்கிரட்டை, கல்லீரல் குறைபாடுகளுக்கான மிகச் சிறந்த பாரம்பரிய நிவாரணிகளில் ஒன்றாகும். மே மாதத்தில் அறுவடை செய்யப்படும் இந்த மூலிகை, கல்லீரலுக்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது மற்றும் சரி செய்கிறது எனக் கூறப்படுகிறது.
 • சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: மூக்கிரட்டை, சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் உதவுகின்ற சிறுநீர் பெருக்கி செயல்பாட்டினைக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து மூக்கிரட்டையைப் பயன்படுத்துவது, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நிலைகளில், சிறுநீரகத்தின் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது என மருத்துவ ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன.
 • இரத்த சோகை அறிகுறிகளை மேம்படுத்துகிறது: மூக்கிரட்டை, மோருடன் சேர்த்துக் கொடுக்கப்படும் பொழுது, இரும்புச்சத்து அளவுகளை அதிகரித்து, 90 நாட்களுக்குள் இரத்த சோகையின் அறிகுறிகளைக் குறைக்கிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: மூக்கிரட்டை, அஸ்வகந்தா கொண்டிருக்கும் விளைவுகளைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தி தூண்டுதல் விளைவை வெளிப்படுத்துகின்றவை எனக் கண்டறியப்பட்டு இருக்கும், சில உயிரியல்ரீதியான திறன்மிக்க உட்பொருட்களைக் கொண்டிருக்கிறது.
 • மாதவிடாய் காலப் பிரச்சினைகளைக் குறைக்கிறது:  மூக்கிரட்டை மாதவிடாய் கால தசைப்பிடிப்புகளைக் குறைப்பதில் பயன்மிக்கதாக இருக்கிறது. மேலும் அது, வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் கருப்பையில் இரத்தக் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
 • இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது: மூக்கிரட்டை, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சர்க்கரைக்குறைப்பு காரணி (இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது) ஆகும். அது, இன்சுலின் அளவுகளை அதிகரிப்பது மற்றும் பீட்டா செல்களுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது.
 • எடையைக் குறைக்க உதவுகிறது: மூக்கிரட்டை, ஒரு நல்ல உடல் எடைக்குறைப்பு காரணி என அறியப்படுகிறது, இருந்தாலும் அது, உடலில் உள்ள நீரின் எடையை மட்டுமே குறைக்கிறது மற்றும் அது, கொழுப்புக்களை குறைக்கின்ற விளைவுகளைக் கொண்டிருப்பதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை.
 • முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது: மூக்கிரட்டை, இயற்கையான ஒரு ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மூலிகையாகும். அது உள்மூலக்கூறு சேதாரத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் போன்ற, முதுமைக்கு முந்தைய அற்குறிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மூக்கிரட்டையின் நுண்ணுயிர் எதிர்ப்பு நன்மைகள் - Punarnava antimicrobial benefits in Tamil

மூக்கிரட்டை செடியின் நுண்ணுயிர் எதிர்ப்பு திறனைப் பற்றி, பல்வேறு ஆய்வக சோதனைகள் தெரிவிக்கின்றன.

மூக்கிரட்டை செடி பற்றிய ஒரு ஆய்வில், மூக்கிரட்டை இலைகளின் பல்வேறு வகை சாறுகள் (நீர்மம், எத்தனால், மெத்தனால், குளோரோஃபார்ம், இன்ன பிற), எஸ்செரிச்சியா கோலி, பேசில்லஸ் சப்டில்ஸ், ஸ்டாஃபிலோகோக்கஸ் அவுரஸ், சல்மோனெல்லா டைஃபி உட்பட, பல்வேறு வகை நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் திறன்வாய்ந்தவையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது.

மற்றொரு ஆய்வு, மூக்கிரட்டை தாவரத்தின் நீர்ம மற்றும் எத்தனால் சாறுகள், எஸ்செரிச்சியா கோலி, பேசில்லஸ் சப்டில்ஸ், சல்மோனெல்லா டைஃபிமுரியம், நெய்ஸ்ஸெரியா கோனர்ஹொயயி, கார்னிபாக்டீரியம் டிப்தீரியா, ஷிகெல்லா டிசென்ட்ரி, குளோஸ்ட்ரிடியம் டெட்டனி போன்ற நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் திடமான நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டினைக் கொண்டிருக்கின்றன என்று தெரிவிக்கிறது. இருப்பினும், மனிதர்கள் மீதான, மூக்கிரட்டையின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடுகளை உறுதி செய்யக்கூடிய, எந்த ஆதாரங்களும் இல்லை.

Cough Relief
₹719  ₹799  10% OFF
BUY NOW

மூக்கிரட்டையின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - Punarnava anticancer properties in Tamil

மூக்கிரட்டையின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் பற்றி, அவை, லுகோமியா (ஒரு வகை இரத்தப் புற்றுநோய்), மார்பகப் புற்றுநோய், தோல் புற்றுநோய், மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றைப் போக்குவதில் பரவலாக ஆராயப்பட்டு இருக்கின்றன. பல்வேறு விட்ரோ மற்றும் விவோ ஆய்வுகளில் மூக்கிரட்டை, புற்றுநோய் செல்களுக்கு எதிராக, ஒரு திறன்மிக்க பரவல் தடுப்பு (பரவுதலை நிறுத்துகிறது) செயல்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு இருக்கிறது.

ஆய்வுக்கூட அடிப்படையிலான சோதனைகள், மூக்கிரட்டை சாறுகள், புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன எனத் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வு மூக்கிரட்டை, போயராவினோன் 1 மற்றும் 2 எனப்படும் இரண்டு வேதியியல் மூலக்கூறுககளைக் கொண்டிருக்கின்றன, அவை, சில மார்பகப் புற்றுநோய் செல்களின் கீமோதெரபி எதிர்ப்பினை நிறுத்துகின்றன எனக் கூறுகிறது. விவோ ஆய்வுகள் மூக்கிரட்டை, கதிர்வீச்சு சிகிச்சையின் காரணமாக ஏற்படுகிற சேதத்துக்கு எதிரான, ஒரு பாதுகாக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றன. இருப்பினும், மூக்கிரட்டையின் புற்றுநோய் எதிர்ப்புத் திறனைப் பற்றி புரிந்து கொள்ள, இன்னும் ஏராளமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

சருமத்துக்கான மூக்கிரட்டையின் நன்மைகள் - Punarnava benefits for skin in Tamil

மூக்கிரட்டை, அதன் சருமத்துக்குக் குணமளிக்கும் நன்மைகளுக்காக, ஆயுர்வேதம் மற்றும் நாட்டு மருத்துவத்தில் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

எத்தனோஃபார்மலாஜிக்கல் ஆய்வுகள், மூக்கிரட்டையின் வேர் மற்றும் இலைகள், மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடி இனத்தவரால், பல்வேறு தோல் வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றன.

மூக்கிரட்டை, ஒரு மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலிகை என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் மூக்கிரட்டை ஒரு மன அழுத்த நீக்கி மற்றும் ரசாயனம் எனவும் அறியப்படுகிறது. இந்த மூன்று பண்புகளும் இனைந்து மூக்கிரட்டையை, சருமத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் குணமளிக்கும், மற்றும் சருமத்துக்கு ஊட்டமளிக்கும் மூலிகையாக மாற்றுகின்றன. மூக்கிரட்டையைப் பயன்படுத்துவது, அரிப்பு மற்றும் தடிப்புகள் போன்ற வழக்கமான சரும பிரச்சினைகளைக் குறைக்க உதவுவது மட்டும் அல்லாமல், கூடவே அது தோலில் ஏற்படும் எந்த ஒரு நோய்த்தொற்று நுண்ணுயிரியை எதிர்த்துப் போராடவும் செய்கிறது.

அதற்கும் மேலாக, மூக்கிரட்டையின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள், கரும்புள்ளிகள் மற்றும் கறைகள் போன்ற வயதாவதற்கான முதற்கட்ட அறிகுறிகளை எதிர்த்துப் போராடும் வேளையில், இந்த மூலிகையின் ஊட்டமளிக்கும் பண்புகள், நிச்சயமாக உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் மற்றும் பொலிவாகவும் தோன்றச் செய்யும்.

உடல் எடைக் குறைப்புக்காக மூக்கிரட்டை - Punarnava for weight loss in Tamil

ஒரு உடல் எடைக் குறைப்பு காரணியாக மூக்கிரட்டையின் திறன் மீதான, ஆதரமளிக்கும் ஆய்வுகள் எதுவும் இல்லாத பொழுதும், அது உடல் எடைக் குறைப்பு முறைகளில் பயன்படுத்தப்படும், முதன்மையான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாக நீடிக்கிறது. ஒரு கோட்பாடு, ஒரு சிறுநீர் பெருக்கியாக இருக்கும் மூக்கிரட்டை, உடலில் உள்ள அதிகப்படியான நீரின் எடையைக் குறைக்க உதவிகரமாக இருக்கக் கூடும் என்று கூறுகிறது. மேலும், மூக்கிரட்டை ஒரு மிதமான மலமிளக்கி எனவும் அறியப்படுகிறது.

மேலும் அந்த ஆய்வு மூக்கிரட்டை, உடலில் திரவங்கள் தேங்குவதைத் தடுக்கிறது, அதன் மூலம் எடைக் குறைப்புக்கு மறைமுகமாக உதவுகிறது என்று கூறியது. இருப்பினும், இந்த உடல் எடைக்குறைப்பு செயல்பாட்டில் பெரும்பாலானவை, உடலில் உள்ள திரவங்களை சமநிலைப்படுத்தும் வடிவத்தில் இருக்கின்றன மற்றும் திசுக்களில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கும், மூக்கிரட்டையின் செயல்பாட்டினை உறுதி செய்யக் கூடியவை அதிகமாக இல்லை.  ஆனால் அது, முறையான உடற்பயிற்சியுடன், ஒரு பிற்சேர்க்கைப் பொருளாக பயன் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. எந்த ஒரு உடல் எடைக் குறைப்பு சிகிச்சை முறைக்கும் மூக்கிரட்டையைப் பயன்படுத்தும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் கேட்பது மிகவும் நல்லது ஆகும்.

(மேலும் படிக்க: உடல் பருமன் சிகிச்சை)

கண்களுக்காக மூக்கிரட்டை - Punarnava for eyes in Tamil

மனிதர்கள் மீதான ஆய்வின் அறிக்கை, மூக்கிரட்டை இலை மற்றும் வேரின் சாறுகள், பல்வேறு கண் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க, ஒரு நிவாரணியாக நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறது. விழி வெண்படல அழற்சி போன்ற கண் பிரச்சினைகளில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க, மூக்கிரட்டை இலையின் சாறு மற்றும் தேன் கலந்து, ஒரு சொட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது. மூக்கிரட்டை வேரின் சாறும் கூட, மாலைக்கண் நோய்க்கு சிகிச்சையளிக்க, ஒரு நிவாரணியாக நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு விவோ ஆய்வில், மூக்கிரட்டை கூழ்மம் மாற்றம் கண் சொட்டு மருந்து, கண்புரை மற்றும் விழி வெண்படல அழற்சியின் அறிகுறிகளைப் போக்குவதில் பயன்மிக்கதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வு, மூக்கிரட்டை கூழ்மம் அல்லது சொட்டு மருந்தை உபயோகிப்பது, எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் விளைவையும் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தது.

இருப்பினும், மருத்துவரீதியிலான ஆய்வுகள் குறைவாக இருப்பதன் காரணமாக, எந்த வகை கண் பிரச்சினைக்கும் மூக்கிரட்டையைப் பயன்படுத்துவதற்கு முன்னர், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் பேசுவது மிகவும் நல்லது ஆகும்.

மன அழுத்தத்துக்காக மூக்கிரட்டை - Punarnava for stress in Tamil

ஆயுர்வேதத்தில் மூக்கிரட்டை, அடிப்படையில் ஒரு ரசாயனமாக (புத்துணர்வூட்டி) அறியப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவர்களின் கூற்றுப் படி, ஒவ்வொரு ரசாயனமும் மன அழுத்தத்தை நீக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. ஆய்வுகள், மூக்கிரட்டை சாறுகள் மற்றும் ஆயுர்வேத தயாரிப்பான மூக்கிரட்டை மந்தூர் ஆகியவை, திறன் வாய்ந்த மன அழுத்த எதிர்ப்பு காரணிகள் எனத் தெரிவிக்கின்றன.

மருந்தகம் மற்றும் மருந்து அறிவியல்களுக்கான சர்வதேச நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, போயர்வினோன் என்பது மூக்கிரட்டை தாவரத்தில் இருக்கின்ற பெரிய மன அழுத்த எதிர்ப்பு காரணி ஆகும்.

(மேலும் படிக்க: மன அழுத்தத்துக்கான காரணங்கள்)

அழற்சிக்காக மூக்கிரட்டை - Punarnava for inflammation in Tamil

பல்வேறு நாட்டு மருத்துவங்கள் மற்றும் கலாச்சாரங்களில் மூக்கிரட்டை, ஒரு அழற்சி எதிர்ப்பு மூலிகையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஆயுர்வேத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், மூக்கிரட்டையை அவற்றின் முக்கிய உட்பொருளாக கொண்டிருக்கின்றன. முன் மருத்துவ ஆய்வுகள், மூக்கிரட்டை இலைகள் சில அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நீக்கும் (வலியைக் குறைக்கும்) பண்புகளைக் கொண்டிருக்கின்றன என சுட்டிக் காட்டுகின்றன. மற்றும் ஒரு ஆய்வுக்கூட ஆய்வு, மூக்கிரட்டையின் அழற்சி எதிர்ப்பு திறன், மழைக் காலங்களில் அதன் உட்சபட்ச அளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருப்பதையும் கூறுகிறது. இருந்தாலும், மனிதர் களுக்கு ஏற்படக் கூடிய அழற்சி பிரச்சினைகளின் அடிப்படையில், அதே செயல்பாட்டினை உறுதி செய்வதற்கான மருத்துவரீதியிலான ஆய்வு முடிவுகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

மூக்கிரட்டையின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் - Punarnava antioxidant properties in Tamil

விட்ரோ (ஆய்வக அடிப்படையிலானது) மற்றும் விவோ ஆய்வுகள், மூக்கிரட்டை ஒரு மிகச் சிறந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி எனத் தெரிவிக்கின்றன. மருந்தியல் மற்றும் தாவர வேதியியல் ஆராய்ச்சிக்கான நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வக அடிப்படையிலான ஒரு ஆய்வு, மூக்கிரட்டையில் உள்ள ஃபெனோலிக் மற்றும் ஃபுளோவோனாய்டு மூலக்கூறுகள், அதன் பெரும்பாலான ஆக்சிஜனேற்ற பண்புகளுக்கு காரணமாக இருக்கின்றன எனத் தெரிவிக்கிறது.

மற்றொரு விட்ரோ ஆய்வு, மூக்கிரட்டையின் ஆக்சிஜனேற்ற பண்புகள், அதில் உள்ள அதிகமான வைட்டமின் சி மற்றும் பாலிஃபெனோல் உட்பொருட்கள் காரணமாக இருக்கக் கூடும் என்று கூறுகிறது.

மாதவிடாய் காலப் பிரச்சினைகளுக்காக மூக்கிரட்டை - Punarnava for menstrual problems in Tamil

பாரம்பரியமாக மூக்கிரட்டை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி (மாதவிடாயின்மை) மற்றும் மாதவிடாய் வலி (வலிமிகு மாதவிடாய்) போன்ற பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆய்வுகள் மூக்கிரட்டை, சில இரத்த உறைவு எதிர்ப்பு திறனைக் (இரத்தம் கட்டி ஆவதைத் தடுக்கிறது) கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றன. விலங்குகள் மீது நடத்தப்படும் ஆய்வுகள் மூக்கிரட்டை உட்கொள்வது, மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்தவும் மற்றும் கருப்பையில் ஏற்படும் பிடிப்புகள், அழற்சி, வீக்கம் போன்ற பொதுவான மாதவிடாய் காலப் பிரச்சினைகளைக் குறைக்கவும், உதவிகரமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றன. இருப்பினும், மாதவிடாய் பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதில் மூக்கிரட்டையின் சரியான செயல்படும் முறை, மற்றும் எடுத்துக் கொள்ளும் அளவைக் கண்டறிய, மேலும் பல ஆய்வுகள் தற்போதும் தேவைப்படுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்திக்காக மூக்கிரட்டை - Punarnava for immunity in Tamil

ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துப் படி, மூக்கிரட்டை ஒரு ஊட்டச்சத்து அளிக்கின்ற மூலிகை ஆகும். இதற்கு மூக்கிரட்டையை உட்கொள்வது, நமது உடல் செயல்பாடுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று அர்த்தம் ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியானது, நமது உடலில் இருந்து நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய்களைத் தள்ளி வைப்பதற்கு பொறுப்பான, முக்கியமான உடல் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு ஆரோக்கியம் அளிக்கும் மூலிகையான மூக்கிரட்டை, ஒரு நோய் எதிர்ப்பு தூண்டியாக (நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது) செயல்பட்டு, அதன் மூலம் நோய்வாய்ப்படுவதில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. விவோ ஆய்வுகள் மூக்கிரட்டை சாறுகள், லிம்போசைட்டுகள் (இரத்த வெள்ளை அணுக்கள்) மற்றும் பிற நோய் எதிர்ப்பு அமைப்பு செல்களின் மீது ஒரு தூண்டுதல் விளைவை ஏற்படுத்துகிறது என்றும், மேலும் மூக்கிரட்டையின் அழுத்தக் குறைப்பு (மன அழுத்தக் குறைப்பு) விளைவுகள், அஸ்வகந்தாவின் விளைவுகளுடன் ஒப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றன.

நுண்ணுயிரியல், நோய் தடுப்பியல் மற்றும் நோய்த்தொற்றுக்களுக்கான நாளேட்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் படி, மூக்கிரட்டையில் உள்ள அல்காலாய்டு உட்பொருள், அதன் நோய் எதிர்ப்பைத் தூண்டும் விளைவுகளுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. இருந்தாலும், மூக்கிரட்டைவேரின் எத்தனால் சாறுகள் மூலம் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தி அழிப்பு செயல்பாடு (நோய் எதிர்ப்பு அமைப்பை அழிக்கிறது) நடைபெறுவதை சுட்டிக் காட்டுகின்ற ஆய்வுகளும் இருந்திருக்கின்றன.

அதனால், உங்கள் நோய் எதிப்பு அமைப்பு மீதான, மூக்கிரட்டையின் செயல்படும் முறையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, ஒரு ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை செய்வது மிகவும் நல்லது ஆகும்.

நீரிழிவுக்காக மூக்கிரட்டை - Punarnava for diabetes in Tamil

விவோ ஆய்வுகள் மூக்கிரட்டை இலையின் சாறு, ஒரு திறன்மிக்க சர்க்கரைக் குறைப்பான் (இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது) என்று சுட்டிக்காட்டுகின்றன.மேலும் அந்த ஆய்வு, மூக்கிரட்டை இலையின் சாற்றினை தொடர்ந்து எடுத்துக் கொள்வது, உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது, அதன் மூலம் இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்க வழிவகுக்கிறது என்று தெரிவித்து உள்ளது. மற்றொரு ஆய்வு மூக்கிரட்டை, கணையத்தில் உள்ள பீட்டா செல்களுக்கு (இன்சுலின் சுரக்கும் பொறுப்பை உடைய செல்கள்) புத்துயிர் அளிப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது என்று தெரிவிக்கிறது. மருத்துவரீதியான பரிசோதனைகள் இல்லாத காரணத்தால், மூக்கிரட்டையின் நீரழிவுக்கு எதிரான விளைவுகளை ப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை செய்வது, மிகவும் நல்லது ஆகும்.

(மேலும் படிக்க: நீரிழிவு சிகிச்சை)

ஆஸ்துமாவுக்காக மூக்கிரட்டை - Punarnava for asthma in Tamil

மருந்தியல் மற்றும் தாவர வேதியியலின் நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, மூக்கிரட்டை, சுவாசக் குழாயில் இருந்து சளியை நீக்கும் செயலைத் தூண்டுகிறது. முன் மருத்துவ ஆய்வுகள், மூக்கிரட்டைஇலை சாறு, குறிப்பிடத்தக்க அளவில் குரல்வளை பாதுகாப்பு விளைவுகளைக் காட்டுகிறது என்று தெரிவிக்கின்றன. ஆகவே மூக்கிரட்டை, வருங்காலத்தில் ஆஸ்துமா எதிர்ப்பு சிகிச்சையில் ஒரு பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கான மூக்கிரட்டையின் நன்மைகளை உறுதி செய்வதற்கு, இதுவரை மனிதர்கள் மீதான எந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இரத்த சோகைக்காக மூக்கிரட்டை - Punarnava for anemia in Tamil

ஆயுர்வேதத்தின் கூற்றுப் படி மூக்கிரட்டை, உடலில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடுகளை சரி செய்வதற்கான மிகச் சிறந்த ஒரு காரணி ஆகும். ஒரு ஆயுர்வேத தயாரிப்பு முறையான மூக்கிரட்டை மந்தூர், ஒரு இரத்த சோகை - எதிர்ப்பு காரணியாக, இந்தியாவில் தேசிய கிராமப்புற ஆரோக்கியத்துக்கான திட்டத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டது.

பாரம்பரியமாக மூக்கிரட்டை மந்தூர் மோருடன் கொடுக்கப்படுகிறது. இருப்புச்சத்தானது, குறைந்த எச்.பி அளவுகளில் நன்கு கிரகித்துக் கொள்ளப்படுகிறது என்று அறியப்படுவது தான் இதன் காரணம் ஆகும். ஒரு சமீபத்திய மருத்துவ ஆய்வில், முதுமைக் கால இரத்த சோகை (முதியவர்களுக்கு ஏற்படுவது) உள்ள 50 நோயாளிகளுக்கு, 90 நாட்கள் கால அளவுக்கு, மோருடன் சேர்த்து இரண்டு மாத்திரைகள் மூக்கிரட்டை மந்தூர் கொடுக்கப்பட்டன. அந்த அனைத்து நோயாளிகளிடமும் இரத்த சோகை அறிகுறிகளில், ஒரு குறிப்பிடத்தக்க குறைவு காணப்பட்டது.

எந்த ஒரு ஆயுர்வேத தயாரிப்பையும் எடுத்துக் கொள்வதற்கு முன்னர், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் பேசுவது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

சிறுநீரகங்களுக்கான மூக்கிரட்டையின் நன்மைகள் - Punarnava benefits for kidneys in Tamil

மூக்கிரட்டை இலைகள், வேர்கள் மற்றும் மொத்த செடியும், பல்வேறு சிறுநீரகப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க, பழங்குடி மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆய்வக அடிப்படையிலான ஆய்வுகள், மூக்கிரட்டையின் நீர்ம சாறுகள், சிறுநீரக கற்கள் உருவாவதன் மீது ஒரு குறிப்பிடத்தக்க தடுப்பு விளைவைக் கொண்டிருக்கின்றன எனத் தெரிவிக்கின்றன. விலங்குகள் மீதான பல ஆய்வுகள், மூக்கிரட்டையின் சிறுநீர் பெருக்க மற்றும் சிறுநீரக பாதிப்பு நன்மைகளைப் பற்றி தெரிவிக்கிறது. ஒரு அடுத்த கட்ட விவோ ஆய்வில், மூக்கிரட்டையில் காணப்படும் நீரில் கரையக் கூடிய ஒரு வேதிப்பொருளான மூக்கிரட்டைநீர்மம், இந்த மூலிகையின் சிறுநீர் பெருக்க பண்புகளுக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது என சுட்டிக் காட்டுகிறது.

நவீன ஆயுர்வேதம், யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதிக்கான சர்வேதச நாளேட்டில் வெளியிடப்பட்ட ஒரு நிலை ஆய்வின் படி, மூக்கிரட்டையில் செய்யப்பட்ட ஒரு ஆயுர்வேத தயாரிப்பு நாள்பட்ட, சிறுநீரக செயலிழப்பால் (சி.எச்.எஃப்) சிறுநீரகத்தின் செயல்பாட்டில் படிப்படியான ஒரு குறைவு ஏற்படுவதைக் கொண்டு குறிக்கப்படுகிறது) பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு, ஆறு மாத கால அளவுக்கு கொடுக்கப்பட்டது. ஆறு மாதங்களின் முடிவில், சிறுநீரகத்தின் செயல்பாட்டில் ஒரு கணிசமான முன்னேற்றம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த ஆய்வு, அதன் பிறகு அந்த நபருக்கு டயாலிசிஸ் தேவைப்படவில்லை எனவும் தெரிவித்தது.

மற்றொரு மருத்துவ ஆய்வில், ஒரு ஆயுர்வேத தயாரிப்பு முறையான மூக்கிரட்டை வடிமம், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் உதவிகரமாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பல்வேறு சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மூக்கிரட்டையின் சரியான செயல்படும் முறை, மற்றும் எடுத்துக் கொள்ளும் அளவு ஆகியவற்றை உறுதி செய்ய, மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

கல்லீரலுக்கான மூக்கிரட்டையின் நன்மைகள் - Punarnava benefits for liver in Tamil

எத்தனோஃபார்மகாலஜிக்கல் (மக்களிடைய உள்ள பொதுவான பயன்பாட்டின் அடிப்படையிலான) ஆய்வுகள் மூக்கிரட்டை, பாரம்பரிய மற்றும் நாட்டு மருத்துவத்தில், பெரும்பாலான கல்லீரல் பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதப்படுகிறது எனத் தெரிவிக்கின்றன. இந்தக் கூற்றுக்களின் அடிப்படையில், மூக்கிரட்டையின் ஈரல் பாதுகாப்புத் திறனை உறுதி செய்வதற்கு, பல்வேறு விவோ (விலங்குகள் அடிப்படையிலானது) ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

விவோ அடிப்படையிலான ஒரு ஆய்வில், மூக்கிரட்டை வேர்களின் சாறு எடுத்துக் கொள்வது, உடலில் ஊன்நீர் அலானைன் அமினோட்ரான்ஸ்ஃபெரஸ் (ஏ.எல்.டி) அளவுகளைக் கணிசமான அளவு குறைக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏ.எல்.டி என்பது வழக்கமாக, உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்காக, கல்லீரலால் வெளியிடப்படும் ஒரு நொதி ஆகும். ஆனால் அளவுக்கு அதிகமான ஏ.எல்.டி என்பது, கல்லீரலின் ஒழுங்கற்ற செயல்பாட்டினை சுட்டிக் காட்டுகிற ஒன்றாகும். 

அடுத்த கட்ட ஆய்வு ஒன்று, மூக்கிரட்டைகளை அறுவடை செய்வதற்கு சிறந்த காலமாக, அதன் வேர்கள் 1-3 செ.மீ அளவு சுற்றளவை அடையும் மே மாதத்தைக் குறிப்பிடுகிறது. அந்த வேர்களின் நீர்ம சாறுகள், மிகச் சிறந்த ஈரல் பாதுகாப்பு நன்மைகளைக் கொண்டிருப்பது காணப்பட்டது. மேலும் அந்த ஆய்வில், நல்ல கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, இந்த மூலிகையின் பொடியாக்கப்பட்ட வடிவத்தை விட, அதன் நீர்ம வடிவம் மிகவும் திறன்மிக்கது என்று கூறப்பட்டது.

இருப்பினும், ஒரு சமீபத்திய நிலை ஆய்வில், மூக்கிரட்டை மந்தூர் என அறியப்படும் ஒரு ஆயுர்வேதத் தயாரிப்பு, கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் சில பண்புகளைக் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, உங்களுக்கான எந்த மூலிகையையும் எடுத்துக் கொள்ளும் சரியான அளவை அறிந்து கொள்ள, ஒரு ஆயுர்வேத மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் திடமாக அறிவுறுத்தப்படுகிறது.

மூக்கிரட்டை பெரும்பாலும், மூக்கிரட்டை மந்தூர் அல்லது மூக்கிரட்டை குளிகை போன்ற ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் வடிவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது, சில ஆயுர்வேத மருத்துவர்களால் மூக்கிரட்டை பொடி, மாத்திரைகள், மற்றும் குழாய் மாத்திரைகள் வடிவில் பரிந்துரைக்கப்படுகிறது.

மூக்கிரட்டை பசை, தோல் பிரச்சினைகளுக்கான சில பாரம்பரிய நிவாரணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

மூக்கிரட்டை தேநீர், கஷாயங்கள் (கதா) மற்றும் கண் கழுவுதல்கள் ஆகியவையும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதன் மருத்துவ நன்மைகளைத் தவிர்த்து மூக்கிரட்டை இலைகள், மேற்கு வங்காளம் மற்றும் அசாமின் சில பகுதிகளில் ஒரு உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பாரம்பரியமாக, எந்த ஒரு குறிப்பிடத்தக்க பக்க விளைவுகளும் இல்லாமல், 15-20 கிராம்கள் மூக்கிரட்டை பொடி (பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்) மற்றும், சுமார் 15 மில்லி மூக்கிரட்டை கஷாயம் எடுத்துக் கொள்ள இயலும் என்று அறியப்பட்டிருக்கிறது.

இருந்தாலும், மூக்கிரட்டையை எடுத்துக் கொள்ளும் சரியான அளவு, உங்கள் உடல் அமைப்பு மற்றும் உடலியல் பிரச்சினைகளைப் பொறுத்து வேறுபடுகிறது. எனவே, எந்த ஒரு வடிவத்திலும் மூக்கிரட்டையை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் கேட்பது எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது

Immunity Booster
₹288  ₹320  10% OFF
BUY NOW
 • நீங்கள் தற்போது ஏதேனும் வகை மருந்துகளை எடுத்துக் கொண்டு இருந்தால், மூக்கிரட்டை அந்த மருந்துகளின் செயல்பாட்டில் இடையூறு செய்யக் கூடும் என்பதால், அதனை எடுத்துக் கொல்வதற்கு முன்னர், உங்கள் ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் விரும்பத்தக்கது ஆகும்.
 • கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மூக்கிரட்டையின் பாதுகாப்பினை உறுதி செய்யும், அறிந்த ஆய்வுகள் எதுவும் இல்லை. எனவே நீங்கள் மூக்கிரட்டையை எந்த ஒரு வடிவத்திலும் எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அறிவுறுத்தத்தக்கது ஆகும்.
 • மூக்கிரட்டை, ஒரு சிறுநீர் பெருக்கியாக அறியப்படுகிறது. அது உங்கள் உடலில் இருந்து நீர் இழப்புக்கு வழிவகுக்கக் கூடும். மூக்கிரட்டையை எடுத்துக் கொள்ளும் முன்னர், உங்கள் உடல் நிலை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ப, இந்த மூலிகையை எடுத்துக் கொள்ளும் சரியான அளவை அறிந்து கொள்ள, உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது, மற்றும் ஒரு மிதமான போக்கைப் பின்பற்றுவது ஆகியவை, மிகவும் அவசியமானவை ஆகும்.

Medicines / Products that contain Punarnava

மேற்கோள்கள்

 1. Sharma J, Gairola S, Gaur RD, Painuli RM. The treatment of jaundice with medicinal plants in indigenous communities of the Sub-Himalayan region of Uttarakhand, India. J Ethnopharmacol. 2012 Aug 30;143(1):262-91. PMID: 22759701
 2. Devesh Tewari et al. Ethnopharmacological Approaches for Therapy of Jaundice: Part I. Front Pharmacol. 2017; 8: 518. PMID: 28860989
 3. Zhengtao Liu et al. Alanine Aminotransferase-Old Biomarker and New Concept: A Review. Int J Med Sci. 2014; 11(9): 925–935. PMID: 25013373
 4. Rawat AK, Mehrotra S, Tripathi SC, Shome U. Hepatoprotective activity of Boerhaavia diffusa L. roots--a popular Indian ethnomedicine. J Ethnopharmacol. 1997 Mar;56(1):61-6. PMID: 9147255
 5. Kunal K Dalal, Thomas Holdbrook, Steven R Peikin. Ayurvedic drug induced liver injury. World J Hepatol. 2017 Nov 8; 9(31): 1205–1209. PMID: 29152040
 6. National Health Service [Internet]. UK; Chronic kidney disease.
 7. G. S. Prashanth, M. S. Baghel, B. Ravishankar, S. N. Gupta, Miten P. Mehta. A clinical comparative study of the management of chronic renal failure with Punarnavadi compound. Ayu. 2010 Apr-Jun; 31(2): 185–192. PMID: 22131708
 8. Megha G. Pandya, Alankruta R. Dave. A clinical study of Punarnava Mandura in the management of Pandu Roga in old age (geriatric anemia). Ayu. 2014 Jul-Sep; 35(3): 252–260. PMID: 26664234
 9. Irié-N'guessan G, Champy P, Kouakou-Siransy G, Koffi A, Kablan BJ, Leblais V. Tracheal relaxation of five Ivorian anti-asthmatic plants: role of epithelium and K⁺ channels in the effect of the aqueous-alcoholic extract of Dichrostachys cinerea root bark. J Ethnopharmacol. 2011 Nov 18;138(2):432-8. PMID: 21963567
 10. Mehrotra S, Mishra KP, Maurya R, Srimal RC, Singh VK. Immunomodulation by ethanolic extract of Boerhaavia diffusa roots.. Int Immunopharmacol. 2002 Jun;2(7):987-96. PMID: 12188040
 11. Barthwal M, Srivastava K. Histologic studies on endometrium of menstruating monkeys wearing IUDs: comparative evaluation of drugs. Adv Contracept. 1990 Jun;6(2):113-24. PMID: 2403030
 12. Biomed Res Int. 2014; 2014: 808302. Ayurvedic formulations containing BD as main ingredient. [Internet]
 13. Shikha Mishra, Vidhu Aeri, Praveen Kumar Gaur, Sanjay M. Jachak. Phytochemical, Therapeutic, and Ethnopharmacological Overview for a Traditionally Important Herb: Boerhavia diffusa Linn. Biomed Res Int. 2014; 2014: 808302. PMID: 24949473
 14. Sreeja S, Sreeja S. An in vitro study on antiproliferative and antiestrogenic effects of Boerhaavia diffusa L. extracts. J Ethnopharmacol. 2009 Nov 12;126(2):221-5. PMID: 19723573
 15. Mehrotra S, Singh VK, Agarwal SS, Maurya R, Srimal RC. Antilymphoproliferative activity of ethanolic extract of Boerhaavia diffusa roots. Exp Mol Pathol. 2002 Jun;72(3):236-42. PMID: 12009788
Read on app