மீகி சிண்ட்ரோம் - Meige Syndrome in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 30, 2019

March 06, 2020

மீகி சிண்ட்ரோம்
மீகி சிண்ட்ரோம்

மீகி சிண்ட்ரோம் என்றால் என்ன?

மீகி சிண்ட்ரோம் என்பது ஒரு வகையான டிஸ்டோனியா ஆகும் தாடை, நாக்கு, கண்களை சுற்றியுள்ள சதைப்பற்று ஆகியவற்றின் அனிச்சையான சுருக்கம் அல்லது இயக்கம் முதலியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு வகையான நரம்பியல் செயல்பாடு கோளாறு ஆகும் (இமை சுருக்கம்).

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மீகி சிண்ட்ரோம் குறிப்பாக டிஸ்டோனியா (ஒரோமேன்டிபுலர்) மற்றும் இமை சுருக்கம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது, அவைகளின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு.

  • ஒரோமேன்டிபுலர் டிஸ்டோனியா – டிஸ்டோனியாவின் இந்த வடிவம் நாக்கு உள்ளிட்ட தாடை தசைகளில் அனிச்சையான மற்றும் வலிமையான சுருக்கத்தை உருவாக்குகிறது. பேசுதல் அல்லது சாப்பிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் போது அந்த தசைகளின் தன்னார்வ இயக்கத்தை இது கடினமாக்குகிறது.
  • இமை சுருக்கம் - வெளிப்புற தூண்டுதல்களான காற்று, பிரகாசமான ஒளி போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல்களால் வலுக்கட்டாயமாக கண்களை சிமிட்டுதல் அல்லது கண்களை அடிக்கடி மூடுதல் மற்றும் திறத்தல் ஆகியவற்றால் இமைச்சுருக்கம் வரையறுக்கப்படுகிறது. இந்த நிலைமை படிப்படியாக உயர்ந்து சுருக்கங்களின் அதிகரித்த அதிர்வெண் மற்றும் தசைச் சுருக்கு ஆகிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கண்களைத் திறக்கக் கூட சிரமமாக இருக்கும் நிலைக்கு உட்படுகின்றனர். இமைச்சுருக்கம் பொதுவாக முதலில் ஒரு கண்ணை பாதிக்கிறது (ஒருபக்க) பிறகு மற்றொரு கண்ணையும் (இருபக்க) பாதிக்கிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மீகி சிண்ட்ரோம் நோய் ஏற்பட எந்தவித குறிப்பான காரணங்களும் இல்லை. அனுமானத்தின் அடிப்படையிலான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • அடித்தள நாளமிலாத்தொகுதியின் செயலிழப்பு – மூளையின் அடித்தள நாளமிலாத்தொகுதியால் திட்டமிடப்பட்டுள்ள, கண் சிமிட்டுதல் போன்ற அனிச்சையான இயக்கங்களை கட்டுப்படுத்தும் மூளை உயிரணுக்களின் குறைபாடு காரணமாக மீகி சிண்ட்ரோம் ஏற்படலாம்.
  • பக்க விளைவுகள் - பார்கின்சன் நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி மீகி சிண்ட்ரோம் நோய்க்கு வழிவகுக்கும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

அரிதாக தோன்றும் இந்த மீகி சிண்ட்ரோம் நோய்க்கு உறுதியான நோயறிதல் முறை இல்லை. எனினும், நரம்பியல் நிபுணர் மீகி சிண்ட்ரோமின் அறிகுறிகள் மற்றும் தாக்கங்களை கண்டறிவதன் மூலமாக இந்நோயை கண்டறிவார்.

தசைச் சுருக்க எதிர்ப்பு மாத்திரைகள் காலப்போக்கில் இந்நிலைமையை மேம்படுத்தலாம்.

க்ளோனாஸெபம், டிரிஹெசிஃபினீயைல், டயஸெபம் மற்றும் பக்லோஃபென் போன்ற மருந்துகள் மீகி சிண்ட்ரோம் அல்லது இமை சுருக்க கிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் இதன் முடிவுகள் பெரும்பாலும் தற்காலிக அல்லது திருப்தியற்றவைகளாக இருக்கின்றன. உணவு மற்றும் மருந்து துறையின் சமீபத்திய ஆய்வின் படி (எஃப்.டி.ஏ), இமை சுருக்க சிகிச்சைக்காக போட்லினியம் மருந்து வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த நிலைக்கான சிகிச்சைக்கு இதுவே பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்தாகும். இருப்பினும், சில நோயாளிகளுக்கு இந்த போடோக்ஸ் சிகிச்சை முறையில் நல்ல பலன் கிடைப்பதில்லை. 



மேற்கோள்கள்

  1. National Organization for Rare Disorders. [Internet]. Danbury; Meige Syndrome.
  2. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Meige disease.
  3. Cleveland Clinic. [Internet]. Euclid Avenue, Cleveland, Ohio, United States; Meige Syndrome.
  4. National Center for Advancing and Translational Sciences. [Internet]. U.S. Department of Health and Human Services; Meige syndrome.
  5. Cleveland Clinic. [Internet]. Euclid Avenue, Cleveland, Ohio, United States; Meige Syndrome: Management and Treatment.