ஆண் இனப்பெருக்க கோளாறு (ஹைப்போகோனாடிசம்) - Male Hypogonadism in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

March 06, 2020

ஆண் இனப்பெருக்க கோளாறு
ஆண் இனப்பெருக்க கோளாறு

ஆண் இனப்பெருக்க கோளாறு (ஹைப்போகோனாடிசம்என்றால் என்ன?

ஆண் இனப்பெருக்க கோளாறு (ஹைப்போகோனாடிசம்) என்பது டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் (இந்த ஹார்மோன் பாலின முதிர்ச்சி காலத்தில் ஆண்களின் உடல் வளர்ச்சியில் மற்றும் மேம்பாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது ) குறைபாடுள்ள ஒரு நிலை, உடல் போதுமான அளவில் இந்த ஹார்மோனை உற்பத்தி செய்ய இயலாது. இந்த நிலை, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.பாலியல் ஹார்மோன் மட்டுமல்லாமல், டெஸ்டோஸ்டிரோன் பாலியல், அறிவாற்றல், மற்றும் உடல் செயல்பாடுகளை (மூளை மற்றும் வளர்சிதை மாற்றம்  மற்றும் நாள (வாஸ்குலர்) அமைப்புகளை செயல்படுத்துகிறது) மற்றும் இயல்பான உடல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இனப்பெருக்க கோளாறு (ஹைப்போகோனாடிசம்) இரு வகைப்படும், அதாவது, முதன்மையானது (விந்தகத்தில்) மற்றும் இரண்டாம் நிலை (மூளை அடித்தள சுரப்பி (ஹைப்போத்தாலமஸ்) அல்லது பிட்யூட்டரி சுரப்பி).

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆண் இனப்பெருக்க கோளாறின் (ஹைப்போகோனாடிசம்) பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகளாக அடங்குவன:

  • இரத்த சோகை.
  • தசை மெலிதல்.
  • குறைந்து போன எலும்பு நிறை அல்லது எலும்பு கனிம அடர்த்தி அல்லது எலும்புப்புரை  நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்).
  • வயிற்றுக் கொழுப்பு.
  • உடல் திடீர் வெப்பமடைதல்.
  • குறைந்த உடல் முடி.
  • தாமதமான எபிபிஷீல் மூடுதல்.
  • ஆண் முலைப் பெருக்கம் (கைனகோமஷ்டியா).
  • பாலியல் செயலிழப்பு உட்பட.
    • விரைப்பு செயலிழப்பு.
    • குறைவான ஆற்றல், வலிமை, பாலுணர்ச்சி உந்துதல் (லிபிடோ), ஆண்குறி உணர்வு, அல்லது விந்து எண்ணிக்கை.
    • பரவசநிலை அடைவதில் சிரமம்.
    • சிறிய விறைகள்.
    • மனத் தளர்ச்சி அல்லது அதிகரித்த எரிச்சல்.
    • ஒருமுகப்படுத்துதலில் சிரமம்.
    • கொழுப்பு அளவுகளில் மாற்றங்கள்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

முதன்மை ஆண் இனப்பெருக்க கோளாறின் (ஹைப்போகோனாடிம்) முக்கிய காரணங்கள்:

  • முதுமை.
  • கிளின்பெல்டர்'ஸ்  நோய்குறி.
  • விரை வீக்கம் (மம்ப்ஸ்  ஆர்க்கிடிஸ்).
  • ஹீமோகுரோமடோசிஸ்.
  • காயமடைந்த அல்லது கீழே இறங்காத விரை.
  • கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை உள்பட்ட புற்றுநோய் சிகிச்சை.

இரண்டாம்நிலை ஆண் இனப்பெருக்க கோளாறின் (ஹைப்போகோனாடிம்) முக்கிய காரணங்கள்:

  • உடல்பருமன்.
  • பிட்யூட்டரி சுரப்பியின் குறைபாடுகள்.
  • மன அழுத்தம் தூண்டிய ஹைபெர்கார்டிசோலிசம்.
  • எச்ஐவி / எய்ட்ஸ்.
  • கால்மன் நோய்க்குறித் தொகுப்பு (சின்ரோம்).
  • காசநோய், சர்கோடியோசிஸ், ஹிஸ்டியோசைட்டோசிஸ் உள்ளிட்ட நோய்கள்.
  • ஓபியேட் வலி மருந்துகள் மற்றும் ஹார்மோன்கள் மருந்துகள்.

இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

மருத்துவர் முக்கியமாக அறிகுறிகள் மூலம் கண்டறிவார் மற்றும் பின்வரும் சோதனைகளும் அறிவுறுத்தபடுகின்றன:

  • ஹார்மோன் பரிசோதனை.
  • சீரம் டெஸ்டோஸ்டிரோன் அல்லது ஃபிரி டெஸ்டோஸ்டிரோன்.
  • சீரம் லுடேனிசிங் ஹார்மோன் (எல்.ஹெச்) மற்றும் சுரப்புத்திசு தூண்டல் ஹார்மோன் (போலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (எஃப்.எஸ்.ஹெச்) இரண்டாம் நிலை ஆண் இனப்பெருக்க கோளாறுக்கு வழங்கப்படுகிறது.
  • விந்து ஆய்வு.
  • பிட்யூட்டரி இமேஜிங்.
  • விரை திசுச் சோதனை (பையாப்சி).
  • மரபணு ஆய்வுகள்.

சிகிச்சையில் முதன்மையாக செய்வது ஹார்மோன் (டெஸ்டோஸ்டிரோன்) மாற்று சிகிச்சை ஆகும்,இது டெஸ்டோஸ்டிரோன் 300-8௦௦ நேகி / டெலி - ஐ வழங்க வேண்டும்.இது கீழ்கண்ட வடிவத்தில் இருக்கலாம்:

  • டிரான்ஸ்டெர்மால் ஒட்டு மூலம் 24 மணிநேரம் தொடர்ந்து டெஸ்டோஸ்டிரோன் வழங்குதல்.
  • பக்கல் டெஸ்டோஸ்டிரோன் மாத்திரைகள், இவை துடிப்புள்ள டெஸ்டோஸ்டிரோன் வெளியிட பயன்படுத்தப்படுகின்றன.
  • உட்பொருத்தக்கூடிய உருளை வடிவ அமைப்பு,, அறுவைசிகிச்சை மூலம் திட்டமிடப்பட்ட மெதுவான வெளியீட்டிற்கு வைக்கப்படுகிறது.
  • சீரம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உயர்வுக்கு நீண்ட காலம்  பயன்படுத்தக்கூடிய மேற்பூச்சு ஜெல்.
  • தசைக்குள் ஊடுருவக்கூடிய ஊசிகள் நீடித்த கிரகித்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன, இவை எண்ணெயில் இடைநிறுத்தி வைக்கப்படுகின்றன.
  • வாய் வழி எடுத்துக்கொள்ளக்கூடிய  டெஸ்டோஸ்டிரோன் மாத்திரைகள், அனால் இது தற்போது இந்தியாவில் கிடைப்பது இல்லை.



மேற்கோள்கள்

  1. Peeyush Kumar. et al. Male hypogonadism: Symptoms and treatment. J Adv Pharm Technol Res. 2010 Jul-Sep; 1(3): 297–301. PMID: 22247861.
  2. Christina Carnegie. Diagnosis of Hypogonadism: Clinical Assessments and Laboratory Tests. Rev Urol. 2004; 6(Suppl 6): S3–S8. PMID: 16985909.
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hypogonadism.
  4. European Association of Urology. [Internet]. Arnhem, Netherlands; EAU Guidelines on Male Hypogonadism.
  5. American Academy of Family Physicians. [Internet]. Leawood,Kansas, United States; Testosterone Therapy: Review of Clinical Applications.

ஆண் இனப்பெருக்க கோளாறு (ஹைப்போகோனாடிசம்) டாக்டர்கள்

ஆண் இனப்பெருக்க கோளாறு (ஹைப்போகோனாடிசம்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஆண் இனப்பெருக்க கோளாறு (ஹைப்போகோனாடிசம்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.