அயோடின் குறைபாடு - Iodine Deficiency in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

December 06, 2018

October 29, 2020

அயோடின் குறைபாடு
அயோடின் குறைபாடு

அயோடின் குறைபாடு என்றால் என்ன?

அயோடின் என்பது ஒரு நுண்ணளவு தனிமம் மற்றும் இது உணவில் இருக்கும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். தைரொக்சின் (நான்கு அயோடின் மூலக்கூறுகளுடன் டி4) மற்றும் ட்ரைஐயோடோதைரோனைன் (மூன்று அயோடின் மூலக்கூறுகளுடன் டி3) போன்ற தைராய்டு ஹார்மோன்களில் அயோடின் ஒரு பாகம் ஆகும். அயோடின் உடலில் உருவாவதில்லை; எனவே, உணவு மட்டுமே அயோடினின் ஒரே மூலமாகும். அயோடின் குறைபாடு போதுமாக தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது, இது தைராய்டு சுரப்பி குறைவு (ஹைப்போதைராய்டிசம்), முன்கழுத்துக்கழலை (தைராய்டு விரிவாக்கம்), மந்தபுத்தி-செவிட்டுநிலை மற்றும் கர்ப்பம் - தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றை விளைவிக்கிறது. கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு சராசரி பெண்களை விட 50% அதிகமாக ஐயோடின் தேவைப்படுகிறது, இதனால் அவர்களுக்கு அயோடின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆபத்துகள் அதிகம்.   

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

அயோடின் குறைபாடுள்ள நோயாளிகளில் கீழே குறிப்பிடப்பட்டது போல குறிப்பிட்ட மருத்துவ நிலைகளுக்கு தொடர்புடைய அறிகுறிகள் காணப்படலாம், அவை:

  • நொறுங்கத்தக்க நகங்கள், முடி நயம் அல்லது சன்னமாதல்.
  • வீங்கிய கண்கள், வெளிர் மற்றும் உலர்ந்த தோல்.
  • அதிகரித்த கொழுப்பு அளவு, தசை அல்லது மூட்டு வலிகள், விறைப்பு, பேச்சு குறைதல் மற்றும் காது கேளாமை
  • தைராய்டு, மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பிற இனப்பெருக்க அமைப்புகள் தொடர்பான பிரச்சினைகள்.
  • நினைவிழப்பு.
  • முன்கழுத்துக்கழலை - தைராய்டு சுரப்பியின் விரிவாக்கம் காரணமாக கழுத்தில் வீக்கம், மூச்சுத்திணறல், விழுங்குவதில் சிரமம் மற்றும் சில நேரங்களில் அடைப்பு ஏற்படுகிறது.
  • தைராய்டு சுரப்பி குறைவு - எடை அதிகரிப்பு, சோர்வு, வறண்ட தோல் மற்றும் மன அழுத்தம்.
  • கர்ப்பம் தொடர்பான பிரச்சினைகள் - கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குழந்தை சீக்கிரமாக பிறத்தல், குழந்தைகளில் ஏற்படும் பிறவி குறைபாடுகள்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

உப்பு என்பது அயோடினின் ஒரு குறிப்பிடத்தக்க உணவு மூலமாக உள்ளது. உணவில் குறைந்த உப்பு உட்கொள்வது, அதே போல் குறைந்த அயோடின் கொண்ட உப்பைப் பயன்படுத்துவது ஆகியவை அயோடின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. சமைக்கும் போது உப்பில் உள்ள அயோடின் வெளியேறிவிடுகிறது. இறைச்சியுடன் ஒப்பிடும்போது பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறைந்த அயோடின் அல்லது அயோடின் இல்லாமல் போகிறது; எனவே, சைவ உணவுப் பழக்க கொண்டவர்களுக்கு அயோடின் குறைப்பாடுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அயொடினின் ஒரு கணிசமான அளவு உடற்பயிற்சியின் போது வெளியேறுகிறது, இது அயோடின் குறைபாட்டுக்கு ஒரு காரணமாக உள்ளது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

அயோடின் குறைபாட்டின் நோய் கண்டறிதல் முறை கீழ் கொடுக்கப்பட்டுள்ள சோதனைகளில் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது:

  • சிறுநீரில் உள்ள அயோடைன் - சிறுநீரில் உள்ள அயோடின் அளவு மூலம் இது கணக்கிடப்படுகிறது. லேசான அயோடின் குறைபாடு உள்ளவர்களின் அயோடின் அளவு 50-99 எம்.சி.ஜி/லிட்டர், மிதமான அயோடின் குறைபாடு உள்ளவர்களின் அயோடின் அளவு 20-49 எம்.சி.ஜி/லிட்டர் மற்றும் கடுமையான அயோடின் குறைபாடு உள்ளவர்களில் <20 எம்.சி.ஜி/லிட்டர் அயோடின் உள்ளது.
  • தைராய்டு அளவு - கேளா ஒலிவரைவி (அல்ட்ராசோனோகிராஃபி) தைராய்டின் அளவை தீர்மானிக்க உதவும் ஒரு மிகவும் துல்லியமான முறை ஆகும்.
  • புதிதாக பிறந்த குழந்தைகளில் உள்ள சீரம் தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன் (டி.எஸ்.ஹெச்).
  • சீரம் தைரோகுளோபுலின்.
  • ரேடியோ அயோடின் - அயோடின் குறைபாடு காரணமாக தைராய்டின் ரேடியோ அயோடின் நுகர்தல் அதிகரிக்கிறது.

அயோடின் குறைப்பாட்டின் சிகிச்சைகள் பின்வருமாறு:

  • உப்பு அயோடைசேஷன் - உணவில் அயோடைஸ்ட் உப்பு சேர்த்துக்கொள்வதன் மூலம் அயோடின் குறைபாட்டை குணப்படுத்தலாம்.
  • மற்ற விருப்பங்கள் - எண்ணெய் (லிபோடோல்) அயோடைசேஷன், அயோடைஸ்ட் நீர் அருந்துதல் மற்றும் அயோடின் மாத்திரைகள் அல்லது சொட்டுகளை உட்கொள்ளுதல்.
  • கடற்பாசி, சாதாரண தயிர், வேகவைத்த பன்னா மீன், பால், மீன் குச்சிகள், வெள்ளை ரொட்டி, இறால் மற்றும் வெள்ளை உருளைக்கிழங்கு தோல் போன்ற அயோடின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்.
  • சோயா, முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற தைராய்டு மூலம் அயோடினின் குறைந்த உறிஞ்சுதலை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவும்.

அயோடின் அளவை அதிகரிக்க குறிப்புகள்:

  • உடலில் இருந்து நச்சுகளை அகற்றுதல்.
  • அயோடின் உட்கொள்ளுதலை அதிகரிக்கவும்.
  • ஆரோக்கியமான உணவு உட்கொள்வதை உறுதி செய்யவும்.



மேற்கோள்கள்

  1. Benmiloud M, Chaouki ML, Gutekunst R, et al. Oral iodized oil for correcting iodine deficiency: optimal dosing and outcome indicator selection.. J Clin Endocrinol Metab 1994; 79:20
  2. Tonacchera M, Dimida A, De Servi M, et al. Iodine fortification of vegetables improves human iodine nutrition: in vivo evidence for a new model of iodine prophylaxis.. J Clin Endocrinol Metab 2013; 98:E694
  3. Chandrakant S. Pandav, Kapil Yadav, Rahul Srivastava, Rijuta Pandav and M.G. Karmarkar. Iodine deficiency disorders (IDD) control in India. Indian J Med Res. 2013 Sep; 138(3): 418–433.
  4. Ashraf Mina Emmanuel J. Favaloro Jerry Koutts in Laboratory Medicine. Iodine Deficiency: Current Aspects and Future Prospects . Volume 42, Issue 12, 1 December 2011, Pages 744 746,https://doi.org/10.1309/LMALJBOWEF678R.TD
  5. United Nations International Children's Emergency Fund. [Internet]. New York, NY; Iodine deficiency.

அயோடின் குறைபாடு டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

அயோடின் குறைபாடு க்கான மருந்துகள்

Medicines listed below are available for அயோடின் குறைபாடு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.