இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரித்தல் - Increased Phosphate Levels in the Blood in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 19, 2018

July 31, 2020

இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரித்தல்
இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரித்தல்

இரத்தத்தில் பாஸ்பேட் அளவுகள் அதிகரித்தல் என்றால் என்ன?

எலும்புகள் மற்றும் பற்களுக்கு பாஸ்பரஸ் என்பது ஒரு அத்தியாவசியமான நுண்ணூட்டம் ஆகும். அதன் அதிகரித்த அளவுகள் ஆபத்தானவையாக இருப்பதோடு அதற்கான உடனடி சிகிச்சை அவசியமானது. இரத்தத்தில் பாஸ்பேட் அதிகரித்த அளவு இருப்பது ஹைப்பர்ஃபாஸ்ஃபேட்டேமியா என அழைக்கப்படுகிறது. இது சிறுநீரகம் மற்றும் இதய நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஹைப்பர்ஃபாஸ்ஃபேட்டேமியா எனும் நிலை அதை வகைப்படுத்தக்கூடிய எந்த அறிகுறிகளைக் கொண்டும் ஏற்படக்கூடியதல்ல. ஆனால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் கீழுள்ள அடிப்படை நோயுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

  • உயர் ஃபாஸ்பேட் பெரும்பாலும் இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவுகளை குறைக்கிறது, இதனால் எலும்புகள் பலவீனமாகின்றன.
  • அதிகரித்த ஃபாஸ்பேட் அளவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு தசை பிடிப்புக்கள் பொதுவான குறைபாடாக ஏற்படுகிறது.
  • ஒருவர் வறண்ட, அரிப்புதன்மையுள்ள மற்றும் செதிலான தோலினை கொண்டிருக்கலாம்.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

  • சிறுநீரகம் ஒழுங்காக செயல்படவில்லையெனில், உடலில் இருக்கும் அதிக பாஸ்பேட்டை அகற்ற முடியாது, இது இரத்தத்தில் அதிகரித்த பாஸ்பேட் அளவு உண்டாக வழிவகுக்கின்றது. நீடித்த சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற சிறுநீரக நோய் அதிகமான சீரம் பாஸ்பேட் அளவுகளை ஏற்படுத்தும்.
  • சிலநேரங்களில், குறைந்த அளவிலான பாராத்தைராய்டு ஹார்மோன் கூட அதிக சீரம் பாஸ்பேட்டை ஏற்படுத்தலாம்.
  • இதேபோல், குறைவான கால்சியம் பாஸ்பேட் அளவுகளை அதிகரிக்கிறது.
  • எண்டோகிரைன் நிலைகளான, நீரிழிவு அல்லது கீட்டோஅசிடோஸிஸ் போன்ற நோய்கள், உடலில் அதிகரித்த பாஸ்பேட் அளவுகளுக்கு காரணமாக அறியப்படுகின்றன.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

ஹைப்பர்ஃபாஸ்ஃபேட்டேமியாவின் அறிகுறிகள் உங்களுக்கு ஏற்படும்போது, உங்கள் மருத்துவர் உடலியல் பரிசோதனை, முழுமையான மருத்துவ வரலாறு, மற்றும் அடிப்படை நிலையை உறுதிப்படுத்த சில பரிசோதனைகளும் ஆகியவைகளை மேற்கொள்வார்.

  • இரத்த பரிசோதனை என்பது இந்நிலைக்கான முதன்மையான ஆய்வாகும், இரத்தத்தில் அதிகரித்த பாஸ்பேட் அளவுகள் இருப்பதை அது வெளிப்படுத்துகிறது. உயர் சர்க்கரை அல்லது அசாதாரண கால்சியம் வளர்சிதைமாற்றத்தையும் இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
  • எலும்புகளில் ஏதேனும் சேதம் இருப்பதாக கருதினால், எலும்புக்கான எக்ஸ் - கதிர்கள் எடுக்கப்படலாம்.

இந்நிலைக்கான சிகிச்சை இது ஏற்படுவதற்கான காரணத்தை பொறுத்தது மற்றும் பின்வரும் தலையீடுகளை உள்ளடக்கியிருக்கலாம்:

  • சிறுநீரக கோளாறுகளுக்கு உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். சில சந்தர்ப்பங்களில், மருந்துகளோடு சேர்ந்து டயாலிசிசும் தேவைப்படலாம்.
  • நீரிழிவே அடிப்படை காரணம் என்றால் இன்சுலின் பரிந்துரைக்கப்படுகிறது.
  • குறைவான கால்சியம் இருக்கிறது என கருதினால் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படலாம். கால்சியம் பைண்டர்கள் எனும் மருந்துகளின் ஒரு வகை இந்நிலையில் மிக பயனுள்ளதாக இருக்கும்.
  • அதிக பாஸ்பேட் அளவுகளை கொண்டிருக்கும் உணவுகளான இறைச்சி, கோழி, மீன், பருப்புகள் மற்றும் இன்னும் மற்ற உணவு பொருட்களை தவிர்ப்பதன் மூலம், இந்நிலைக்கான காரணத்தை பொருட்படுத்தாது இதை கையாளவதற்கு மிக அவசியமானது.



மேற்கோள்கள்

  1. Science Direct (Elsevier) [Internet]; Hyperphosphatemia of chronic kidney disease
  2. Al-Azem H, Khan AA. Hypoparathyroidism.. Best Pract Res Clin Endocrinol Metab. 2012 Aug;26(4):517-22. PMID: 22863393
  3. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Parathyroid glands
  4. Clinical Trials. Dose Finding Study to Treat High Phosphate Levels in the Blood.. U.S. National Library of Medicine. [internet].
  5. Hruska KA, Mathew S, Lund R, Qiu P, Pratt R. Hyperphosphatemia of Chronic Kidney Disease. Kidney Int. 2008 Jul;74(2):148-57. PMID: 18449174

இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரித்தல் டாக்டர்கள்

Dr. Dhanamjaya D Dr. Dhanamjaya D Nutritionist
15 Years of Experience
Dt. Surbhi Upadhyay Dt. Surbhi Upadhyay Nutritionist
3 Years of Experience
Dt. Manjari Purwar Dt. Manjari Purwar Nutritionist
11 Years of Experience
Dt. Akanksha Mishra Dt. Akanksha Mishra Nutritionist
8 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரித்தல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரித்தல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.