ஹீமோகுளோபின் குறைபாடு - Hemoglobin deficiency in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

December 04, 2018

October 29, 2020

ஹீமோகுளோபின் குறைபாடு
ஹீமோகுளோபின் குறைபாடு

ஹீமோகுளோபின் குறைபாடு என்றால் என்ன?

ஹீமோகுளோபின் என்பது நமது இரத்த சிவப்பணுக்களில் இருக்கக்கூடிய முக்கிய ப்ரோட்டீன் ஆகும். இதன் செயல்பாடானது செல்கள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்வதே. குறைந்த ஹீமோகுளோபினின் எண்ணிக்கையானது, ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் அழைக்கப்படுகின்றது, மேலும் இரத்த பரிசோதனை மூலம் இதை எளிதில் கண்டறியவும் முடிகிறது, பொதுவாக இந்நிலை ஆண்களுக்கு 13.5g / dL (135g / L)) அளவை விட குறைவாக இருத்தல் மற்றும் பெண்களுக்கு12 g / dL (120 g / L) அளவை விட குறைவாக இருத்தல் ஆகிவற்றால் வரையறுக்கப்படுகிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பொதுவாக, ஹீமோகுளோபினின் எண்ணிக்கை இயல்பாக இருப்பதை விட சற்று குறைவாக இருந்தால், ஒருவர் எந்த ஒரு அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்.

இருப்பினும், ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கான அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

குறைவான ஹீமோகுளோபின் எண்ணிக்கை என்பது பல காரணிகளால் ஏற்படும் அதீத இரத்த இழப்பின் காரணமாகவும் ஏற்படலாம்:

  • காயம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான இரத்த இழப்பு.
  • அடிக்கடி இரத்த தானம் செய்தல்.
  • கடுமையான மாதவிடாய்.

உடலில் அதிகப்படியான இரத்த சிவப்பணுக்கள் முறிவதின் காரணத்தினால் ஏற்படும் சில நிலைகள் கூட இந்த குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை உருவாக்கத்திற்கு பங்குவகிக்கலாம்:

பிற காரணிகளினால் ஏற்படும் போதிய இரத்த சிவப்பணு உற்பத்தியின்மை ஹீமோகுளோபின் குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது அவை பின்வருமாறு:

  • வைட்டமின் பி 12 குறைவாக எடுத்துக்கொள்தல்.
  • எலும்பு மஜ்ஜை நோய் (எலும்பு மஜ்ஜையில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி செய்யப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது).
  • அஃப்ளாஸ்டிக் அனீமியா - எலும்பு மஜ்ஜையின் ஒரு வகை புற்றுநோயாகும், இது புதிய-செல் உற்பத்தி திறனை அழிக்க வழிவகுக்கிறது.
  • சிறுநீரக நோய்கள்.
  • உணவு பழக்கத்தில் குறைந்த அளவு இரும்பு சத்து மற்றும் ஃபோலேட் இருப்பது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

ஒரு எளிய இரத்தப் பரிசோதனை மூலம் குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள் கண்டறியப்படுகிறது. முழுமையான இரத்த எண்ணிக்கை சோதனையே (சிபிசி) வழக்கமாக மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் சோதனை ஆகும். இது சிவப்பு இரத்த அணுக்கள்,வெள்ளை இரத்த அணுக்கள், ப்ளேட்லட்ஸ், ஹீமோகுளோபின் மற்றும் ஹெமாடோக்ரிட் ஆகிய இரத்தத்தில் உள்ள பாகங்களை அளவிடுகிறது (இரத்த சிவப்பணுக்களால்  செய்யப்பட்ட இரத்தத்தின் சதவிகிதம்). பின் வரும் வழக்குகளில் இரத்த பரிசோதனை செய்யப்படலாம்:

  • உட்புற இரத்தப்போக்கினை அறியும்படியான அறிகுறிகள் பின்வருமாறு.
  • கர்ப்பம்.
  • இரத்த இழப்பினை எதிர்கொள்தல்.
  • சிறுநீரக பிரச்சினைகள்.
  • இரத்த சோகை.
  • புற்றுநோய்.
  • சில மருந்துகளை உட்கொள்வதன் காரணத்தால் ஏற்படலாம்.

குறைந்த ஹீமோகுளோபினுக்கான சிகிச்சை முறை, குறைபாட்டிற்கான காரணத்தின் அடிப்படையை பொறுத்தது. இரத்த சோகை அல்லது ஊட்டச்சத்து குறைப்பாடு போன்ற வழக்குகளுக்கு இரும்பு சத்து, வைட்டமின் பி 12 அல்லது இரத்தத்தில் ஃபோலேட் அளவு போன்றவைகளை அதிகரிக்க உதவும் உணவு சப்ளிமெண்ட்களை மருத்துவர் பரிந்துரைக்கலாம். ஒருவேளை காயத்தினால் இரத்த இழப்பு ஏற்பட்டால், இரத்தமாற்றம் தேவைப்படலாம். வழக்கமாக, அடிப்படை காரணத்திற்கு சிகிச்சையளிப்பதன் மூலம் குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை குணப்படுத்திவிடலாம். சிவப்பு அணுக்கள் அதிகப்படியாக அழிக்கப்படும் வழக்குகளில், இந்நோய்க்கான சிகிச்சையுடன் வெளிப்புற சப்ளிமெண்ட்களும் தேவைப்படலாம்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hemoglobin
  2. Healthdirect Australia. Iron deficiency symptoms. Australian government: Department of Health
  3. MedlinePlus Medical: US National Library of Medicine; Iron
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Iron deficiency: adults
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hemoglobin Test

ஹீமோகுளோபின் குறைபாடு க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஹீமோகுளோபின் குறைபாடு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.