சின்னம்மை - Chickenpox in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

June 28, 2017

April 28, 2023

சின்னம்மை
சின்னம்மை

சுருக்கம்

சின்னம்மை என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். இது உடலில் காய்ச்சல் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தோல் அரிப்பு போன்ற அறிகுறிகளை கொண்டது. தட்டம்மை தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பின் சின்னம்மையின் பாதிப்பானது மிகவும் அரிதாகிவிட்டது. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது. உடலில் வைரஸ் நுழைந்தவுடன், அதன் அறிகுறிகள் 10லிருந்து 21 நாட்களுக்குள் தென்பட ஆரப்பித்து பின் 5 முதல் 10 நாட்கள் வரை சின்னம்மை தொற்றானது நீடிக்கும். தோல் அரிப்பு தோன்றுவதற்கு முன்பாக, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். தோல் அரிப்பு தோற்றமானது மூன்று கட்டங்களாக மாறுகிறது: முதலாவதாக, இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு புடைப்புகளாக தோற்றமளிக்கும், பின்னர் அவை சிறிய திரவம் நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறும், இறுதியாக அவை பட்டையாகவும் மற்றும் கடுந்தழும்பாக மாறுகிறது. பொதுவாக, சின்னம்மையானது ஒரு லேசான நோயாகும், ஆனால் சின்னம்மை காலங்களில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்பவர்களுக்கு தீவிரமான சிக்கல்களை ஏற்படுத்தும், அதாவது நிமோனியா, மூளையில் வீக்கங்கள், ரேயிஸ் அறிகுறிகள் மற்றும் நீர்ப்போக்குகள் ஏற்படும்.சில சமயங்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், அது மரணத்திற்கும் வழிவகுக்கும்.

ஆரோக்கியமான குழந்தைகளுக்கு சின்னம்மைகான மருத்துவ சிகிச்சைகள் தேவையில்லை.ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் மூலம் (அண்டிஹிஸ்டமின்கள்) அரிப்பிலிருந்து விடுப்படலாம். அதிக சிக்களான ஆபத்தில் உள்ளவர்களுக்கு, நோயின் தீவிரத்தை குறைக்க மருத்துவர்கள் வைரஸ் எதிர்ப்பிகள் மற்றும் சின்னம்மை தடுப்பூசிகளைப் பரிந்துரைக்கலாம். மக்கள் தடுப்பூசி போடுவதினால் சின்னம்மை தாக்கத்திலிருந்து விடுப்படலாம் மற்றும் அதன் பாதிப்பானது லேசானதாக இருக்கக்கூடும். சின்னம்மை தடுப்பூசி என்பது பாதுகாப்பானது மற்றும் நோய் தடுக்க பயனுள்ள சிறந்த வழியாகும்.  மேலும், இது கடுமையான சின்னம்மையின் நிலைகளை தடுக்கிறது.

சின்னம்மை அறிகுறிகள் என்ன - Symptoms of Chicken Pox in Tamil

தடுப்பூசி போடதவர்களுக்கு சின்னம்மை ஏற்பட வாய்ப்புண்டு. சின்னம்மையானது சுமார் 5 லிருந்து -7 நாட்களுக்கு நீடிக்கும். சின்னம்மையின் தோற்றம் தோல் அரிப்பாக காணப்படும். இது 3 நிலையாக மாற்றம் அடைக்கிறது:

  • முதலில், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு புடைப்புகளாக தோன்றும் அதை பருக்கள் என்பர், அவைகள் பல நாட்களுக்கு பின்பு உடைக்கிறது.
  • பின்னர், கொப்புளங்கள் எனப்படுவது சிறு திரவ நிரப்பப்பட்ட கொப்புளங்களாக மாறி, ஓரு நாளுக்கு பின் உடைந்து உயர்த்தப்பட்ட புடைப்புகளாக உருவாக்குகின்றது.
  • இறுதியாக, உடைந்த கொப்புளங்கள் பட்டையாகவும் மற்றும் கடுந்தழும்பாக மாறி, குணமடைய நேரம் எடுக்கின்றது.

புதிய புடைப்புகள் உருவாக பல நாட்களாகிறது. எனவே, மூன்று நிலை மாற்றங்களில் இரண்டாவது நாளில் புண்கள், கொப்புளங்கள் மற்றும் புண்கள் நிறைந்த காயங்களும் ஏற்படலாம்.அரிப்பு தோன்றுவதற்கு முன்னரே வைரஸ் தொற்றானது 48 மணிநேரத்திற்குள் பரவி விடுகிறது. மேலும், இது தொற்றும் தன்மையுடையது.

நோயாளியின் சளியில் இருந்து இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது.இந்த தொற்றானது முதலில் மார்பு, பின்புறம் மற்றும் முகத்தில் தோன்றும், பின்னர் உடலின் மற்ற பகுதிகளான பிறப்புறுப்பு, கண் இமைகள் அல்லது வாய் உள்ளிட்ட இடங்களில் பரவுகிறது. அனைத்து கொப்புளங்களும் ஒரு வாரத்திற்குள் கடுந்தழும்பாக மாறிவிடுகிறது.

அரிப்பு எற்படுவதற்கு முன்னதாக ஓன்று அல்லது இரண்டு நாட்களில் சில பொதுவான அறிகுறிகள் தோன்றலாம், அவற்றில் பின்வருவன அடங்கும்:

தடுப்பூசி போட்டவர்களுக்கும் சின்னம்மை ஏற்படலாம். ஆனால், அதன்   அறிகுறிகள் மிகவும் மிதமானதாக காணப்படுக்கிறது. அவர்களுக்கு குறைவான கொப்புளங்கள் அல்லது சிவப்பு புள்ளிகள் மற்றும் லேசான காய்ச்சல் அல்லது காய்ச்சல் இல்லாமலோ இருக்கலாம். இருப்பினும், தடுப்பூசி போடதவர்களை காட்டிலும் தடுப்பூசி போட்டவர்கள் அவ்வப்போது மட்டுமே சின்னம்மை நோயினால் பாதிக்கப்படுள்ளனர்.

உங்கள் மருத்துவரை அழைக்கும் முன்பு உறுதிசெய்யவும்:

  • உங்கள் சின்னம்மை பாதிக்கப்பட்டதாக தெரிந்தால் (சீழ் வடிதல், தழும்பு பெரிதானால்).
  • ஆறாவது நாட்களுக்குப் பிறகும் புதிய சின்னம்மை ஏற்பட்டால்.
  • உங்கள் குழந்தையின் நிலை மோசமாகிருந்தால்.
Herperax 800 Tablet
₹268  ₹283  4% OFF
BUY NOW

சின்னம்மை சிகிச்சை - Treatment of Chicken Pox in Tamil

சின்னம்மை பொதுவாக ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை தேவையில்லை. இந்நிலையில் சிகிச்சையானது பெரும்பாலும் அறிகுறிகளை நிவர்த்தி செய்வதற்கும் தொற்றுநோயைத் தடுக்கும் நோக்கம் உடையதாக இருக்கும்அரிப்புகளை குறைக்க மருத்துவர் உங்களுக்கு ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைக்கலாம் (அன்டிஹிஸ்டமினெஸ்). குறிப்பாக, தூக்கத்தின் போது, கொப்புளங்களின் அரிப்பை குறைக்க பயன்படுத்தபடுக்கிறதுஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்தும்போது அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையின்படி பின்பற்ற வேண்டும்.

சின்னம்மை சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்தலாம், அந்த சிக்கல்களைக் குறைக்க உதவும் மருந்துகளை மருத்துவர் உங்களுக்கு வழங்குவார்.

  • சிக்கல்கள் அதிக உள்ள குழந்தைகளுக்கு, மருத்துவர் பரிந்துரைப்பது.
  • வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் - அசிக்ளோவர்.
  • நரம்பு மண்டல தடுப்பு மருந்துகள்.

முதல் தோல் அரிப்பு தோன்றிய 24 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை கொடுப்பதின் மூலம் நோயின் தீவிரத்தை குறைக்கலாம். சில வைரஸ் எதிர்ப்பிகளான ஃபாம்சிக்ளோவிர் மற்றும் வாலாசிக்ளோவிர் போன்ற மருந்துகளினால் நோயின் தீவிரத்தை குறைக்கலாம், ஆனால் இது அனைத்து நிலை சின்னம்மைக்கும் சரியானதாக இருக்காது.

  • சில நேரங்களில் சின்னம்மையானது, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியின் மூலம் வைரஸ் வெளிப்பாட்டினை தடுக்கவும் மற்றும் நோயின் தீவிரத்தை குறைக்கவும் பயன்படுக்கிறது.
  • ஏதேனும் சிக்கல்கள் உருவாக்கினால், மருத்துவரே உங்களுக்கு பொருத்தமான சிகிச்சையைத் தீர்மானிப்பார். நிமோனியா மற்றும் தோல் நோய்த்தொற்று போன்ற சிக்கல்கள் உருவாக்கினால், ஆன்டிபயாடிக்குகள் வழங்கப்படும்மூளையில் ஏதேனும் வீக்கங்கள் உருவாக்கினால், உங்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படலாம். தேவைப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படாலம்.

சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நோய்த்தொற்று பரவும் இரண்டு நாட்களுக்கு முன்பாக இருந்து புள்ளிகள் தோண்றி ஐந்து நாட்களுக்குப் பிறகு அது தழும்பாகும் வரை நீடிக்கும்.

சுய பராமரிப்பு

நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். ஆதலால், நீங்கள் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ள போது உங்கள் ஆரோக்கிய நிலையை பராமரிக்க பின்பற்ற வேண்டிய சில சுய பராமரிப்பு துணுக்குகள்:

  • குளிர்ந்த நீரில் குளித்தல்: 10 நிமிடங்களுக்கு குளிர்ந்த நீரில் குளிப்பது நமைச்சலை குறைப்பதற்கு உதவுகிறது. குளிப்பதால் கொப்புளங்கள் பரவுவதில்லை. ஒரு வாளி நீருக்கு 2 அவுன்ஸ் சோடா (56.699 கிராம்) சேர்த்து குளிக்கலாம். (எச்சரிக்கை: மிகவும் குளிர்ந்த நீரை தவிர்க்கவும்)
  • பெனட்ரில்-லை முயற்சிக்கவும்: அரிப்பு அதிகமாக இருந்தால் அல்லது தூங்கவிடவில்லை என்றால் வாய்வழியாக உட்கொள்ளும் பெனட்ரில் மாத்திரைகளை கொடுக்கலாம். அதிகப்படியான நமைச்சல் இருக்கும் இடங்களுக்கு நீங்கள் பெனட்ரில் கிரீம் தடவலாம்.
  • கலமைன் லோஷனைப் பயன்படுத்தவும்: மிகவும் அரிப்புள்ள இடங்களில் நீங்கள் கலமைன் லோஷன் பயன்படுத்தலாம். மாற்றாக, நீங்கள் 10 நிமிடங்களுக்கு ஐஸ் கட்டிகள் மூலம் அந்த பகுதிகளை மசாஜ் செய்யலாம். (எச்சரிக்கை: நீங்கள் பெனட்ரில் கிரீம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கலமைன் லோஷனை பயன்படுத்துவதை தவிர்க்கவும் ஏனெனில் இது தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது மேலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது)
  • அரிக்க வேண்டாம்: சிரங்கு போன்ற தோல் தொற்றுநோய்கள் ஏற்படாமல் இருக்க உங்கள் கைகளை அடிக்கடி ஒரு கிருமிநாசினி சோப்பினால் கழுவவும் மேலும் உங்கள் நகங்களை வெட்டுங்கள். புண்களின் அக்குகளை அரிக்கவோ அல்லது எடுக்கவோ செய்யாதீர்கள்.
  • காய்ச்சலை குறைக்கவும்: காய்ச்சலின் வெப்பநிலை 39 ° C க்கு மேலே இருக்கும்போது பராசெட்டமால்- (அசெட்டமினோபன்) எடுத்துக்கொள்ளுங்கள். சின்னம்மை இருக்கும் போது ஆஸ்பிரின்- ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள், அதனால் ரெய்ஸ் நோய்க்குறி என்று அழைக்கப்படும் கடுமையான உடல்நலப் பிரச்சனை ஏற்படக்கூடும். இபுரூஃபனை வலி நிவாரணிகளை பயன்படுத்தாதீர்கள், அது ஸ்ட்ரெப்டோகாகஸ் தொற்று ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கலாம்.
  • மென்மையான உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்: தொண்டை புண் அல்லது வலியுடைய வாய் இருந்தால், மென்மையான உணவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாட்டிலில் திரவ உணவுகளை சாப்பிடுவதற்கு பதில் ஒரு கப்பில்  சாப்பிடவும் ஏனெனில் பாட்டிலில் உண்பது அதிக வலிக்கு காரணமாக இருக்கலாம்,  (மேலும் வாசிக்க: வாய் புண் சிகிச்சை)
  • வாய் வலிக்கு ஆன்டாக்சிட் பயன்படுத்தவும்: 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான வாய் புண்கள் இருந்தால் சாப்பிட்ட பிறகு நாளொன்றுக்கு 4 முறை ஒரு தேக்கரண்டி திரவ ஆன்டாக்சிட்- வாய் கொப்பளிக்க பயன்படுத்தவும். இளம் குழந்தைகளுக்கு வாய்க்கு முன்னால்  உணவுக்குப் பிறகு திரவ ஆன்டாக்சிட்- ஒரு சில துளிகள் போட வேண்டும்.
  • சிறுநீர் கழிகும்போது கடுமையான வலி இருந்தால் பெட்ரோலியம் ஜெல்லியை முயற்சிக்கவும்: பெண்களுக்கு பிறப்புறுப்பின் வலி மிகுந்த புண்களின் மீது பெட்ரோலியம் ஜெல்லியை தடவவும். கடுமையான வலிக்கு நம்பிங் ஆயில்மென்ட்- ஒரு நாளுக்கு 4 முறை பயன்படுத்தவும். இது ஆணுறுப்பின் முனையிலுள்ள கொப்பளங்களின் வலியையும் போக்கக்கூடியது.

வழக்கமாக நாள் 6 அல்லது நாள் 7 அன்று அனைத்து புண்களும் நன்கு காய்ந்து குணமான பின்பு உங்கள் பிள்ளை பள்ளிக்கூடம் அல்லது தினப்பராமரிப்புக்கு செல்லலாம். சுய சுத்தம் பேணுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் சின்னம்மையைத் தடுக்க உதவும் சிறந்த வழிகள் ஆகும்.



மேற்கோள்கள்

  1. National institute of child health and human development [internet]. US Department of Health and Human Services; Chickenpox
  2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Chickenpox (Varicella)
  3. Mohan Lal. Public Health Significance of Chickenpox in India. Department of Community Medicine, Government Medical College, Amritsar, Punjab, India
  4. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Chickenpox (Varicella). Harvard University, Cambridge, Massachusetts.
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Signs and Symptoms
  6. Healthdirect Australia. What causes chickenpox?. Australian government: Department of Health
  7. Department of Health and Senior Services. [Internet]. Department of Health and Social Security, Missouri. Varicella-Zoster Virus (Chickenpox and Shingles).
  8. Wu PY, Li YC, Wu HD. Risk factors for chickenpox incidence in Taiwan from a large-scale computerized database.. Int J Dermatol. 2007 Apr;46(4):362-6. PMID: 17442073
  9. American Academy of Pediatrics. Varicella Vaccine Update. Committee on Infectious Diseases Pediatrics Jan 2000, 105 (1) 136-141
  10. American Academy of Pediatrics. Prevention of Varicella: Recommendations for Use of Varicella Vaccines in Children, Including a Recommendation for a Routine 2-Dose Varicella Immunization Schedule. Committee on Infectious Diseases Pediatrics Jul 2007, 120 (1) 221-231
  11. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Prevention and Treatment
  12. Healthdirect Australia. Chickenpox diagnosis. Australian government: Department of Health
  13. Michigan Medicine: University of Michigan [internet]; Chickenpox: Controlling the Itch
  14. National Health Service [Internet]. UK; Chickenpox
  15. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Chickenpox Can Be Serious
  16. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Complications

சின்னம்மை க்கான மருந்துகள்

Medicines listed below are available for சின்னம்மை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for சின்னம்மை

Number of tests are available for சின்னம்மை. We have listed commonly prescribed tests below: