கரு குழாய் அடைப்பு - Blocked Fallopian Tubes in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 28, 2018

March 06, 2020

கரு குழாய் அடைப்பு
கரு குழாய் அடைப்பு

கரு குழாய் அடைப்பு என்றால் என்ன?

கரு குழாய் என்பது ஒரு ஜோடி சிறிய குழாய்களாகும், இவைகள் பெண்களின் அண்டப்பையிலிருந்து கருப்பைக்கு முட்டையை எடுத்துச் செல்லும் குழாயாகும். மனிதர்களில், கருத்தரித்தலுக்கு தேவைப்படும் முட்டைகள் இந்த கரு குழாய்களில்  உண்டாகிறது . கரு குழாயில் தடை மற்றும் அடைப்புகள் இருந்தால் அது கரு குழாயில் செல்லும் முட்டைகளை அடைக்கலாம் அல்லது கரு குழாய் வழியாக கருப்பைக்கு   செல்வதையும் தடுக்கலாம். இது கருப்பையின் நிலைமையால் ஏற்படலாம் அல்லது பால்வினை நோய்கள் மற்றும் இடம் மாறிய கர்ப்பம் மற்றும் கருவுறுதல் பிரச்சனைகளை தவிர்க்க, முழு கவனம் தேவை.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

தாமதமான மாதவிடாய் அல்லது மிக குறுகிய அல்லது மிக நீண்ட மாதவிடாய் சுழற்சிகள் தவிர கரு குழாய் அடைப்பிற்கு பெரும்பாலும் மலட்டுத் தன்மையை தவிர வேறு அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் காணப்படுவதில்லை.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

கருப்பை குழாய்  அடைப்புக்கு  மிகவும் பொதுவான காரணங்களாக  கருப்பை குழாயின் உட்புறத்தில் ஏற்படும் தழும்புகள்  அல்லது குழாய்க்குள் ஏற்படும் அசாதாரண வளர்ச்சிகள் போன்றவை குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் முக்கிய காரணிகள் ஆகும். இவை பொதுவாக பின்வருபவற்றை உள்ளடக்கியுள்ளது:

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சை அளிக்கபடுகிறது?

கரு குழாய் அடைப்பானது பல்வேறு கதிர்வீச்சுகளை பயன்படுத்தியும் அல்லது கீழ்கண்ட ஸ்கோப்பிங் நுட்பங்களை வைத்தும் கண்டறியப்படுகிறது:

  • வயிறு மற்றும் இடுப்பின் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
  • ஹிஸ்ட்ரோசல்பிங்கோகிராம் எனப்படும் சிறப்பு எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை ஆய்வு.
  • இடுப்பில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட்.
  • லாப்ரோஸ்கோப்பி.

இதன் சிகிச்சை முறைகளில் கருக்குழாய் அடைப்பை அகற்ற திறந்த அல்லது லாப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை உள்ளது. அதில் கீழ்கண்ட நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன:

  • அடைப்பு கருப்பையின் அருகே இருந்தால், அடைப்பை நீக்குவதற்கு ஒரு சிறிய குழாயை (கேனுலா) உள்ளே நுழைத்தால் போதும், அது அறுவை சிகிச்சை தேவையில்லாத கருப்பை குழாய் அடைப்பை நீக்க போதுமானது.
  • அதிக விரிவான அல்லது ஆழமான அடைப்பு ஏற்படுகையில் குழாயின் அடைக்கப்பட்ட பகுதியை அகற்றவும் மீண்டும் அகற்றிய பகுதியை நீக்கிவிட்டு, அதன் இரண்டு ஆரோக்கியமான முனைகளை இணைக்க அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்படுகிறது.
  • ஹைட்ரொசால்பின்ஸ் (திரவ உருவாக்கம் காரணமாக குழாய் அடைக்கப்படுவது), மூலம் திரவ உருவாக்கத்திற்கு காரணமானவற்றை அகற்றி, கருப்பைக்கு ஒரு புதிய திறப்பை உருவாக்குவது.
  • அண்டப்பையிலுருந்து இருந்து முட்டை எடுத்து செல்வதற்கு, குழாயின் சேய்மை முடிவு அறுவை சிகிச்சையின் மூலம் மறுஉருவாக்கம் செய்படுவது.



மேற்கோள்கள்

  1. Virtua Health System. Blocked Fallopian Tube. Camden NJ; [Internet]
  2. Virtua Health System. Blocked Fallopian Tube Print. Camden NJ; [Internet]
  3. Madhuri Patil. Assessing tubal damage. J Hum Reprod Sci. 2009 Jan-Jun; 2(1): 2–11. PMID: 19562067
  4. HealthLink BC [Internet] British Columbia; Fallopian Tube Procedures for Infertility
  5. National Health Service [Internet]. UK; Overview - Infertility