அக்லாசியா - Achalasia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 19, 2018

July 31, 2020

அக்லாசியா
அக்லாசியா

அக்லாசியா (உணவுக்குழாய் அலை இழப்பு) என்றால் என்ன?

அக்லாசியா என்பது உணவுக்குழாயை (ஈஸோபாகஸ்) பாதிக்கும் ஒரு அரிய ஆனால் தீவிரநிலையை ஏற்படுத்தக்கூடிய நோயாகும். இது இரு பாலினத்தை சார்ந்தவருக்கும் சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது, இது எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும், இது 30லிருந்து -70 வயதுடையவர்களிடத்திலேயே அதிகமாக நிகழ்கிறது. பொதுவாக அக்லாசியா வளர பல ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது.

வழக்கமாக, உணவுக்குழாய்க்குரிய தசைகள் சுருங்கி மற்றும் தளர்கிறது (பெரிஸ்டால்சிஸ் என அறியப்படுகிறது) இவ்வாறு மாறி மாறி செயல்பட்டு உணவை வயிறுன்னுளே தள்ளுகிறது. வளையம்-போன்ற தசைநார் வால்வின் (கீழ் எஸாகேஜியல் ஸ்பைன்டர்) உதவியோடு உணவுக்குழாயின் கீழ் முனை வயிற்றோடு இணைக்கப்படுவதால் இந்த வால்வானது தளர்வடைந்து வயிற்றுக்குள் உணவின் நுழைவை அனுமதிக்கிறது. அக்லாசியா, இந்த இரண்டு செயல்முறைகளிலுமே பிரச்சனை ஏற்படுகிறது. உணவுக்குழாய்களின் தசைகள் முறையாக சுருங்குவதும் தளர்வதும் இல்லாமலோ மற்றும் வளையம்-போன்ற தசைநார் வால்வு தளராமலோ அல்லது முழுமையாக தளர்வதற்கு தவறிவிடுதலோ ஏற்பட்டால், உணவானது உணவுக்குழாய்களின் அடிதளத்தில் சிக்கிக்கொண்டு அசௌகரியத்திற்கும் அவஸ்தை அறிகுறிகளுக்கும் வித்திடுகிறது.

இதன் முக்கிய அறிகுறிகள் யாவை?

அக்லாசியா நோயையுடைய மக்கள் வழக்கமாக உணவு மற்றும் திரவங்களை விழுங்குவதில் சிரமத்தை எதிர்க்கொள்கின்றனர் (டிஸ்ஃபேஜியா/விழுங்கற்கடுமை). இதற்கு சிகிச்சை அளிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், காலப்போக்கில், நிலை மோசமாகி விழுங்குதலுகான சாத்தியமில்லாமல் போகலாம். மேலும், சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், அது உணவு குழாயில் புற்றுநோயாக உருவாவதற்கான சிறிய ஆபத்தும் இருக்கிறது. எனவே, அறிகுறிகள் தோன்றும் ஆரம்ப நிலையிலேயே அக்லாசியாவிற்கான சிகிச்சையளிப்பது அவசியமானது.

மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

  • மார்பில் ஏற்படும் எரிச்சல் உணர்வு.
  • விழுங்கப்பட்ட உணவு அடைப்பதால் ஏற்படும் மூச்சுத்திணறல்.
  • கக்குவான் இருமல்.
  • உணவருந்திய பின் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம்.
  • விழுங்கிய பிறகு உணவை வாந்தியெடுத்தல்.
  • படிப்படியான ஆனால் கணிசமான எடை இழப்பு.

அக்லாசியாவின் அறிகுறிகளும் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (ஜெர்ட்) (இதில் வயிற்றின் உள்ளிருப்பவைகள் உணவுக் குழாய்கே மீண்டும் செல்கின்றன), எஸாகேஜியல் பெர்ஃபெரேசன் / உணவுக் குழாய் துளையீடு (உணவுக் குழாயின் முறிவு) மற்றும் உணவுக் குழாய் புற்றுநோய் ஆகியவைகளின் அறிகுறிகளும் ஒற்றுமையானவை.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

உணவுக்குழாய் நரம்புகளுக்கு ஏற்படும் சேதம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளின் தொடர்ச்சியான இழப்பு அக்லாசியாவுக்கு வழிவகுக்கிறது. மேலும், தசைநார் வால்வு மற்றும் உணவு குழாய் சரியாக செயல்படாது.

அக்லாசியா, வைரல் நோய் தொற்றுக்கள், தன்னியக்க நிலைமைகள் (ஆட்டோ இம்யூன் நோய்கள்) மற்றும் மரபுவழி போன்றவகைகளோடும் தொடர்புக் கொண்டிருக்கிறது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பொதுவாக அக்லாசியா கண்டறியப்படும் முறைகள் பின்வருமாறு:

  • பேரியம் விழுங்குதல்:
    இது பேரியம் சல்ஃபேட்டை உணவுக்குழாயினுள் பாயச்செய்த பின்னர் எக்ஸ்-கதிர்கள் எடுக்கப்படும் ஒரு எளிய செயல்முறை ஆகும். இது உணவுக்குழாயை அமைப்புரீதியாக காண்பதற்கும், உணவு வயிற்றுக்குள் இறங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்கும் செய்யப்படும் சோதனையாகும்.
  • எஸாகேஜியல் மானோமெட்ரி:
    இந்த பரிசோதனை 45 நிமிடங்கள் எடுக்கப்படும் மற்றும் இது எஸாகேஜியல் தசைகளின் வலிமை மற்றும் இயக்கத்தையும் தசை வால்வுகளின் இயக்கத்தோடு காட்சிப்படுத்த செய்யப்படுகிறது.
  • எண்டோஸ்கோபி:
    ஒரு மெல்லிய குழாயை தொண்டையினுள்ளே செலுத்தி உணவுக்குழாயின் லைனிங், அதன் முடிவில் இருக்கும் தசை வளையம் மற்றும் வயிறு ஆகியவற்றை நேரடியாக படத்தில் பார்க்க உதவுகிறது.

அக்லாசியா குணப்படுத்த முடியாதது, ஆனால் இதற்கான சிகிச்சை இதனால் ஏற்படும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

  • மருத்துவ பராமரிப்பு:
    • நைட்ரேட்டுகள் மற்றும் கால்சியம் சேனல் பிளாக்கர்கள் ஆகியவை கீழ் எஸாகேஜியல் ஸ்பைன்டரில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன, இதனால் எளிதாக விழுங்கமுடிகிறது.
    • பொட்டுலினியம் நச்சு (போடோக்ஸ்) எண்டோஸ்கோப்பின் உதவியோடு தசைநார் வளையத்திற்குள் உட்செலுத்தப்படுவதால் அதன் தளர்ச்சிக்கு உதவுகிறது. எனினும், இதன் விளைவு நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை மற்றும் பெரும்பாலான மக்களுக்கு மீண்டும் போடோக்ஸ் செலுத்த வேண்டியிருக்கிறது.
    • அனஸ்தீசியாவின் கீழ், ஒரு பலூனை ஈஸோபாகஸினுள் செலுத்துவதால் உணவு குழாயின் கீழ் முனையில் உள்ள வால்வை அது விரிவடையச்செய்கிறது. இது பலூன் விரிவாக்கம் (டைலட்டேஷன்) என குறிப்பிடப்படுகிறது.
  • அறுவை சிகிச்சை பராமரிப்பு:
    ஜெனரல் அனஸ்தீசியாவின் கீழ், கீழ் எஸாகேஜியல் ஸ்பைன்டரில் இருக்கும் நார்ச்சத்துகள் விளக்கப்படுகின்றன. இது ஒரு லேபராஸ்கோப்பின் மூலம் செயல்படுத்தப்படுதுகிறது, மேலும் வேகமாக நோய் குணமடைதல் மற்றும் குறுகிய காலமே மருத்துவமனையில் இருப்பதையும் உறுதி செய்கிறது.



மேற்கோள்கள்

  1. Mayberry JF. Epidemiology and demographics of achalasia. Gastrointest Endosc Clin N Am. 2001 Apr;11(2):235-48. PMID: 11319059
  2. Podas T, Eaden J, Mayberry M, Mayberry J. Achalasia: a critical review of epidemiological studies.. Am J Gastroenterol. 1998 Dec;93(12):2345-7. PMID: 9860390
  3. National Health Service [Internet]. UK; Achalasia
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Achalasia
  5. Nidirect. Achalasia. UK. [internet].
  6. MSD mannual consumer version [internet].Achalasia. Merck Sharp & Dohme Corp. Merck & Co., Inc., Kenilworth, NJ, USA

அக்லாசியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for அக்லாசியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹90.0

Showing 1 to 0 of 1 entries