பதற்றம் - Tension in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 21, 2019

March 06, 2020

பதற்றம்
பதற்றம்

பதற்றம் என்றால் என்ன?

பதற்றம் என்பது நமது வாழ்வின் சூழ்நிலைகள், அழுத்தங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம் உடலின் வெளிப்பாடு ஆகும். பதற்றம் மற்றும் மனஅழுத்தம் ஏற்படுவதற்கான காரணிகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேறுபடுகிறது. சூழ்நிலைகள் மீது சிறிய அல்லது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், எதிர்பாராத அல்லது புதிதாக எதையாவது அதிக முயற்சியுடன் கையாளும் போது பதற்றம் ஏற்படலாம். நீண்ட கால பதற்றம் மற்றும் மன அழுத்தமானது உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பதற்றத்துடன் தொடர்புடைய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • தூக்கமின்மை.
  • சுயமரியாதை இல்லாமை.
  • சோர்வு.
  • மனச்சோர்வு.
  • மிக குறைவாக அல்லது மிக அதிகமாக சாப்பிடுவது.
  • மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுதல்.
  • ஒருமுகப்படுத்துவதில் சிரமம்.
  • எடை குறைதல் அல்லது அதிகரித்தல்.
  • தலைவலி.
  • தொடர்ந்து கவலைப்படும் உணர்வு.
  • மலச்சிக்கல்.
  • அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கை.
  • வயிற்றுப்போக்கு.
  • கவலைப்பதற்றம்.
  • தசை வலி.
  • பயஉணர்வு.
  • தலைசுற்றல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பதற்றத்தின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • குடும்பம், வேலை மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுடன் தொடர்புடைய மன அழுத்தம்.
  • மன அழுத்த கோளாறுகள், உதாரணமாக, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்த நோய் (பி.டி.எஸ்.தி).
  • நெருங்கிய குடும்ப உறுப்பினரின் இழப்பு.
  • அதிக அழுத்தத்தில் இருப்பது.
  • தோல்வி மனப்பான்மை.
  • முக்கிய வாழ்க்கை மாற்றங்கள்.
  • ஒரு குழந்தை கொண்டிருப்பது.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர் மருத்துவ வரலாற்றை ஆராய்ந்து மன அழுத்தத்தை கண்டறிய ஒரு உடல் பரிசோதனையை நடத்துகிறார்.

பதற்றத்திற்கு சிகிச்சை அளிக்க கிழ்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது:

  • அறிவாற்றல் நடத்தை சிகிச்சை: இந்த சிகிச்சை மனதிலிருந்து எதிர்மறையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களை விலக்கி, ஒரு நபரை அமைதியாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க உதவுகிறது. தூக்கம், உண்ணும் பிரச்சினைகள் மற்றும் மது பயன்படுத்துதல் போன்ற பழக்க வழக்கங்களில் இருந்து நிவாரணம் பெற இது உதவுகிறது.
  • ஆசுவாசப்படுத்தும் உத்திகள்: தியானம், யோகா மற்றும் டாய் சீ அல்லது அத்தியாவசிய எண்ணெய்களில் நறுமணமூட்டலுடன் சேர்த்து சமூக ஆதரவு மற்றும் ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள், மனதிற்கு ஓய்வு கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • உடல் செயல்பாடு: மனநிலையை மேம்படுத்தவும், தசை இறுக்கத்தை குறைக்கவும் முறையான உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
  • குழு சிகிச்சை மற்றும் உளவியல் அமர்வுகள்: திறந்த குழு மற்றும் மூடிய குழு அமர்வுகளில் பங்கேற்பது, உணர்வுகளை வளர்க்கவும், சமூகத் திறன்களை மேம்படுத்தவும், நம்பிக்கையுடன் இருக்கவும் உதவும்.
  • மது அருந்துதல் குறைபாடு, கஞ்சா உபயோகக்கோளாறு, ஹெராயின் பயன்பாட்டு கோளாறு மற்றும் புகையிலைப் பழக்கக் கோளாறு போன்ற பழக்கங்களுக்கு அடிமையானோர்க்கு சிகிச்சை அளித்தல்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Stress
  2. National Health Service [Internet]. UK; Cognitive behavioural therapy (CBT).
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Stress and your health
  4. Office of Disease Prevention and Health Promotion. Manage Stress. [Internet]
  5. National Center for Complementary and Integrative Health [Internet] Bethesda, Maryland; 5 Things To Know About Relaxation Techniques for Stress
  6. Substance Abuse and Mental Health Services Administration. Mental Health and Substance Use Disorders. U.S. Department of Health and Human Services [Internet]

பதற்றம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for பதற்றம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.