கழுத்துப் பிடிப்பு - Stiff Neck in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

கழுத்துப் பிடிப்பு
கழுத்துப் பிடிப்பு

கழுத்துப் பிடிப்பு என்றால் என்ன?

கழுத்துப் பகுதியில் ஏற்படும் அசௌகரியம் கழுத்துப் பிடிப்பு எனப்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால், கழுத்தை திருப்பவோ அசைக்கவோ செய்யும் போது வலி மற்றும் சிரமம் ஏற்படலாம். பிடிப்பு பெரும்பாலும் வலியேற்படுத்தும் தசைச் சுருக்கத்தால் ஏற்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?    

கழுத்தில் வேதனை, தலையை ஒரு பக்கமாக திருப்புவதில் சிரமம் ஆகியவற்றை கழுத்துப் பிடிப்பு உண்டாக்கும். நரம்பில் அழுத்தம் ஏற்பட்டால், நரம்பில் சிலிர்ப்பு, உணர்வின்மை மற்றும் மேல்கைகளில் பலவீனம் ஆகியவை பாதிக்கப்பட்ட கைகளில் பக்கத்தில் ஏற்படும்.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மடிக்கணனிகளில் அல்லது மொபைல் போன்களில் பல மணிநேரம் வேலை செய்தல், தவறான உட்காரும் நிலை, தவறான நடக்கும் தோரனை, கனமான பொருட்களை தூக்குதல் போன்ற பல அன்றாட நடவடிக்கைகள் பொதுவாக கழுத்துப் பிடிப்பிற்கு காரணமாகின்றன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உங்கள் கழுத்தில் அசௌகரியம் ஏற்படுத்துகின்றன மற்றும் நீண்ட நேரம் சங்கடமான கோணத்திலும் இருக்க வைக்கின்றன. மற்ற முக்கிய காரணி மன அழுத்தம், இது கழுத்து தசையில் அழுத்தத்தையும் நீண்ட நேரத்திற்கு சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. விளையாடும் போது ஏற்படும் காயங்கள் மற்றும் விபத்துக்கள் கழுத்துப் படிப்பிற்கான பொதுவான காரணங்களில் சில.கழுத்துப் பிடிப்பை ஏற்படுத்தும் சில மருத்துவ நிலைகளில் செர்விகல் ஸ்போண்ட்டிலோசிஸ், டார்டிகோலிஸ் மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா ஆகியவை அடங்கும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?    

அறிகுறிகளின் அடிப்படையில், மருத்துவர் உங்கள் கழுத்தை பரிசோதிப்பார் மற்றும் நிலையின் தீவிரத்தை மதிப்பீடு செய்ய கழுத்தின் இயக்கங்களின் வரம்பையும் பரிசோதிப்பார். ஸ்கேன்கள் பொதுவாக தேவைபடுவதில்லை.

தேவைப்பட்டால் சிகிச்சைக்காக தசை தளர்த்திகள், வலி நிவாரணிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படும்.

வீட்டு வைத்தியம் மற்றும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவற்றை மேற்கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:

  • 10-15 நிமிட நேரத்திற்கு தினம் ஒரு முறை சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடங்கள்.
  • அறிகுறிகள் நீக்கும் வரை கழுத்திற்கு முழுமையான ஓய்வு கொடுத்தல், உடற்பயிற்சி செய்யாதிருத்தல்.
  • கழுத்துப்பிடிப்பைக் குறைக்க மென்மையாக மசாஜ் செய்யலாம்.
  • நல்ல உறுதியான படுக்கும் மெத்தை கழுத்துக்கு நல்ல ஆதரவு தருகிறது மற்றும் இது கழுத்துப் பிடிப்பை விடுவிக்கிறது.

கழுத்துப் பிடிப்பை பின்வரும் சில எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்களால் தடுக்க முடியும்:

  • லேப்டாப் மற்றும் மொபைல் ஃபோனில் செலவிடும் நேரத்தை குறைத்தல்.
  • கணினி உங்கள் கண் மட்டத்தில் இருக்குமாறு, உங்கள் நாற்காலியின் உயரத்தை சரிசெய்தல்.
  • ஒரே நிலையில் இருக்காமல் அவ்வப்போது நீட்டுதல் பயிற்சி செய்தல்.
  • ஒழுங்கான உடற்பயிற்சி செய்வது மற்றும் நல்ல உடல் இருக்கை நிலையை பராமரித்தல்.



மேற்கோள்கள்

  1. Rezasoltani A, Ahmadi A,Nehzate-Khoshroh M, Forohideh F, Ylinen J. Cervical muscle strength measurement in two groups of elite Greco-Roman and free style wrestlers and a group of non-athletic subjects. Br J Sports Med 2005;39(7): 440–443. PMID: 15976167
  2. Vibert N, MacDougall HG, de Waele C, Gilchrist DPD, Burgess AM, Sidis A, et al. Variability in the control of head movements in seated humans: a link with whiplash injuries? J Physiol 2001;532(3): 851–868. PMID: 11313451
  3. Sacher N, Frayne RJ, Dickey JP. Investigating cervical muscle response and head kinematics during right, left, frontal and rear-seated perturbations. Traffic Inj Prev 2012;13(5): 529–536. PMID: 22931183
  4. Simoneau M, Denninger M, Hain TC. Role of loading on head stability and effective neck stiffness and viscosity.. J Biomech 2008;41(10): 2097–2103. PMID: 18571655
  5. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Neck pain: Overview. 2010 Aug 24 [Updated 2019 Feb 14].

கழுத்துப் பிடிப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for கழுத்துப் பிடிப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.