காது வலி - Ear Pain in Tamil

Dr. Abhishek GuptaMBBS

November 30, 2018

March 06, 2020

காது வலி
காது வலி

காது வலி என்றால் என்ன?

காது வலி, என்பது காது குடைச்சல் எனவும் குறிப்பிடப்படுகிறது, இது பல்வேறு மருத்துவ நிலைபாட்டிற்கான ஒரு பொதுவான அறிகுறியாகும். இது அனைத்து வயதுக்குட்பட்டவர்களுள் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பேற்படுத்தக்கூடியது. இந்த வலியானது பெரும்பான்மையான நிகழ்வுகளில் தீவிரமானதாக அறிவுறுத்தப்படுவதில்லை, ஆனால் கடுமையான வலி இருக்கும் பட்சத்தில் ஆராய்தல் அவசியம்.

இதை சார்ந்த முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

காது வலி பெரும்பாலும் பிற அறிகுறிகள் மற்றும் அடையாளங்களுடன் சேர்ந்தே வரும் மற்றும் அதுவே வேறு சில நோய்களுக்கான அறிகுறியாகவும் அமையலாம். காது வலி என்பது மந்தமாகவோ அல்லது மயக்கமடைவதாகவோ அல்லது கடுமையாகவோ அல்லது கூர்மையாகவோ இருக்கலாம். காது வலியுடன் சேர்ந்து தோன்றும் பொதுவான அறிகுறிகள்:

  • காதில் ஏற்படும் அடைப்பு.
  • செவித்திறனில் உண்டாகும் தொந்தரவு.
  • சமநிலைப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள்.
  • அசௌகரியத்தின் காரணத்தால், ஒருவர் தூக்கமின்மையை கூட உணரலாம்.
  • பொதுவானவை அல்ல என்றாலும், பிள்ளைகள் தங்கள் காதுகளில் இருந்து   திரவம் வெளியேறுகிறது என புகார் செய்தல்.
  • காய்ச்சல்.
  • இருமல் மற்றும் சளி.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

பெரும்பாலான பொதுவான நிகழ்வுகளில், நோய்தொற்றினாலோ அல்லது காயத்தின் காரணமாகவே காது வலி ஏற்படுகின்றது. இந்த நோய் தொற்று காது கால்வாய் பகுதியிலோ (மேலும் இது ஆண்டிடிஸ் வெளிர்னா என்றும் அறியப்படுகிறது) அல்லது நடுத்தர காது பகுதியிலோ ஏற்படலாம் (மேலும் இது ஆண்டிடிஸ் மீடியா என்று அழைக்கப்படுகிறது).

காது வலி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • மாறுபட்ட காற்று அழுத்தம் (குறிப்பாக விமானங்களில் பயணிக்கும் பொழுது).
  • காதுகளில் அளவிற்கு மீறிய பருத்தி மொட்டுகளின்/பருத்தி ஸ்வாப்களின் பயன்பாடு.
  • காதுகளில் மெழுகின் உருவாக்கம்.
  • காதுகளில் ஷாம்பு அல்லது தண்ணீர் தேங்கிருத்தல்.

காது வலி, அரிதாக, ஏற்படுவதன் காரணம்:

  • டெம்போரோமண்டிபூலர் கூட்டு (டிஎம்ஜி) நோய்க்குறி.
  • பற்களில் ப்ரேஸ்கள் அணிந்திருப்பது.
  • செவிப்பறையில் உள்ள குறைபாடுகள் (ஓட்டைகளை போன்றது).

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

ஒருவேளை நீங்கள் மேற்கூறிய சில அறிகுறிகளை எதிர்கொள்ளும்போது, அது நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. நோயை திறம்பட கண்டறிய மருத்துவர் உங்களுக்கான உடலியல் பரிசோதனையை மேற்கொள்வார்.

இந்த நோய் பாக்டீரியாக்களினாலோ அல்லது வைரஸ் நோய் தாக்கத்தினாலோ ஏற்பட்டிருக்கிறதா என உறுதிப்படுத்தம் பொருட்டு, மருத்துவர்கள் செவிப்பறைப் பகுதியிலிருக்கும் சிறிது திரவத்தை எடுத்து பரிசோதனை மேற்கொள்வார்கள்.

தொற்றுநோய் அல்லது வலியின் தீவிரத்தைப் பொறுத்து, மருத்துவர் காது வலி குணமடைவதற்கான பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்கலாம். அவற்றுள் சில பின்வருமாறு:

  • தொடர்ந்திருக்கும் வலியினால் ஏற்படும் வலுவின்மையை கையாள ஓவர்-தி-கவுண்டர் வலி நிவாரணிகளை உபயோகப்படுத்தலாம்.
  • சூடான அழுத்தங்கள் அல்லது வெப்ப சிகிச்சையை முயற்சி செய்யவும் நீங்கள் பரிந்துரைக்கப்படலாம். உங்கள் பாதிக்கப்பட்ட காது பகுதியில் சூடான நீரில் ஒரு துணியை நனைத்து மெதுவாக ஒத்தடம் போன்று வைத்து எடுக்கலாம்.
  • கடுமையான தொற்று மற்றும் திரவ வெளியேற்றம் இருக்கும் பட்சத்தில், உங்களை சிறிது காது மருந்தினை உபயோகிக்கவும் பரிந்துரைக்கலாம்.
  • ஒருவேளை அழுத்த சமநிலையின்மை ஏற்பட்டால் நீங்கள் மெல்லும் கம்மை உபயோகப்படுத்தி பார்க்கவும் அறிவுறுத்தப்படலாம். அது அழுத்தத்திலிருந்து நிவாரணமளிக்கவும் மற்றும் வலியை குறைக்கவும் உதவுகிறது.



மேற்கோள்கள்

  1. Health Navigator. [Internet]. New Zealand. Earache.
  2. Alberta Children's Hospital. [Internet]. Alberta Health Services; Edmonton, Alberta. Ear Pain.
  3. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Earache
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Ear Infections
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Ear Infection

காது வலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for காது வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.