நீரிழிவு இரைப்பை வாதம் - Diabetic Gastroparesis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 26, 2018

July 31, 2020

நீரிழிவு இரைப்பை வாதம்
நீரிழிவு இரைப்பை வாதம்

நீரிழிவு இரைப்பை வாதம் என்றால் என்ன?

நீரிழிவு இரைப்பை வாதம் என்பது வயிற்று உள்ளடக்கங்கள் காலியாகி சிறுகுடலை வந்தடைவதில் ஏற்படும் தாமதம் ஆகும். வயிற்றிலிருந்து சிறு குடலுக்கு செல்லும் உணவு இயக்கத்தின் வேகம் குறைதலோ அல்லது செல்லாமல் நின்றுவிடும் நிலையே இரைப்பை கோளாறாகும். இது நீரிழிவு நோயில் சிக்கலை ஏற்படுத்தும் போது நீரிழிவு இரைப்பை வாதம் என அழைக்கப்படுகிறது.  நீரிழிவு பிரிவு 1 மற்றும் பிரிவு 2 ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படலாம். பொதுவாக, நீங்கள் உணவை நன்கு மென்று அருந்தியபின், வயிற்றில் அந்த உணவு மேலும் நன்கு கடையப்பட்ட பிறகே சிறுகுடலுக்கு அனுப்பப்படும். இரைப்பை கோளாறினால் நீங்கள் பாதிக்கப்படும் போது உங்கள் வயிற்றின் தசைகள் மிகவும் மோசமாக இயங்குவதோடு உணவு பொருட்களை காலியாக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

நீரிழிவு இரைப்பை வாதத்தின் முக்கியமான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

சில மருந்துகள் வயிற்றின் இயங்குத்திறனை குறைத்துவிடுவதன் காரணத்தினால் நீரிழிவு இரைப்பை வாதத்தின் அறிகுறிகள் மேலும் மோசமடைகின்றன.

இதன் முக்கியமான காரணங்கள் என்ன?

பெரும்பான்மையான நிகழ்வுகளில், நீரிழிவு இரைப்பை வாதத்திற்கான அடைப்படை காரணத்தை கண்டறிய முடிவதில்லை. இருப்பினும், நீரிழிவு நோயே இரைப்பை வாதத்திற்கான மிக பொதுவான காரணமாகும். வயிற்று தசைகளை செயல்படுத்தும் வேகஸ் நரம்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த வேகஸ் நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ அல்லது செயலிழந்து விட்டாலோ வயிற்று தசைகள் மற்றும் சிறு குடல் பகுதிகள் சாதாரணமாக வேலைசெய்வதில்லை.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

உங்கள் மருத்துவர் உங்களிடமிருந்து விரிவான மருத்துவ வரலாற்றை எடுத்துக்கொள்வார், அதாவது நீங்கள் உட்கொள்ளும் மருந்து வகைகள், ஏதெனும் அறுவை சிகிச்சை வரலாறு இருந்தால் அவை அல்லது வேறேதும் உடல் நிலை கோளாறு இருந்தால் அவற்றின் அறிக்கைகள் என அனைத்தையும் விசாரிக்க நேரிடும். அதோடு ரத்தஅழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலை, வயிற்றில் வழக்கத்துக்கு மாறான வித்தியாசமான சத்தம் மற்றும் உடல் வறட்சிக்கான அறிகுறிகள் போன்றவைகள் உட்கொண்ட முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மேற்கொள்ளப்படும் சோதனைகளுள் அடங்குபவை:

  • 4-மணிநேரம் இரைப்பை அழற்சியின் சிண்டிகிராபி- இந்த செயல்முறை இரைப்பை அழற்சியால் ஏற்படும் குறைபாடுகளை அடையாளம் காண சிறப்புமிகுந்த கதிரியக்கப்பொருளினை பயன்படுத்துகிறது.
  • காலி வயிற்றில் எடுக்கப்படும் அல்ட்ராசோனோகிராபி மற்றும் காந்த அதிர்வு விம்பங்களின் (எம் ஆர் ஐ) உதவியுடன் வயிரு வெறுமையடைதல் பற்றிய தகவல்களை அறியலாம், ஆனால் இதை பரிசோதிப்பதற்கு தேர்ந்த நிபுணர்கள் தேவை.
  • சிங்கிள் ஃபோட்டான் எமிஷன் கம்ப்யூட்டட் டோமோகிராபி (எஸ்பிஇசிடி) இமேஜிங்காலும் இரைப்பை வாதத்தை கண்டறியலாம்.

இன்சுலினின் உதவியால் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவினை கட்டுப்படுத்துவதனால் நீரிழிவு இரைப்பை வாதத்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கமுடியும். வயிற்றிலிருக்கும் உணவை சிறுகுடலுக்கு அனுப்பும் இயக்கத்தை துரிதப்படுத்த ப்ரோகினெடிக்ஸ் மற்றும் ஆண்டிமெட்டிக்ஸ் உதவுகிறது. அதுமட்டுமின்றி மெதுவாக உணவு அருந்துதல், உணவுகளை நன்றாக மென்று உண்ணுதல், உணவு அளவுகளை குறைத்து உண்ணுதல், சாப்பிட்டபிறகு படுக்காமல் சிறிது நேரம் நிமிர்ந்து உட்கார்ந்திருத்தல், சாப்பாட்டுக்கு பின் சிறிது நேரம் நடத்தல் போன்ற செயல்முறைகளும் உங்களுக்கு அறிவுறுத்த படலாம். உணவருந்திய பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு படுப்பதை தவிர்க்கவும். உங்களுடைய மருத்துவர் நார்சத்து மற்றும் கொழுப்பு சத்து உள்ள உணவினை தவிர்க்குமாரு அறிவுறுத்தலாம். மது அருந்துதல் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்த்தல் அவசியம். நிறைய தண்ணீர் மற்றும் எலெக்ட்ரோலைகளை அருந்தி நன்கு ஹைட்ரேட்டடாக இருத்தல் சாலச்சிறந்தது.



மேற்கோள்கள்

  1. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Diagnosis of Gastroparesis
  2. Purna Kashyap, Gianrico Farrugia. Diabetic Gastroparesis: what we have learned and had to unlearn in the past 5 years. Gut. Author manuscript; available in PMC 2011 Dec 1. PMID: 20871131
  3. American Diabetes Association. Gastroparesis. Arlington; [Internet]
  4. Danny J Avalos et al. Diabetic gastroparesis: current challenges and future prospects. Clin Exp Gastroenterol. 2018; 11: 347–363. PMID: 30310300
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Gastroparesis