மருட்சி கோளாறு - Delusional Disorder in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 30, 2018

March 06, 2020

மருட்சி கோளாறு
மருட்சி கோளாறு

மருட்சி கோளாறு என்றால் என்ன?

மருட்சி கோளாறு என்பது, ஒரு வகை உளவியல் ரீதியான, தீவிரமான மனநோய் ஆகும், அதாவது அசாதாரணமான நம்பிக்கையை மேலும் நிரூபித்தல் போன்றவைகளை செய்யக்கூடியது. பொய்யான கற்பனைகளை உண்மை என்று நம்பி அனுபவத்தில் கிடைத்த சான்றுகளை முழுமையாக புறக்கணிப்பது. இதற்கு முன்பு இந்நிலை பரனோய்டு கோளாறு என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

வினோதமல்லாத மருட்சிகளின் தோன்றுதலே இதன் மிக பொதுவான அறிகுறி ஆகும்.

மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

  • வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் மனநிலை மாற்றங்கள்.
  • ஒருவரது குழப்பமாகவோ அல்லது சிலசமயங்களில் சாதாரண செயல்களில் ஆர்வமில்லாமலோ இருப்பது போல தோன்றலாம்.
  • மாயத்தோற்றம் மற்றும் மருட்சியினால் ஏற்படும் அமைதியில்லாத நடவடிக்கைகள்.
  • ஒழுங்கற்ற சிந்தனை செயல்முறை.
  • வக்கிரமான தர்க்கம்.
  • வழக்கமாக முக்கியமற்ற நிகழ்வுகளிலும் மற்றும் சுற்றியுள்ளவைகளையும் பற்றிய அதிகளவு உணர்வுடன் கூடிய சுய-கற்பனை.

மருட்சி கோளாறு நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மருட்சி கோளாறு  நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரண காரணிகள்:

  • மரபணு காரணிகள்: ஒரு குடும்ப அங்கத்தினர் சில உளவியல் கோளாறு அல்லது மனச் சிதைவு காரணமாக பாதிப்படைந்திருந்தால் மற்றவருக்கும் மருட்சி கோளாறு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என கருதப்படுகிறது.
  • உயிரியல் காரணிகள்: நரம்பு மண்டலங்களில் காணப்படும் இரசாயனங்களில் சமநிலையற்ற தன்மை.
  • சுற்றுசூழல் அல்லது உளவியல் காரணிகள்: அதிர்ச்சி அல்லது மனஅழுத்ததின் வரலாறு, மதுப்பழக்கம் அல்லது போதை மருந்துகளை தவறாக பயன்படுத்துவது.
  • பொதுவாக காதுக் கேளாதவர்களே மருட்சி கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள் என்பது அறிந்ததே. காட்சி குறைபாடின் காரணமாக சமூகத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் அல்லது பிற நோய்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் ஆகியோர் மருட்சி கோளாறு நோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

மற்ற மனநல குறைபாடுகள் போன்று, மருட்சி கோளாறு நோயினை கண்டறிய குறிப்பிட்ட கண்டறிதல் முறை எதுவும் இல்லை.

  • சரியான மருத்துவ வரலாறு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மருட்சி கோளாறு நோயினை கண்டறிய தேவையானவைகள் ஆகும்
  • ரேடியேஷன் சோதனைகளுடன் கூடிய நரம்பியல் பரிசோதனை கோளாறு நோயினை கண்டறிய உதவுகிறது.
  • மூளையின் மின்னலை வரவு சோதனை மருட்சி கோளாறு நோயினை கண்டறியவும் மற்றும் அதை மதிப்பீடு செய்யவும் மிகவும் உதவுகிறது.

மருட்சி கோளாறு நோயின் சிகிச்சைக்கு மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சை ஆகிய இரண்டின் சேர்க்கையுமே தேவைப்படுகிறது.

  • மருந்துகள் பின்வருமாறு: ஆண்டிசைகோடிக்ஸ், மனசோர்வு மருந்துகள் மற்றும் மயக்கமருந்துங்கள்.
  • ஒருவேளை கடுமையான நிலை ஏற்பட்டால் மருத்துவமனை நிலைப்பாடு மற்றும் பராமரிப்புகள் தேவைப்படலாம்.

உளவியல் சிகிச்சை என்பது நோயாளியின் அறிவாற்றல் மற்றும் நடத்தை சிகிச்சைகளின் கலவையோடு இணைந்த தனி நபர் மற்றும் குடும்ப சிகிச்சையாகும்.

தனிநபர் சிகிச்சை என்பது சிதைந்துபோன, நம்பமுடியாத சிந்தனைகளின் செயல்பாடு மற்றும் அதை ஒருவர் சரிசெய்ய உதவுதல் ஆகிவற்றை கொண்டது.

குடும்பத்துடன் கூடிய சிகிச்சையானது குடும்ப உறுபினர்களே மருட்சி கோளாறினால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க செய்கிறது.

அறிவாற்றல்-நடத்தை தெரபி என்பது ஒரு உளவியல் தலையீடு இது ஒருவர் யோசிக்கும் முறை மற்றும் நடத்தை ஆகியவற்றை மாற்றவோ அல்லது திருத்தவோ உதவுவது.



மேற்கோள்கள்

  1. Stein Opjordsmoen et al. Delusional Disorder as a Partial Psychosis. Schizophr Bull. 2014 Mar; 40(2): 244–247. PMID: 24421383
  2. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Delusional Disorder: Management and Treatment
  3. Alistair Munro. Delusional Disorder: Paranoia and Related Illnesses. Cambridge University Press, 1999. 261 pages
  4. National Health Service [Internet]. UK; Cognitive behavioural therapy (CBT)
  5. Chandra Kiran, Suprakash Chaudhury. Understanding delusions. Ind Psychiatry J. 2009 Jan-Jun; 18(1): 3–18. PMID: 21234155

மருட்சி கோளாறு க்கான மருந்துகள்

Medicines listed below are available for மருட்சி கோளாறு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.