குளிர் புண்கள் - Cold Sores in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 30, 2018

March 06, 2020

குளிர் புண்கள்
குளிர் புண்கள்

குளிர் புண்கள் என்றால் என்ன?

குளிர் புண்கள் என்பது திரவம் நிறைந்த சிறிய கொப்புளங்களே ஆகும், அது இறுதியில் சிதைந்தோ அல்லது உடைந்தோப்போகும். இது பொதுவாக வாயின் ஓரங்களில் காணப்பட்டாலும், அவை முகத்தில், கைகளில் அல்லது உடலின் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இந்த தொற்றுநோய் வைரஸால் ஏற்படக்கூடியதாகவும் பரவக்கூடியதாகவும் இருக்கிறது.

இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

  • புண் உண்மையில் தோன்றுவதற்கு முன்னரே, அந்த இடத்தில் நீங்கள் சிறிது அசௌகரியத்தை உணரக்கூடும். அந்த குறிப்பிட்ட இடத்தை தொடும்போது ஏற்படும் லேசான வலியுடன் கூடுதலாக, அரிப்பு அல்லது எரிச்சல் போன்ற பொதுவான உணர்ச்சிகளையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
  • கொப்புளம் முழுமையாக உருவான பின்னர், அந்த புண் மஞ்சள் நிறத் திரவம்-நிரம்பிய மையப்பகுதியை கொண்டிருக்கும், இந்த கொப்புளத்தை அழுத்துகையில் அதில் இருக்கும் திரவமானது கசிந்து வெளியேறும்.
  • கொப்புளம் உடைந்து பிறகு, ​​ஒரு சிறிய புண்ணை ஏற்படுத்தி செல்லும், அதுவே சிரங்காக மாறக்கூடும். இவ்வாறு ஏற்படும் புண்கள் பொதுவாக ஒரு வாரம் வரை நீடித்திருக்கும்.
  • வைரஸ் தொற்று மிகக் கடுமையானதாக இருந்தால், உங்களுக்கு காய்ச்சல், நிணநீர் முனை வீக்கம் மற்றும் பல்லீறுகளின் அசௌகரியத்தோடு இத்தகைய புண்களும் இருக்கக்கூடும் .
  • குளிர் புண்கள் வாய்வழி பாலியல் தொடர்பு மூலம் பிறப்புறுப்புகளுக்கும் பரவக்கூடியது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

  • ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் நுண்கிருமியே (ஹெச்.எஸ்.வி) குளிர் புண்களுக்கான காரணியாகும். இதில் ஹெச்.எஸ்.வி - ஹெச்.எஸ்.வி-1 மற்றும் ஹெச்.எஸ்.வி-2 என இரண்டு வகைகள் உள்ளன.
  • ஹெச்.எஸ்.வி-2 பிறப்புறுப்புகளிலும் மற்றும் அதை சுற்றியும் புண்களை ஏற்படுத்தும்போது, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் லேபிலிஸ் என அழைக்கப்படும் ஹெச்.எஸ்.வி-1, பொதுவாக வாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • இந்த வைரஸ்கள் முத்தமிடும் போதும் மற்றும் துண்டுகள், உதட்டு தைலம்/லிப் பாம், பாத்திரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்துக்கொள்வதனாலுமே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
  • வைரஸ் நரம்புகளில் செயலற்ற நிலையில் இருப்பதால், மீண்டும் மீண்டும் இந்நிலை ஏற்படுவது பொதுவானதாகும். இது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, சூரியனின் வெளிப்பாடு, மன அழுத்தம் மற்றும் ஹார்மோனின் ஏற்ற இறக்கங்கள் போன்ற காரணிகளால் தூண்டப்படுகிறது.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

  • வழக்கமாக இந்த புண்களைப் பார்த்தவுடனையே மருத்துவர்களால் இதைக் கண்டறியமுடியும், அதோடு இந்த கொப்புளங்களில் இருக்கும் திரவத்தை சோதனை செய்து அதனை உறுதியும் செய்துகொள்ளலாம்.
  • இந்த நோய்த்தொற்று உங்கள் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையைக்கூட உயர்த்தும்.
  • ஆண்டி-வைரல் மருந்துகளே குளிர் புண்களை குணப்படுத்தவதில் முக்கிய பங்குவகிக்கிறது.
  • இதற்கான மருந்து, வாய்வழியாக கொடுக்கப்படும் மாத்திரைகளாகவும், மற்றும் தீவிரமான நிகழ்வுகளில், ஊசி போன்றவைகளாகவும் பரிந்துரைக்கப்படலாம்.  
  • மேற்பூச்சு கிரீம்கள் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றது.
  • நோயாளி எந்தவொரு தனிப்பட்ட பொருளையும் பகிர்ந்து கொள்வதை தவிர்த்தலும், முத்தம் கொடுத்தல் மற்றும் பாலியல் உடலுறவு கொள்வதன் மூலம் ஏற்படும் தொடர்புகளை தடுத்தல் போன்றவைகள் அறிவுறுத்தப்படுகின்றன.



மேற்கோள்கள்

  1. Richardson VN, Davis SA, Gustafson CJ, West CE, Feldman SR. Patterns of disease and treatment of cold sores. J Dermatolog Treat. 2013 Dec;24(6):439-43. PMID: 23541214
  2. American Society of microbiology. [internet]; High-Dose, Short-Duration, Early Valacyclovir Therapy for Episodic Treatment of Cold Sores: Results of Two Randomized, Placebo-Controlled, Multicenter Studies
  3. Healthdirect Australia. Cold sores. Australian government: Department of Health
  4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Cold sores
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Cold sores

குளிர் புண்கள் க்கான மருந்துகள்

Medicines listed below are available for குளிர் புண்கள். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.