சிக்கன்குனியா - Chikungunya in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

February 07, 2019

March 06, 2020

சிக்கன்குனியா
சிக்கன்குனியா

சுருக்கம்

சிக்கன்குனியா, ஏடிஸ் கொசுவின் மூலம் பரப்பப்படுகிற ஒரு வைரஸ் நோயாகும். கடந்த பத்தாண்டு காலத்தில், ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியா, கரீபியன், மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் சிக்கன்குனியாவின் திடீர் பெருக்கங்களில், ஒரு கணிசமான அதிகரிப்பு இருப்பதாக அறிக்கைகள் இருக்கின்றன. இந்த கொசுவால் கடிக்கப்படும் பெரும்பாலான மக்கள், அறிகுறிகளைக் காட்ட முனையும், சிக்கன்குனியா வைரஸை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அறிகுறிகளில், கடுமையாகக் கூடிய, காய்ச்சல் மற்றும் மூட்டுவலி அடங்கும். பெரும்பாலான மக்கள், 7-10 நாட்களுக்குள் இந்த நோயிலிருந்து குணமடைய ஆரம்பிக்கிறார்கள். பிறந்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள், சிக்கல்கள் உருவாவதற்கான அதிகளவு அபாயத்தில் இருக்கிறார்கள். ஏடிஸ் கொசு, சுற்றுப்புறங்களில் சேர்ந்துள்ள தேங்கிய தண்ணீரில் பல்கிப் பெருகவும், இனப்பெருக்கமும் செய்கிறது. அதனால், நோய் வரும் அபாயத்தைக் குறைக்க, சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3-4 முறைகள், குளிரூட்டிகள், பூத்தொட்டிகள், ஜாடிகள் மற்றும் மீன் தொட்டிகளில் உள்ள எந்தத் தண்ணீரையும், அதில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க, வெளியேற்றி விட்டு, புதிய தண்ணீரை நிரப்புவது கட்டாயமானதாகும். மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், கொசு வலை, கொசுத் தடுப்பு களிம்புகள்/க்ரீம்களைப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பளிக்கும் ஆடைகளை அணிவது ஆகியன அடங்கும். சிக்கன்குனியாவைத் தடுப்பதற்கு தடுப்பூசி இல்லை மற்றும் குணப்படுத்துவதற்கு மருந்தும் இல்லை. அதனால், சிகிச்சை, அறிகுறிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. சிக்குன்குனியா மற்றும் டெங்குவின் அறிகுறிகள், காய்ச்சல் இரண்டிலும் பொதுவாக இருப்பதால், ஏறக்குறைய ஒரே மாதிரியானவையாக இருக்கின்றன. ஆகவே, ஒரு நோயை மற்றொன்றுடன் குழப்பிக் கொள்வதற்கு சாத்தியம் இருக்கிறது. இதனால், சிகிச்சையை ஆரம்பிக்க ஒரு முறையான நோய் கண்டறிதல் முக்கியமானதாகும். சிகிச்சை மற்றும் மீண்டு வருதலில் ஒரு முறையான மார்க்கத்தைப் பின்பற்றினால், அறிகுறிகள் வழக்கமாக 2-3 வாரங்களில் குறைகிறது. சிக்கன்குனியாவில் சிக்கல்கள் அரிதானவை மற்றும் தடுப்பு யுக்திகள், பாதிக்கப்படக் கூடிய சமூகத்தில் திடீரென்று சிக்குன்குனியா அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதில், பெரிதும் உதவிகரமாக இருக்கக் கூடும்.

சிக்கன்குனியா என்ன - What is Chikungunya in Tamil

சிக்கன்குனியா கொசுக்களால் பரவக் கூடிய ஒரு வைரஸ் நோயாகும். 1952ல் தெற்கு தான்சானியாவில், முதன் முதலான சிக்கன்குனியாவின் திடீர் பெருக்கம் அறிவிக்கப்பட்டது. சிக்கன்குனியா, கடுமையான மூட்டு வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுத்துகிறது. சிக்கன்குனியாவின் அறிகுறிகள், டெங்கு மற்றும் ஜிகாவுடன் (கொசுவால்-பரவும் வைரஸ் நோய்) ஓரளவு ஒத்துப் போவதால், இது சிக்கன்குனியாவைக் கண்டறிதலில் தவறு ஏற்படக் காரணமாகிறது. தற்போது, இந்த நோய்க்கு எதிராக பாதுகாப்பு வழங்கும் தடுப்பூசி இல்லை. இருப்பினும், ஒரு சிறந்த தடுப்பு என்பது ஒருவரை கொசுக்கடிகளில் இருந்து பாதுகாப்பதாகும். சிக்கன்குனியாவின் பரப்பியாக (எடுத்துச் செல்வது) செயல்படும் ஏடிஸ் கொசு, சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தத்தைக் குடிக்கும் பொழுது தொற்றுள்ளதாக மாறுகிறது. இதனால் டெங்குவையும் பரப்ப முடியும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for sex problems with good results.
Long Time Capsule
₹719  ₹799  10% OFF
BUY NOW

சிக்கன்குனியா அறிகுறிகள் என்ன - Symptoms of Chikungunya in Tamil

சிக்கன்குனியாவின் அறிகுறிகள், ஒரு நோய்த்தொற்றுள்ள கொசுவால் கடிக்கப்பட்ட 3-7 நாட்களுக்குள் வெளிப்படுகின்றன. சிக்கன்குனியாவின் அறிகுறிகள், மிதமானதிலிருந்து கடுமையான அளவு வரை இருக்கக் கூடும். அவ்வப்போது, இந்த நோய், குறிப்பாகக் கொசுக்களால் பரவும் நோய்கள் வழக்கமானவையாக இருக்கும் பகுதிகளில், அறிகுறிகள் ஒன்றாக இருப்பதால், டெங்கு காய்ச்சலோடு குழப்பிக் கொள்ளப்படும். இது, சில நபர்களிடம் எந்த ஒரு அறிகுறிகளும் காட்டாமலும் காணப்பட்டிருக்கிறது. இருப்பினும், அது போன்ற நிகழ்வுகள் அரிதானவை. சிக்கன்குனியாவின் மிகவும் முக்கியமான அறிகுறிகளில் அடங்கியவை:

  • திடீரென்று தாக்கும் காய்ச்சல்
    காய்ச்சல் குறைந்த அல்லது அதிக அளவில் இருக்கலாம் மற்றும் இரண்டு நாட்கள் வரை நீடிக்கக் கூடும். காய்ச்சலுடன் கூடவே, ஒருவர் குளிர், அது போல் நடுக்கத்தையும் அனுபவிக்கலாம்.
  • மூட்டுக்களில் கடுமையானவலி
    காலை நேரத்தில் மூட்டு வலி மோசமடைகிறது மற்றும் உடல் செயல்பாட்டினால் தீவிரமாகக் கூடும். முதியவர்கள், இந்த மூட்டு வலியைத் தாங்க முடியாததாகக் கண்டறியும் பொழுது, சில நபர்கள் மிதமான உடல் வலியினை உணரக் கூடும். சிலருக்கு, மூட்டு வலி மாதக்கணக்கில் நீடிக்கும், ஆனால், அதன் தீவிரம் குறைய ஆரம்பிக்கும்.
  • தசை வலி
    தசை வலி மற்றும் மூட்டு வலி ஆகியவை, சிக்கன்குனியாவில் மக்கள் அனுபவிக்கும் மிகவும் கடுமையான அறிகுறிகளாகும்.
  • மற்ற அறிகுறிகளில் அடங்கியவை:

ஒருவேளை அறிகுறிகள் தாங்க முடியாதவையாக மாறினால் மற்றும் இரத்தப் போக்கு இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரிடம் ஆலோசிக்கப்பட வேண்டும்.

சிக்கன்குனியா சிகிச்சை - Treatment of Chikungunya in Tamil

சிக்கன்குனியாவைக் குணப்படுத்துவதற்கு தனிப்பட்ட மருந்துகள் எதுவுமில்லை. சிகிச்சைகள், வலி மற்றும் காய்ச்சலின் அறிகுறிகளைக் குறைப்பதையும், மீண்டு வருதலை விரைவுபடுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கின்றன. சிக்கன்குனியாவுக்கு எதிராக உறுதியான பாதுகாப்பை வழங்குகின்ற, எந்த ஒரு தடுப்பூசியும் கூட இல்லை. இதனால் சிகிச்சை, அறிகுறி சார்ந்ததாக இருக்கிறது.

காய்ச்சல் மற்றும் வலியிலிருந்து நிவாரணமளிக்க, பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளப்படலாம். ஆஸ்பிரின் மற்றும் மற்ற ஸ்டெராய்டு-இல்லாத அழற்சி-எதிர்ப்பு மருந்துகள் (என்.எஸ்.ஏ.ஐ.டி.க்கள்) போன்ற வலி நிவாரணிகளை, ஒரு மருத்துவரின் ஒப்புதல் இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது ஏனென்றால், ஒருவேளை டெங்குவின் காரணமாக அந்தக் காய்ச்சல் இருந்தால், ஆஸ்பிரின் எடுத்துக் கொள்வது, இரத்தக் கசிவு அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.

ஒரு நபர் மற்ற சில உடல்நலப் பிரச்சனைகளுக்கான  சிகிச்சைகளில் இருந்தால், சிக்கன்குனியாவுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதற்கு முன்னால், ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

ஒருவேளை, சிகிச்சை வீட்டிலேயே வழங்கப்பட்டால், அந்த நபர் பின்வரும் விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்:

பொதுவான கவனம்  

  • அதிக அளவு ஓய்வு எடுங்கள். சக்தியை வீணடிப்பது, உங்களுடைய தசைவலியைத் தீவிரமாக்கலாம் மேலும் மயக்கத்திற்கு வழிவகுக்கலாம்.
  • இலகுவாக உணரும் பொழுது, மூட்டுக்களில் இறுக்கத்தைக் குறைப்பதில் உதவும், மிதமான நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடுவது நல்லது. அதனால், சிறிதளவு நடப்பது, வலியை எளிதாக்க உதவக் கூடும்.
  • இதமான மற்றும் சௌகரியமான சூழலில் ஓய்வெடுக்க முயலுங்கள். மூட்டு வலியை அதிகரிக்கலாம் என்பதால், வெப்பமான சூழலை எப்படியாயினும் தவிருங்கள்.
  • காய்ச்சலைக் குறைக்க, ஒரு நாளுக்கு 4 முறைகளுக்கு மேல் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • வலி நிவாரணிகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
  • அழற்சியையும் வீக்கத்தையும் குறைக்க, ஒரு குளிர்ச்சி அழுத்துதலைப் பயன்படுத்தலாம். அவை வலியையும் எளிமையாக்குகின்றன.
  • ஒருமுறை சிக்குன்குனியா இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, மற்ற கொசுக்கள் உங்களைக் கடிப்பதையும், வைரஸைப் பரப்புவதையும் தடுக்க உதவும் விதமாக கொசு வலைகளுக்குக் கீழ் தூங்குங்கள். உங்களை நீர்ச்சத்தோடு வைத்துக் கொள்ளுங்கள்.

உணவுப் பழக்கம்

  • அதிக அளவு திரவ பானங்களைக் குடியுங்கள். உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க, வாய்வழி மறுநீர்ச்சத்து உப்புக்கள் கலந்த, கொதிக்க வைத்த தண்ணீரையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது, குறிப்பாக நீங்கள் வாந்தி அல்லது செரிமானக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், மிகவும் முக்கியமானது.
  • பழச்சாறுகள், மோர், இளநீர் மற்றும் புத்தம்புதிய காய்கறிகளின் சாறுகள் போன்ற திரவ பானங்கள், முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதால், மீண்டு வருதலில் உதவுகின்றன.
  • பலவீனம் மற்றும் சோர்வைத் தவிர்க்க, முறையான நேர இடைவெளிகளில், சிறிய அளவு உணவு எடுத்துக் கொள்வது அத்தியாவசியமானது. புரதங்கள் மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, சக்தியை உற்பத்தி செய்ய உதவும். எப்படியானாலும்,நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குபவை என்பதால்,பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்புப் பண்டங்களிலிருந்து தள்ளியே இருங்கள்.
  • ஒருவேளை உங்களுக்கு வயிறு பாழாகாமல் இருந்தால், மிதமான காரமுள்ள உணவு எடுத்துக் கொள்வது அனுமதிக்கப்படுகிறது. இது உணவை சுவையானதாக்கும். இருந்தாலும், மிக அதிக அளவு காரங்களைச் சேர்ப்பது, அமில எதுக்களித்தலுக்கு வழிவகுக்கக் கூடும். (மேலும் படிக்க - இரைப்பை எதுக்களித்தல் நோய் சிகிச்சை)
  • வைட்டமின் சி நிறைந்த பழங்கள், நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாடுகளை அதிகரிப்பதாக அறியப்பட்டிருக்கிறது. அதனால், ஆரஞ்சுகள், கொய்யாக்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்குகள், எலுமிச்சை மற்றும் பப்பாளி போன்ற பழங்கள் விரைவாக நோயிலிருந்து மீள உதவக் கூடும்.
  • சிக்கன்குனியாவிலிருந்து மீண்டு வரும் பொழுது, மது, காஃபி மற்றும் தேநீர் போன்ற நீர்ச்சத்தை வற்ற வைக்கக் கூடிய பானங்களில் இருந்து தள்ளியே இருங்கள்.


மேற்கோள்கள்

  1. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Chikungunya.
  2. J. Erin Staples, Susan L. Hills, Ann M. Powers. Infectious Diseases Related to Travel. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services.
  3. Public Health England [Internet]; Published 25 April 2014: Chikungunya. Government of United Kingdom
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Chikungunya Virus
  5. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Guidelines on Clinical Management of Chikungunya Fever Guidelines on Clinical Management of Chikungunya ; October 2008
  6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Chikungunya virus

சிக்கன்குனியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for சிக்கன்குனியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.