பவுத்திர மூலம் - Anal Fistula in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 21, 2018

March 06, 2020

பவுத்திர மூலம்
பவுத்திர மூலம்

பவுத்திர மூலம் என்றால் என்ன?

பவுத்திர மூலம் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோலின் இடையே உருவாகும் ஒரு அசாதாரண சிறிய பாதை ஆகும். குடல் சுரப்பியில் உள்ள சீழ் பவுத்திரத்திற்கு வழிவகுக்கிறது. குடல் கால்வாய் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் இடையில் உள்ள குழாய் ஆகும், இந்த குழாய் உள்ள பகுதியில் எண்ணிலடங்கா சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகளில் ஏற்படும் தொற்று, சீழ் ஏற்படுத்தும், இது கால்வாய் வழியாக, ஆசன வாய் நோக்கி செல்லும்போது, அசாதாரண பாதையை திறந்தபடியே விட்டு செல்கிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆசனவாய் திறப்பை சுற்றிலும் வலி மற்றும் எரிச்சல் இருப்பது இதன் பிரதான அறிகுறிகளாகும். ஓரிடத்தில் அமரும்போது அல்லது நகரும்போது அல்லது குடல் இயக்கத்தின்போது, இடையறாது வலியில் துடிப்பது; சீழ் வெளியேற்றம் அல்லது ஆசன வாய் அருகில் துர்நாற்றம், மலத்தில் இரத்தம் அல்லது சீழ் வருதல்; ஆசனவாய் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் அல்லது சிவந்து காணப்டுதல்; காய்ச்சல், உடல் சோர்வு, குளிர் மற்றும் உடல் நலமில்லாமல் இருப்பது போன்ற ஒரு பொதுவான உணர்வு, ஆகியவை கூடுதல் அறிகுறிகளாகும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பவுத்திர மூலம் பொதுவாக ஆசனவாயில் உள்ள சீழ்படிந்த கட்டிகளின் காரணமாக உருவாகின்றன. சீழ் வடிந்த பின்னர், இந்த கட்டிகளில் உள்ள புண் ஆறாமல் இருப்பின், பவுத்திர மூலம் உண்டாகிறது. குரோன்ஸ் நோய், காசநோய், டைவ்டிகுலூலிடிஸ், பாலியல் நோய்கள், காயங்கள் அல்லது புற்றுநோய் போன்ற மற்ற நோய்களின் தாக்கங்களினாலும் பவுத்திர மூலம் உண்டாகலாம்.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

அனோரெக்டல் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாறு ஆகியவற்றை கவனமாக கூர்ந்து நோக்கும்போது நிலைமையை கண்டறிய உதவுகிறது. காய்ச்சல், வீக்கம் மற்றும் சிவத்தல் போன்ற அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவர் உங்களை பரிசோதிப்பார். சில கட்டிகள் வெளிப்புறமாக ஒரு புடைப்பு போல் ஆசனவாய் தோலில் தென்படக்கூடும். நேரடியாக உடற்சோதனை செய்யும்போது இரத்தம் அல்லது சீழ் வடியும் இடத்தை கண்டுபிடிக்கலாம். மருத்துவர்கள் அந்த இடத்தை நன்கு அழுத்தி பார்த்து, அங்கே சீழ் அல்லது இரத்தம் வருகிறதா என்று காண்பார்கள். பவுத்திர ஆய்வு, அனோஸ்கோப், மற்றும் இயல்நிலை வரைவு (இமேஜிங்) (அல்ட்ராசவுண்ட், எம்.ஆர்.ஐ, அல்லது சி.டி ஸ்கேன்) போன்றவற்றையும் பயன்படுத்தப்படலாம். டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனையானது வலிமிகுந்ததாக இருப்பதோடு, சீழ் வடிவதற்கும் வழிவகுக்கும். பவுத்திரங்கள் உடனடியாக மூடப்பட்டாலும், அவ்வப்போது சீழ் வடிய தொடங்கும், எனவே இந்த நோயை கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கும்.

இன்றுவரையில் இந்த நோய்க்கான பிரத்யேக சிகிச்சை முறைகளோ மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. பவுத்திரங்கள் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அவை தானாக குணமடைவதில்லை. அறுவை சிகிச்சையின் போது ஆண்டிபயாடிக்ஸ் (நுண்ணுயிர்கொல்லிகள்) பயன்படுத்தப்படுகின்றன. பின்வரும் வழிமுறைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன:

  • ஃபிஸ்டுலோடோமி
    இந்த அறுவை சிகிச்சை முறையில், முழு கட்டியும் (ஃபிஸ்டுலா) வெட்டி எடுக்க பட்டு, அந்த காயம் திறந்த நிலையிலேயே விடப்பட்டு குணமாக்க படும்; அதாவது ஒரு தட்டையான வெட்டு காயம் போல் விடப்படும்.
  • செட்டான் நடைமுறை
    செட்டான் என்று அழைக்கப்படும் ஒரு மெல்லிய அறுவைசிகிச்சை ரப்பர் பவுத்திரத்தில் பொருத்தப்பட்டு, அதன் மற்றொரு முனையில் ஒரு வளையம் போன்ற அமைப்பினை உருவாக்கிறது. குணமடைவதற்கு ஏதுவாக சில வாரங்களுக்கு இது பொருத்தப்படுகிறது. இதனுடன் மற்ற தேவையான அறுவை சிகிச்சை முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
  • பிற நுட்பங்கள்
    பவுத்திரத்தை குணப்படுத்த, பசை, திசு, அல்லது ஒரு சிறப்பு பிளக் போன்ற மற்ற முறைகளும் உதவுகின்றன.
  • சீரமைப்பு அறுவை சிகிச்சைகள்
    முற்றிலுமாக பவுத்திரத்தை மூடுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். 



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Anal fistula
  2. American Society of Colon and Rectal Surgeons [Internet] Columbus, Ohio; Abscess and Fistula Expanded Information.
  3. Cleveland Clinic. Anal Fistula. [internet]
  4. University of Rochester Medical Center Rochester. Anal Fistula. University of Rochester Medical Centre. [internet]
  5. Ramsay Health Care UK. Surgery for Anal Fistula. [internet]

பவுத்திர மூலம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for பவுத்திர மூலம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.